Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை பிரசித்தி பெற்ற இளம் திரைப்பட நடிகையான கவிஷா அயேஷானி நேற்றிரவு வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு நிகழ்வு ஒன்றிக்கு சென்று மீண்டும் திரும்பும் போது வழியில் அவரது கார் நுகேகொடையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த காரினை அவரே ஓட்டிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரின் சடலம் கலுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மீரிகான பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/12413

  2. நாயொன்றின் நகக்கீறல் காரணமாக ஏற்பட்ட ரேபிஸ் எனப்படும் நீர்வெறுப்பு நோய் ஏற்பட்ட இளைஞனொருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு- செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கிராமத்தைச் சேர்ந்த டேவிட் இன்பராஜா (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரும் இவருடைய நண்பர்களான மற்றைய இருவரும் களுவன்கேணி நாக தம்பிரான் ஆலயத்தில் பணி செய்துவிட்டு கோயில் வாசலில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்;. அதிகாலை நேரம் நண்பர்கள் இருவரும் நாய்க்கடிக்குள்ளானர். பாதிப்புக்கான நபருக்கு நாயின் பற்கள் படவில்லை என்றும் எனினும் நாயின் நகக்கீறல்கள் காணப்பட்டதாகவும் கூறி மூவருமாக மட்டக்களப்பு வைத்தியசால…

  3. இந்தியாவின் கோவாவில் ஆரம்பமாகியுள்ள டீசுஐஊளு மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, இன்று காலை சந்தித்துக் கலந்துரையானார். அயல்நாடான இந்தியாவைச் சந்திப்பதில் சந்தோஷமடைவதாகவும் பிராந்தியத்தின் ஒத்துழைப்புப் பற்றி கலந்துரையாடவுள்ளதாகவும், ஜனாதிபதி, தனது டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/184007/இந-த-யப-ப-ரதமர-ம-ட-ய-ச-சந-த-த-த-ர-ஜன-த-பத-ம-த-த-ர-

  4. லசந்தவின் கொலையாளி மரணம் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக, கொலைக்குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர், அது தொடர்பான கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரே, இந்தக் கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டவராவார். அவர் எழுதிவைத்துள்ள கடிதத்தில், “தெரிந்துகொள்ள வேண்டியவர்கள் தெரிந்துகொள்வதற்காக” என்று தலைப்பிட்டுள்ளார். இக்கடிதம், அவரது காற்சட்டை பொக்கெட்டில் இருந்துள்ளது. லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாகவும் தன்னுடைய நண்பன் மலிந்த உதலாகம, குற்றவாளி அல்ல என்றும், அவர் அந்தக் கடிதத…

  5. யாழ்.நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையினையும், வைத்திய வசதிகள் இல்லாமையினையும் கண்டித்தும், வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரியும் நெடுந்தீவில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றய தினம் ர.டிலாஜினி என்ற 18 வயது மாணவி திடீர் சுகயீனமுற்ற நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயம் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை. மேலும் உடனடி வைத்திய உபகரணங்களும் இல்லாத நிலையில், குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  6. பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில் நடைபெறும் BRICS – BIMSTEC மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (15) இந்தியா பயணமானர். 8ஆவது தடவையாக நடைபெறும் இந்த BRICS மாநாட்டின் தலைமை பொறுப்பும் உபசரிப்பு பொறுப்பும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார். இம்மாநாடு இன்றும் நாளையும் இந்தியாவின் கோவாவில் நடைபெறுகிறது. இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆபிரிக்கா ஆகிய வளர்ச்சியடைந்து வரும் ஐம்பெரும் பொருளாதார நாடுகளும் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய BIMSTEC நா…

  7. தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பத் தயாராகும் 2,508 இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் 2,508 இலங்கைத் தமிழர்கள், நாடு திரும்புவதற்குத் தயாராக உள்ளதுடன். அவர்கள் தாயகம் திரும்புவதற்கு இந்திய அரசாங்கத்தின் கப்பல் சேவையை எதிர்பார்த்துள்ளனர். தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளின் இந்தப்பட்டியல் கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம், கையளிக்கப்பட்டுள்ளதாக ஈழ ஏதிலியர் மறுவாழ்வு அமைப்பின் நிறுவுனர் எஸ்.சி.சந்திரகாசன் தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பில் சுஸ்மா சுவராஜை சந்தித்த போது, அவர் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக, தாயகம் தி…

  8. கடற்படைத் தளபதிகளை அழைத்து விசாரணை செய்தமைக்கு ஜனாதிபதி எதிர்ப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஊழல் மோசடி சம்பவங்கள் தொடர்பில் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்தமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற இராணுவப் படையினருக்கான காணிகள் வீடுகள் வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது என அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவன்ட் கார்ட் நிறுவன மோசடி வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் உள்ளிட்ட எட்டு பேரின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவ…

