Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாகரை பிரதேசத்தில் மக்கள் காணி உரிமையை வலியுறுத்தி போராட்டம் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு வாகரை பிரதேச மக்கள் தங்கள் காணி உரிமையை வலியுறுத்தி இன்று புதன்கிழமை பிரதேச செயலகம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேசத்தின் சிவில் நிர்வாக மையமான பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயில் கதவுகளுக்கு பூட்டுப் போட்டு இந்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதன் காரணமாக செயலகத்தின் வழமையான அலுவல்கள் ஓரிரு மணித்தியாலயங்கள் தடைப்பட்டிருந்தன. இந்தப் பிரதேசத்தில் அரசியல் பின்புலத்தில் சட்ட விரோதமாக காடுகள் அழித்தல் , அரச காணிகள் வெளியாருக்கு வழங்குதல் தனியார் காணிகள் வெளியாருக்கு விற்பனை போன்ற செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை …

  2. வாகனம் மோதியதில் யானைக்குட்டி காயம் : மாங்குளத்தில் சம்பவம் ( எஸ்.என்.நிபோஜன் ) மாங்குளம், கிழவன்குளம் பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனம் ஒன்று மோதியதில் யானைக்குட்டியொன்று காயமைடைந்துள்ளது. இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், 6 தொடக்கம் ஏழு மாதம் வயதான யானைக்குட்டியினை மீட்டு கிளிநொச்சி 155 ஆம் கட்ட பகுதியில் உள்ள வனஜீவராசிகள் மருத்துவப்பிரிவின் அலுவலகத்திற்கு கொண்டுவந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவத்தின் போது குறித்த யானைக்குட்டியின் இடுப்புப்பகுதி விபத்தில் உடைந்துள்ளதாக வனஜீவராசிகள் மருத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது. …

  3. ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து யாழில் குடும்பமொன்று உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு (ஆர்.கே.வி.) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபிக்கு முன்னாள் கொக்குவிலை சேர்ந்த குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். தமது காணி பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வை பெற்று தரக்கோரியே மேற்படி குடும்பம் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி இப் போராட்டத்தில் இளம் தாய், அவரது குழந்தை மற்றும் வயதான பெண்மணி ஆகியோர் இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14376

  4.  பாசிக்குடாவில் மூடுபனி மட்டக்களப்பு, பாசிக்குடாப் பிரதேசத்தில் வழமைக்கு மாறாக கடந்த இரு நாட்களாக மூடுபனி வானிலை காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் போக்குவரத்துச் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். (படப்பிடிப்பு: -ஆர்.ஜெயஸ்ரீராம்) - See more at: http://www.tamilmirror.lk/188008/ப-ச-க-க-ட-வ-ல-ம-ட-பன-#sthash.fcXjxrdS.dpuf

  5. இன நல்லிணக்கத்திற்கான நடை பயணம் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் "கை கோர்த்தல்" நல்லிணக்க தேசிய நிகழ்ச்சித்திட்டதின் கீழ் யாழிலிருந்து மாத்தறைக்கான பயணம் இன்று ஆரம்பமானது. யாழ் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் வழிகாட்டிடலின் கீழ் யாழ்பாணத்திலுருந்து மாத்தறைக்கான பயணம் ஒன்றினை அரச உத்தயோகத்தர்கள் இன்றைய தினம் ஆரம்பித்துள்ளனர். இன்றைய தினம் யாழ்மாவட்டச் செயலகத்தின் முன்றலில் ஆரம்பித்து மாத்தறையில் நிறைவடையவுள்ள குறித்த நிகழ்வில் யாழ் மாவட்டத்தின் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். http://onlineuthayan.com/n…

  6. பொலிஸ், காணி அதி­கா­ரத்துடன் 13 ஐ அமுல்­ப­டுத்­த ­வேண்டும் சுதந்­திரக் கட்­சியின் விசேட குழு ஜனா­தி­ப­திக்கு விரைவில் அறிக்கை (ரொபட் அன்­டனி) மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை வழங்­க­வேண்டும், ஒத்­தி­சைவு பட்­டி­யலை நீக்­க­வேண்டும் மற்றும் செனட் சபை­யொன்று உரு­வாக்­கப்­பட­வேண்டும் போன்ற பரிந்­து­ரை­களை முன்­வைத்து சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி அதன் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அறிக்­கை­யொன்றை விரைவில் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக கட்­சியின் உயர்­மட்ட தக­வல்கள் தெரி­வித்­தன. அமைச்சர் நிமல் சிறி­பால டி. சில்வா தலை­மை­யி­லான குழுவே இந்த முக்­கி­ய­மான பரிந்­து­ரை­களை உள்­ள­டக்­கிய அறிக்­கையை ஜனா­தி­ப…

