Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுகாதார சேவையில் முன்னேற்றம் உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்பாடு செய்தி ருந்த தொற்றா நோயினை முற்றாக இல்லாதொழித்தல் மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட மாநாட்டில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கலந்துகொண்டுள்ளார். 'நிலையான அபிவிருத்தியின் குறிக்கோளை அடையும் நோக்கத்துக்காக சுகாதார சேவையின் இலக்குகளுக்கு பங்களித்தல்' எனும் தலைப்பில் இந்த மாநாடு இடம்பெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டதனை வரவேற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணி ப்பாளர் நாயகம் மாகிரட் சான் அம…

  2. கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு உதவுமாறு பிரதமரிடம் விடுத்த கோரிக்கைக்கு பதில் எதுவும் இல்லை.-முதல்வர் விக்கி கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள் தீக்கிரையானதில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு உதவி மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், இதுவரை அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்க வில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 62 ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) கைதடியில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றிய முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 16 ஆம் திகதி இரவு கிளி…

  3. இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உலகுக்கு ஒரு முன்மாதிரியாகும் எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையின் எதிர்காலப் பயணத்துக்;குத் தேவையான முழுமையான உதவிகளை வழங்க, தாம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் 71ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட பகல் போசன விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தபோதே, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இதனைத் தெரிவித்தார் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக அமெரிக…

  4. பிரபாகரனின் உடமைகள் இராணுவ அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட உள்ளன தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடமைகள் புதிய இராணுவ அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலி அடையாள அட்டை உள்ளிட்ட உடமைகள் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட உள்ளன. அடையாள அட்டை தம்மிடம் இருப்பதாகவும் இதனை புதிய இராணுவ அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன அண்மையில் தெரிவித்திருந்தார். வரலாற்று பாடங்களை படிப்பவர்களுக்காக புலிகளின் தலைவரது உடமைகள் அழிக்கப்படாது பாதுகாக்கப்படுவதாக இர…

  5. வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் இருக்க மாட்டார்கள். இந்தப் பதவிகளில் சிங்களவர்கள் அமர்வதற்கேற்ற வகையில், அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று புதன்கிழமை (21.09.2016) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அங்கு அவர் உரையாற்றிய போது, விவசாயத் திணைக்களத்தில் மாகாண விவசாயப் பணிப்பாளராகப் பதவி வகிப்போர் இலங்கை விவசாய சேவையில் தரம் ஒன்று தகுதி நிலையைக் கொண்ட…

  6. யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கட் மைதான கொலை வழக்கு: மூன்று தினங்கள் தொடர் விசாரணைக்கு உத்தரவு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 எதிரிகளையும் பிணையில் செல்ல அனுமதித்துள்ள நீதிபதி இளஞ்சசெழியன், ஒக்டோபர் மாதம் 26, 27, 28 ஆம் திகதிகளான புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் தொடர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறுகின்ற கிரிக்கட் போட்டியின்போது மைதானத்தில் வைத்து ஜயரட்னம் தனுஷன் அமலன் என்பவர் கொல்ல…

  7. புனர்வாழ்விற்கு தகமையுள்ள 23 அரசியற் கைதிகளின் பெயர்கள் வெளியீடு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த தகைமை உடையவர்கள் என கருதப்படும் 23 கைதி களின் பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்ய ப்பட்ட 96 சந்தேகநபர்களில் 23 பேருக்கு இவ்வாறு புனர்வாழ்வு பெறுவதற்கான சந்த ர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு நேற்றைய தினம் தெரிவித்திருந்தது. குறித்த 23 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு சட்ட மா அத…

