Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நல்லூர் ஆலய சூழலில் போராட்டங்கள் நடத்த தடை நல்லூரில் கோவிலைசூழ போராட்டங்கள் நடத்துவதற்கு தடைவிதித்து பதாகைகள் இரவோடு இரவாக நாட்டப்பட்டுள்ளன. காணாமற் போனோரின் உறவுகள் வவுனியாவில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் இன்றைய தினம் நல்லூரில் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். ஆயினும் நேற்று இரவோடு இரவாக நல்லூரில் தடை பதாகைகள் நாட்டப்பட்டுள்ளன. அப்பதாகையில் "கோவில் வளாகத்திற்குள் கூட்டங்கள் போராட்டங்கள் நடைபெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  2. வவுனியா புனர்வாழ்வு நிலையத்திலிருந்து மூவர் சமூகத்துடன் இணைவு வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வினைப் பூர்த்தி செய்த மூவர் இன்று சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர். கார்த்திகேசு நாதன் (முல்லைத்தீவு), குழந்தைவேல் தயாபரன் (கிளிநொச்சி), கணபதிப்பிள்ளை யோகராசா (மட்டக்களப்பு) ஆகியோரே சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் வவுனியா புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி, பூந்தோட்டம் புனர்வாழ்வு பணியகப் பணிப்பாளர், பின்இணைப்பு அதிகாரி, சம்யத்தலைவர்கள், பூந்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என பலரும் கலந்து கொண்டனர். இதேவேளை, சமூகயமப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் உறவினர்கள் மற்றும் இப்பு…

  3. அநா­த­ர­வான நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்ள கூட்டு எதி­ரணி பிரதமர் பரிகாசம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) கூட்டு எதி­ர­ணி­யினர் தற்­போது செய்­வ­தறி­யாது அநா­த­ர­வா­கி­யுள்­ளனர்.பேசு­வ­தற்கு ஒன்றும் இல்­லாமல் யானை சர­ணா­ல­யத்தை பற்றி பேசு­கின்­றனர். எதிர்­வரும் 27ஆம் திகதி நுகே­கொ­டையில் நடை­பெ­ற­வுள்ள எதி­ர­ணியின் கூட்­டத்தில் அர­சாங்­கத்தில் இருந்து எவரும் வருகை தர­மாட்­டார்கள். ஆகவே யாரும் இல்­லாத அநா­தை­க­ளாக பொது எதி­ர­ணி­யி­னரின் நிலை காணப்­ப­டு­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­மி­சிங்க தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புத­கைி­ழமை வாய்­மூல விடைக்­கான வினாவின் போது கூட்டு எதி­ரணி எம்.பி கனக்க ஹேரத் பின்­ன­வல யானை ச…

  4. கூட்டு எதி­ர­ணி­யின்­ அ­ரச எதிர்ப்புப் பேரணி நாளை பெருந்­தி­ர­ளானோர் பங்­கேற்பர்;கூட்டு எதிர்க்­கட்சி அறி­விப்பு (எம்.சி.நஜி­முதீன்) ஐந்து பிர­தான கார­ணி­களை முன்­னி­லைப்­ப­டுத்தி கூட்டு எதிர்க்­கட்சி நாளை நுகே­கொ­டையில் பாரி­ய­ள­வான பேர­ணியை நடத்­த­வுள்­ளது. அதில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­ப­வர்­களும் கலந்­து­கொள்ள இருந்­தனர். இருந்­த­போ­திலும், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் நடை­பெற்ற சந்­திப்­பை­ய­டுத்து அவ்­வா­றா­ன­வர்கள் அப்­போ­ர­ணியில் கலந்­து­கொள்­ளா­ம­லி­ருப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மமே தெரி­வித்தார். …