  7. கொழும்பு கதிர்காம வீதியை மறித்து ஹம்பாந்தோட்டை மக்கள் ஆர்ப்பாட்டம் தமது நிலத்தை சீன நிறுவனத்துக்கு விற்பனை செய்ய உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தோட்டை பிரதேசவாசிகள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு கதிர்காம பிரதான வீதியை மறித்து மிரிஜாவில சந்தியில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொழும்பு கதிர்காமத்திற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/14373

  8. யாழில் 6 பேருக்கு எச்.ஜ.வி தொற்று செல்வநாயகம் கபிலன் யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் 6 பேர் புதிதாக எச்.ஜ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் தாரினி குருபரன் தெரிவித்தார்;. 'இவர்;களில் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் உள்ளடங்குகின்றனர். யாழ் மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு, 12 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். 2015ஆம் ஆண்டு ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், 2016 ஆம் ஆண்டு, 6 பேர் எச்.ஜ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இது சடுதியான அதிகரிப்பை எடுத்துக் காட்டுகின்றது' என அவர் மேலும் கூறினார். இது தொடர்பில் மேலும் கூறிய அ…

  9. சட்டவிரோத சாராய போத்தல்கள் கிளிநொச்சியில் மீட்பு சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாராய போத்தல்களை கிளிநொச்சி பொலிஸார் மீட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் 46 லீற்றர் சாராயத்தை மீட்டுள்ளனர். வட்டக்கச்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போதே குறித்த சாராயம் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/14372

  10. கிளிநொச்சியில் கர்த்திகைத் தீபத்தில் கடை எரிந்து நாசம்.! கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியிலுள்ள சில்லறை விற்பனை கடையொன்றில் நேற்று ஏற்றப்பட கார்த்திகை தீபம் பொருட்களின் மீது வீழ்ந்ததில் கடை எரிந்து நாசமாகியுள்ளது. பிரதேச வாசிகள் மற்றும் அயல் கடைக்காரரினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டபோதும் கடையின் 80 வீதமான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக அங்கிருக்கும் எமது கிளிநொச்சிப் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். http://www.virakesari.lk/

  11. நாட்டில் தற்போது நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனை குழப்புவதற்கு சிலர் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை, சம்பூர் – நாவலடி பிரதான வீதி இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை காலமும் எந்தவொரு அரசியல் சாசனமும் மக்களது சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தால் கொண்டு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனமானது நாட்டின் சகல மக்களதும் அங்கீகாரத்துடன் கொண்டு வரப்பட வேண்டும். நாட்டில் தற்போது நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக…

  12. ஒற்­றை­யாட்­சி மூலம் ­ச­மஷ்­டி பண்­பு­களை பெறுவதற்கு கூட்­ட­மைப்பு முன்­வ­ர­வேண்டும் இறுதி பஸ்ஸை கைவிட்டால் ஆபத்து என்­கி­றது சுதந்­திரக் கட்சி (ரொபட் அன்­டனி) நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு சிறந்­த­தொரு சந்­தர்ப்பம் கிடைத்­தி­ருக்­கி­றது.அந்த சந்­தர்ப்­பத்தில் உச்­ச­பட்ச பயனை அடை­ய­வேண்­டு­மானால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது ஒற்­றை­யாட்­சிக்குள் பொலிஸ், காணி அதி­கா­ரங்கள் உள்­ளிட்ட முழு­மை­யான அதி­கா­ரப்­ப­கிர்வைப் பெறு­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும், இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். தற்­போது இனப்­பி­ரச்­சினை தீர்வ…

