ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அரசாங்கம் அமைக்க திட்டமிட்டு இருக்கும் பொருத்து வீடுகள் தொடர்பாக பல விமர்சனங்கள் மக்கள் மத்தியிலும் அரசியல் மட்டத்திலும் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக உங்கள் கருத்துகளை தெரிவிப்பதுடன், கருத்துக்கணிப்பில் உங்கள் தெரிவினையும் (வாக்கினையும்) செலுத்தவும். உங்களது தெரிவை / எதற்கு வாக்களித்தீர்கள் என்பதை ஏனையவர்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு இக் கருத்து கணிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நன்றி யாழிணையம்
-
- 167 replies
- 30.5k views
- 1 follower
-
-
பத்திரிகை கண்ணோட்டம்
-
- 0 replies
- 725 views
-
-
கிளிநொச்சியில் முதலமைச்சருக்கு வழமைக்கு மாறாக அதிக பாதுகாப்பு இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டடம் திறப்பு விழாவுக்கு வருகை தந்த வடக்கு மாகாண முதலமைச்சருக்கு வழமைக்கு மாறாக அதிகரித்த காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதி திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் முதலமைச்சருக்கு இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமான மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிக பாதுகாப்பு வழங்குமாறு அறிவித்தல் கிடைத்துள்ளதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா். இன்ற…
-
- 0 replies
- 352 views
-
-
“எமக்கு அஞ்சியே அரசாங்கம் காலத்தை கடத்துகின்றது” : மஹிந்த (ஆர்.யசி ) எமக்கு அஞ்சியே அரசாங்கம் தேர்தலை நடத்தாது காலத்தை கடத்துகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று வடக்கில் நடக்கும் சம்பவங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயங்களை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. வடக்கில் மிகவும் மோசமான வகையில் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. ஆகவே தேசிய பாதுகாப்பு இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்த நிலைமை தொடருமாயின் குறுகிய காலத்தில் மீண்டும் நாட்டின் குழப்பங்கள் ஏற்படும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். நொச்சியாகம பிரதேசத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு க…
-
- 0 replies
- 259 views
-
-
அரசியலில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டி யாழில் கையெழுத்து வேட்டை இலங்கை அரசியலில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை கையெழுத்து வேட்டையொன்று முன்னெடுக்கப்படட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் பெண்களின் பங்கு அரசியலில் அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நாடாளாவிய ரீதியில் பொது மக்கள் மத்தியில் வழிப்புணர்வு நடவடிக்கைகளும் கையெழுத்துப் போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலும் இன்றையதினம் பொது மக்களின் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. h…
-
- 0 replies
- 418 views
-
-
சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு கடுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர கிளைமோர் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய திட்டமிடப்பட்டு இருந்ததாக கூறி, சந்தேகத்தில் ஐவர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி மைதானத்தில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போது எதிரிகள் சார்பில் மன்றில் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எ…
-
- 0 replies
- 585 views
-
-
இலங்கைளில் புற்றுநோய் காரணமாக தினம் 4 தொடக்கம் 9 பேர் இறக்கின்றனர்.! பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.டபிள்யூ. ஜயசுந்தர தகவல் "என்னால்முடியும், நம்மால் முடியும்" என்ற தொனிப்பொருளில் இம்முறை புற்றுநோய் தவிர்ப்பு தினம் தொற்றா நோய் வரிசையில் மிக முக்கியமான இடத்தை புற்றுநோயானது பிடித்துள்ளது. இலங்கைளில் புற்று நோய் காரணமாக ஒரு நாளுக்கு நான்கு தொடக்கம் ஒன்பது பேர் வரை இறக்கின்றனர் என்று பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.டபிள்யூ. ஜயசுந்தர பண்டார தெரிவித்தார். பெப்ரவரி 04 ஆம் திகதி உலக புற்றுநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று சு…
-
- 0 replies
- 445 views
-
-
வடமாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையினர் கவனயீர்ப்பு போராட்டம் வடமாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கைப் போககுவரத்துச் சபையினர் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும் வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்திற்கு இலங்கை போக்குவரத்து சபையினரை இடம்மாற்றுவதனை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியு இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடமாகாணத்தில் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகள் எவையும் சேவையில் ஈடுபடாததால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இருந்த போத…
-
- 0 replies
- 345 views
-
-
குடியுரிமை பெற்றார் குமார் குணரட்னம் முன்னிலை சேஷலிசக் கட்சியின் இணைப்புச் செயலாளர் குமார் குமார் குணரட்னத்திற்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குமார் குணரட்னம் இம் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளார். முன்னிலை சோஷலிச கட்சியின் குமார் குணரட்னம் உரிய முறையில் விண்ணப்பித்துருந்தால் குடியுரிமை வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யமுடியும் என அண்மையில் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்த நிலையில் அவருக்கு தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது, சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் குமார் குணரட்னம் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலி…
-
- 0 replies
- 183 views
-
-
சுமந்திரனின் உயிர் அச்சுறுத்தலுக்கு அவரே பொறுப்பு : மஹிந்த (ஆர்.யசி ) சுமந்திரனின் உயிர் அச்சுறுத்தலுக்கு அவரே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விடுதலைப்புலிகளை விடுதலை செய்யகோரி அன்று குரல் எழுப்பியவர்கள் இன்று எம்மை குறை கூறுகின்றனர். விடுதலைப் புலிகளை விடுதலை செய்தமை தவறில்லை. அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனமாக கையாளுகின்றமையே தவறாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி நேற்று அனுராதபுரம் ஸ்ரீமா போதி விகாரைக்கு விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். இதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.l…
-
- 1 reply
- 436 views
-
-
சுமந்திரன் மீது படுகொலை முயற்சி -நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீது, கடந்த ஜனவரி 13ஆம் நாள் படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் அதிகாரபூர்வமாக அறி வித்துள்ளனர். இது தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் நேற்றுமுன்தினம் அறிக்கை ஒன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்ப ட்டுள்ளது. முன்னதாக, கிளிநொச்சி நீத…
-
- 0 replies
- 204 views
-
-
யாழ்.கஸ்தூரியார் வீதியிலும் வாள்வெட்டுகுழு அட்டகாசம் யாழ்.கஸ்தூரியார் வீதியில் வீடொன்றின் முன் நின்றிருந்த இளைஞர்கள் மீது 2மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று வாளினால் வெட்ட முயன்ற போது குறித்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள வீடுஒன்றுக்குள் தஞ்சம் புகுந்து தப்பியுள்ளனர். நேற்றைய தினம் மாலை 6.40 மணியளவில் கஸ்தூரியார் வீதியில் உள்ள வீடொன்றுக்குமுன் 4 இளைஞர்கள் நின்றுள்ளனர். அப்போது அப்பகுதியால் 2 பல்சர் மோட்டார்சைக்கிளில் வாள்களுடன் வந்த குழு ஒன்று குறித்த இளைஞர்கள் மீது வாளினால் வெட்டமுயன்றுள்ளது. இந்நிலையில் குறித்த இளைஞர்கள் அருகில் உள்ள வீடொன்றுக்குள் தஞ…
-
- 0 replies
- 264 views
-
-
சகலரும் ஏற்கும் தீர்வே அவசியம் ஜனாதிபதி முன்னிலையில் சம்பந்தன் வலியுறுத்து (காங்கேயனோடை,பழுகாமம் நிருபர்கள்) நாங்கள் காணப்போகும் அரசியல் தீர்வு எல்லா மக்களும் ஏற் றுக்கொள்ளக் கூடிய தீர்வாக இருக்க வேண்டும். பெரும்பான்மை சிங்கள மக்கள், தமிழ், முஸ்லிம் மக்கள் என அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வாக இருக்க வேண்டும். அது நிச்சயமாக பிரிக் கப்படாத – பிரிக்கமுடியாத நிரந்தரமான ஒன்றாக இருக்கின்ற ஒரு நாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதை நான் கூறி வைக்க விரும் புகின்றேன் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹ…
-
- 0 replies
- 425 views
-
-
