ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
தமிழ் மக்கள் வெறும் அரசியல் மையப்பட்ட வாக்காளர்களாக இருக்கின்றாா்கள் – சிவகரன் தமிழ் மக்கள் வெறும் அரசியல் மையப்பட்ட வாக்காளர்களாக இருக்கின்றாா்கள் – வடக்கில் ஆளும்கட்சிக்குள் எதிர் கட்சி சாதித்தது எதுவுமில்லை எனவும் குற்றச்சாட்டு – மன்னார் வெகுஜன அமைப்புகளின் தலைவர் சிவகரன் – தமிழ் மக்கள் இப்பொழுது வெறும் வாக்காளர்களாக இருக்கின்றார்கள். தமிழ் மக்கள் வெறும் வாக்காளர்களாக இருக்கும் வரை இந்த நிலைமை தொடரும். தமிழ் மக்கள் விடுதலையாளர்களாக மாறவில்லை இந்த நிலையால் தான் வெறுமனே வாக்களித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுகிறோம் என தமிழரசு கட்சியின் முன்னாள் இளைஞர் அணி தலைவரும், மன்னாள் வெகுஜன அமைப்புக்களின் தலைவருமான சிவகரன…
-
- 0 replies
- 364 views
-
-
யாழ் கொட்டடியில் குப்பைகளை அகற்றவிடாது சுகாதார ஊழியர்கள் போராட்டம் ஒன்பது நாட்களாக தொடர்ந்து வந்த மாநகர சபை சுகாதாரஊழியர்களின் போராட்டம் இன்று உச்சத்தை எட்டியுள்ளது. தமக்கு நிரந்தர நியமனம் கோரி கடந்த ஒன்பது நாட்களாக மாநகர சபை சுகாதாரஊழியர்களால் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாநகரசபையினரால் தனியார் சுத்திகரிப்பு ஊழியர்கள் அழைத்துவரப்பட்டு யாழ் கொட்டடி மயானத்துக்கு முன்பாக தேங்கி நாற்றம் எடுக்கும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமுற்ற யாழ்.மாநகரசபை சுகாதாரஊழியர்கள் குறித்த பகுதிக்கு சென்று குப்பைகளை அக…
-
- 0 replies
- 174 views
-
-
சுழற்சிமுறையில் வட மாகாண எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து எதுவும் பேசப்படவில்லை-தவராசா வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர் வைத்தியநாதன் தவநாதனுக்கு வழங்குவதற்கு முடிவு எடுத்துள்ளதாக ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 14ஆம் திகதி டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விஷேட கட்சிக் கூட்டத்தில் வடக்கு மாகாணசபையில் ஈ.பி.டி.பி வகிக்கும், எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்கனவே கட்சி எடுத்திருந்த தீர்மானத்திற்கு அமைவாக, கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்…
-
- 0 replies
- 382 views
-
-
"சிலைகளை வைப்பதால் பௌத்தத்தை பாதுகாக்க முடியாது" : பத்தேகம சமித்த தேரர் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலாத்காரமாக பௌத்த சிலைகளை வைப்பதால் பௌத்த மதத்தைப் பாதுகாக்க முடியாது. பௌத்த சமயத்தை பாதுகாக்க வேண்டுமானால் ஏனைய சமயங்களுக்கு முன்னு ரிமை வழங்குவதன் மூலமே அது சாத்தியமாகும் என லங்கா சமசமாஜ கட்சியின் அரசியல் பிரிவு பொறுப்பாளரும் முன்னாள் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பின ருமான பத்தேகம சமித்த தேரர் இவ்வாறு தெரிவித்தார். தெரணியகலை லங்கா சமசமாஜக் கட்சிக் காரியாலயத்தில் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தமிழ் மக்கள் சிலபேர் பௌத்த மதத்தைத் தழுவியுள்ளனர். ஆனால் தற்போது பௌத்த மதத் தலைவர்கள் நடந்து…
-
- 1 reply
- 256 views
-
-
-
மட்டக்களப்பு விகாராதிபதிக்கு தண்டனை கோரி ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு, மங்களாராம விகாராதிபதியினால், அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டமையோடு, அவர்கள்மீது கடுமையான வார்த்தைகளை பிரையோகம் செய்தமையையும் கண்டித்து குறித்த மதகுருவுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி பட்டிப்பளை பிரதேச செயலக வாயிற்கதவினைப் பூட்டி, பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. பட்டிப்பளை பிரதேச சிவில் சமூக அமைப்பினால், இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், கொக்கட்டிச்சோலை வெல்லாவெளி பிரதான வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. குறித்த மதகுரு அதிக …
-
- 1 reply
- 482 views
-
-
‘சித்திரவதைக்குக் குறைவில்லை; ஐ.நாவில் முறையிடுவேன்’ இலங்கைக்குள் இடம்பெறும் சித்திரவதைகளுக்குக் குறைவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில், சித்திரவதைகள் தொடர்பிலான ஐ.நாவின் குழுவில் அறிக்கையிடவுள்ளதாகவும், வாழ்வதற்கான உரிமை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிலிப் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சித்திரவதை என்பது கடுமையான குற்றமாகும் என்று ஏற்றுக்கொண்டுள்ள இலங்கையானது, அது தொடர்பில் சட்டமானது நடைமுறையில் இருந்தாலும், அச்சட்டமானது உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சித்திரவதை, இதர கொடூரமான மனிதநேயமற்ற அல்லது இழிவுபடுத்தும் விதமாக நடத்துதல் அல்…