  5. விரைவில் சில அதிரடி அரசியல் தீர்மானங்கள் மக்கள் பிரதிபலனை காணமுடியும் என்கிறார் ராஜித (ரொபட் அன்­டனி) நாட்டில் விரைவில் அதி­ரடி அர­சியல் தீர்மா­னங்கள் எடுக்­கப் ­படும். அதில் ஒரு தீர்­மா­னமே இவ்­வாரம் எடுக்­கப்­பட்­டது. அதா­வது விசேட ஆணைக்­குழு அமைப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட தீர்­மா­னமே அது­வாகும். மேலும் பல அதி­ரடித் தீர்­மா­னங்கள் விரை வில் எடுக்­கப்­படும். அதன்­போது பிர­தி­ப­லன்­களை நீங்கள் காணலாம் என்று இணை அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித்த சேனா­ரட்ன தெரி­வித்தார். அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே …

  6. குற்­ற­வா­ளிகளுக்கு உயர்ந்­த­ பட்ச தண்­ட­னையை வழங்­கவே ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மனம் ஜனா­தி­பதி அறி­விப்பு; கடந்­த­கால சம்­ப­வங்கள் குறித்தும் விசா­ரிக்­கப்­படும் என்­கிறார் (ரொபட் அன்­டனி) குற்­ற­வா­ளி­க­ளுக்கு உயர்ந்த பட்ச தண்­ட­னையைப் பெற்றுக்கொடுப்­ப­தற்­கா­கவே மத்­திய வங்­கியின் பிணை­முறி தொடர்­பாக விசா­ரணை நடத்த ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­ட­தாக ஜனா­தி­பதி மைத் தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். கடந்த ஏழு அல்­லது எட்டு வருட காலங்­க­ளாக நடை­பெற்ற பிணை­முறி தொடர்­பான சம்­ப­வங்கள் குறித்தும் இவ்­வா­றான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்கள் அமைத்து விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­படும் என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டினார். …

  7. காணாமல் போனோரை எங்கு சென்று தேடு­வது அமைச்­ச­ரவை பேச்­சாளர் கேள்வி (ரொபட் அன்­டனி) காணாமல்போன­வர்­களை எங்கு சென்று தேடு­வது? காணாமல்போன­வர்கள் தொடரபில் உள்ள ஒரே தீர்வு அவர்கள் குறித்து தேடிப்­பார்ப்­ப­தாகும். ஒரு சில நாட்­களில் இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடி­யாது. காணாமல்போன­வர்­களை தேடவும் முடி­யாது. அனை­வரும் இறந்­து­விட்­ட­தாக சான்­றிதழ் வழங்­கவும் முடி­யாது என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ண தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பின் பின்னர் தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்­த போது …

  8. வவுனியாவில் உணவு தவிர்ப்பிற்கு ஆதரவாக முச்சக்கரவண்டி சாரதிகள் மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணி காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட உணவுத் தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து 4வது நாளாகவும் இடம்பெற்று வருகிறது. அதேவேளை, இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டிச் சாரதிகள் 500ற்கு மேற்பட்டோர் ஒன்றிணைந்து பேரணியாக பிரதான பஜார் வீதி வழியாக மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக உணவு தவிர்ப்பு மேற்கொள்ளப்படும் இடத்திற்குச் சென்று தமது ஆதரவினை வழங்கியுள்ளனர். அதேநேரம் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்ற வவுனியா வர்த்தகர் சங்க உறுப்பினர்கள், உரிமையாளர்கள் உணவு தவி…

  9. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை – அரசாங்கம் ருத்ரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை எந்தவொரு உலக நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனைத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகும் எனவும், எந்தவொரு புலி ஆதரவு அமைப்பிற்கும் ஆதரளிக்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/archives/15135

  10. கதவடைப்புக்கு அழைப்பு -எஸ்.நிதர்ஷன் ஊர்காவற்துறையில், கர்ப்பிணி பெண்ணொருவர் அடித்து கொலை செய்யப்பட்டமை தொடர்பில், விரைவான விசாரணையை நடாத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமாறு கோரி, நாளைய தினம் ஒரு மணிநேர கதவடைப்பை மேற்கொள்ளுமாறு வட மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அது தொடர்பில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில், “தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்புக்குப் பின் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதை தினம் தினம் நடைபெறும் குற்ற செயல்கள் நிரூபிக்கின்றன. அரச இயந்திரம், இவ்வாறான குற்றங்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்காமையே, இந்தக் குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக அமைகின்றன. அத்துடன், …

