Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘58 நிபந்தனைகளில் ஒன்று நிறைவேறிவிடும்’ “ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டுள்ள 58 நிபந்தனைகளில் ஒரு நிபந்தனை நிறைவேறப்போகிறது” என, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். “தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி, சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப புதிய சட்டம் கொண்டுவரப்படும் என, சர்வதேசத்துக்கு அரசாங்கம் உறுதியளித்துவிட்டது” என்று, அவர் மேலும் தெரிவித்தார். புஞ்சிபொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “எமது நாட்டில், ஒருகாலத்திலும் இவ்வாறானதோர் அரச…

    • 0 replies
    • 412 views
  2.  ‘நல்லாட்சி விரைவில் பொக்கை வாயாகும்’ “நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு பல் தற்போது விழுந்து விட்டது. காலம் செல்ல செல்ல, அனைத்து பற்களும் கொட்டிவிடும். இதை நாட்டு மக்கள் விரைவில் காண்பர்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். புஞ்சிபொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து, ஐந்து பிரதான காரணங்களை முன்வைத்து நுகேகொடையில் நாளை, மாபெரும் மக்கள் பேரணியை நடத்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த மக்கள் பேரணி, ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஏற்பாடுசெய்யப்பட்டத…

    • 0 replies
    • 319 views
  3.  'காதல் பிரிவினாலேயே நாமல் குற்றஞ்சாட்டுகிறார்' - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனான அர்ஜுன அலோசியஸுக்கு, அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவருடன் நேரடித் தொடர்புள்ளது என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன, தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற போது, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார். அவர், தொடர்ந்து கூறுகையில், நல்லாட்சி அரசாங்கம், கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போல நாம் எதனையும் மறைக்கவில்லை…

    • 0 replies
    • 452 views
  4. அம்பிட்டியே சுமணரத்தின தேரரின் வழக்கு ஒத்திவைப்பு அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதவான் இந்த வழக்கை ஒத்திவைத்தார். மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்தின தேரர் மற்றும் தமிழரசுக் கட்சியினுடைய இளைஞர் அணியின் உப தலைவர் வி. பூபாலராஜா ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மே 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரில் இனத்துவேஷ பேச்சுகளை பேசியதாகக் கூறி, அம்பிட்டியே சுமணரத்தின தேரருக்கு எதிராகவும் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி தமிழரசுக் கட்சியினுடைய இளைஞர்…

    • 0 replies
    • 238 views
  5. அரச வங்கி ஒன்றின் ஏடிஎம்மில் கொள்ளையிட்ட இருவர் சிக்கினர் மொனராகலை - மெதகம பகுதியிலுள்ள வங்கியொன்றின் தானியக்க இயந்திரத்தில் (ஏடிஎம்) கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ம் திகதி இரவு மொனராகலை - மெதகம பகுதி அரச வங்கி ஒன்றின் தானியக்க இயந்திரத்தில் இருந்து 57 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டது. இதன்படி, மேற்கொண்ட விசாரணைகளில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 55 இலட்சம் ரூபாவுடன் கைதுசெய்யப்பட்டார். மேலும் இவர் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒருவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இந்தக் கொள்ளையுடன் தொடர்புடைய மற்றும…

    • 0 replies
    • 277 views
  6. குறைபாடுகள் இருப்பின் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் எல்லை நிர்ணய அறிக்கையில் குறைபாடுகள் இருப்பின் அது குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போட எந்தவொரு அவசியமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இந்த விடயம் குறித்து கலந்துரையாட இன்னும் சில தினங்களில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid…

    • 0 replies
    • 298 views
  7. கோடரி வெட்டுக்கு இலக்காகி கர்ப்பிணிப் பெண் படுகொலை ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண், கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர் 7 மாத கர்ப்பிணியான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர் மீதே இவ்வாறு கோடாரி வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு குழந்தையின் தயான இப் பெண்ணின் வீட்டுக்குள், திருடும் நோக்கோடு இன்று மதியம் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள், கோடாரியால் கொத்தியுள்ளனர். இரத்த வெள்ளத்தில் இருந்த பெண்ணைக் கண்ட அயலவர்கள், உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக, ப…

    • 5 replies
    • 2.2k views
  8. வவுனியாவில் உறவுகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது ; ஆதரவாக தமிழ் அரசியல் கைதிகளும் போராட்டத்தில் குதிப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கோரியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா தபால் நிலையம் அருகே இன்றைய தினம் 3 ஆவது நாளாக உண்ணாவிர போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடுமுழுவதும் உள்ள தமிழ் அரசியல் கைதிகள்அனைவரும் நாளை வியாழக்கிழைமை ஒருநாள் அடையாள உண்ணவிரத போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து 5 முக்கிய அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழ…

