ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143406 topics in this forum
-
அவன்ட்கார்ட் கப்பல் இந்தியாவுக்கு பயணித்தது அவன்ட் கார்ட் கப்பலை, 35 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறு, இலங்கை கப்பல் நிறுவனத்துக்கு, காலி பிரதான நீதவான் நிலுப்புலி லங்காபுர உத்தரவிட்டிருந்ததையடுத்து, அவன்ட் கார்ட் கப்பல், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடந்த சனிக்கிழமை சென்றுள்ளது. அந்தக் கப்பல் உலோகக்கழிவுக்காக விற்பனை செய்யப்படுவதற்காகவே, தற்போது இந்தியாவுக்குச் சென்றுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/188290/அவன-ட-க-ர-ட-கப-பல-இந-த-ய-வ-க-க-பயண-த-தத-#sthash.PM3GxFbu.dpuf
-
- 0 replies
- 237 views
-
-
தவராசா தொடர்பான முடிவு தனிப்பட்ட முடிவல்ல எம்.றொசாந்த் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான முடிவானது தனது தனிப்பட்ட முடிவல்ல என்றும் அம்முடிவு, கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட முடிவாகும் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கட்சி அலுவலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான தீர்மானம், எனது தனிப்பட்ட முடிவல்ல. கட்சி ரீதியான முடிவாகும். “2013ஆம் ஆண்டு வடமாகாண சபை தோற்றம் பெற்றபோது, க.கமலேந்…
-
- 0 replies
- 292 views
-
-
படுகொலைகள் தொடர்பில் விசாரணை வேண்டும். – டக்ளஸ் படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என அக் கட்சியின் செயலாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …
-
- 0 replies
- 329 views
-
-
யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் சிலர் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கோட்டையில் பணி புரியும் பணியாளர்கள் தெரிவித்தனர். அது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில் , யாழ்ப்பணத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக யாழ்ப்பாண கோட்டை உள்ளது. தற்போது கோட்டை தொல்லியல் திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டு வருவதுடன் நெதர்லாந்து அரசாங்க உதவியுடன் புனரமைப்பு வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அந்நிலையில் தினமும் பெருமளவான உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் கோட்டை பகுதிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். அதில் சிறுவர்கள் முதியோர்கள் என பாகுபாடின்றி வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிலர் கோட்டை பகுதியில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு என வருகின்றார்கள். அவ்வாறு அநாகரிக …
-
- 15 replies
- 1.2k views
-
-
தற்போதும் சிலர் இந்தியா தமது மீட்பர்கள் என நம்பிக்கொண்டிருந்தாலும், தமிழ் மக்கள் தமது சுயத்தை மற்றும் சுயமரியாதையை இழக்க இந்தியாவே மூலகாரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி தொடர்பான கூட்டம் நேற்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாச்சார மண்டபம் தொடர்பாக உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், இந்திய கலை கலாச்சாரத்தை தமிழ் மக்கள் மீது திணிப்பதற்காகவே யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் அமைக்கப்படுகிறதே தவிர இந்த நாட்டின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கோ அல்லது தமிழ் மக்களின் கலாச்சாரத்தை வளர்ப…
-
- 0 replies
- 424 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் முதலாம் ஆண்டு பூர்த்தியடைந்த இன்று இணைத்தலைவர் Dr.லக்ஸ்மன் உரை தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு பூர்த்தியடைந்துள்ள இன்றையநாளில் , மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூடியிருக்கின்றோம். எதுவித தனிப்பட்ட , சுய அரசியல் நலன்களை விடுத்து இனத்தின் நலனை மட்டும் இலக்காக கொண்டு நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இயங்கவேண்டிய காலத்தின் தேவைப்பாட்டை உணர்ந்து தமிழ் மக்கள் பேரவை 19/12/2915அன்று முதன்முறையாக தனது உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டிருந்தது. எனினும் , நீங்கள் அனைவரும் அறிந்த வகையில் , ஆயுதமோதல்களின் முடிவிற்கு பின்னரான சூழ்நிலையில் , எம் மத்தியில் நிலவிவந்த மற்றும் திட்டமிட்டே ஏற்…
-
- 3 replies
- 579 views
-
-
