ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்கு 107 மில்லியன் ரூபா நிதியுதவி.! சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு சட்டத்தினால் மட்டும் முடியாது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கு பௌத்த தத்துவம் பெரும் பலமாக உள்ளது எனத் தெரிவித்தார். பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். குறைந்த வசதிகளையுடைய விகாரைகளின் அபிவிருத்திக்கு பௌத்த மறுமலர்ச்சி நிதியத்தின் கீழ் 107 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது. பௌத்த சாசனத்தின் மேம்பாட்டுக்காக அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு தற்…
-
- 0 replies
- 224 views
-
-
அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைய முழுஐமயாக ஏற்று க்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சமஷ்டி அடி ப்படையிலான அரசியல் தீர்வு குறித்த கோரிக்கையையும் முன்வைக்கப் போவதில்லை என தம்மிடம் உறுதியளித்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர புதிய தக வலொன்றை வெளியிட்டுள்ளார். இவ்வாறான தமிழ் தலைவர் ஒருவர் எதிர்கட்சித் தரைவராக இருப்பது நாட்டு மக்கள் செய்த பாக்கியம் என கூறி இரா.சம்பந்தனுக்கு புகழாரம் சூட்டிய அமைச்சர் மஹிந்த அமரவீர, சம்பந்தன் போன்ற சிறந்த அரசியல் தலைவர் ஒருவர் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் காலத்திலேயே நாட்டின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.…
-
- 0 replies
- 297 views
-
-
1985ம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நாட்டிலே ஏற்பட்ட புரையோடிய யுத்த சூழ் நிலைகளினால் வடகிழக்கில் முஸ்லிம்கள் எதிர் நோக்கிய அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக வடகிழக்கில் முஸ்லிம்கள் இழந்துள்ள பூர்வீக நிலங்களை திருப்பி சட்டரீதியான ஆவணங்களுடன் திருப்பி கொடுக்கின்ற பட்சத்தில் அது முஸ்லிம்களுக்கு வடகிழக்கில் ஏற்படுத்தப்படுகின்ற நிரந்தர தீர்வாக அமையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்( PLOTE-DPLF) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல உயர்தர வகுப்பிற்காக தமிழ் பாட ஆசிரியருமான அமல் என அழைக்கப்படும் வியாழேந்திரன் உடனான நேர்காணலின் பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் பிரிக்கப்பட்டிருக்கின்ற வடகிழக்கானது மீண்டும் இண…
-
- 0 replies
- 242 views
-
-
வடக்கில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனையால் சமூக சீர்கேடுகள் அதிகரிப்பு வடபகுதியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் சமூக சீரழிவை ஏற்படுத்துவதாக புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர். வடக்கு கடற்பரப்பினூடாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கடத்தப்படுகின்ற போதைப்பொருட்கள் தரைவழியாக விநியோக ஸ்தர்களை சென்றடைகின்றமை பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். வடக்கு கடற்பரப்பினூடாக இடம்பெற்றுவரும் போதைப்பொருள் கடத்தலுடன் மீனவர்கள் தொடர்புபடவில்லை என இலங்கை இந்திய மீனவர்கள் கூறுகின்றனர். மீனவர்கள் என்ற போர்வையில் இந்த சட்டவிரோத செயலை திட்டமிட்டு ஒரு குழுவினர் மேற்கொண்ட…
-
- 0 replies
- 231 views
-
-
"புதிய தேர்தல் முறையை 20 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவர இடமளிக்கமாட்டோம்" (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அரசியலமைப்பு வரைபை சமர்ப்பிப்பதற்கு முன்னர் புதிய தேர்தல் முறைமையை உள்ளடக்கிய 20 ஆவது திருத்தச்சட்டத்தை முதலில் கொண்டு வந்தால் நாம் அதற்கு ஆதரவு வழங்க மாட்டோம். அரசியலமைப்பிற்குள்ளேயே தேர்தல் முறைமையும் உள்ளடக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன கேசரிக்கு தெரிவித்தார். புதிய தேர்தல் முறைமையை தனியாக கொண்டு வந்தால் புதிய அரசியலமைப்பினை கொண்டு வராமல் தந்திரோபாயமாக அரசியலமைப்பில் சில திருத்தங்…
-
- 0 replies
- 197 views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் 20 பேர் விரைவில் கூட்டு எதிரணியின் பக்கமிருப்பர் (க.கமலநாதன்) புதிய அரசியலமைப்பின் மீதான வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 20 உறுப்பினர்கள் கூட்டு எதிரணியின் பக்கமிருந்து அரசியலைமப்பிற்கு எதிராக வாக்களிப்பார்கள் என தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். தூய்மையான ஹெல உறுமைய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து இருவர் வெகு விரைவில் கூட்…
-
- 0 replies
- 171 views
-
-