  9. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை நல்லாட்சி-ஹிருணிகா விசனம் நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர விசனம் வெளியிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர், நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்த வர்கள் என்ற வகையில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார். வீதியில் நடந்து செல்ல முடியவில்லை. மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவர்கள் என்ற வகையில் எம்மால் பதிலளிக்க முடியவில்லை. முன்னைய ஆட்சியை ஒழிக்கவும் புதிய ஆட்ச…

  10. உலகில் மக்கள் காணாமல் போதல், காணாமல் ஆக்கப்படுத்தல் போன்ற விடயங்கள் தற்போதும் நீடித்துக்கொண்டே செல்கின்றது எனலாம், அந்தவகையில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற போரின் போது காணாமல் போதல் என்பது இலங்கையில் சர்வசாதாரண விடயமாகவே சில தரப்பினரால் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில், காணாமல் போதல், பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் ஆகிய விடயங்களில் உலக அளவில் இலங்கை 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது. குறித்த விபரங்களை நேற்று கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வின்போது, பலவந்தமாக கடத்தல் மற்றும் காணாமல் போதல்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகம் தெரிவித்திருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் உறுதியான தகவல்கள் இல்லை என்…

  11. முல்லைத்தீவு சென்ற ஜனாதிபதி இடை நடுவில் கொழும்பு திரும்பினார் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலநிலை சீரின்மையால் தனது பயணத்தை இடைநடுவில் முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் இன்று இடம்பெற்று வருகின்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த விஜயம் இடைநடுவில் இரத்துச்செய்யப்பட்டுள்ளது. முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் இன்றைய தினம் இடம்பெறும் பொது நிகழ்வில் பாடசாலைக் கட்டிடத் திறப்புடன் மாவட்டத்தின் 1500 பேருக்கான காணி அனுமதிப் பத்திரங்களும் விநியோகிக்கப…

  12. வீரர்களுக்கு உதவாத யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானம்-விளையாட்டு பிரிவு வட்டாரங்கள் கவலை யாழ். துரையப்பா விளையாட்டு மைதானம் பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட நிலையிலும் அது விளையாட்டு வீரர்களுக்கு பயன்படுவதில்லை எனவும் எந்நேரமும் பூட்டிய நிலையிலேயே கிடப்பதாகவும் யாழ் மாவட்ட விளையாட்டு பிரிவு வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் அவ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கையில் யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானம் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்ப ட்டு கடந்த வருடம் ஜனவரி 18ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது. …

  13. சற்றுமுன் கிளிநொச்சியில் புகையிரதம் மோதி ஒருவர் பலி கிளிநொச்சி கட்டை பகுதியில் சற்றுமுன் புகையிரதம் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதமும் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளத்தாகவும் விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் எதனையும் உடனே பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். …

  14. அரசு உடன் பதவி விலக வேண்டும் : காட்டில் தியாகம் செய்த பிக்குனியின் சத்தியாகிரகம் அரசு உடன் பதவி விலக வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து சத்தியாகிரகம் ஒன்றில் ஈடுபட்ட பிக்குனியை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இவர் கடந்த ஞாயிற்று கிழமையன்று (22.1.2017) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் மரமொன்றின் கீழ் அமர்ந்து அரசு உடன் பதவி விலக வேண்டும் என்றும் அல்லாத பட்சத்தில் சாகும் வரை இச் சத்தியகிரகத்தில் ஈடுபடப்போதவாகவும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், திடீர் சுகவினமுற்ற இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பபட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், தன்னைப் பற்றிய விபரம் எதனையும் தெரிவிக்க அவர் ம…

  15. அமெரிக்காவின் ஹொப்பர் கப்பல் -ஏ.எச்.ஏ.ஹுஸைன் அமெரிக்காவுக்கும்; இலங்கைக்கும் இடையிலான இரு தரப்புக் கூட்டுறவை வளர்க்கும் முகமாகவும் பலப்படுத்தும் முகமாகவும் ஐக்கிய அமெரிக்க ஹொப்பர் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை நேற்று (24) வந்தடைந்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவு' கடற்படையினர் இந்து பசுபிக் சமுத்திரப் பிராந்தியத்தில் கடலோரப் பாதுகாப்பை அதிகரிக்கின்றனர் என்றும் எமது ஐக்கிய அமெரிக்கக் கடற்படை மாலுமிகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு இலங்கை சிநேகபூர்வமாக மற்றும் உடனடி உதவிகளை வழங்கியமை கூட்டுறவுச் செயற்பாட்டின் இன்னுமோர் உதாரணமாக அமைகின்றது என இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் த…

  16. முது­கெ­லும்­பி­ருந்தால் அலோ­சி­யஸை கைது செய்வோம் எனக் கூறுங்கள் சபையில் ஆளும் தரப்­புக்கு சவால் விடுத்தார் நாமல் எம்.பி. (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முது­கெ­லும்­பி­ருந்தால் அர்ஜுன அலோ­ஸி­யஸை கைது­செய்வோம் என பகி­ரங்­க­மாக கூறுங்கள் பார் க்­கலாம் என்று சபையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் அம்­பாந்­தோட்டை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கூட்டு எதி­ரணி ஆத­ர­வா­ள­ரு­மான நாமல் ராஜ­பக்ஷ ஆளும் தரப்­பிற்கு சவால் விடுத்தார். எமது அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் அர்­ஜூனா அலோஷி­யசை நிச்­சயம் கைதுசெய்வோம் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பிணை முறிகள் விற்­பனை தொடர்­பான சப…

