ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
சுயாதீன ஆணைக்குழு விசாரணை வேண்டும் ஊழல் மோசடி தொடர்பில் ஏன் இதுவரை எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை:எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சபையில் கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக விசாரணை செய்யப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை மத்திய வங்கியின் பிணை முறிவிவகாரம் மற்றும் அரச பொறுப்பு முயற…
-
- 0 replies
- 159 views
-
-
இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உத்தரவு இலங்கை கடற்படையினர் கைப்பற்றிய தமிழக மீனவர்களின் 120 படகுகளை மீட்க இரண்டு மாதங்களில் நடவடிக்கை எடுக்க, இந்திய மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தமிழர் தேசிய முன்னணியின் மாநில இளைஞரணிச் செயலர் க.திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், இராமநாதபுரம், இராமேசுவரம், எஸ்.பி.பட்டணம், தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 120 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் கையகப்படுத்தி உள்ளனர். அவற்றில் 80 படகுகள் இராமேசுவரம் மீனவர்களுடையதாகும். ஒவ்வொரு படகும் பல இலட்ச ரூபாய் மதிப்புடையவை. எனவே இலங்கை கடற்படையினர் கைப்பற்றிய 120 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க உர…
-
- 0 replies
- 167 views
-
-
ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீடு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீடு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜினால் இந்த மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டது எனினும், மேன்முறையீடு செய்யப்பட்ட மனுதாரர் அல்லது அவரது சட்டத்தரணி நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதனால் இந்த மேன்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் மீளவும் இன்றைய தினம் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேன்முறையீட்…
-
- 1 reply
- 278 views
-
-
பிணைமுறி மோசடிக்கு நடவடிக்கை இல்லையெனில் நிறைவேற்றதிகாரத்தால் எவ்வித பயனுமில்லை-பந்துல இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியில் தீர்க்கமான முடிவொன்றை எடுக்காவிடின் நிறைவேற்று அதி காரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருப்பதில் எந்தவொரு பயனுமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பிலான கோப் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்தவிவாத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு கூறினா…
-
- 0 replies
- 257 views
-
-
ஹம்பாந்தோட்டையில் போராட்டம் நடத்தப்பட்டதனால் உறவுகளுக்கு பாதிப்பு கிடையாது – சீனா ஹம்பாந்தோட்டை முதலீட்டு திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதனால் இரு தரப்பு உறவுகளை பாதிக்காது என இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் கலாச்சாரப் பிரிவு பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவாகவே காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 60 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. http://globaltamilnews.net/archives/15009
-
- 1 reply
- 189 views
-
-
A/L 2017 பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல், பெப்ரவரி 15 இறுதி நாள் க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு 2017 ஆம் ஆண்டில் தோற்றவுள்ள மாணவர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் விண்ணப்பம் கோரியுள்ளது. விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி கால எல்லை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியாகும். பாடசாலை மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள் விண்ணப்பப்படிவங்கள் தபாலிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. தனியார் பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவங்கள் தேசிய பத்திரிகைகளில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது http://www.dailyceylon.com/113736
-
- 0 replies
- 241 views
-
-
பிள்ளையானின் உத்தரவிற்கமையவே பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டார் – சட்டமா அதிபர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், பிள்ளையானின் உத்தரவுக்கு அமைய கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோசப் பரராஜசிங்கம், முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) உத்தரவிற்கமைய கொலை செய்யப்பட்டதாக சட்டமா அதிபர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். பிள்ளையானின் உத்தரவிற்கமைய பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் சாட்சி கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். ஷாந்தன் என்ற நபரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சட்டமா அதிபர் வெள…
-
- 0 replies
- 277 views
-
-
சம்பந்தனின் ‘சகிப்பு’ கசக்கும் 25-01-2017 09:27 AM Comments - 0 Views - 40 அரசாங்கத்துக்குக் கூட்டமைப்பு சிகப்பு எச்சரிக்கை ‘உண்ணாவிரதமிருப்போர் இறந்தால் பொறுப்பை ஏற்கவும்’ காணாமற் போனவர்களுக்கு நடந்தது என்ன? 12,000 போராளிகளை விடுவிக்க முடியுமாயின் 100 அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது? நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறுவதற்கு வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ்மக்கள் பெரும் பங்கை வகித்தனர். எனினும், இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கை தொடர்பில் மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கின்றது. சம்பந்தன் சகித்துக்கொண்டிருக்கிறார் என்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அனைத்தையும் சகிக்கும் என, அரசாங்கம் நினைத்…