அச்சத்தை ஏற்படுத்தும் விபத்துக்கள் நாட்டில் வாகன விபத்துக்கள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கை காணமுடிகின்றது. குறிப்பாக அண்மைக்காலமாக மிகவும் கோரமான விபத்துக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. வாகன விபத்துக்களை தடுக்கும் நோக்கிலும் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும் அரசாங்க மட்டத்தில் எந்தளவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் வாகன விபத்துக்களும் அதனால் உயிரிழக்கின்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்துசெல்வதை காணமுடியவில்லை. அந்தவகையில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி – சங்கத்தானைப் பகுதியில் நேற்று முன்தினம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் தென்…
-
- 1 reply
- 1.3k views
-
-
பாராட்பட வேண்டிய சிங்கள அரச உத்தியோகஸ்தர்கள் – “தமிழ் மொழிக்கு முதலிடம்” கம்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 100 அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு 12 நாட்கள் இரண்டாம் மொழியான தமிழ்மொழி பயிற்சிநெறி ஒன்றினை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நடாத்தியது. அரச ஊழியர்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தபட்ட இந்த பாடநெறியின் (முடிவு) இறுதி நாள் ஒரு தழிழ் காலாச்சார நிகழ்வாக கம்பளை பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது அரச சிங்கள உத்தியோகஸ்தர்கள் தமிழ் கலாச்சார நிகழ்வுகளை மேடையேற்றினர். இந்த நிகழ்வுகள் ஏனையோருக்கு ஒரு முன்னுதாரணமாக காணப்பட்டதுடன் மிகவும் இர…
-
- 0 replies
- 546 views
-
-
11 பேரை காவுகொண்ட யாழ் விபத்து : 'தமிழர்கள் எம்மீது வெறுப்பாக இருப்பார்கள் என நினைத்தோம். ஆனால் தமிழ் மக்களே எமக்கு பூரண உதவிகளை வழங்கினார்கள்' : கண்ணீருடன் தெரிவித்த உறவுகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் சிக்கிய எமது உறவுகளை தமிழ் மக்கள் உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததோடு சகல உதவிகளையும் செய்தனர். சிங்களவர்கள் மீது வெறுப்பாக இருப்பார்கள் என நினைத்துகொண்டிருந்த நிலையில் விபத்தில் தமிழ் மக்களே எமக்கு பூரண உதவிகளை வழங்கினார்கள் என விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். விபத்து சம்பவத்தையடுத்து உயிரிழந்தவர்களி…
-
- 1 reply
- 435 views
-
-
பொருத்து வீட்டிற்கு எதிராக கிளிநொச்சியில் நாளை போராட்டம் மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடு க்கவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 65 ஆயிரம் பொருத்து வீடுளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், பயனாளிகளான மக்களும் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த திட்டத்திற்கு எதி ராக முதல் முறையாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர். …
-
- 5 replies
- 925 views
-
-
அத்துமீறும் இந்திய மீனவர்களால் 9000 மில்லியன் நஷ்டம் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபட்டுவருவதால் வருடத்துக்கு 9 ஆயிரம் மில்லியன் ரூபாய் இலங்கைக்கு நஷ்டம் ஏற்படுவதாக மீன்பிடி மற்றும் கடற்றொழில் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை கடற்பரப்பில் ஒருவாரத்துக்குள் இந்திய மீனவர்கள் சுமார் 6000 டொன் மீன்களை பிடிக்கின்றனர். அதுமாத்தரமின்றி ஒருவாரத்துக்குள் 3 இந்திய படகுகள் என ஒருவருடத்துக்கு 5000 மீன்பிடி படகுகள் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பினுள் நுளைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இந்நிலையில் இலங்கை…
-
- 0 replies
- 402 views
-
-
யாழ்.கொக்குவில் சனசமூக நிலையம் ஒன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்:- யாழ்.கொக்குவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையம் ஒன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் சனசமூக நிலையத்தின் யன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் சுவர்களும் இடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, குறித்த சனசமூக நிலையத்தின் முன்பாக தொங்கவிடப்பட்டிருந்த ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உருவப்படங்கள் அடங்கிய விளம்பரங்களும் கிழித்தெறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/10772
-
- 0 replies
- 427 views
-
-
மட்டு.மாவட்டத்தில் பருவ மழையின்மையால் 28 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசம் - ஜவ்பர்கான் கிழக்கு மாகாணத்தில் இம்முறை பருவ மழையின்மையால் வரட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில்;; சுமார் 28 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்பயிர்கள் அழிந்து நாசமாகியுள்ளன. குறிப்பிடத்தக்க அளவான உப உணவுப் பயிர்களும் கருகியுள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எஸ்.சிவலிஙகம் தெரிவித்தார். இதன் காரணமாக விவசாயிகள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வருடம் மட்டக்களப்பில் ஒரு இலட்சத்து 52 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் 10 சதவீதமானவை ஏற்கனவே கருகி விட்டன. ஏனையவையும்…