  9. முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள கருங்கல் உடைக்கும் நிறுவனத்திற்கு எதிராக தனியார் வாகனசாரதிகள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நிறுவனம் வடமாகாண மக்களுக்கான வீட்டுத்திட்டம் உள்ளிட்ட வேலைகளுக்காக கல்லை வழங்காது கம்பனிகளுக்கு கல்லை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதன் காரணத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தை அறிந்த வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் உடனடியாக அங்கு சென்று சாரதிகளுடனும் நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின் சாரதிகள் கம்பனிகளுக்கு ஒரு டிப்பர் கருங்கல் ஏற்றிய பின் அடுத்து தனியார் வாகனங்களுக்கு ஒரு டிப்பர் என்ற அடிப்படையில் ஏற…

  10. தெல்.யூனியன் கல்லூரியின் 200ஆவது வருட கொண்டாட்டங்கள் சிறப்புற ஆரம்பம் யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் நேற்றைய தினம் ஆரம்பமாகி இன்றுடன் நிறைவடைகிறது. குறித்த விழாவானது நேற்றைய தினம் காலை 9 மணிக்கு அதிபர் ரீ.வரதன் தலைமையில் கல்லூரியின் சண்டேஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை எஸ்.சேனாதிராஜா, சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா, வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் ரீ.தவராஜா, கௌரவ விருந்தினர்களாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் ஆர்.…

  11. ராஜபக்சவினருக்கெதிரான விசாரணைகள் நிறுத்தப்படாது-ஜனாதிபதி ராஜபக்சவினரை எந்த வகையிலும் தான் பாதுகாக்க போவதில்லை எனவும் அவர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறும் எப்போதும் கேட்டதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக தெரிவித்துள்ளார். பிரதமர் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களுடன் நேற்று முன்தினம்(13) நடை பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி, அரசாங்கம் என்ற வகையில் நான் இணைத்தே அனை த்தையும் கூறினேன். விசாரணை நடத்துபவர்கள் அவர்கள் மேற்கொள்ள போகும் நடவடிக்கைகளை எனக்கு அறிவிப்பதில்லை. அமைச்சர் கார் ஒன்றை எடுத்துச…

  12. இலங்கை: மலையக தமிழர்கள் தனி அங்கீகாரம் வேண்டி ஐ.நா. பிரதிநிதியிடம் கோரிக்கை இலங்கையில் அரசியல் சாசனத்தில் இந்திய வம்சாவளியினரான மலையக மக்களுக்கு மலையக தமிழர்கள் என்ற இன ரீதியான தனித்துவ அங்கீகாரம் தேவை என மலையக தமிழ் சிவில் அமைப்புகளினால் ஐ.நா. மனித உரிமை ஆணைய சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான பிரதிநிதியிடம் கோரிக்கை ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் உடன் ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடின் தற்போது இலங்கையில் தங்கியுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடினு…

  13. மலையக மக்களின் உரிமைக்காகக் கைகொடுப்போம் ; கிளிநொச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் (எஸ்.என்.நிபோஜன்) மலையக மக்களின் உரிமைக்காகக் கைகொடுப்போம் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்ற இப்பொதுக்கூட்டத்தில், அருட்தந்தை செல்வம் மற்றும் அருட்தந்தை ஜோசுவா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் ப.அரியரட்ணம், தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் சங்கையா, மேனாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நா.வை.குகராசா, கிளிநொச்…

  14. போதையால் அவமானப்பட்ட மகிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போதை காரணமாக அவமானப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் மோட்டார் வாகனத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஓட முயற்சித்துள்ளார். எனினும் அவரின் பாது காவலளர்களால் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக போதையில் இருந்தமையால் அவ்வாறு நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியு ள்ளது. இதன் போது சனத் நிஷாந்தவும் அச்சமடைந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டார ங்க ள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பான பதிவொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். ந…

  15. வெள்ளைப் பிரம்பு தினம் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில், இன்று பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. மட்டக்களப்பு: -வா. கிருஸ்ணா, எஸ். பாக்கியநாதன் மலையகம்: -எஸ்.கணேசன், அம்பாறை: -ஏ.எஸ்.எம்.முஜாஹித், கிளிநொச்சி: -சுப்பிரமணியம் பாஸ்கரன் http://www.tamilmirror.lk/183981/வ-ள-ள-ப-ப-ரம-ப-த-னம-

  16. யாழில் 105 கிலோ கஞ்சா மீட்பு ; மூவர் கைது (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் படகில் வைத்து கடத்தமுற்பட்ட 105 கிலோகிராம் கஞ்சாவை காங்கேசன்துறை விசேட போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது சந்தேகத்தின் போரில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யபட்டவர்களில் ஒருவர் மாதகல் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.ஏ.ஏ.ரஞ்சித் மாசிங்க, இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.ஆர். சேனாநாயக்க மற்றும் காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்ச…