தேசிய அரசில் சில முரண்பாடுகள் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன அவற்றை பெரிதுபடுத்தக்கூடாது என்கிறார் பிரதமர் ரணில் (ப.பன்னீர்செல்வம்) கௌரவத்தைப் பகிர்ந்துகொள்வதை முதன்மைப்படுத்தாது நாட்டை முன்னோக்கிய பாதை யில் கொண்டு செல்வதில் இரண்டு பிரதான கட்சிகளும் முன்னின்று செயலாற்ற வேண்டுமென வலியுறுத்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிநாடுகளின் முதலீடுகளுடன் நாடு அபிவிருத்தி செய்யப்படுமென்றும் தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தில் சில முரண் பாடுகள், பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. இப்பிரச்சினைகளையெல்லாம் பெரிதுபடுத்தி பூதாகரமாக்கிவிடக்கூடாது. இரு பிரதான கட்சிகளும…
-
- 0 replies
- 291 views
-
-
ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரை பிரயோகம் (எம்.எம்.மின்ஹாஜ்) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையை விற்பனை செய்வதனை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி துறைமுக ஊழியர்கள் நீதிமன்றத் தடையுத்தரவினையும் மீறி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகமும் கண்ணீர்ப் புகைப் பிரயோகமும் மேற்கொண்டனர். இதன்காரணமாக லோட்டஸ் வீதி கலவர பூமியாக மாறியதை காணக்கூடியதாக இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது துறைமுக ஊழியர்களுடன் சீன பிரஜை இருவரும் போராட்டத்தில் இணைந்திருந்தமை அனைவரினதும் அவதானத்திற்கு உள்ளாகியிருந்தது. அத்த…
-
- 0 replies
- 313 views
-
-
நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி அதிகாரங்களை பகிர்வோம் மட்டக்களப்பில் ஜனாதிபதி உறுதி; புதிய அரசியலமைப்பு வரும் என்கிறார் (பெரியபோரதீவு, காங்கேயனோடை, பழுகாமம் நிருபர்கள் ) நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக நாங்கள் புதியதொரு அரசியலமைப்பை ஏற்படுத்திக்கொண்டு போகின்றோம். சிலர் இதனை தவறாகவும், பொய்யாகவும் பேசுகின்றார்கள். நாட்டை துண்டாடாத வகையில் நல்லிணக்கத்தைப் பலப் படுத்தி அதிகாரத்தைப் பகிர அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. இதற்கான அடிப்படை நடவடிக்கைகள் சில மாதங்களில் நிறைவு செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மட்டக்களப்பில் தெரிவித்தார். அரசாங்கத்தை …
-
- 0 replies
- 353 views
-
-
12 ஆயிரம் முன்னாள் புலிகளை மீண்டும் கைதுசெய்யவேண்டும் சர்வதேச நீதிபதிகளை ஏற்க முடியாது என்கிறார் சம்பிக்க (ஆர்.யசி ) சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க அரசாங்கம் தயாராக இல்லை; சர்வதேச நீதிபதிகளை அனுமதித்து தமிழ் மக்களின் நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என தமிழர் தரப்பு எதிர்பார்க்கின்றது என்றால் அது தமிழீழத்தை தரவேண்டும் என்று கோருவதற்கு சமனாகும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இராணுவம் விதிமுறைகளை மீறி செயற்பட்டிருந்தால் அது தொடர்பில் ஆராயவேண்டும். அதேபோன்று புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் விசாரிக்கவேண்டும். விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேரை ம…
-
- 1 reply
- 455 views
-
-
பாடசாலை மாணவர்கள் மூவர் மாயம் -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள், காணாமல் போயுள்ளதாக அவர்களது பெற்றோரால், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், திங்கட்கிழமை (30) இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியினை சேர்ந்த தர்மஜோதி ராஜ்குமார் (வயது 14), ஹென்றிமோகன் அபிசேக் (வயது 14) மற்றும் டியுக் டியோன் (வயது 14) ஆகிய மூன்று மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். மதியம் வீட்டில் உணவு அருந்திவிட்டு வெளியில் சென்று, விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூன்று மாணவர்களும் மாலை ஆகியும் …
-
- 2 replies
- 368 views
-
-
கருணாவுக்கு விசேட விருது-தாய்நாட்டுக்கான இராணுவத்தினரின் அமைப்பு வலியுறுத்து முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) விருது ஒன்று வழங்க வேண்டும் என தாய்நாட்டுக்கான இரா ணுவத்தினரின் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி பெற, இலங்கை இராணுவத்தினருக்கு கருணா பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பட்டம் வழங்கப்படுள்ள நிலையில், கருணாவுக்கு விருது ஒன்றை வழங்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பட்டத்தை மீளப்பெற வேண்டும் என தாய்நாட்டு க்கான இராணுவத்தினரின் அமைப்பின் இணைப…