-
- 0 replies
- 324 views
-
-
தம்மை தாக்கி சிறையில் அடைத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை – சுமன தேரர் ளோபல் தமிழ்ச் செய்தியாளர் தம்மை தாக்கி சிறையில் அடைத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என மட்டக்களப்பு மங்களாராமயவின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமன தேரர் தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக வலையமைப்புக்களில் வெளியாகி வரும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் நலமாக இருப்பதாக பௌத்த மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதாக அம்பிட்டிய சுமனரதன தேரர் முகநூல் வழியாக தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/10747
-
- 0 replies
- 350 views
-
-
சட்டவிரோத ஆட்கடத்தல்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள கடற்படை உயரதிகாரி ஒருவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட கடற்படை லெப்டினன் கமாண்டர் ஒருவருக்கு இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் 123 படகுகளை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடற்படையின் லெப்டின் கமாண்டர் நிலை வகிக்கும் அதிகாரிகளுக்கு பிரத்தியேக பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் வழங்கப்படுவதில்லை. எனினும் இந்த அதிகாரி கடற்படைக்கு எதிரான வழக்கு ஒன்றில் அரசாங்க சாட்சியாளராக முன்னிலையாக…
-
- 0 replies
- 250 views
-
-
நேரம் போதவில்லை என்ற வார்த்தையை கூறி எம்மையும், எமது குழந்தைகளையும், சமூகத்தையும் சரியாக வழிநடத்த தவறுகின்றோம் என வடமாகாணசபை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி தெரிவித்தார். யாழ். மாவட்ட சமூக அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒளி விழா யாழ். கந்தர்மடம் சைவ பிரகாச மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என இயேசு நாதர் கூறியுள்ளார். ஆனால், எம்மில் எத்தனை பேரால் இவ்வாறு செய்ய முடியும்? இவ்வ…
-
- 0 replies
- 276 views
-
-
யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயற்பாட்டால் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை வலுவிழந்து செல்லும் வகையில் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலை கல்லூரியின் விரிவுரையாளர் முறைகேடாக நடந்து கொண்டதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த விரிவுரையாளர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். அந்த விரிவுரையாளரின் நடவடிக்கை தொடா்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தனர். இதனை தொடா்ந்து யாழ் பல்கலைகழக நிர்வாகம் குறித்த விரிவுரையாளரை பணிநீக்கம் செய்திருந்தது. எனினும், தற்போது பொலிஸாரினால் விசாரணைகள் முன…
-
- 0 replies
- 264 views
-
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள நோயாளர் விடுதிகளில் காணப்படுகின்ற அதிகளவான மலசலகூடங்கள் மக்களால் பாவிக்க முடியாத நிலையில் மிகவும் மோசமாக காணப்படுவதாக நோயாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.குறித்த மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதி 4இல் அமைந்துள்ள மலசலகூடங்களில் உள்ள மனிதக் கழிவுகள் நோயாளர் விடுதிக்கு வெளியே பாதையோரங்களில் தேங்கி கிடப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடாக நோயாளர் விடுதிக்கு செல்வதில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். நோயாளர் விடுதிகளில் காணப்படுகின்ற மலசலகூடங்கள் உரிய பராமரிப்பு இன்றி காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த பிரச்சினைகள் தொடர்பாக நோயாளர்களும், மக்களும் மன்னார் பொது வைத்…
-
- 0 replies
- 222 views
-
-
குறிபார்த்து சுடுவதில் வல்லவரான சீனப்பிரஜை கொழும்பில் கைது. முக்கிய பிரமுகர்களை இலக்கு வைக்க திட்டமா? குறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சீன பிரஜைஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையில் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தாரா என்ற சந்தே கத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நி மா சி ரென் என்ற சீனரே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பிலுள்ள முன்னணி கசி னோ நிலையம் ஒன்றில் பணியாற்றியிருந்தார். முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றவே தாம் இலங்கை வந்ததாக குறிப்…