  17. வடக்கு, வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் மின் தடை நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டு மணித்தியாலங்களுக்குள் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 11 மணியளவில் ஏற்பட்ட கோளாறு வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/183974/வடக-க-வட-மத-த-ய-ம-க-ணங-கள-ன-பல-பக-த-கள-ல-ம-ன-தட-

  18. விசாரணை முடிவுகளை அறிவிக்கத் தேவையில்லை -ஜனாதிபதிக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கடிதம் தாம் முன்னெடுக்கும் விசாரணைகளின் முடிவுகளை ஜனாதிபதிக்கு அறிவித்து, ஆலோசனையோ அல்லது ஏனைய தீர்மானங்க ளையோ பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்ட ரீதியிலான கட்டுப்பாடு இல்லை என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு நேற்றைய தினம் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்ப ட்டு ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையெழுத்துடன் இந்தக் கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்ப ட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்…

  19. மூன்று பாரிய நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் நிறைவு மூன்று பாரிய நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரக்னா லங்கா, அவன்கார்ட் நிறுவனங்கள் தொடர்பிலான விசாரணைகள் இதில் அடங்குவதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச் டப்ள்யூ குணதாச தெரிவித்தார். இதனை தவிர சிலாபம் மற்றும் குருநாகல் கைத்தொழில் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளும் நிறைவடைந்துள்ளன. இந்த அறிக்கைகளை அடுத்த வாரமளவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜன…

  20. இலங்கை பொலிஸ் சேவையின் 150 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் யாழில் இலங்கைப் பொலிஸின் 150 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் ஆண்டு நிறைவு நிகழ்வு கள் இடம்பெற்றன. 1866 ஆம் ஆண்டு ஆரம்பித்த இலங்கை பொலிஸ் சேவை 2016 ஆம் ஆண்டு 150 ஆவது ஆண்டுகளைக் கடந்து சேவையாற்றி வருகின்றது. . இதனை முன்னிட்டு ஆண்டு நிறைவு நிகழ்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் கோட்டை பின் வீதி யில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, வடமாகாண சிரேஸ்ட உதவி பொலிஸ்மா அதிபர் சரத்குமார, யாழ்ப்பாண உதவி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ; சேனனாயக்…

  21. குடிநீர் கேட்டு போராடிய மக்களை அடக்கியமை பாரதூரமான குற்றச்செயல்-கம்பஹா நீதவான் தீர்ப்பு கொழும்பை அண்மித்த புறநகர் பிரதேசமான வெலிவேரிய ரத்துபஸ்வெல பகுதியில் தமக்கான குடிநீரைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவத்தைக் கொண்டு அடக்கிய சம்பவம் பாரதூரமான குற்றச்செயலென கம்பஹா நீதவான் தீர்ப்பளி த்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தமக்கான குடிநீரைக் கேட்டு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கியதுடன், அதன்போது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் நடத்தியதால் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர். சர்வதே…

  22. தீர்வை வரியின்றி கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்த 66 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன இந்தக் கொள்வனவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவும் சம்பந்தப்பட்டுள்ளார். அத்துடன், சில மாதங்களுக்கு முன்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், உதயன் பத்திரிகை நிறுவனத்திற்குச் சொந்தக்காரருமான வர்த்தகர் ஒருவர் 1750ரூபா மட்டும் வரியாகச் செலுத்தி சொகுசு வாகனத்தைக் கொள்வனவு செய்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டிருந்தது. அரசாங்கத்தின் வரிக்கொள்கையை மீறி வாகனங்கள் கொள்வனவு செய்ய…

  23. ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து அவரே விளக்கமளிக்கவேண்டும் : சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சை என்கிறார் மனோ புலனாய்வு துறை மற்றும் நிதி குற்றப்புலனாய்வு துறை தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் ஜனாதிபதியே விளக்கமளிக்கவேண்டும். அத்துடன் இதுதொடர்பில் நாட்டுக்குள் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். மேலும் இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதில் ஒருபோதும் சலைக்கமாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய மொழிக்கொள்கை மற்றும் சகவாழ்வு தொடர்பான செயலாமர்வு நேற்ற…

  24. வடக்கு மாகாணத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் உத்தேச 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் அமர்வில் இருந்து பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும் உபாலி அபேரத்ன ஆகியோர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளனர். மஹ்முட் பாஸில் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். பிரான்ஸின் ஆச்செலர்மிட்டால் நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ள இந்த வீடுகளுக்கு 97 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மன்றில் பிரதிவாதிகளின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் பிரதிவாதி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பிழையான புள்ளிவிரபங்களை காட்டியுள்ளதாகவும் மன்றில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.