ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதார பணிப்பாளருக்கு பிடியாணை (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம் சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதார பணிப்பாளருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது. இன்றைய தினம் இவ் வழக்கானது விசாரனணக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் மேற்கண்டவாறு உத்தரவிட்டிருந்தார். மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதார பணிப்பாளரை மன்றில் ஆஜர்படுத்துமாறு அவருக்கு பிடியாணை பிறப்பித்து கடந்த வழக்கு தவனையின் போது நீதிவான் உத்தரவிட்டிருந்தார். …
-
- 0 replies
- 175 views
-
-
சொத்துகளோடு எமது கலைகளையும் அழித்தவர்கள் படையினர் - அமைச்சர் சாடல் எமது பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் எமது சொத்துகளை மட்டும் அபகரிக்கவில்லை எமது கலைகளையும் இணைத்தே அழித்தனர். என்பது கடற்படை அதிகாரி கப்டன் பொயோகொடாவால் அண்மையில் எழுதப்பட்ட புத்தகமும் அதற்கு ஓர் சாட்சி என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற யாழ் முத்து கலைவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கல்வி அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழர் பிரதேசத்தில் நிலைகொண்டு…
-
- 0 replies
- 272 views
-
-
7ஆம் நாளாக தொடரும் நடைபவனி மாங்குளத்தில் ஆரம்பமாகி புளியங்குளம் நோக்கி நகர்கிறது புற்று நோய்ச்சிகிச்சைப் பிரிவிற்கான நிதி சேர்க்கும் 7ஆம் நாள் நடைபவனி. இன்று ஏழாம் நாளாக மாத்தறை - கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவிற்கு நிதி சேர்க்கும் நடை பவனியானது காலை 5.30 மணிக்கு மாங்குளம் விகாரையில் வழிபாடுகளுடன் மாங்குளத்திலிருந்து ஆரம்பமாகி புளியங்குளத்தை சென்றடையவுள்ளது. சுமார் 5 மில்லியன் டொலர்களை திரட்டும் நோக்கில், முதல் கட்டமாக கடந்த வியாழக்கிழமை காலை பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை வரை பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 238 views
-
-
கெப்பிட்டியாவ பிரதேசத்தில் மிகப் பழைமை வாய்ந்த சுரங்கப் பாதை கண்டு பிடிப்பு; 300 மீற்றர்கள் தூரம் நடந்து சென்றவர்கள் அதிக வெப்பம், சுவாசப் பிரச்சினைகளால் தொடர்ந்தும் முன்னேற முடியாமல் திரும்பினர்: கண்டி யுகத்தின் ஹங்குராங்கெத்த வரை செல்வதற்கான இரகசிய பாதை என சந்தேகம் 2016-10-12 11:53:48 (ரெ.கிறிஷ்ணகாந், வத்துகாம நிருபர்) கண்டி, கந்தஹந்திய, கெப்பிட்டியாவ பிரதேசத்தில் மிகப் பழைமைவாய்ந்த சுரங்கப் பாதை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கெப்பிட்டியாவ கிராமத்துக்கான நீர் வழங்கல் வேலைத் திட்டத்துக்காக வாய்க்காலை வெட்டிக் கொண்டிருந்த போதே இந்தச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேவாசிகள் தெரி…
-
- 0 replies
- 237 views
-
-
டயர்களை எரித்து கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் : சந்தாவை நிறுத்தவும் ஏற்பாடு : வடக்கு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு (க.கிஷாந்தன்) தமக்கு உடனடியாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குமாறும் தமக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்தும் ஹட்டன் எபோட்சிலி பிரதேச தொழிலாளர்கள் டயர்களை எரித்து கறுப்பு கொடி ஏந்தி இன்றுகாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை இத்தோட்ட தொழிலாளர்கள் அங்கவகிக்கும் மலையக கட்சிகள் அனைத்துக்கும், மாதாந்தம் சம்பளத்தில் சந்தாபணத்தினை தற்காலிகமாக அறவிட வேண்டாம் என தொழிலாளர்கள் தோட்ட அதிகாரியிடம் கையொப்பமிட்ட கடிதமொன்றினை வழங்கியுள்ளதாக போராட்டத்தில் …
-
- 0 replies
- 298 views
-
-
அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட கெஹலியவின் மகன் : 29 ஆயிரம் ரூபா அபராதம் 2016-10-12 10:16:14 (எம்.எப்.எம்.பஸீர், ரெ.கிறிஷ்ணகாந்) மது போதையில் வாகனம் செலுத்தி, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாமரைத் தடாகம் அருகே மதில் ஒன்றுடன் தான் பயணித்த காரை மோதச் செய்தமையின்மூலம் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனான கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவுக்கு 29,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. கொழும்பு போக்குவரத்து நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரங்க கலன்சூரிய முன்னிலையில் ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ் ரமித் ரம்புக்வெல்…
-
- 0 replies
- 244 views
-
-