-
- 0 replies
- 255 views
-
-
யாழில் வயிற்றோட்டம், கொலரா பரவும் அபாயம் -செல்வநாயகம் கபிலன் யாழ். மாநகர சபை சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பினால் யாழ். நகர் முழுவதும் கழிவுப்பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினால் வயிற்றோட்டம், கொலரா மற்றும் டெங்கு ஆகிய நோய்கள் பரவலாம் என அரச மருத்துவ சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை ஆரம்பித்துள்ளதால் கழிவுகள் நீரில் கரைந்து தொற்றுக் கிருமிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கொலரா, வயிற்றோட்டம் மற்றும் டெங்குநுளம்பு தாக்கம் அதிகரிக்கக்கூடும். எனவே, மக்கள்…
-
- 0 replies
- 353 views
-
-
யாழ்தேவி விபத்தை நிறுத்தி 2500 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பார்வையற்ற நபர் காங்கேசன்துறையில் இருந்து காலிக்கு பயணிகளுடன் பயணித்த யாழ்தேவி ரயிலுக்கு ஏற்படவிருந்த பாரிய விபத்தை பார்வையற்ற ஒருவர் தடுத்து நிறுத்தி நிகழவிருந்த பாரிய அனர்த்தத்தை தடுத்து நிறு த்தியுள்ளார்.. வடக்கு ரயில் வீதியின் 108 3/4 கிலோ மீற்றர் மைல் கல் அருகில் ரயில் பாதை இராண்டாக உடைந்திருந்த நிலையில் ஏற்படவிருந்த விபத்தே தடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை அவதானித்த நபர் ஒருவர் சிவப்பு நிறத்திலான துணியை ரயிலை நோக்கி அசைத்து ஆப த்தினை தெரியப்படுத்தினார். இதனை உணர்ந்து கொண்ட ரயில் சாரதி ரயிலை பாதுகாப்பாக நிறுத்தியு ள்ளார். …
-
- 0 replies
- 250 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு மத்திய வங்கி தனியார் மயப்படுத்தப்படக் கூடாது எனவும் மத்திய வங்கி தனியார் மயப்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த நிதி முறைமையிலும் பாரியளவில் வீழ்ச்சி ஏற்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியினால் ஆற்றப்பட வேண்டிய கருமங்கள் வெளித் தரப்புக்களுக்கு வழங்குவது ஏற்புடையதல்ல என குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறு தனியார்துறையினருக்கு வழங்குவதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரியளவில் அழிவுகள் ஏற்படக் கூடுமென தெரிவித்துள்ளார். மத்திய வங்கியினை தனியார் மயப்படுத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்…
-
- 0 replies
- 118 views
-
-
மீள்குடியேற்றத்திற்கு தடையாக பொலிஸார இருபத்தாறு வருடங்களாக சொந்த நிலத்தினை இழந்து தவிக்கும் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட போதிலும் அவர்களின் மீள்குடியேற்றம் இன்னும் நிறைவேறவில்லை. வலிகாமம் வடக்கு – மாம்பிராய் கிராமம் கடந்த ஜூன் மாதம் விடுவிக்கப்பட்டபோதிலும் பொலிஸார் மீள்குடியேற விடாது தடுத்துவருவதாக மக்கள் தெரிவித்தனர். கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை ஜே-233 கிராமசேவகர் பிரிவுக்கு உட்ப்பட்ட மாம்பிராய் கிராமம் கடந்த ஜூன் மாதம் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டது. மாம்பிராய் கிராமத்தில் வசித்துவந்த 25 குடும்பங்களின் காணிகள் விடுவிக…
-
- 0 replies
- 294 views
-
-
இலங்கையில் தமிழர்களே அதிகளவில் நீரிழிவு நோயால் பாதிப்பு-மருத்துவர் அரவிந்தன் எச்சரிக்கை இலங்கையர்கள் தமிழர்களே நீரிழிவு நோயினால் அதிகமாக பாதிக்கப்படுவதாக யாழ் போதனா வைத்தி யசாலை நீரிழிவு வைத்தியர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு நேற்று காலை யாழ் வேம்படி மகளிர் கல்லுரி மண்டபத்தில் இடம்பெற்றது.இதன் போது யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு வைத்தியர் அரவிந்தன் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது, உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது. பொதுவாக …
-
- 0 replies
- 320 views
-
-