சமாதானத்தை ஏற்படுத்தி சந்தேகங்களை களைவதன் மூலமே அபிவிருத்தி சாத்தியம் தேசிய அபிவிருத்தித்திட்ட பிரகடனத்தை வெளியிட்டு ஜனாதிபதி கருத்து அதிகாரத்தைப் பலப்படுத்திக்கொள்வதை யும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்தையும் கைவிட்டு, நாட்டை முன்னோக்கி அபிவிருத்தி செய்வதில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இனங்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தி சந்தேகங்களை களைவதன் மூலமே நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி திட்டத்துடனான இலங்கையின் தேசிய நலன்கள் தொடர்பில் …
-
- 0 replies
- 182 views
-
-
நாட்டின் பிரதமர் நானே - மஹிந்த விரும்பிய எதையும் செய்யலாம் ஜனநாயக நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் விரும்பியதை செய்ய சுதந்திரம் உண்டு எனவும், இருப்பினும் நானே நாட்டின் பிரதமர் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதுவருடத்தின் முதன்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, அரலி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது, கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டு அரசாங்கம் கவிழ்க்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள பிரதமர், தான் அடுத்த வாரம் சுவிஸர்லாந்துக்கு செல்லவுள்ளதாகவும்…
-
- 1 reply
- 348 views
-
-
வவுனியாவில் மதுபோதையில் வந்த இராணுவ வீரர்: முச்சக்கரவண்டி சாரதி மீது தாக்குதல் வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று ( 01) காலை 10.30மணியளவில் முச்சக்கர வண்டி சாரதி மீது மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்ட இரண்டு இராணுவ வீரர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று காலை மூன்று முறிப்பு பகுதியிலுள்ள இராணுவ வீரர்கள் இருவர் மதுபோதையில் அப்பகுதியிலிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர். முச்சக்கரவண்டியில் ஏறும்போது 150 ரூபா முச்சக்கரவண்டிக் கட்டணம் என்று முச்சக்கரவண்டி சாரதி தெரிவித்துள்ளார். பேரூந்து நிலையத்தில வந்து இறங்கியது…
-
- 1 reply
- 305 views
-
-
சுயலாபங்களுக்காக பயன்படுத்தப்படும் முள்ளிவாய்க்கால்-விநோ எம்.பி விசனம் முல்லைத்தீவு,முள்ளிவாய்க்கால் என்கின்ற சொற்பிரயோகங்களை சர்வதேசஅளவில் மாத்திரமன்றி தமிழ்த்தேசிய கூட்டமை ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் தமது சுயலாபங்களுக்காக பயன்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை பொறுத்தவரையில் அது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல. இன்றுவரைக்கும் அது ஒரு பிரச்சினையாக இருந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். வடமாகாண சபையின் புதிய உறுப்பினரான ஆண்டிஐயா புவனேஸ்வரனை வரவேற்கும் நிகழ்வு உடையார்கட்டு மகா வித்த…
-
- 1 reply
- 402 views
-
-
நீதித்துறை சுதந்திரமாக இயங்க உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக கடமையாற்ற வேண்டும். – யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி கோரிக்கை. நீதித்துறை தலையீடுகள் அற்று சுதந்திரமாக இயங்க நீதிமன்ற அரச உத்தியோகஸ்தர்கள் சிறப்பான முறையில் கடமையாற்ற வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கோரிக்கை விடுத்துள்ளார். மலர்ந்துள்ள புத்தாண்டின் முதல் கடமை நாளான இன்று நீதிமன்றஅரச உத்தியோகஸ்தர்கள் சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை யாழ். நீதிமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது. அந்நிகழ்வினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தேசிய கொடியேற்றி ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து நீதிமன்ற அரச உத்தியோகஸ்தர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். அத…
-
- 0 replies
- 377 views
-
-
இணைப்பு2 – சாவகச்சேரியில் முன்னாள் போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனநாயக போராளிகள் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளரான விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். சாவகச்சேரி டச்சு வீதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான இனியவன் எனும் புனைபெயரில் அழைக்கப்படும் தர்மசேனா ரிசிகரன் (வயது 35) எனும் நபரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். சாவகச்சேரியில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்…
-
- 1 reply
- 400 views
-
-
நுண் கடன் செலுத்தமுடியாது மூன்று பிள்ளைகளின் தாய் தற்கொலை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்துள்ளாா். இச் சம்பவம் இன்று 02-01-2016 இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியைச் சோ்ந்த அம்பிகைபாலன் ஜெகதீஸ்வரி வயது 32 என்பவரே தற்கொலை செய்துள்ளாா். தற்கொலை செய்யும் முன் அவா் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் காணப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் கணவன் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் அவா் திரும்பி வரவில்லை எனவும் த…