  8. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்துக்கு தனியான கல்வி வலயத்தையும் கல்முனைப் பிரதேசத்துக்கு மேலதிகமாக மற்றுமொரு கல்வி வலயத்தையும் நிறுவுவதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. கிழக்கு மகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம், மகாண சபையில் புதன்கிழமை (21) மாலை நடைபெற்றபோது, இது தொடர்பான பிரேரணையை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி முன்வைத்தார். இதனை அடுத்து, மேற்படி கல்வி வலயங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதாக அக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். குறித்த இரு பிரதேசங்களிலும் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அப்பிரதேசங்களில் கல்விச் செயற்பாட்டில் அதிக இடர்பாடுகள் காண…

  9. ஏறாவூர் கொலைச்சம்பவம் கண்டித்து மனித சங்கிலிப் போராட்டம் மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும், இச்சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியும் அப்பிரதேசத்தில் இன்று (22) வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டதுடன், அங்கு பூரண கடையடைப்பும் மேற்கொள்ளப்பட்டது. ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் சுமார் 56 நிறுவனங்களின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஏறாவூர் பிநூர்முஹம்மது ஹுஸைரா (வயது 56) மற்றும் அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானு …

  10. அமெரிக்காவில் கடற்படை தளபதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் விஜயகுணரத்தின, ஐக்கிய அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளின் தளபதி அட்மிரல் ஜோன் எம். ரிட்ஷட்சன் மற்றும் பசுபிக் பிராந்திய கட்டளை தளபதி எச்.ஸ்வீப்ட் ஆகியோரை வியாழக்கிழமை சந்திததுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/182437/அம-ர-க-க-வ-ல-கடற-பட-தளபத-#sthash.HQsXXujW.dpuf

  11.  மரணதண்டனை வேண்டாம்: துமிந்த மேன்முறையீடு கடந்த 8ஆம் திகதி தனக்கு வழங்கப்பட்ட மரணதண்டனைத் தீர்ப்பை இரத்துச் செய்து, சகல குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மேன்முறையீடு செய்துள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தொழிற்சங்க ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேர், அந்தத் தீர்ப்புக்கெதிராக கடந்த 20 ஆம் திகதி மேன்முறையீடு செய்திருந்தனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமது மேன்முறையீட்…

  12. வவுனியா பாடசாலையில் தற்கொலை அங்கி மீட்பு 2016-09-22 12:04:30 (பாஸ்கரன் கதீஷன்) வவுனியா பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தற்கொலை அங்கி உட்பட போன் சாஜர் என்பன இன்று (22) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சோமரத்தின விஜயமுனி குழுவினர் இது தொடர்பில் விசாரணை களை முன்னெடுத்துள்ளனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=19430#sthash.gHZhQmKy.dpuf

  13. நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர் சட்டவிரோதமான முறையில் ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 30 பேர், இன்று பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளனர். ஐப்பான் நாட்டு பாதுகாப்பு தரப்பினர் 67 பேர், குறித்த இலங்கையர்களுடன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/182438/ந-ட-கடத-தப-பட-ட-இலங-க-யர-கள-ந-ட-ட-வந-தட-ந-தனர-#sthash.HMNzMC4V.dpuf

  14. ஊடகவியலாளர் சிவராமின் கொலை தொடர்பாக முக்கிய தடயம் ஒன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணையின்போது ஊடகவியலாளர் சிவராமின் கைத்தொலைபேசியை குற்றதமப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியிருந்தனர். ஊடகவியலாளர் சிவராம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பம்பலப்பிட்டி காவல்நிலையத்திற்கு எதிர்ப்பக்கத்தில் இனந்தெரியாத 4பேரினால் கடத்திச் செல்லப்பட்டார். இவரது சடலம் மறுநாள் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. சிவராம் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது கைத்தொலைபேசியை சந்தேகநபர்கள் தாம் செல்லும் இடமெல்லாம் அக்கைத்தொலைபேசியைக் கொண்டு திரிந்துள்ளனர். இதனால் குற்றப்புலனா…

  15. அமைச்சர் பொன்சேகாவால் நாடாளுமன்றில் அமளி கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல ஊழல் மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பான புகைப்படமொன்றையும் வெளியிட்டதைத் தொடர்ந்து சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில், சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் பிரதமர் ரணில் முன்வைத்த பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சரத் பொன்சேகா கடந்த ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். கடந்த காலத்தில் மிகவும் மோசமான ஆட்சியே முன்னெட…