  11. கிளிநொச்சி, முல்லைத்தீவில் உண்ணாவிரதத்துக்கு அழைப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், வவுனியாவில் நடாத்தப்படும் உணவுத்தவிர்ப்பு போராட்டத்துக்கு, ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாளை காலை 9 மணியில் இருந்து, மாலை 3 மணிவரை அடையாள உண்ணாவிரதப் போராட்டம், கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் தலைவர்கள். பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள், பொதுஅமைப்பினர், இளைஞர்கள் அனைவரையும் கலந்துக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இதேவேளை, நாளை காலை 9 மணிக்கு, முல்லைத்தீவு மாட்டச் செயலகத்துக்கு முன்னால், மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்த ஏற்…

  12. கொச்சிக்கடையில் 14 பேர் கைது எம்.இஸட்.ஷாஜஹான் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை செய்த பிரதான நபரையும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 13 பேரையும் கைதுசெய்துள்ளதாகவும் போதைப்பொருளை விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ஜீப் வண்டியையும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோய்னையும் கைப்பற்றியுள்ளதாகவும் கொச்சிக்கடைப் பொலிஸார், இன்று (26) தெரிவித்தனர். இது தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவிக்கையில், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் ஹெரோய்ன் பாவனையில் ஈடுபடுவேரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை, நேற்று ஆரம்பிக்கப்பட்ட போது, ஹெரோய்ன் பாவனையில் ஈடுபட்ட 13…

  13. இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் யாழில் திறப்பு இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாதுகாப்பு செயலாளர் கருனாரட்ன ஹெட்டிஆராச்சி, வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா , வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், வடமாகாண எதிர்க்கட்சித்…

  14. சம்பந்தன்-பாதுகாப்பு செயலர் பேச்சு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இவ்விருவரும், இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கொழும்பிலிருந்து ஹெலிகாப்டர் ரில் யாழ்ப்பாணத்துக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். இதன்போதே, இருவரும் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருந்தவாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/190391#sthash.O9trHiZr.dpuf

    • 1 reply
    • 237 views
  15. புதினப்பலகை ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) சற்றுமுன்னர் காலமானார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத் தருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், பிரான்சில் உள்ள மருத்துவமனையில் சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார். கவிஞரும், எழுத்தாளருமான கி.பி.அரவிந்தன், ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். அக்காலப் பகுதியில் சுந்தர் என அழைக்கப்பட்ட அவர், ஈழப்போராட்டத்தில், முதன்முதலில் சயனைட் அருத்தி உயிர்த்தியாகம் செய்த, ஈழப் போராட்ட முன்னோடியான பொன்.சிவகுமாரனுடன் இணைந்து செயற்பட்டவர். 1990களின் முற்பகுதியில் பிரான்…

    • 4 replies
    • 1.1k views
  16. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திக்க சுவாமிநாதனை அனுப்புகிறார் ரணில் வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை, சிறிலங்காவின் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் நிலையை அரசாங்கம் வெளிப்படுத்தக் கோரி, அவர்களின் குடும்பத்தினர் 14 பேர் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி உறுப்பினர்கள் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் டி.எம்.…

    • 0 replies
    • 268 views
  17. காணாமல் போனோர் விவகாரம்: பொறிமுறைக்கு ஆராய்வு காணாமல் போனோருக்குத் தீர்வை வழங்கும் பொறிமுறைக் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன, தெரிவித்தார். 'காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களை எங்கேபோய் தேடுவது. இந்தப் பிரச்சினையை ஓரிரு நாட்களில் தீர்த்து விட முடியாது' என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற போது, அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'காணாமல் போனவர்களை தேடிப் பார்ப்பதுதான அவர்களை கண்டுப்பிடிப்பதற்கு உள்ள ஒரே வழி. ஆனால், புதிதாக தேடிப் பார்ப்பதற்கு ஒன்றுமி…