-
- 3 replies
- 675 views
-
-
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை திறப்பு விழா களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தொகுதியின் திறப்பு விழா இன்று (01) நடைபெற்றது.(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்) - See more at: http://www.tamilmirror.lk/190834/த-றப-ப-வ-ழ-#sthash.FE8DHrWE.dpuf
-
- 4 replies
- 441 views
-
-
மைதானத்தை உழுத உழவு இயந்திரத்தை மறித்து மக்கள் எதிர்ப்பு – காவல்துறையினர் சமரசம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிாிவில் பெரியபரந்தன் தாரணிகுடியிருப்பு வானவில் விளையாட்டு மைதானத்தை இன்று காலை உழவு செய்த உழவு இயந்திரத்தை மறித்து பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனா். குறித்த காணி தங்களுடையது என இருவா் உரிமை கோரி வருகின்றனா். இதேவேளை குறித்த காணியை தங்கள் கிராம இளைஞர்களும், முன் பள்ளி சிறாா்களும் 1991 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகின்றனா் என பொது மக்களும் தெரிவிக்கின்றனா். இந்த நிலையில் குறித்த காணி தொடா்பில் அடிக்கடி உரிமை கோருகின்றவா்களுக்கும் தாரணி குடியிருப்பு மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் நிலவிவந்திருக்…
-
- 0 replies
- 437 views
-
-
நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளையும் உடைத்தால் கூட பணம் போதாது : பிரதமர் நாட்டில் உள்ள வங்கிகள் அனைத்தையும் உடைத்தால் கூட அபிவிருத்திகளுக்கு பணம் போதாது எனவும் சர்வதேசத்துடன் இணைந்தே நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கடவத்தை முதல் தம்புள்ள வரையிலான மத்திய அதிவேக பாதையின், 2ஆம் கட்ட நிர்மாணப்பணிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிரியுல்ல கொடகமன பகுதியில் இன்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், நாட்டில் தற்போது பல வலயங்களாக அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இரு பிரதான கட்சிகள் ஒன்றினைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிச…
-
- 0 replies
- 331 views
-
-
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை சிலர் மறந்து செயற்படுகின்றமை கவலையளிக்கின்றது (ப.பன்னீர்செல்வம், எம்.எம். மின்ஹாஜ்) யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை இன்று பலர் மறந்து செயற்படுகின்றனர். இது பெரும் கவலையை ஏற் படுத்துகிறது என சபையில் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இவ்வாறானதோர் நிலையிலும் மறைந்த எம்.எச்.மொஹமட் இலங்கையராக வாழ்ந்ததோடு பிரிவினையை எதிர்த்தார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மறைந்த முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமாக பதவி வகித்த எம்.எச். மொஹமட் தொடர்பான அனுதாபப் பிரேரணை நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்த…
-
- 27 replies
- 1.2k views
-
-
யாழில் வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எண்மருக்கு பிணை யாழில் இடம்பெற்ற பல்வேறு வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களுக்கு யாழ் மேல் நீதிமன்றம் இன்று கடும் எச்சரிக்கையின் பின் பிணை வழங்கியது யாழில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட “றோக் ரீம்” என்ற குழுவை யாழ் பொலிஸார் தீவிர தேடுதலில் பின் கைது செய்தனர். இக்குழுவின் தலைவராக பிரபல பாடசாலையின் மாணவத்தலைவனும் , அவுஸ்ரேலிய மினி ஒலிம்பிக் தடகள போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற செந்தூரன் என்பவர் இனம் காணப்பட்டார். குறித்த நபர்களிடம் இருந்து வாள்கள் , கைக்கோடரிகள், மற்றம் கைக்குண்டு போன்றன மீட்…
-
- 2 replies
- 425 views
-
-
கருணாவுக்கு எதிரான விசாரணைகள் பூர்த்தி முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. அரசாங்க வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாக கருணா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நிதிமன்றில் தெரிவித்துள்ளனர். கருணாவின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் இதனால் பிரதி ஞாயிறு தோறும் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு …
-
- 1 reply
- 493 views
-