  13. சட்­டி­யி­லி­ருந்து அடுப்பில் விழுந்த கதை­யாக தமி­ழர்­களின் நிலை மாறும் சமஷ்­டியை தொடர்ந்து கோரினால் இது­வே­ நிலை என்­கி­றது ஹெல உறு­மய (ப.பன்­னீர்­செல்வம்) பிர­பா­க­ரனால் இலங்­கையில் ஈழத்தை ஏற்­ப­டுத்த முடி­ய­வில்லை. அதேபோல், சம்­பந்­த­னாலும் விக்­கி­யாலும், சிவா­ஜி­லிங்­கத்­தாலும் சமஷ்­டியை ஏற்­ப­டுத் தவும் முடி­யாது. இது வெறும் பகற்­க­னவு என நல்­லாட்­சியின் பங்­கா­ளி­களின் கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­மய தெரி­வித்­துள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பில் சமஷ்­டிக்கு இட­மில்லை. இதற்கு சிங்­கள பெளத்­தர்கள் ஆத­ரவு வழங்­க­மாட்­டார்கள் என்றும் ஹெல உறு­மய குறிப்­பிட்­டது. இது தொடர்­பாக ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊடகப் பேச்­சா­ளர…

  14. முல்லை மண் தந்த இலக்கிய ஆளுமை கலாநிதி முல்லைமணி காலமானார் பண்டார வன்னியன் நாடகத்தை எழுதியவரும் வன்னி மண்ணின் சரித்திரத்தை தன் எழுத்துக்களில் வடித்தவருமான கலாநிதி முல்லைமணி நேற்று காலமானார். முல்லைமணி என்ற புனைபெயரில் பல்வேறு படைப்புக்களை எழுதிய கலாநிதி வே. சுப்பிரமணியம் எழுத்துலகில் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கிய திறனாய்வு என பல்வேறு துறைகளில் தனது புலமையை ஆழமாக பதித்தவர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் பிறந்தவர் முல்லைமணி. இலங்கை பல்கலைக்கழக தமிழில் சிறப்பு கலைமாணி பட்டம் பெற்றவர். இவரது கலை இலக்கிய ஆய்வுப்பணிகளை அங்கீகரித்து 2005இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்த…

  15. நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களுக்கு அமெரிக்கா உதவி நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களுக்கு அமெரிக்கா உதவி வழங்கத் தீர்மானித்துள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் பிரிவு இந்த திட்டம் பற்றி அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஆர்வம் உள்ள அமைப்புக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காமாற்று நீதிப் பொறிமுறைமை மற்றும் நல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட திட்டங்கள் தேசிய ரீதியில் அல்லது மாகாண ரீதியில் முன்னெடுக்கப்படுமானால் அதற்கான உதவிகளை வழங்கத் தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை சொல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பொறிமுறைமைகளின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்…

  16. கடற்படைத் தளபதிக்கு பல்வேறு தரப்புக்களும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள், ஊடக அமைப்புக்கள், பிராந்திய ஊடக அமைப்புக்கள் சர்வதேச ஊடக அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் மற்றும் ஊழியர்கள் தாக்கப்பட்டிருந்தால் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் கடும் க…

  17. அமெரிக்க படையினர் இலங்கையில் தங்கிருக்கும் வகையில் பாரிய கட்டடத்தொகுதி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க மரைன் (Marine) இராணுவத்தினரின் தங்குமிட வசதி, துணை கட்டடங்கள் மற்றும் தூதரகம் ஊழியர்களுக்கு அவசியமான ஏனைய வசதிகளை கொண்டுள்ளதாக தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பு அமெரிக்க தூதரக அலுவலகத்தினால் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5.7 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த புதிய கட்டட தொகுதி அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் தூதரக அலுவலக ஊழியர் சபைக்கு பாதுகாப்பான, நிலையான மற்றும் நவீன அலுவலக தொகுதி ஒன்று கிடைக்கவுள்ளதாக அமெரிக்க தூ…

  18. காணி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது அவசியமானது – விக்னேஸ்வரன் மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமேன வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். மாகாண அபிவிருத்தி சார்ந்த அதிகாரங்கள் பெரும்பாலும் மத்திய அரசாங்கத்திடமே இருக்கிறது. காணி உள்ளிட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பகிர மறுப்பதால், இது சார்ந்த பிரச்சினைகளுக்கு மாகாண சபைகளால் தீர்வு காண முடியாத நிலை காணப்படுகிறது என்று விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/archives/10218

