Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தியாகத் தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள திலீபனின் நினைவுத் தூபியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பல அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ள குறித்த நிகழ்வுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த அரசியல்வாதியான மாவை சேனாதிராஜா 9 மணியளவில் வருகைத் தந்துள்ளார். இதன்போது திலீபனின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தி, தீபம் ஏற்றி வைத்து விட்டு 10 நிமிடங்களில் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார். http://www.tamilwin.com/st…

  2. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை வழங்குமாறு கோரி முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக இன்று காலை முதல் பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியினை வழி மறித்து பொகவந்தலாவ பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் முடிவடையும் தருவாயில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளத்தினை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு தெரிவித்து வருவதாக தெரிவிக்கபடுகிறது. முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் 09 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் தொழிலாளர்களுக்கான வேதனத்தினை நாள் ஒன்றுக்கு 700 ரூபா சம்பளமும் வாரத்திற்கு 03 நாள் வேலை த…

  3. “ இலங்கையின் ஜனநாயக, பொருளாதார மறுசீரமைப்புக்களுக்கு அமெரிக்கா உதவும்” (ரொபட் அன்டனி) இலங்கையின் ஜனநாயக மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை செய்யும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப் தெரிவித்தார். அமெரிக்க யுஎஸ்எய்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் கிங்கஸ்பரி ஹோட்டலில் நேற்று ஆரம்பமான அரச தனியார் ஒத்துழைப்பு தொடர்பாக ஆராயும் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரச தனியார் ஒத்துழைப்பு மாதிரியை ஏற்ற…

  4. திலீபனின் அஞ்சலி நிகழ்வுகளை மறைந்திருந்து படம்பிடித்தோர் மடக்கிப்பிடிப்பு!புகைப்படங்களும் அழிப்பு தியாக தீபம்திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நல்லூரில் உள்ள நினைவுத்தூபியில் இன்றையதினம் காலையிலும் மாலையிலும் அரசியற் பிரமுகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.இதன்போது காலைமுதல் அவர்களை இரகசியமானமுறையில் படம்பிடித்த இருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு அவர்கள் எடுத்த படங்களும் அழிக்கப்பட்டன இன்று மாலை 6.00 மணியளவில் இளைஞர் ஒருவர் திலீபன் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தியபோது சந்தேகத்துக்கிடமான முறையில் மூவர் அவரை புகைப்படமெடுத்தனர். புகைப்படம் எடுத்தவரை அங்கிருந்த இளைஞர் விசாரித்த…

  5. இழுவைபடகு தொழிலுக்கு அனுமதி தாருங்கள் அல்லது சவப்பெட்டிகளை தாருங்கள் - சமாச தலைவர் ஜோசப் பிரான்சிஸ் கிளிநொச்சி கடற்றொழிலாளர்களுக்கும் இழுவைப்படகு தொழில் மேற்கொள்வதற்கு அனுமதி தாருங்கள் அல்லது எங்களுக்கு சவப்பெட்டிகளை தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இணைத் தலைவர்களை நோக்கி கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர் ஜோசப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இன்று 26-09-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் உள்ளுர் அதாவது யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் இழுவைப் ப…

  6. அபிவிருத்திக்காக காணிகளை உரிமையுடன் மத்திய அரசுக்கு வழங்கமுடியாது வட மாகாண முதலமைச்சர் அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை உரிமத்துடன் மத்திய அரசுக்கு வழங்க முடியாது. அது எதிர்காலத்தில் வேறு தேவைகளுக்கு பயன்படக் கூடும் என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். v கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று 26-09-2016 மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில…

  7. எமது எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் மக்கள் புரட்சி வெடிக்கும் : ஸ்ரீதரன் ( எஸ்.என்.நிபோஜன்) இலங்கையில் நீடித்த சமாதானம் நிலைபெறவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு இதனை அரசாங்கம் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்த தவறினால், மக்கள் புரட்சி இந்த மண்ணில் வெடிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 1987 ஆம் ஆண்டு உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்த லெப் கேணல் திலீபனின் 29 ஆவது ஆண்டு நிகழ்வு கடந்த ஏழுவருடங்களின் பின்பு கிளிநொச்சியில் நடைபெற்றது. ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்பு அகிம்சை வழியிலான போராளிகளை ந…