-
- 0 replies
- 297 views
-
-
மனித வள பணியாளர்கள் 37 பேர் கைது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனித வள பணியாளர்கள் 37 பேரை நீதிமன்ற உத்தரவுப்படி கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சிற்கு முன்னால் இவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், நீதிமன்ற உத்தவை மீறி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். http://tamil.adaderana.lk/news.php?nid=87233
-
- 0 replies
- 145 views
-
-
நாவற்குழியில் ங்கள மக்களுக்கு வீடமைத்து கொடுத்தால் முற்றுகையிடுவோம் நாவற்குழியில் ங்கள மக்களுக்கு வீடமைத்து கொடுத்தால் முற்றுகையிடுவோம் நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்களுக்கு வீடமைத்து கொடுக்கும் நோக்குடன் அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றால், நிகழ்வு நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என வடமாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாவற்குழியில் எதிர்வரும் 30ம் திகதி மானிய அடிப்படையில் வீடமைத்து கொடுப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு நிகழ்வுகள் நடைபெற்றால் நிகழ்வினை நடக்க விடாது தடுத்து அவ்விடத்தை முற்றுகையிட்…
-
- 0 replies
- 249 views
-
-
கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத்தின் உத்யோகப்பூர்வ இணைய முகவரியில் பார்வையிட முடியும் என அறிவித்துள்ளது. கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதிவரை நடைபெற்றது. இப் பரீட்சையில் மொத்தமாக 3 இலட்சத்து 15 ஆயிரம் பேர் வரை தோற்றியிருந்தனமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/15180
-
- 47 replies
- 7.2k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தரும்போது, கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தக் கூடாது என படைத்தரப்பினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இந்த உத்தரவை மீறி செயற்பட்டால்,உங்களுக்கு எந்த உதவிகளும் கிடைக்காது எனபடைத்ரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஜனாதிபதி இந்த மாதம் 25 ஆம் திகதி வருகை தருவார், மாற்றுக் காணிகள் மற்றும் 25 லட்சம் ரூபா செலவில் வீட்டுத் திட்டங்களையும் வழங்கிவைப்பார். இவற்றை பெற்றுக் கொண்டு அமைதியாக இருப்பதே நல்லது என படையினர் எச்சரிக்கைவிடுத்தனர் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கேப்பாபிலவு கிராம மக்களுக்கு சொந்தமான 524 ஏக்கர் காணி,போரின் பின்னர்படையினரின் கட்டுப்பாட்டுக்குள…
-
- 2 replies
- 385 views
-
-
ஜல்லிக்கட்டடிற்கு வழங்கப்பட்ட ஆதரவு காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் வழங்கப்படுமா...? ஜல்லிக்கட்டடிற்கு ஆதரவு வழங்கி வெற்றி கண்டது போல காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் ஆதரவு வழங்கி இந்த போராட்டத்திற்கு வெற்றியீட்டி கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களால் நடத்தப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில், யுத்த காலத்திலும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் கடத்தப்பட்டவர்களும், இராணுவத்தினரி…
-
- 0 replies
- 266 views
-
-
ஊடகவியலாளர்கள் படுகொலை – அடக்குமுறைக்கெதிரான கறுப்பு ஜனவரி நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைக்கும் எதிரான, கறுப்பு ஜனவரி நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தபால் அட்டைகள் அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு மன்றத்தில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வினை இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது, படுகொலை செய்யப்பட்ட கடத்தப்பட்ட ஊடகவியலாள்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பதாதைக…
-
- 0 replies
- 354 views
-
-
புத்த துறவி கலகொட அத்தே ஞானசார தேரரின் முறைகேடான செயற்பாடுகள் தொடர்பில் காணொளிப்பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம், பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து சிங்கள மொழியில் தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளார். பொலிஸ் அதிகாரிகள் கடமையில் இருந்த போது அவர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி, தெற்கு அதிவேகப் பாதையில் வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்டுள்ளார். இந்த அத்துமீறிய செயல் தொடர்பில் ஞானசார தேரர் உள்ளிட்ட மூன்று துறவிகளுக்கு எதிராக ஹோமாகம பொலிஸார் நேற்றைய தினம் குற்றப் பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. ஹோமாகம நீதவான் நீதிமன்றிலேயே இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே…
-
- 0 replies
- 442 views
-
-