நாட்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் நோக்குடன் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கும் வழங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அதேபோன்று எட்கா ஒப்பந்தம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பின்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.இதன்போது மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை செவிமடுத்த பின்னரே எட்கா குறித்து இறுதி தீர்மானம் எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/12308
-
- 0 replies
- 258 views
-
-
‘இராணுவத்தினரின் கௌரவத்தை காப்பேன்’ கடந்த அரசாங்கத்தை விட, தற்போதைய அரசாங்கமே, இராணுவத்தினரின் நலனில் அதிக அக்கறையுடன் செயற்படுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எது எவ்வாறாயினும், இராணுவத்தினரின் கௌரவத்தைத் தான் தொடர்ந்து காப்பாற்றுவதாகவும் அதற்காக, தான் உள்ளிட்ட தனது அரசாங்கம், அயராது உழைக்கும் என்றும் உறுதியளித்தார். ஜனாதிபதியின் எண்ணக்கருவின்படி ஆரம்பிக்கப்பட்ட, ஓய்வுபெற்ற இராணுவ மனித வளத்தை தேசிய அபிவிருத்திக்கு பயன்படுத்தும் தேசிய திட்டத்தின் முதற்கட்டமாக, தொழில்நுட்ப அதிகாரிகளாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற 50 இராணுவ வீரர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அலுவலகத்தில், நேற…
-
- 0 replies
- 235 views
-
-
அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படும் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார். புதிய அரசியல் யாப்பிலும் பழைய அரசியல் யாப்பில் உள்ளதைப்போல் பௌத்த மத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். கொழும்பு கொலன்னாவ பகுதியிலுள்ள விகாரையில் நேற்றிரவு நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து அவர் கருத்து வெளியிடுகையில், புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்…
-
- 15 replies
- 1.1k views
-
-
யுத்தகால காயங்களுக்கு இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை யுத்தத்தினால் முகத்தில் காயப்பட்டவர்கள் சமூகத்திலிருந்து மறைந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவினர், இதனால் அவ்வாறானவர்களுக்கு இலவசமாக பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவி த்துள்ளது. இந்த சத்திர சிகிச்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவின் மாவட்ட ஆளுநர் வைத்திய கலாநிதி வைத்திலிங்கம் தியாகராஜா தெரிவித்துள்ளார். சர்வதேச லயன்ஸ் கழகமானது தனது மனித நேயப்பணியில் நூறு…
-
- 0 replies
- 298 views
-
-
நண்பேண்ட நிகழ்வு நுழைவு சீட்டு வருமானம் மாத்திரம் ஒரு கோடி ரூபாய். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் யாழில். அண்மையில் நடைபெற்ற நண்பேண்டா இசை நிகழ்ச்சிக்காக பத்து மில்லியன் ரூபாய் பெறுமதியான நுழைவு சீட்டுக்கள் விற்கப்பட்டு உள்ளதாக அறியமுடிகிறது. யாழ்.நகர சபை மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை , பிரபல இந்திய பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் , மற்றும் திரைப்பட இயக்குனரும், இசையமைப்பாளரும் , பின்னணி பாடகருமான கங்கை அமரன் உள்ளிட்ட இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் ஊடாக யாழ்.மாநகர சபைக்கு எட்டு இலட்சம் ரூபாய் வருமானம் கிடைக்க பெற்று உள்ளதாகவும் , அதில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நு…
-
- 0 replies
- 606 views
-
-
நாட்டில் 02 மில்லியன் மனநோயாளர்கள்.! நாடு முழுவதும் 02 மில்லியன் பேர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனநோய் நிறுவகத்தின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க தெரிவித்தார். இந்த எண்ணிக்கை நாட்டின் மொத்த சனத்தொகையில் 09 சதவீதமாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். உலக மனநோய் சுகாதார தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/12292
-
- 0 replies
- 278 views
-
-
12 கிலோகிராம் கஞ்சாவுடன் முன்னாள் போராளி கைது -செல்வநாயகம் கபிலன் மணற்காட்டுப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (11) 12.1 கிலோகிராம் கஞ்சாவுடன் 32வயதுடைய சந்தேகநபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் மேற்படிநபர், கஞ்சாவை கொழும்புக்கு கொண்டு செல்லும் நோக்கில் மணற்காட்டுப் பகுதியில் நின்றிருந்தபோது, கைது செய்யப்பட்டார். அவரிடம் மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் போது தான் ஒரு முன்னாள் போராளி என்றும், இவ்வாறு தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாகவும் கூறியதாக கடற்படையினர் தெரிவித்து…