  8. தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி தியாக தீபம் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படும் நிலையில், நல்லூரில் திலீபனுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள்போராளிகள் மற்றும் பொதுமக்களென பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். முன்னதாக இன்று காலை நல்லூரின் வடக்குப்பக்கத்தில் திலீபன் உண்ணாவிரதமிருந்த இடத்தில் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.பின்னர் நல்லூர் பின்வீதியில் உள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சரவணபவன் மற்றும் வடக்கு மாகாணசபை அவைத்தலை…

  9. “எழுக தமிழ் ” பேரணியுடன் கூட்டமைப்பிற்கு தொடர்பில்லை-சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும், தாம் அதில் கலந்துகொள்ளவில்லையெனவும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எதிரானது. நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தெற்கு மக்களுக்கு தவறான ஒரு கருத்தை கொடுப்பதாகவே அமையும் எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/news/18050

  10. யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கடும்போக்குவாதத்தை அனுமதிக்கின்றார் – ராஜன் ஹூல்:- யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடும்போக்குவாத்தை அனுமதிக்கின்றார் என பிரபல கல்வியியலாளர் கலாநிதி ராஜன் ஹூல் குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யாழ் பல்கலைக்கழக துணை வேந்தரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என அவர் தெரிவித்துள்ள அவர்இ மாணவர்கள் கடும்போக்குவாத போராட்டங்களை நடாத்த அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக எழுக தமிழ் போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதனை அல்லது மாணவர்கள் பங்கேற்பதனை துணை வேந்தர் தடுத்திருக்க வேண்டுமென அவர் கு…

  11. வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் விக்­கி­னேஸ்­வரனுக்கு இனவாதத்தினை தூண்டுவதே அவசியமாக உள்ளதாக கோப் குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்­துன்­நெத்தி குற்றம் சுமத்­தியுள்ளார். நேற்று முன்தினம் (24) யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற எழுக தமிழ் பேர­ணியின் போது முன்­வைக்­கப்­பட்ட சமஷ்டி கோரிக்கை தொடர்பில் ஹந்­துன் ­நெத்தியிடம் வின­விய போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு முத­ல­மைச்சர் சீ.வி விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லா­னோ­ருக்கு தற்போது தேவை­யா­னது சமஷ்டி தீர்­வல்ல, அதற்கு மாறாக தெற்கில் இனவாதத்தை தூண்டுவதே அவ­சி­ய­மாக உள்­ளது என குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் உள்ள மக்களிடையே பிரி­வி­னை ­வ…

  12. இந்திய ரோலர்களின் வருகையே வடபகுதியில் கஞ்சா கடத்துவதற்கு முக்கிய காரணம் என முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ. மரியராசா குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் வடபகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் அச்சத்துடனேயே தொழில் செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கு மாகாண மீனவர்கள் அண்மைக்காலமாகச் சந்தித்துவரும் பிரச்சனைகள் தொடர்பான ஊடக சந்திப்பொன்று வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சந்திப்பில், வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தொழில் முறைகள், தென் பகுதி மீன…

    • 2 replies
    • 381 views
  13. பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் பயிலும் மாணவிகள் இரு குழுக்களுக்கிடையில் இன்று முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கங்களூடாக இடம்பெற்ற இந்த முறுகல் நிலைமை கல்லூரி மாணவிகளின் உள்ளகப் பிரச்சினையாக கருதப்படுவதாக கல்லூரியின் பீடாதிபதி திருமதி.ரமணி அபேநாயக தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கல்வியியற் கல்லூரியில் கற்றல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள இரண்டு இனங்களுக்கான மாணவிகள் நேற்று மாலை முதல் அவர்களின் இருப்பிடங்கள் மற்றும் மாணவிகளுக்கிடையிலான பகிடிவதைகள் தொடர்பிலேயே இந்த வாய்த்தர்க்கமும் முறுகல் நிலைமையும் ஏற்பட்டிருப்பதாக பீடாதிபதி தெரிவித்தார். இது …

