ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143408 topics in this forum
-
அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண அதிகாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு கருத்துக்களை முன்வைத்த போதிலும் உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கூறுவது ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயகவிடம் அதிகாரப்பகிர்வு மற்றும் ஆளுநர் நீக்கம் தொடர்பில் கூட்டமைப்பின் கருத்து தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். அதிகார பரவலாக்கல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பு பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றது. எனினும…
-
- 0 replies
- 262 views
-
-
வடக்கில் இருந்து இந்தியா வரை பயணிகள் கப்பல் ஒன்று செல்வதற்கு 32 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 2ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரை தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவாதிரை திருவிழாவில் கலந்து கொள்ள வடக்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், கப்பல் ஊடாக பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்முறை திருவிழாவில் 2000 பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதற்கு கப்பல் ஒன்றில் பயணிப்பதற்கு வடமாகாண ஆளுநரிடம் தான் அனுமதி கோரியதாக சிவசேனை இந்து சம்மேளத்தின் பிரதானி சச்சித்தானந்தன் தெரிவித்துள்ளார். தற்போது வரையில் இந்த கோரிக்கைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் மு…
-
- 1 reply
- 431 views
-
-
நிதி மற்றும் பௌதீக முன்னேற்றமானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது கூடுதலானதாக காணப்படுகின்றது என வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முதலாவது வடக்கு மாகாண சபையின் 70 ஆவது அமர்வு இன்று(20) காலை 9.30 மணிக்கு மாகாண பேரவைச் சபா மண்டபத்தில் நடைபெற்ற போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அமைச்சுக்காக நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதத்தில் அறிக்கையினைச் சமர்ப்பித்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், முதலமைச்சரின் அமைச்சானது நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, சமூக சேவை, புனர்வாழ்வளித்தல், மகளிர் விவகாரம், மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், தொழிற் துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும், சுற்றுலா, உள…
-
- 0 replies
- 320 views
-
-
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவாண் விஜேவர்தனவுக்கும் ஜப்பான் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியஸவாவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் இராணுவ, கடற்படை, விமானப்படைத் தளபதிகளும், ஜப்பானிய அதிகாரிகளும் பங்கேற்றனர். இதன்போது இரு நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com/security/01/128849?ref=home
-
- 0 replies
- 296 views
-
-
எதிர்ப்பினை ஏற்படுத்தி அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுக்கும் பலம் எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ளதா என்ற சந்தேகம் காணப்படுவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது மேலும் கருத்து தெரிவிக்கையில், 15,000 ஏக்கர் நிலபரப்பு தனியாருக்கு விற்கப்பட்டால் 1000 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்படுவதாக சீனாவிற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி தெளிவுப்படுத்தியுள்ளது. குறிப்பாக அம்பாந்தோட்டையின் கரையோரங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரமாக காணப்படும் இவ்வாறான பிரதேசங்களை விற்கும் நடவடிக்கை சாத்தியமாகாது. …
-
- 0 replies
- 167 views
-
-
வவுனியா - மகாறம்பைக்குளத்தில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா - மகாறம்பைக்குளத்தில் நேற்று இரவு 9.00 மணியளவில் இரு அயலவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் மோதலாக மாறி வாள்வெட்டுச் சம்பவத்தில் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 21 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களே படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார்மேற்கொண்டுவருகின்றனர். http://www.…