    • 0 replies
    • 213 views
  18. காணி உரித்து வழங்க அமைச்சரவை அங்கிகாரம் புதிய கிராமங்கள் எண்ணக்கருவின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள ஹுட்வில் வீடமைப்பு கருத்திட்டத்தின் பயனாளிகளுக்கு, காணி உரித்தையும், உகந்த வீடுகளையும் பெற்றக் கொடுக்க, அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதாக, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற போது, அவர் இதனைக் கூறினார். “தோட்டத் தொழிலாளர்களுக்கு உயர் வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில், புதிய கிராமங்களை ஏற்படுத்தும் எண்ணக்கருவின் கீழ், நுவரெலியா மாவட்டத்தின் ஹுட்வில் வீடமைப்பு கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. …

    • 0 replies
    • 327 views
  19. ‘58 நிபந்தனைகளில் ஒன்று நிறைவேறிவிடும்’ “ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டுள்ள 58 நிபந்தனைகளில் ஒரு நிபந்தனை நிறைவேறப்போகிறது” என, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். “தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி, சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப புதிய சட்டம் கொண்டுவரப்படும் என, சர்வதேசத்துக்கு அரசாங்கம் உறுதியளித்துவிட்டது” என்று, அவர் மேலும் தெரிவித்தார். புஞ்சிபொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “எமது நாட்டில், ஒருகாலத்திலும் இவ்வாறானதோர் அரச…

    • 0 replies
    • 412 views
  20.  ‘நல்லாட்சி விரைவில் பொக்கை வாயாகும்’ “நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு பல் தற்போது விழுந்து விட்டது. காலம் செல்ல செல்ல, அனைத்து பற்களும் கொட்டிவிடும். இதை நாட்டு மக்கள் விரைவில் காண்பர்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். புஞ்சிபொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து, ஐந்து பிரதான காரணங்களை முன்வைத்து நுகேகொடையில் நாளை, மாபெரும் மக்கள் பேரணியை நடத்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த மக்கள் பேரணி, ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஏற்பாடுசெய்யப்பட்டத…

    • 0 replies
    • 319 views
  21.  'காதல் பிரிவினாலேயே நாமல் குற்றஞ்சாட்டுகிறார்' - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனான அர்ஜுன அலோசியஸுக்கு, அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவருடன் நேரடித் தொடர்புள்ளது என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன, தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற போது, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார். அவர், தொடர்ந்து கூறுகையில், நல்லாட்சி அரசாங்கம், கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போல நாம் எதனையும் மறைக்கவில்லை…

    • 0 replies
    • 452 views
  22. அம்பிட்டியே சுமணரத்தின தேரரின் வழக்கு ஒத்திவைப்பு அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதவான் இந்த வழக்கை ஒத்திவைத்தார். மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்தின தேரர் மற்றும் தமிழரசுக் கட்சியினுடைய இளைஞர் அணியின் உப தலைவர் வி. பூபாலராஜா ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மே 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரில் இனத்துவேஷ பேச்சுகளை பேசியதாகக் கூறி, அம்பிட்டியே சுமணரத்தின தேரருக்கு எதிராகவும் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி தமிழரசுக் கட்சியினுடைய இளைஞர்…

    • 0 replies
    • 238 views
  23. அரச வங்கி ஒன்றின் ஏடிஎம்மில் கொள்ளையிட்ட இருவர் சிக்கினர் மொனராகலை - மெதகம பகுதியிலுள்ள வங்கியொன்றின் தானியக்க இயந்திரத்தில் (ஏடிஎம்) கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ம் திகதி இரவு மொனராகலை - மெதகம பகுதி அரச வங்கி ஒன்றின் தானியக்க இயந்திரத்தில் இருந்து 57 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டது. இதன்படி, மேற்கொண்ட விசாரணைகளில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 55 இலட்சம் ரூபாவுடன் கைதுசெய்யப்பட்டார். மேலும் இவர் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒருவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இந்தக் கொள்ளையுடன் தொடர்புடைய மற்றும…

    • 0 replies
    • 277 views
  24. குறைபாடுகள் இருப்பின் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் எல்லை நிர்ணய அறிக்கையில் குறைபாடுகள் இருப்பின் அது குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போட எந்தவொரு அவசியமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இந்த விடயம் குறித்து கலந்துரையாட இன்னும் சில தினங்களில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid…

    • 0 replies
    • 298 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.