  17. மீளவும் மார்ச்சில் போர்க்குற்ற விசாரணை ஜெனிவாவில் அறிக்கை சமர்ப்பிக்க ஏற்பாடு இலங்கையில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில் நாட்டின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டு மீளவும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதவுரிமைச் சட்ட மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசார ணை அறிக்கை ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கூட்டத் தொட ரில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் சையித் அல் ஹ_சைனின…

    • 0 replies
    • 281 views
  18. விமானத்தைச் சுட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு யாழில் வைத்து இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின் மீது தாக்குதல் நடத்தி நான்கு பேரைக் கொலை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ் மேல் நீதிமன்றம் நிராகரித்துத் தீர்ப்பளித்தது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, 1999 ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி யாழ்பாணத்தில் வைத்து இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் தில்லைராஜா என்னும் நபரின் ஏவுகணைத் தாக்குலுக்கு இலக்காகி விமானம் வீழ்த்தப்பட்டதுடன் குறித்த விமானத்தின் விமானப்படை அதிகாரி, விமானி, விமானப்படைச் சா…

  19. சுயாதீன ஆணைக்குழு விசாரணை வேண்டும் ஊழல் மோசடி தொடர்பில் ஏன் இதுவரை எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை:எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சபையில் கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) மத்­திய வங்கியின் பிணை முறி விவ­காரம் தொடர்பில் சுயா­தீன விசா­ரணை ஆணைக்­கு­ழு­வின் ஊடாக விசா­ர­ணை செய்­யப்­பட வேண்­டு­மென சுட்­டிக்­காட்­டிய எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், உண்­மைகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு குற்­ற­வா­ளி­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கப்­ப­ட­வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க் ­கி­ழமை மத்­திய வங்­கியின் பிணை முறி­வி­வ­காரம் மற்றும் அரச பொறுப்பு முயற…

  20. இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உத்தரவு இலங்கை கடற்படையினர் கைப்பற்றிய தமிழக மீனவர்களின் 120 படகுகளை மீட்க இரண்டு மாதங்களில் நடவடிக்கை எடுக்க, இந்திய மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தமிழர் தேசிய முன்னணியின் மாநில இளைஞரணிச் செயலர் க.திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், இராமநாதபுரம், இராமேசுவரம், எஸ்.பி.பட்டணம், தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 120 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் கையகப்படுத்தி உள்ளனர். அவற்றில் 80 படகுகள் இராமேசுவரம் மீனவர்களுடையதாகும். ஒவ்வொரு படகும் பல இலட்ச ரூபாய் மதிப்புடையவை. எனவே இலங்கை கடற்படையினர் கைப்பற்றிய 120 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க உர…

    • 0 replies
    • 168 views
  21. ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீடு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீடு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜினால் இந்த மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டது எனினும், மேன்முறையீடு செய்யப்பட்ட மனுதாரர் அல்லது அவரது சட்டத்தரணி நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதனால் இந்த மேன்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் மீளவும் இன்றைய தினம் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேன்முறையீட்…

  22. பிணைமுறி மோசடிக்கு நடவடிக்கை இல்லையெனில் நிறைவேற்றதிகாரத்தால் எவ்வித பயனுமில்லை-பந்துல இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியில் தீர்க்கமான முடிவொன்றை எடுக்காவிடின் நிறைவேற்று அதி காரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருப்பதில் எந்தவொரு பயனுமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பிலான கோப் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்தவிவாத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு கூறினா…

    • 0 replies
    • 258 views
  23. ஹம்பாந்தோட்டையில் போராட்டம் நடத்தப்பட்டதனால் உறவுகளுக்கு பாதிப்பு கிடையாது – சீனா ஹம்பாந்தோட்டை முதலீட்டு திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதனால் இரு தரப்பு உறவுகளை பாதிக்காது என இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் கலாச்சாரப் பிரிவு பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவாகவே காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 60 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. http://globaltamilnews.net/archives/15009

  24. A/L 2017 பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல், பெப்ரவரி 15 இறுதி நாள் க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு 2017 ஆம் ஆண்டில் தோற்றவுள்ள மாணவர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் விண்ணப்பம் கோரியுள்ளது. விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி கால எல்லை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியாகும். பாடசாலை மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள் விண்ணப்பப்படிவங்கள் தபாலிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. தனியார் பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவங்கள் தேசிய பத்திரிகைகளில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது http://www.dailyceylon.com/113736

    • 0 replies
    • 242 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.