-
- 0 replies
- 251 views
-
-
கர்நாடக சங்கீதம் பழக விரும்பும் யாழ். மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்! கர்நாடக சங்கீதம் மற்றும் நடனம் கற்க ஆர்வமுள்ள மாணவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி இந்தியத் துணைத் தூதரகத்தில் குறித்த பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இந்தியத் துணைத் தூதரகம் ஹிந்தி மொழி மற்றும் யோகாப் பயிற்சிகளை நடாத்திவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://thuliyam.com/?p=51950
-
- 24 replies
- 973 views
- 1 follower
-
-
நிரந்தர கப்பல் போக்குவரத்தை நான் கோரவில்லை ; ரெஜினோல்ட் குரே (ஆர்.யசி ) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிரந்தர கப்பல் போக்குவரத்து அவசியமென்று ஒருபோதும் நான் தெரிவிக்கவில்லை. தென்னிந்தியாவில் நடைபெறும் திருவாதிரை நிகவுக்கு ஒரு படகை ஏற்பாடு செய்துதருமாறே நான் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தேன் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.எனது கோரிக்கைக்கு இன்னும் அரசாங்கம் பதில் தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை இந்தியா ஆகிய நாடுகலக்கு இடையில் நிரந்தர கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க வேண்டுமென வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் அதனை மறுக்கும் வகையில்…
-
- 0 replies
- 302 views
-
-
மாத்தறையில் ஹமர் வாகனம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஹமர் ரக ஜுப் வண்டியொன்றை மாத்தறை பொலிஸார், இன்று சோதனையிட்டுள்ளனர். கோடீஸ்வர வர்த்தகரின் மகன், இந்த வாகனத்தை செலுத்தி வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாகனத்தை பயன்படுத்துவதற்கு மோட்டார் வாகன திணைக்களம் வழங்கியுள்ள அனுமதிப்பத்திரத்தை வாகனத்தை செலுத்திய நபர், பொலிஸாரிடம் காண்பித்துள்ளார். இடது புறத்தில் சுக்கானை கொண்ட இந்த வாகனம், 3 மாதங்களுக்கு முன்னர், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், சோதனையின் பின்னர் வானகத்தை பொலிஸார் விடுவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/188372/ம-த-தற-ய-ல-ஹமர-வ-கனம-#sthash.…
-
- 1 reply
- 382 views
-
-
யாழில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிக் கொலை யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியிலுள்ள பொற்பகுதி, குடத்தனை கிராமத்தில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தப் பெண் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 62 வயதான தங்கவேலாயுதம் கமலாதேவி என்ற பெண்ணே நேற்றிரவு 11 மணியளவில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெண்ணின் கணவர் நோயாளி என்பதால் அவர் நேற்றிரவு தூக்கமாத்திரை உட்கொண்டு விட்டு நித்திரைக்கு சென்றதால் இரவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை. பெண்ணின் கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ள நபர்கள் பெண் அணிந்திருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பெண்ணின் சடலம் பருத்திதுறை அரச …
-
- 3 replies
- 454 views
-
-
வவுனியாவுக்கு கொண்டுச் செல்லப்பட்ட வெடி மருந்துகளுடன் மூவர் கைது வவுனியாவுக்கு கொண்டுச் செல்லப்பட்டு விநியோகிக்க தயாரான நிலையில் இருந்த வெடிமருந்து தொகையுடன் சந்தேகநபர்கள் 3 பேர், இன்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளனர். அனுமதிப்பத்திரம் இன்றி மதவாச்சியில் இருந்து, முச்சக்கரவண்டியில் இந்த வெடி பொருட்கள் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகிப்பதற்காக இவர்கள் இந்த வெடிபொருளை கொண்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/188371/வவ-ன-ய-வ-க-க-க-ண-ட-ச-ச-ல-லப-பட-ட-வ-ட-மர-ந-த-கள-டன-ம-வர-க-த-#sthash.tlaZqjCB.dpuf
-
- 0 replies
- 196 views
-
-
வவுனியாவில் இராணுவ வாகனம் விபத்து : 3 இராணுவ வீரர்கள் படுகாயம் சதீஸ் வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். வவுனியாவிலிருந்து மாங்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இராணுவத்தினரின் ட்ரக் வாகனமொன்று திடீரென டயர் காற்று போனதால் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் மூன்று இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/14578
-
- 0 replies
- 228 views
-
-