இந்தியாவின் தமிழகத்தில் PETA வின் உந்துதலால் ஜல்லிக்கட்டு எனப்படும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு இந்திய உயர் நீதிமன்றினால் தடைசெய்யப்பட்டது. அதிலிருந்து 'PETA’ எனப்படும் விலங்குகளின் நலன் தொடர்பான அமைப்பு தொடர்பில் தற்போது உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. ஜல்லிக்கட்டிக்கு தடை விதித்தமையால் தமிழகம் எங்கும் பரபரப்பான சூழல் தற்போதும் ஏற்பட்டுள்ள நிலையில் அது இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்த பீட்டா அமைப்பு, ஒருதடவை இலங்கையையும் விட்டுவைக்கவில்லை அதாவது இலங்கை அரசுக்கும் எச்சரிக்கை ஒன்றினை விடுத்திருந்தது. 2011 ஆம் ஆண்டில் இலங்கை பிலிப்பைன்ஸிக்கு யானைக்குட்டியொன்றை பரிசளிக்க இருந்த வ…
-
- 0 replies
- 361 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இந்திய உளவு அமைப்பான றோவை சேர்ந்த பிரதிநிதி ஒருவர் சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன்போது மஹிந்தவுக்கு அரசியல் ரீதியாக சில அழுத்தங்களை பிரயோகித்ததாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இருவருக்கும் இடையிலான சந்திப்பின் போது, அரசியல் நடவடிக்கைகளிலிருந்து எப்போது ஓய்வு பெறப் போகிறீர்கள் என றோ பிரதிநிதி கேட்டுள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலிலிருந்து ஓய்வு பெற தயாராக இருப்பதாக மஹிந்த தெரிவித்துள்ளார். எனினும் தனது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதனால் இவ்வாறு அரசியலில் இருக்க நேரிட்டுள்ளதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமர் அழுத்தம் பிரய…
-
- 1 reply
- 403 views
-
-
விளக்கமறியல் நீடிப்பு... தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்சவையும் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரான சமந்த லொக்கு ஹென்னதிகேவையும், பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், உத்தரவிட்டது. (படங்கள்: நிஷால் பதுகே) - See more at: http://www.tamilmirror.lk/190288/வ-ளக-கமற-யல-ந-ட-ப-ப-#sthash.WixZ4JXk.dpuf
-
- 0 replies
- 265 views
-
-
பிள்ளையானின் மனுவை விசாரிக்க முடிவு.! கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையான் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி, இவர் குறித்த மனுவை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரா…
-
- 1 reply
- 366 views
-
-
எமது ஒத்துழைப்புக்கள் எத்தகையது என்பதை அதிகாரத்தில் இருப்போர் புரிந்துகொள்ள வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் (க.கமலநாதன்) தமிழ் மக்கள் பழைமையானதும் ஆழமானதுமான வரலாற்றி னைக் கொண்டவர்கள். அவர்களை அழித்துவிடலாமென நினைத் தால் அது சாத்தியப்படாத ஒன்றாகும். நாட்டில் பல பகுதிகளிலும் வாழும் சகல தமிழ் மக்களினதும் இறைமையை பாதுகாக்கும் வகையில் நியாயமான தீர்வு அமையவேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலிறுத்தினார். அதேநேரம் இந்த செயற்பாடுகளுக்கான எமது ஒத்துழைப்புக்கள் எத்தகையது என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர…
-
- 0 replies
- 180 views
-
-
பத்திரிகை கண்ணோட்டம்
-
- 0 replies
- 252 views
-
-
வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை எதிர்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் என்னிடம் கேட்கவில்லை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இம்மாதம் முற்பகுதியில் வெளிநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தை மேற்கொள்ளவேண்டாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் முதல்வரிடம் கேட்டதாகவும், அதனை முதல்வர் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது. குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், வெளிநாட்டு விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்ட…
-
- 10 replies
- 1.1k views
-
-
உயிர் பிரிந்தால் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் : இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதம் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு கையொப்பமிட்டு அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியிலி ருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்…
-
- 5 replies
- 755 views
-
-
மைத்திரி, ரணில் ஊழல்வாதிகள் இல்லை: சம்பந்தன் ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியையும் ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர் எனினும் மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் ஊழல்வாதிகள் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஊழல் பற்றி நீங்கள் பேசி வருகின்றனர். அவ்வாறு பேசிபேசியே நீங்கள் மக்களை முட்டாளக்குகின்றீர்களா? ஊழல் பற்றி பேசுகின்றீர்கள் அப்படி இடம்பெற்றிருந்தால் ஊழலுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது நபர் யார்? ஒரு நபர் இருக்கிறார்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்…
-
- 0 replies
- 353 views
-
-
‘பிரதமரின் செயற்பாடுகளுக்குதமிழ் அரசியல்வாதி ஒத்து ஊதுகிறார்’ வி.நிரோஷினி நாட்டில் மீண்டும் பயங்கரவாதச் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டுக்கு, பிரபல தமிழ் அரசியல்வாதியொருவர் ஆதரவளித்து செயற்பட்டு வருவதாக, பிவிதுறு ஹெல உறுமய தெரிவித்தது. பிவிதுறு ஹெல உறுமயவின் தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் சுகீஸ்வர பண்டார இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “வெளிநாடொன்றில் இருந்து, இலங்கைக்கு அதி சக்திவாய்ந்த உபகரணம் ஒன்றை இறக்குமதி செய்ய, முயற்சிகள் முன்னெடுக்கப்பட…
-
- 0 replies
- 360 views
-