காணாமல் போனோர் அலுவலகம் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் இயங்கும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு காணாமல் போனோர் அலுவலகம் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் இயங்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அண்மையில் காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பிலான சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தச் சட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி மூலம் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் அரசியல் சாசனசபை, காணாமல் போன அலுவலகத்திற்காக ஏழ…
-
- 0 replies
- 175 views
-
-
கொழும்பில் தூதரகம் ஒன்றின் மீது கல் வீச்சு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு கொழும்பில் அமைந்துள்ள முக்கியமான வெளிநாட்டு தூதரகம் ஒன்றின் மீது கல் வீசப்பட்டுள்ளது. பிரதேச மக்கள் கல் வீசியுள்ளதாக குறித்த தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தூதரகம் அமைந்துள்ள காணி தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/7030
-
- 0 replies
- 177 views
-
-
ஜனாதிபதி, பிரதமரின் உருவப்படங்களை அடித்துநொருக்கிய மோட்டார் சைக்கிள் குழு யாழ்ப்பாணம், கொக்குவில் தென்கிழக்கு தலையாழிப் பகுதியில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத கும்பலொன்று அங்கிருந்த ஜனாதிபதி, பிரதமரின் படங்கள் பொறிக்கப்பட்ட விளம்பரப் பலகையினை அடித்து நொருக்கியுள் ளது. இச் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் மாலை 6மணியளவில் கொக்குவில் தலையாழி பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தின் மாலை கொக்குவில் பகுதியில் உள்ள தலையாழி வைரவர் ஆலயத்திற்க முன்பாக உள்ள இந்திரா சனச…
-
- 0 replies
- 210 views
-
-
எனது அதிகாரத்தை பயன்படுத்தி தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் : ஹாபிஸ் மட்டக்களப்பில் பௌத்த தேரர் ஒருவர் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு தகாத வார்த்தைகளையும் இனத் துவேச ரீதியாகவும் ஏசியுள்ள சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. குறித்த தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். இனவாத செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்காதவன் என்ற வகையில் தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்த தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். நல்லிணக்கத்திற்கு சிறுபான்மை சமூகம் இரு கரம் நீட்டி தயாராகவுள்ள நிலையில் இவ்வாறு தி…
-
- 0 replies
- 461 views
-
-
யாழில் சுப்பர் மூன்... சுப்பர் மூன் எனப்படும் நிலவு, பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வு, நேற்றுத் திங்கட்கிழமை (14) இடம்பெற்றது. 70 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெற்ற இந்நிகழ்வு, உலகளாவிய ரீதியில் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இதன்போது வழக்கத்தை விடவும் நிலவு மிகப் பெரியதாகவும், 30 மடங்கு வெளிச்சத்துடன் காட்சியளிக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதற்கமைய நேற்றையதினம் யாழில் தென்பட்ட சுப்பர் மூன்... (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்) - See more at: http://www.tamilmirror.lk/186048/ய-ழ-ல-ச-ப-பர-ம-ன-#sthash.8PaA69gj.dpuf
-
- 0 replies
- 224 views
-
-
'ஆவா'இல் 62 பேர்: 38 பேர் கைது ஆவா குழுவில் 62 பேர் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேரிடம் விசரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 32 பேர் தொடர்பில், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என, சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/186070/-ஆவ-இல-ப-ர-ப-ர-க-த-#sthash.GdxSQRah.dpuf
-
- 0 replies
- 214 views
-
-
யாழ் மாவட்டத்தில் உருளைக்கிழங்குச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்குகளை விநியோகிக்கும் பணி, அமைச்சர் ஐங்கரநேசன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று(14) திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விதை உருளைக்கிழங்குகளை வழங்கி, உருளைக்கிழங்கு விநியோகத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் இம்முறை 835 விவசாயிகள் ஏறத்தாழ 210 ஏக்கர் பரப்பளவில் உருளைக்கிழங்குச் செய்கையை மேற்கொள்ள உள்ளனர். குறித்த விவசாயிகளுக்கு சசி, றெ…
-
- 0 replies
- 305 views
-
-