-
- 4 replies
- 355 views
-
-
ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு எதிராக பிரபல பாடசாலையொன்றின் மாணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த இராணுவ அதிகாரி தனது கழுத்தை பிடித்து அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி சாதாரண தர மாணவன் நேற்றைய தினம் குருந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் தான் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்ததாகவும், சாதாரண தர பரீட்சை இடம்பெற்றமையினால் பொலிஸ் நிலையத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. நேற்றைய தினம் பரீட்சை நிறைவடைந்தவுடனே பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்ததாக மாணவன் குறிப்பிட்டுள்ளார். சாதாரண தர பரீட்சையின் ஓய்வு நேரத்தின் போது வாகனம் ஒன்றில் வருகைத்தந்தவர், த…
-
- 0 replies
- 229 views
-
-
தலைமையிலிருந்து மஹிந்த விலகவேண்டுமென துமிந்த எனக்கு அழுத்தம் பிரயோகித்தார் நாட்டில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன என்கிறார் கோத்தா (ஆர்.யசி ) நாம் முன்னெடுத்த பாதுகாப்பு நடவடிக் கைகள் மற்றும் சட்டத்தையும் ஒழுங்கை யும் கட்டியெழுப்ப நாம் மேற்கொண்ட நகர் வுகளை வைத்துக்கொண்டே இந்த அரசாங் கம் நகர்கின்றது. புதிய அரசாங்கத்தினால் நாட்டின் பாதுகாப்பிற்கு எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பத வியிலிருந்து மஹிந்த ராஜபக் ஷ விலக வேண் டும் என கட்சியின் பொதுச் செயலாளர் என…
-
- 0 replies
- 183 views
-
-
இந்தியாவில் உள்ள திருப்பதி வெங்கடாச்சலபதி ஆலயத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பயணிக்கவுள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருப்பதி வெங்கடாச்சலபதி ஆலயத்திற்கு பிரதமர், இந்த மாதம் 22ஆம் திகதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாதம் 21 ஆம் திகதி சென்னை செல்லவுள்ள பிரதமர், 22 ஆம் திகதி வெங்கடாச்சலபதி ஆலயத்திற்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கடாச்சலபதி ஆலயத்தில் பிராத்தனைகளில் ஈடுப்படும் பிரதமர் அன்றைய தினமே நாடு திரும்பவுள்ளார். இதேவேளை,கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதி வெங்கடாச்சலபதி ஆலயத்திற்கு பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. htt…
-
- 0 replies
- 166 views
-
-
தோல்விக்கு என்ன காரணம் தோல்விக்கு என்ன காரணம் (க.கமலநாதன்) ரதுபஸ்வல குறித்து யார் பொறுப்பு கூற வேண்டும் என்று ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன. அவ்வாறான சம்பவங்க ளுக்கு பொறுப்பு கூற வேண்டிய காரணமாகவே நான் தேர்தலில் தோல்வியடைந்தேன் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். கரந்தெனிய கொஸ்வதுமான சுதர்ஷனாராமய விகாரையின் தேரர்கள் வசிப்பதற்கான இரண்டுமாடி கட்டடமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதி யாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவி…
-
- 0 replies
- 254 views
-
-
நிதி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் அபேவர்தனவின் மகன் செலுத்திய அதி சொகுசு ஜுப் வண்டி ஒன்று நேற்று அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த ஜுப் மோட்டர் சைக்கிளில் ஒன்றுடன் மோதுண்டதில் அதில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தின் பின்னர் அமைச்சரின் மகனை பிரச்சினையில் இருந்து காப்பாற்றுவதாக ஒரு இலட்சம் ரூபாவாவை காயமடைந்த இளைஞரின் உறவினர்களிடம் வழங்கியதுடன், 3 லட்சம் பணத்தை எடுத்து வருவதாக கூறிவிட்டு வாகனத்தை அங்கு விட்டு அவர் தப்பி சென்றுள்ளார். அவரிடம் இருந்த சர்வதேச சாரதி அனுமதி பத்திரத்தை உத்தரவாதமாக விபத்துக்குள்ளான இளைஞரின் உறவினர்களிடம் பிரதி அமைச்…
-
- 0 replies
- 156 views
-
-
வடக்கின் சூழலை அரசியலுக்காக விமர்சிக்கின்றனர் – பாதுகாப்புச் செயலாளர் வடக்கில் உள்ள சூழலை சிலர் தமது அரசியலுக்காக விமர்சிப்பதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, தேசிய பாதுகாப்பு என்பது தண்ணீரைப் போன்றது என தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின் கருத்துக்களை வைத்துக்கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை கேலிக்குட்படுத்த கூடாது என சுட்டிக்காட்டிய அவர் தேசிய பாதுகாப்பு என்பது தண்ணீர் போன்றது என தெரிவித்தார். மேலும் வடக்கின் சூழலோ அல்லது அரசியல் கருத்துக்களோ தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் தெற்கில் உள்ள சில அரசியல்வாதிகளால் நாட்டின…
-
- 1 reply
- 269 views
-