  16. கிளிநொச்சி நகரின் வடிகால்களை நவீன மயப்படுத்துவது அவசியமானது ; சிறீதரன் எம்.பி. (எஸ்.என்.நிபோஜன்) கிளிநொச்சி நகரின் வடிகால் அமைப்பு குறைபாடுகள் தொடர்பில் நேரில் கண்டறிந்து தீர்வு காண்பதற்கான களப்பயணம் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் மேற்க்கொண்டனர். கிளிநொச்சியில் நகரின் வடிகால அமைப்பு முறையில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதாக கடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவ் விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு வர்த்தகர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அதனை அடுத்து உரிய அதிகாரிகளோடு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். கிளிநொச்சி அரச…

  17. நியுசிலாந்தின் விளையாட்டு ஜெர்ஸி 5.1 மில்லியன் ரூபாவிற்கு இலங்கையில் ஏலம் நியுசிலாந்தின் உலகப் பிரபல்யம் பெற்ற தேசிய றகர் அணியினரால் கையொப்பமிடப்பட்ட விளையாட்டு ஜெர்ஸி இலங்கையில் நடைபெற்ற ஏலவிற்பனையில் 5.1 மில்லியன் ரூபாவிற்கு பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவரால் வாங்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு, உட்கட்டமைப்பு டிஜிட்டல் அமைச்சர் ஹரின் பெர்னான்டோவிற்கு இந்த ஜெர்ஸி அவரது நியுசிலாந்து விஜயத்தின்போது நியுசிலாந்து பிரதமரால் அனபளிப்பு செய்யப்பட்டிருந்தது. 2015இல் உலக சாம்பியன்களாக வந்த நியுசிலாந்தின் றக்பி விளையாட்டு அணி வீரர்களால் கையொப்பமிடப்பட்ட இந்த ஜெர்ஸியை ஏலத்தில் விற்ற பணம் கொழும்பு இஸிப்பத்தான கல்லூரி…

  18. யாழில் கிராமப்புற மாணவர்களுக்கு கணனித் தொழில்நுட்ப பயிற்சி கிராமப்புறங்களிலுள்ள மாணவர்களுக்கு கணனித்துறையில் பயிற்சியளிக்கும் நோக்குடன் மைக்ரோசொப்ட் நிறுவனம் சர்வோ தய அமைப்புடன் இணைந்து வேலை வாய்ப்பளிக்கும் பயிற்சிகளை இலங்கையில் நாடளாவியரீதியாக மேற்கொ ள்ளவு ள்ளது. இதற்காக யாழ்ப்பாணம், கம்பகா, இரத்தினபுரி, கண்டி, குருநாகல, பதுளை, மொனராகலை, அனுராதபுரம், பொலநறுவை, மாத்தறை ஆகிய பகுதிகளிருந்து5,000 மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்படுமென செய்திகள் வெளிவந்துள்ளன. மூன்று கட்டங்களாக ஒரு வருட காலத்திற்கு மாணவர்கள் இந்தப் பயிற்சியைப் பெறவுள்ளார்கள். ஒரு அபிவிருத்தி அடைகின்ற நாடாக தெற…

  19. இது காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட ஆரையம்பதியை அண்மித்த வாவிக்கரையேரம் ( 7°40'24.21"N, 81°43'30.94"E)குகிள் நிறுவனத்தால் 2006 தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் எடுக்கப்பட்ட சற்றலைற் படம். 2006 இல் காத்தான்குடி குப்பை கொட்டும் இடமாக பாவிக்கப்பட்ட இவ் பிரதேசம் 2016 ல் சிறிய மைதானமாக பரிணமித்துள்ளது. - 2006 உம் அதற்கு முதற்காலங்களிலும் கொட்டப்பட்டிருக்கும் குப்பை மட்டக்களப்பு வாவியின் ஓட்டத்தால் எங்கு சென்றிருக்கும்? - அக்கழிவுகள் எங்கு சென்று தங்கியிருக்கும் ? -கழிவுகள் கலப்பதால் ஏற்படும் சுகாதார கேடு என்ன ? இவற்றை விட...... - இயற்கைக்கு மாறாக நீர் நிலைகளை மூடுவதால் ஏற்படும் சூழல் பாதிப்பு என்ன? -சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் கடமை என்ன? -இதனா…