  14. தற்போது வட பகுதியில் நடைபெறும் இந்து நிகழ்ச்சிகளில், யாழ் காவாலிகள் ஆட்டம் போட்டு அதனை களியாட்ட நிகழ்வுகளாக மாற்றி வருகிறார்கள். இந்து ஆலயங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற புனிதமான நிகழ்வுகளில், இரவு நிகழ்வாக இசைக்குழு போடப்பட்டால் இதற்கு என்று ஒரு களியாட்ட காவாலிகள் குழுவினர் மது போதையில் தங்களை மறந்து ஆலயம் தோறும் துள்ளிக் குதித்து நடனம் ஆடும் நிகழ்வாக இடம் பெற்று வருவதனால் இவர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை என்கிறார்கள் மக்கள். இவர்களுக்கு அந்தத்த பகுதி பொலிசார்களும் இவர்களுக்கான தண்டனைகள் வழங்காமல் ஒத்தாசை வழங்குவதனால் இவர்களின் களியாட்டம் அதிகரித்து வருவதனால் ஆலயத்திற்கு வழிபட வரும் பக்தர்கள் இடைநடுவில் இவர்களின் அட்டகாசம் தாங்கமுடியாமல் வழிபாட்டினை நிறுத்த…

  15. இந்த ஆண்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது – தேர்தல் ஆணையாளர் இந்த ஆண்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால் தேர்தலை உரிய நேரத்தில் நடாத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Arti…

  16. மேஜர் கமால் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - சரத் பொன்சேகா ஓய்வு பெற்ற மேஜர் கமால் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையை கொழும்பில் ஒப்படைக்குமாறு தாம் உத்தரவிட்டிருந்ததாகவும் எனினும், இந்த அடையாள அட்டை குணரட்னவிடம் இருப்பது அண்மையிலேயே தமக்கு தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடையாள அட்டையை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்ட நிலையில் அவர் எவ்வாறு அடையாள அட்டையை வைத்திருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள அ…

  17. இலங்கையின் அரசியல் தளத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வாத பிரதிவாதங்கள் தலைதூக்கியுள்ளன. 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவது யார்,? வெற்றி பெறப் போவது யார்? என்ற கேள்வி அரசியல்வாதிகளுக்கு அப்பால் பிராந்திய நாடுகளின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாறான நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க கூடிய வாய்ப்புள்ள மூன்று பேரின் பெயர்கள் பரவலாக பேசப்பட்டுள்ள வருகின்றன. அந்த மூவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்த புகைப்படம் ஒன்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் …

  18. விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றிற்கு பரிந்துரை தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் Eleanor Sharpston பரிந்துரை செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டமைக்கான உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் அமைப்பினை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஆலோசகரின் இந்த பரிந்துரை கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில்லை. எவ்வாறெனினும், மிக நீண்ட காலமாக ஐரோப்பிய நீதிமன்றங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகியன தம்மை பயங்கரவாத பட…

  19. 20இலட்சத்தை திரட்டி இராணுவ அதிகாரியை காப்பாற்றிய கூட்டு எதிர்க்கட்சி விடுதலைப் புலி உறுப்பினரைச் சுட்டுக் கொன்ற இராணுவ மேஜர் விமல் விக்கிரமவை சிறைத்தண்டனையில் இருந்து காப்பாற்றத் தேவையான 20 இலட்சம் ரூபாவை கூட்டு எதிர்க்கட்சியினர் திரட்டியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் தப்பிச் செல்ல முயற்சித்த போது சுட்டுக்கொலை செய்தமைக்காக அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நட்டஈடாக 20 லட்சம் வழங்குமாறு ஓய்வு பெற்ற மேஜர் விமல் விக்ரமகேவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. புலி உறுப்பினரை சுட்டுக் கொன்றதற்காக ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் குடும்ப உறுப்பினர்களுக்கு 20 லட்சம் ரூபா நட்டஈடும் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்…