வட மாகாணத்தில் தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியை கற்பதற்கும், சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியை கற்பதற்கும் மாகாண சபை சட்டத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வட மாகாண முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம், வடக்கில் உள்ள அனைத்து அரச ஊழியர்களும் தேசிய மொழிகளான சிங்களம் உள்ளிட்ட தமிழ் மொழிகளை கற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் இனங்களுக்கு இடையிலான தவறான புரிந்துணர்வு அகற்றப்படும் என்றும் உயர் மட்ட வேலைகளை அணுகுவதற்கு இது வழிவகுக்கும் என…
-
- 0 replies
- 205 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்றது போன்ற எழுக தமிழ் பேரணி மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரும் மிக்க கவனமாக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் இன்று கிளிநொச்சியில் மக்கள் சந்திப்பொன்றை நடத்தினர். இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டதன் நோக்கம் குறித்தும், தற்போதைய அரசியல் நிலமைகள் குறித்தும் மக்களுக்கு தெளிவுபடுத்தினர். இதன்போது கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ஜனநாயக ரீதியாக தமது தரப்பு நியாயத்தை கூறி மக்கள் …
-
- 1 reply
- 257 views
-
-
முகாம்களில் இருந்தது போன்றே தற்போதும் உணருகிறோம் ; நல்லிணக்கபுரம் மக்கள் தெரிவிப்பு (ஆர்.வி.கே. ) நல்லிணக்கபுரமென்ற பெயரில் கிராமத்தை உருவாக்கியிருக்கின்ற போதும் வீடுகள் பலவும் இன்னமும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாது, அடிப்படை வசதிகள், தண்ணீர் வசதிகள் போன்றன ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என அங்கு குடியிருக்கும் மக்கள் பெரும்கவலை வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் பொது மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற நிலையில் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களது காணிகளை விடுவித்து தங்களை தமது சொந்த காணியில் மீளக்குடியமர்த்த வலியுறுத்தி வந்தனர். இந் நிலையில் அந்தப் பகுதி ம…
-
- 2 replies
- 344 views
-
-
உண்மையை சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு ஜே.வி.பிக்கு உண்டு – அனுரகுமார குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு உண்மையை சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு ஜே.வி.பி கட்சிக்கு உண்டு என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு விஹார மஹாதேவி பூங்காவில் நேற்று நடைபெற்ற இல் மஹா விரு நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எல்லா நேரங்களிலும் எதிரிகளின் தாக்குதலுக்கு இலக்காகிய போதிலும் மரித்துப் போகா அரசியல் சக்தியொன்றை தலைவர் ரோஹன விஜேவீர நிலைப்படுத்திச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டையும் மக்களையும் அதள பாதாளத்திற்கு இட்டுச் செல்வதாகவும் மைத்திரி – ரணில் க…
-
- 1 reply
- 256 views
-
-
சைவசமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகத்தின்சிங்கள மொழிபெயர்ப்பு நூல் எதிர்வரும்-20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவையொட்டிநடைபெறும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வை முன்னிட்டுமேற்படி நூல் வெளியிடப்படவுள்ளது. ஏழு நூல்களைத் தமிழிலிருந்து சிங்களத்துக்கு மொழி பெயர்த்த பொறியியலாளரும்,சமூக சேவகருமான வேலுப்பிள்ளை சண்முகநாதன், ஆறு நூல்களைத் தமிழிலிருந்துமொழிபெயர்த்த ஆசிரியர் இராசையா வடிவேல் மற்றும் சிங்கள மொழிபெயர்ப்பாளர்சுப்பிரமணியம் உமாச்சந்திரன் ஆகியோர் திருவாசகத்தைத் தமிழிலிருந்துசிங்களத்துக்கு மொ…
-
- 8 replies
- 723 views
- 1 follower
-
-
தவராசாவை நீக்குமாறு கடிதம்? வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவை கட்சியிலிருந்தும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்தும் நீக்கி, அப்பதவியை வேறொரு நபருக்கு வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவி நீக்கம் குறித்த கடிதத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதில் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதனுக்கு அப்பதவியை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்த தகவல் மேலும் தெரிவிக்கின்றது. எனினும் இந்தச் செய்தி குறித்து கே.என்.டக்ளஸ் தேவானந்தாவுடன் தொ…
-
- 4 replies
- 430 views
-