வவுனியாவில் கஞ்சாவை பாவித்துக் கொண்டிருந்த இரு இராணுவ வீரர்கள் கைது சதீஸ் வவுனியாவில் இன்று மாலை 7 மணியளவில் இரண்டாம் குறுக்குத் தெருவில் இரண்டு இராணுவ வீரர்கள் கஞ்சா பாவனையில் ஈடுபட்டிருந்த போது பொலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று (20) மாலை மழை பெய்து கொண்டிருந்தபோது மக்களற்ற பகுதியில் சிவில் உடையில் இரண்டு இராணுவ வீரர்கள் கஞ்சா பாவனையில் ஈடுபட்டிருந்தபோது பொலிசார் கைது செய்துள்ளதாகவும் இவ்விருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. http://www.virakesari.lk/article/14579
-
- 0 replies
- 161 views
-
-
அரங்கேற்ற கலை மாணவர்களும் வீதியில்... கட்புல மற்றும் அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழக மாணவர்கள், தமது கல்வி நடவடிக்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்து, தாமரை தடாகத்துக்கு அருகில் உள்ள பல்கலைகழகத்துக்கு முன்னால், இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/188352/அரங-க-ற-ற-கல-ம-ணவர-கள-ம-வ-த-ய-ல-#sthash.pimqy6tn.dpuf
-
- 0 replies
- 269 views
-
-
நல்லாட்சி அமைச்சரவையில் மாற்றம் இல்லை அழகன் கனகராஜ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் எவ்விதமான மாற்றங்களும் கொண்டுவரப்படமாட்டாது என்று நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், தங்களுடைய கடைமைகளையும் பொறுப்புக்களையும் செவ்வனே செயற்படுத்துகின்றனர் என்பதனால், அவ்வமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு எவ்விதமான தேவையும் இல்லை என்பதனால், மாற்றங்களை செய்யாமல் இருப்பதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. …
-
- 0 replies
- 180 views
-
-
யாழ் பல்கலைகழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடம் கற்கைகள் ஆரம்பம். யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகமான தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் இன்று 20-12-2016 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல்நகாில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஏற்கனவே விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன இயங்கி வருகின்ற நிலையில் தற்போது தொழிநுட்ப பீடமும் இயங்க ஆரம்பித்துள்ளது. நாடாளவிய ரீதியில் 23 மாவட்டங்களில் இருந்து 211 மாணவா்கள் இங்கு அனுமதி பெற்றுள்ளனா் என யாழ் பல்கலைகழக துணைவேந்தா் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டார். மேலும் யாழ் பல்கலைகழகத்தின் பத்தாவது பீடமாக தொழிநுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் இலங்ககையில…
-
- 0 replies
- 175 views
-
-
பாசிக்குடா கடலில் மர்மப்பொருள் திருகோணமலை பாசிக்குடா கடற்பகுதியிலிருந்து சுமார் 12 கிலோமீற்றர் தூரத்தில், மர்மப்பொருளொன்று மூழ்கிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மூழ்கிக்கொண்டிருக்கும் மர்மப்பொருள், கப்பலாக இருக்கலாம் அல்லது விமானத்திலிருந்து கடலில் விழுந்த ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/188250/ப-ச-க-க-ட-கடல-ல-மர-மப-ப-ர-ள-#sthash.CkBovCbg.dpuf
-
- 2 replies
- 412 views
-
-
அவர்கள் திரும்பி வரவே இல்லை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்- வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனுடன் ஊர் திரும்பும் மக்களின் உணர்வு எதன்பாற்பட்டது என்பதை விபரிக்கவே தேவையில்லை. ஒரே ஒரு தடவை என் வீட்டை பார்க்க வேண்டும், ஒரே ஒரு தடவை என் தெருவை பார்க்க வேண்டும் என்ற தவிப்புடன் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளுக்குச் சென்றவர்கள் பலர் திரும்பி வராத கதைகள் ஈழத்தில் நிறையே நடந்ததுண்டு. அது மாத்திரமல்ல, போர் ஓய்ந்திருந்த சமாதான காலமொன…
-
- 0 replies
- 306 views
-
-
செங்கலடியில் மர்மமான முறையில் வீசப்பட்டுள்ள காற்சட்டை, ஸ்மார்ட் போன்கள், தொப்பி, காலணிகள் மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் செங்கலடிச் சந்திக்கு சற்று அப்பால் பதுளை வீதியில் உள்ள பாழடைந்த வளவொன்றுக்குள் மர்மமான முறையில் களற்றி வீசப்பட்ட நிலையில் ஆணினது நீளக் காற்சட்டை, 2 ஸ்மார்ட் போன்கள், தொப்பி, சாதாரண காலணி ஆகியவை காணப்பட்டதையடுத்து ஏறாவூர் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இவை நேற்று (19.12.2016) திங்கட்கிழமை நள்ளிரவுக்கும் இன்று (20.12.2016) செவ்வாய்க்கிழமை அதிகாலைக்கும் இடைப்பட்ட வேளையில் அவ்விடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இப்பொருட்களுக்குரிய நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா…