-
- 1 reply
- 444 views
-
-
முல்லைத்தீவில் கேரள கஞ்சாவுடன் பெண் கைது ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் முல்லைத்தீவு - செம்மலை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் வசம் இருந்து ஒரு கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்ட பெண் முல்லைத்தீவைச் சேர்ந்த 43 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=84370
-
- 0 replies
- 249 views
-
-
பாசிக்குடாவில் சுற்றுலாத்துறை சம்பந்தமாக மக்களுடன் எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படாமல் மக்களுடைய காணிகள் சூறையாடப்பட்டுள்ளதாக காணி கொள்ளைகளுக்காக செயற்படும் சுவிஸ் நாட்டு அமைப்பாளர் வூவி சுட்டிக்காட்டியுள்ளார். பாசிக்குடாவில் பாதுகாப்பு படையினர் அதிகளவிலான சுற்றுலா விடுதிகளை நடத்துவதாகக் குறிப்பிட்ட அவர், சுற்றுலாத்துறையினால் சாதாரண மக்களுக்கு எந்தவிதமான பலாபலனும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பாசிக்குடா நந்தவனம் சுற்றுலா விடுதியில் இன்று காணி உரிமை மற்றும் மனித உரிமை தொடர்பான செயல் அமர்வு இடம்பெற்றது. பாசிக்குடாவிலுள்ள மீனவர்கள் தமது காணிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று அண்மையில் பல பிரச்சினைகள் உருவாக்கியதை அடுத்தே இந்த செயல் அம…
-
- 0 replies
- 318 views
-
-
மலையக மக்களுக்கு ஆதரவாக யாழிலும் போராட்டம் மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியது. ' முதலாளிகளே! நல்லாட்சியே! மாடாக உழைத்து ஓடாகிப்போன தொழிலாளர்களை வதைக்காதே! 1000 ரூபாய் சம்பளம் வழங்கு!', ' தொழிலாளர்கள் கேட்பது 1000 ரூபாய் முதலாளிகள் முன்வைப்பது பிச்சைக் காசு', ' மலையக தலைவர்களுக்கு மந்திரிப் பதவி தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள மறுப்பு' , ' தோட்ட முதலாளிகளுக்கு நல்லாட்சி தோட்ட தொழிலாளர்களுக்கு ஏமாற்று ஆட்சி' போன்ற கோசங்களை மு…
-
- 0 replies
- 475 views
-
-
அம்பன்பொல வாகன விபத்தில் வவுனியாவின் பிரபல பெண் மருத்துவர் உட்பட மூவர் மரணம் அம்பன்பொல வாகன விபத்தில் வவுனியா டாக்டர் திருமதி கௌரிதேவி நந்தகுமாரும் அவரது பெறா மகளும் மற்றும் சாரதியும் மரணமடைந்துள்ளனர். மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொ ன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய சகோதரியின் மகள் ஒருவரும் மற்றும் சாரதியும் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி இவர்கள் பயணம் செய்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொன்டைனர் எனப்படும் கொள்கலன் பொருத்தப்பட்ட வாகனத்தின் பின்ப…
-
- 0 replies
- 437 views
-
-
எத் தடைகள் வந்தாலும் அரசு தமிழ் மக்களை கைவிடாது கிளிநொச்சியில் அமைச்சர் சுவாமிநாதன் : தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது இதன் போது பல்வேறு தடைகள் அரசியல் ரீதியாக ஏற்படுகிறது. இருந்தும் அரசு ஒரு போதும் தமிழ் மக்களை கைவிடாது என மீள்குடியேற்ற,புனர்வாழ்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சா டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் வங்கி ஆவணங்களை தொலைத்த தமது வாடிக்கையாளர்கள் 54 பேருக்கு அதனை வழங்கி வைக்கும் நிகழைவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் . அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் யோகர் சுவாமிகள் தன்னுடைய காலத்திலேயே கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் சிங்க…
-
- 1 reply
- 392 views
-
-
யாழில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகள் யாழ். மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பஸ் நிலையத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் தேசிய அடையாளம் என்பன பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை காலை குறித்த பஸ் நிலையத்தின் உள்ளே “தேசிய தலைவர்” என்று பிரபாகரனின் உருவப்படமும் “தேசிய அடையாளங்கள்” என புலி மற்றும் செண்பகம் வாகை மரத்தின் படங்கள் அடங்கியதுடன், விடுதலைப்புலிகளின் எழுச்சி நாட்கள் குறித்த துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டுள்ளன. பஸ் தரிப்பிடத்திற்கு வந்த பொது மக்கள் குறித்த துண்டுப்பிரசுரத்தினை பார்த்துவிட்டு …
-
- 1 reply
- 744 views
-
-