-
- 0 replies
- 379 views
-
-
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை ; இரண்டாம் கட்ட அரச தரப்பு பேச்சுவாரத்தை சற்று முன் ஆரம்பம் (ஆர்.யசி ) இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பிலான இரண்டு நாட்டுகளுக்கு இடையிலான இரண்டாம் கட்ட அரச தரப்பு பேச்சுவாரத்தை இன்று கொழும்பில் சற்று முன் ஆரம்பமாகியது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்திய மீன்வளத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் குழுவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர். இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய தமிழக மீனவர்களை தடுக்க வேண்டும் என்பதும் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி முறை…
-
- 1 reply
- 310 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணத்தில் வசிக்கின்ற மக்களுக்கு கல் வீடே வேண்டும், பொருத்து இரும்புக் கூடு வேண்டாம் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பொருத்து வீட்டு விண் ணப்பங்களை முழுமையாக நிரா கரிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கையில், பொருத்து இரும்பு வீட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும், உயர்மட்ட அரசியல் தலைவர்களும் பொருத்தமற்ற வீட்டுத் திட்டம் என எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும், மாகாணசபைகளிலும் இதை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்…
-
- 1 reply
- 890 views
-
-
திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை நடந்து பதினொரு ஆண்டுகள்! குளோபல் தமிழ் செய்தியாளர்:- தமிழ் சமூகத்தை பேரதிர்ச்சிக்கு உட்படுத்தும் விதமாக நடாத்தப்பட்ட திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை இடம்பெற்று இனறுடன் பத்து வருடங்கள் கடந்து ஒரு தசாப்தம் ஆகியுள்ளது. இந்தப் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுக்கு இப்படுகொலையும் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. 2006 சனவரி 2 ஆம் நாள் …
-
- 1 reply
- 519 views
-
-
முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவந்த மாகாத்மாகாந்திசிலை விஷமிகளால் உடைப்பு.! வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைமாவட்டத்தில் அமைக்கப்பட்டு வந்த சிலைகளில் ஒன்றான முல்லைநகரின் மத்தியில் உள்ள மகாத்மாகாந்தி சிலை நேற்று இரவு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் இந்த சிலை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இந்த சிலை அமைப்பது தொடர்பில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சிலை உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாராளுமன…
-
- 67 replies
- 3.5k views
- 1 follower
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தனக்குச் சாதகமான மற்றொரு தீர்மானத்தை நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரசு கோரினால் மேலும் ஒருவருட அவகாசத்தை வழங்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ள நிலையில், அதை சாத கமாகக் பயன்படுத்தி இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து நிலைமையை சமாளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவாகத் தீர்மானம் இயற்றப்பட்டால் அதன் மூலம் நல்லிணக்கச் செயற்பாட்டை மேற்கொள்வதற்குத் தேவைப்படும் பொறிமுறைகளை அமுல்படுத்துவதற்கான காலஅவகாசம் மேலும் வழங்கப்பட வேண்டியிருக்கும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடரானது பெப்ரவரி 27 தொடக்கம் மார்ச் 24 வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ள…
-
- 0 replies
- 307 views
-
-
சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் எதிர்ப்பையும் மீறி சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 7ஆம் நாள் அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி மற்றும் 15ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு ஆகியவற்றை சீனாவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கவுள்ளார். இந்த நிகழ்வில் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் மற்றும் முக்கிய அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக, ருகுணு அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் அஜித் கோஸ்தா தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின்கீழ், துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் கைத்தொழில் பூங்கா ஆகியன அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்காக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீத உரிமை சீனாவுக்கு வழங்கப்படவுள்ளதுடன், அம்பாந்தோ…