-
- 0 replies
- 379 views
-
-
இந்திய மீனவர்கள் 7 பேர் கைது நெடுந்தீவின் வடமேற்கு பகுதியில், இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள், இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 2 டோலர் படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள், மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் கூறியுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/188330/இந-த-ய-ம-னவர-கள-ப-ர-க-த-#sthash.d6dFMapi.dpuf
-
- 0 replies
- 179 views
-
-
கிளிநொச்சியில் மூளைக்காச்சலால் ஐந்து வயது குழந்தை மரணம் கிளிநொச்சியில் மூளைக்காச்சல் காரணமாக ஐந்து வயது குழந்தை ஒன்று மரணமாகியுள்ளது. இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரத்தைச்சோ்ந்த விஜயராஜ் விஸ்னுஜன் என்ற குழந்தையே மூளைக்காச்சல் காரணமாக இறந்துள்ளது.சில நாட்களாக காச்சலும் வாந்தியும் காணப்பட்டதாகவும் பின்னா் குறித்த குழந்தையை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவந்த போது ஏற்கனவே குழந்தை இறந்து காணப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் பின்னா் உடற்கூற்று பாிசோதனையை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியும், திடீர்…
-
- 0 replies
- 269 views
-
-
சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டில் ஈ.பி.டி.பி.யின் செயற்பாட்டை முன்னெடுக்கின்றார்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மேல் நீதிமன்றத்தினால் இரட்டை கொலை குற்றவாளிகளாக இனம் காணப்பட்டு , சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் , வெளிநாடுகளில் இருந்து , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார். யாழில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெர…
-
- 1 reply
- 299 views
-
-
நீதிமன்றம் செல்வோம் (எம்.ஆர்.எம்.வஸீம்) அம்பாந்தோட்டை துறைமுகத்தை அரசாங்கம் சீனாவுக்கு வழங்குவதனை எதிர் த்து நீதிமன்றம் செல்ல தீர்மானித்துள்ளோம் என ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், அரசாங்கம் அம்பந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு ஆயிரத்து 300 டொலர் மில்லியனுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது. எதிர்க்கட்சிகள் அதனை எதிர்க்க ம…
-
- 0 replies
- 299 views
-
-
இரு தரப்பு பிரச்சினையை அரசியலாக்கி ஆட்சி மாற்ற சூழ்ச்சியை சர்வதேசம் முன்னெடுத்தது. இதன் விளைவாக இலங்கை இன்று இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவின் தீவிர ஆக்கிரமிப்பிற்குள் காணப்படுகின்றது. இனி நாடு மிஞ்சுமா என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார். ஆட்சி மாற்ற சூழ்ச்சிக்கு எமது அரசாங்கத்தில் இருந்து ஒத்துழைப்பு வழங்கியவர்கள் நல்லாட்சியிலும் அமைச்சர்களாக உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பது தேசியத்துவத்தை பாதுகாக்கும் கொள்கையுடையது. அதற்கு எதிராக செல்லும் தற்போதைய ஆட்சியார்களுக்கு காலம் கடந்து தேர்தல் வைத்தாலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். ஹம்பந்தோட்டை மாவட்ட அமைப்பாளர்களுடனான சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் …
-
- 1 reply
- 507 views
-
-
மக்களின் விருப்பத்தை மீறி பொருத்து வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படாது பிரதமர் உறுதியளித்துள்ளதாக கூறுகிறார் அமைச்சர் மனோ (பா.ருத்ரகுமார்) வடக்கு மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பொருத்து வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் மக்களின் விருப்பத்துக்கு மாறாக அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படாது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் உறுதியளித்ததாக தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கருமங்கள் தொடர்பான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மக்களுக்கு பொருத்தமில்லாத திட்டங்களை திணிக்கக் கூடாது. அதனடிப்படையில் மலையகத்தில் குறித்த பொருத்து வீட்டுத்திட்டத்தை மேற…
-
- 0 replies
- 267 views
-