‘தமிழ்-முஸ்லிம்களை பிரிக்க முடியாது’ எம்.எல்.லாபீர் “இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம் மக்கள், தங்கள் தாய்மொழியாக, தமிழையே பேசுகின்றனர். சமயத்திலும் கலாசாரத்திலும் அவர்கள் வேறுபட்டிருந்ததாலும், மொழியினால் நீண்ட பாரம்பரியமாக ஒன்றுபட்டுள்ளார்கள். இவ்விரு இனங்களையும் எவராலும் பிரிக்க முடியாது” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட பிரஜைகள் குழுவினர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (10) சந்தித்து கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில், பிரஜைகள் குழுவின் தலைவர் கிஷோர் அன்டன், செயலாளர் கலாநிதி நா.தனேந…
-
- 0 replies
- 344 views
-
-
‘தாஜுதீனின் எலும்புகள் அனுப்பப்பட்டமைக்கான பதிவுகள் இல்லை’ மனித எலும்புகளை வழங்கும் போது தமக்கு வழங்கப்பட்ட பட்டியலில், வசீம் தாஜுதீனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திலிருந்து எலும்புகள் வழங்கப்படும் போது பின்பற்றப்படும் விதிமுறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு, தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்வியகத்துக்கு (SAITM) எந்தவித அதிகாரமும் கிடையாது எனவும் தெரிவித்துள்ள SAITM, வசீம் தாஜுதீனின் எலும்புகள் எவையும் SAITM-க்கு அனுப்பப்பட்டதற்கான பதிவுகள் எவையும் தம்மிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. தற்போது புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுத்துச் செல்லப்படும் வசீம் தாஜுதீனின் கொலை வழக்குத் …
-
- 0 replies
- 213 views
-
-
‘சரணாகதி அரசியல் செய்யவில்லை’ -சண்முகம் தவசீலன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்வதன் நோக்கத்தை, அந்தக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தாங்கள், சரணாகதி அரசியல் செய்யவில்லை என அடித்துக்கூறும் செல்வம் அடைக்கலநாதன், தற்போதைய அரசாங்கத்துக்கு, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார். சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும். அந்தச் சந்தர்ப்பங்கள் தான், எமக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாம், எமது மக்களுக்குத் துர…
-
- 0 replies
- 248 views
-
-
தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர். இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாகப் பிடிபட்டிருந்து, விடுவிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட, சிறிலங்கா இராணுவத்தினரின் ஒழுக்க மீறல்களை தனது “A Long Watch: War, Captivity and Return in Sri Lanka” என்று நூலில் விபரித்துள்ளார். காரைநகரில் அவரது அனுபவங்கள் குறித்து அந்த நூலில் கூறப்பட்டுள்ள பகுதியை மொழியாக்கம் செய்துள்ளார் நித்தியபாரதி. “எனது இராணுவப் பணியின் போது மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும். 1991ல் எமது இராணுவ நடவடிக்கை முட…
-
- 2 replies
- 537 views
-
-
உலகின் பலமிக்க இந்திய இராணுவத்துக்கும், தமிழீழத்துக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்து இன்றுடன் 29 ஆண்டுகள் ஆகின்றன. பலமிக்க இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் படு தோல்வி கண்டு ஏமாற்றத்துடன் 1990ஆம் ஆண்டளவில் நாடு திரும்பியிருந்தனர்.. இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவதாக தெரிவித்து ஈழத்தில் கால் பதித்த இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவரை அழிக்கும் நோக்குடன் செயற்பட்டனர். எனினும், விடுதலைப் புலிகளின் தந்திரமிக்க போராட்ட நுட்பத்தினால் அது சாத்தியப்படாமல் போனது. விளைவு சுமார் 1250க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும், இந்தியாவின் வஞ்சக நோக்கங்கள் வெள்ளிடையாகவே மக்களுக்கு தெ…
-
- 0 replies
- 369 views
-
-
கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய காணியில் அத்துமீறி குடியிருந்து வருபவர்களால் பாடசாலையின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த முடியாத நிலையில் அது திரும்பிச்செல்லும் நிலையில் இருப்பதாக பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அயற்பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்திற்கு அமைவாக கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டு, அங்கு சில அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது, பாடசாலை காணியின் ஒரு பகுதியில் நான்கு குடும்பங்கள் அத்துமீறி நீண்டகாலமாக குடியிருந்து வருகின்றமையினால் குறித்த பணிகளை முன்னெடுக்க முடியாது தடங்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒதுக்கப்பட்ட நிதியும் திரும்பிச்செல்…
-
- 0 replies
- 176 views
-