  19. அம்பிட்டிய சுமணரத்தின தேரர் பிணையில் விடுதலை எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர்; 50,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில், இன்று(14) புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில்; நடந்து கொண்டார், இன ரீதியான பேச்சுக்களை பேசியதாக கூறி, அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கு எதிராக, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர். இதையடுத்து தேரரை, இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பானை விடுத்திருந்தது. இதற்கமைவாக, அம்பிட்டிய சுமணரத்தின தேரர், இன்று புதன…

  20. 140 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது திருகோணமலை சினக்குடா பகுதியில் 140 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று நள்ளிரவு 2 மணியளவில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கேரள கஞ்சாவினை கல்முனை பகுதிக்கு கடத்த முற்பட்ட போதே பொலிஸார் அதனை கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/14367

  21. தேசிய இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு பங்களிப்பு வழங்குவோம் : ஜே.வி.பி. (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தேச புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அடிப்படை தன்மையற்ற மாறுப்பட்ட கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றதே தவிர ஆக்கப்பூர்வமான பேச்சுக்களுக்கான முன்னெடுப்புக்கள் காணப்பட வில்லை. தேசிய இனப்பிரச்சினையை மையப்படுத்திய வட்டமேசை பேச்சுக்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி முழுமையான ஈடுப்பாடுடன் பங்களிப்பு வழங்கும் என முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹோரத் தெரிவித்தார். இறுதி அரசியலமைப்பு வரைபை முன்வைப்பதற்கு முன்பதாகவே ஒற்iயாட்சி மற்றும் சமஷ்டி என சுய நல அரசியலுக்காக கருத்துக்களை தெரிவிப்பதை விடுத்து நாட்டின் எ…

  22. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பதவிவிலகத் தயார் – கடற்படைத் தளபதி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பதவிவிலகத் தயார் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைக் குழு ஒன்று விசாரணை நடத்தி குற்றவாளி என தம்மை அறிவித்தால் பதவியை விலகுவதாக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் அந்த இடத்தில் இடம்பெற்ற மெய்யான சம்பவங்கள் பற்றிய தகவல்களை வெளியிடத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். …

  23.  ஜனாதிபதி - தஜிகிஸ்தான் ஜனாதிபதி சந்திப்பு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்குள் வந்துள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ரஹ்மான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில், இன்று ஈடுபட்டுள்ளார். நேற்றைய தினம் நாட்டுக்க வந்த தஜிகிஸ்தான் ஜனாதிபதியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/187977/ஜன-த-பத-தஜ-க-ஸ-த-ன-ஜன-த-பத-சந-த-ப-ப-#sthash.XJ8Zr7Bj.dpuf சந்திப்பு... மூன்று நாள் உத்தியோக…

  24. ஐக்கிய அமெரிக்க ரோந்துப் படையின் TEN (VP-10) ‘ரெட் லான்சர்ஸ்’ என்ற விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஹம்பாந்தோட்டை மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 மாலுமிகளுடன், கடந்த 4ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த P-8A Poseidon என்ற விமானம் இதன் ஆற்றல்களை பரீட்சித்து காட்டுவதற்காக இலங்கை அலுவலர்களைச் சந்தித்ததோடு, இலங்கை இராணுவத்தினருடன் நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனைகளையும் பரிமாறிக் கொண்டுள்ளது. சர்வதேச கடல்வழிப் பாதைகளை பாதுகாப்பதில் இலங்கை விமானப் படை மற்றும் கடற்படையுடனான இந்த பயிற்சியானது உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமானதானதென அமெரிக்…

  25. பிரபாகரனை மீட்க அமெரிக்கா முயன்றவேளை தமிழக தலைவர்கள் எதிர்த்தனர்-சிவ்சங்கர் மேனன் தனது நூலில் விபரிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீட்டெடுப்பதற்காக அமெரிக்காவும் நோர்வேயும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டி ருந்ததாக இந்திய முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும் பாதுகாப்பு ஆலோசகருமான சிவ்சங்கர் மேனன் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் எழுதிய ஆங்கில நூலிலேயே இதனை வெளிப்படுத்தியுள்ளார். பிரபாகரனை மீட்பதற்கு அமெரிக்காவும் நோர்வேயும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.