  20. யாழ்.பல்கலையிலும் திலீபனின் நினைவுதினம் அனுஷ்டிப்பு யாழ். பல்கலைக்கழகத்திலும் தியாகி திலீபனின் 29ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிற்கு அருகில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் திலீபனின் படம் வைக்கப்பட்டு மாணவர்களால் அஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக சூழலில் தீபமேற்றியும் மெழுகுதிரி ஏற்றியும் நினைவு நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது http://onlineuthayan.com/news/18117

  21. கிளிநொச்சி இளைஞர்களுக்கு களனி கேபிள்ஸ் நிறுவனம் பயிற்சி இலங்கையின் பிரபல்யமான களனி கேபிள்ஸ் நிறுவனம், கிளிநொச்சியியைச் சேர்ந்த 50 மின்னியல் தொழில்நுட்பவியலா ளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.. களனியிலும், சியம்பலாப்பிட்டியிலும் உள்ள இந் நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் இவர்களு க்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. களனியா விசுற என்ற பெயரைக் கொண்ட தங்கள் திட்டத்தின் கீழ் நாடளாவியரீதியாக 20,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று நிறுவனத் தலைவர் அனில் முனசிங்க தெரிவித்துள்ளார். எனினும் முதற் தடவையாக மினனியல் தொழில்நுட்பவியலாளர்களை தாம் வரவழைத்து மின்சார வயர்கள் உற்பத்தி பற்றி காண்பித்திருப்பதாக இவர் கூறியிருக்கி…

  22. வடக்கிலிருந்து படையினரை வெளியேற்றுமாறு நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் தெரிவிக்கப்பட்டது. வடக்கிலிருந்து படையினரை அரசாங்கம் ஒருபோதும் அகற்றமாட்டாது என சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற எழுக தமிழ் தொடர்பாக கருத்துக் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்துவரும் வேளையில், இத்தகைய கடும்போக்குவாத செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது. படைமுகாம்களை அகற்றுமாறு நேற்றையதினம் (சனிக்கிழமை) வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் இனவாதப்போக்குடையவர்களால் பேரணி…

    • 8 replies
    • 764 views
  23. தெல்லிப்பளையில் குண்டுகள் மீட்பு யாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கிணற்றினை புனரமைப்பு செய்ய கிராமவாசிகள் சென்ற வேளையில் குண்டுகளை கண்டு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின் தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விசேட பிரிவு, மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/11765

  24. காரில் சென்றுக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரரொருவரை தாக்கி அவர் வசமிருந்த 43 ஆயிரத்து 750 ரூபா பணத்துடன் குறித்த வாகனத்தையும் கடத்திச் சென்ற இராணுவ வீரர்கள் இருவரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கடத்தல் சம்பவம் அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹப்புதளை பகுதியிலிருந்து வெலிமடை நோக்கி வந்துக்கொண்டிருந்த குறித்த காரினை பொரலந்தை ஹின்னாரங்கொல்ல பகுதியில் வைத்து வழிமறித்து தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கர வண்டியொன்றையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவத்தில் தாக்கப்பட்…

  25. இலங்கைத் தமிழர் வாழ்வில் என்று ஒளி வரும்? இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், மக்கள் எதிர்பார்த்த நன்மைகளோ வளர்ச்சியோ ஏற்படவில்லை. தீர்மானங்கள் இயற்றப்படுவதும் அறிக்கைகள் வாசிக்கப்படுவதுமாக மாகாண சட்டப்பேரவை வெறும் பேச்சு மடமாகி விட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி, ‘சிறிசேன - விக்ரமசிங்க அரசு’ கொண்டுவந்த 2016-வது ஆண்டு பொது வரவு-செலவு அறிக்கையை ஆதரித்தே வாக்களித்தது. அப்படியிருந்தும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிக ளுக்கு மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டி ருக்கிறது. மறுகுடியமர்வு அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் 1,400 …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.