  20. ஆண்டுக்குள் தீர்வின்றேல் இராஜதந்திர தோல்வியாகும் போராட்டங்களில் எவ்வாறு இணைய முடியும்; மாவை கேள்வி (எம்.நியூட்டன்) அரசாங்கத்துடன் இணைந்து இந்த ஆண் டுக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியவில்லையாயின் நாம் இராஜதந்திர தோல்வியினை எதிர்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உருவாகிவிடும் என்று தமி ழரசுக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப் பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித் துள்ளார். ஐ.நா.பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் மற் றும் அரசாங்க தரப்பினருடன் ன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற நிலையில் போராட்டங்களை மேற்கொள்கின்றோம் எனக் கூறி அதனை முறியடிக்கும் செயலை நாம் செய்…

    • 4 replies
    • 528 views
  21. தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற முடியாது என்று தமிழரசுக் கட்சி தரப்பு தெரிவித்திருப்பதாக தெரியவருகின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் “எழுக தமிழ்!” எழுச்சிப் பேரணியில் பங்குபற்றுமாறு தமிழரசுக் கட்சியையும் அழைப்பதற்காகவே தமிழ் மக்கள் பேரவையினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண வர்த்தகர் சங்க தலைவர் திரு. ஜெயசேகரம் அவர்களின் ஏற்பாட்டில், அவரது வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00மணிக்கு ஆரம்பமாகிய இந்தச் சந்திப்பு சுமார் இரண்டரை மணி நேரங்கள் நீடித்தது. தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் அதன் இணைத்தலைவர…

    • 14 replies
    • 1.1k views
  22. உருளு பூங்கா மற்றும் ஹபரனை - திருகோணமலை வீதியின் இருமரங்கிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை பரவிய இந்த காட்டுத் தீயில், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் காட்டுப் பகுதி தீயால் கருகி நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பற்றியுள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார், இராணுவம் மற்றும் வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இக்காட்டுத் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http://www.virakesari.lk/article/11616

  23. புதிய அரசியல் கட்சியொன்றை தற்போது பதிவு செய்ய முடியாது – மஹிந்த தேசப்பிரிய குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு புதிய அரசியல் கட்சியொன்றை தற்போது பதிவு செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கரையோரப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் சந்தித்து தம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியொன்றை பதிவு செய்ய முடியாது எ…

  24. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களால் இந்தாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரி சங்கத்தினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதன்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அரச வைத்திய அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் அங்கு மேலும் தெரிவிக்கையில், இதுவரையில் இடம்பெற்ற விபத்துக்களில் 896 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும், கடந்த சில மாதங்களாவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு வீதி விபத்துக்களில் சிக்கி படுகாயமடைந்த 3 ஆயிரத்து 204 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்…

  25. அரசின் அரசியல்யாப்பு தொடர்பில் சந்தேகம் கொள்ளும் முதல்வர் விக்கி தமிழர்களுக்கான சாதகமான அரசியல் யாப்பொன்றை தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கத்தின் உள்நோக்கம் சந்தேக த்தை எழுப்புவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வடக்கு, கிழக்கு இருப்பையும் தனித்துவத்தையும் பாதிக்கும் வண்ணம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு, வட மாகாண முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.நாட்டில் எந்த இடத்திலும் புத்தர் சிலை எழுப்ப முடியும் எனவும் அது தமது சுதந்திரம் என்று சில புத்த பிக்குமார் கூற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.