-
- 4 replies
- 430 views
-
-
படகுகளை விடுவிக்க இலங்கை பரிசீலனை... தமிழக மீனவர்கள் மகிழ்ச்சி ராமேஸ்வரம் : இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிப்பது குறித்து பரிசீலனை செய்ய இருப்பதாக இலங்கை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. படகுகளையும், மீனவர்களையும் மீட்டு தர கோரி மீனவர்கள் போராடுவதன் விளைவாக சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களும், படகுகளும் விடுவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் பிடித்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 122 படகுகளையும் அதில் இருந்த உபகரணங்களையும் இலங்கை அர…
-
- 0 replies
- 318 views
-
-
வெளிநாட்டு பல்கலைகழக மாணவிகளின் உயிரையும் மானத்தையும் பாதுகாத்த அதிபர்.! கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தில் வெளிநாட்டு பல்கலைகழக மாணவிகள் இருவரின் உயிரையும் மானத்தையும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸ் பாதுகாத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு குறித்த புகையிரதத்தில் மட்டக்களப்பில் தொண்டர் பணியாற்றுவதற்காக ஒருநாட்டின் பல்கலைகழக மாணவிகள் இருவர் வருகை தந்துள்ளனர். அவர்களை 6 இளைஞர்கள் கத்திமுனையில் சுற்றிவளைத்து சிறைப்பிடித்துக்கொண்டிருந்துள்ளனர். சுமார் 3 மணித்தியாலங்களாக இம்மாணவிகள் குறித்த குண்டர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு ஜீவமரணப்போராட்டத்தில் இருந…
-
- 0 replies
- 404 views
-
-
பௌத்த மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதம் இன்றி அரசியல் சாசன சரத்துக்கள் உருவாக்கப்படாது – ஜனாதிபதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பௌத்த மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதம் இன்றி அரசியல் சாசன சரத்துக்கள் உருவாக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிக்கப்பட உள்ள புதிய அரசியல் சாசனத்தில் நாட்டுக்கு பாதகமான எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய அரசியல் சாசனத்தில் நாட்டை பிளவடையச் செய்யக் கூடிய எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை எனவும் உத்த…
-
- 2 replies
- 336 views
-
-
ஒன்றுபட்ட சக்தியாக இலட்சியத்தை வென்றெடுக்க நீண்டகாலமாக பயணிக்கின்றோம் “ஒன்றுபட்ட சக்தியாக இலட்சியத்தை வென்று எடுகின்ற பாதையில் மிக நீண்டகாலமாக நாங்கள் பயணிக்கின்றோம் இன்று எமது மக்களுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை பெறும் பொருட்டான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது - என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சிக் கட்சியின் செயலகமான அறிவகத்தில், கிளையின் வருட இறுதி ஒன்று கூடல் நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு கூறினார். சனிக்கிழமை (31) நடைபெற்ற இந் நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்…
-
- 0 replies
- 147 views
-
-
ராஜபக்சே எச்சரிக்கையை உதறித்தள்ளினார்: இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்த சிறிசேனா சபதம் இலங்கையில் ராஜபக்சேயின் எச்சரிக்கையை உதறித்தள்ளிவிட்டு, நல்லிணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த அதிபர் சிறிசேனா சபதமிட்டுள்ளார். கொழும்பு: இலங்கையில் 1983-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப்போர் கால் நூற்றாண்டைக் கடந்து நீடித்தது. கடந்த 2009-ம் ஆண்டு, மே மாதம் 18-ந் தேதி இந்தப் போர் முடிவுக்கு வந்தது. ஆனாலும் அங்கு தமிழர்களும், சிங்களர்களும் இணக்கமாக வாழ்கிற நிலை உருவாகவில்லை. சிங்களர்களைப்போன்று தமிழர்களுக்க…
-
- 0 replies
- 375 views
-
-
வடக்கில் உயர் காவல்துறை அதிகாரிகள் இருவர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாக குற்றச்சாட்டு வடக்கில் உயர் காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கில் கடமையாற்றி வரும் துணை காவல்துறை அத்தியட்சகர்கள் இருவர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரதேச வர்த்தகர்கள் மற்றும் காவல் நிலையமொன்றின் பொறுப்பதிகாரி ஆகியோர் காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் வடக்கிற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் சரத் குமாரவிடமும், காவல்துறை தலைமையகத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். பணமாகவும், இலத்திரனியல் சாதனங்களாகவும் ஒரு துணை காவல்துறை அத்தியட்சகர் லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில…
-
- 0 replies
- 220 views
-