ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
தோல் நிறத்தை காரணமாக கூறி அவுஸ்திரேலிய விளம்பர நிறுவனம் இலங்கையை சேர்ந்த யுவதியை பணியில் சேர்க்க மறுத்துள்ளது. 27 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் இலங்கையை சேர்ந்த சுரஞ்சி எமிலி ஹோஹெல் என்ற இந்த யுவதி தனது பேஷ்புக் வலைத்தள கணக்கில் இந்த சம்பவம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய நிறுவனம் நடத்திய நேர்முகப் பரீட்சைக்கு இந்த யுவதி சென்றுள்ளார். பொதுநிறமாகவும் இந்தியராகவும் இருப்பதால், தனக்கு தொழிலை வழங்க முடியாது என நேர்முகப் பரீட்சை நடத்திய குழுவினர் கூறியுள்ளனர். தான் இந்தியர் அல்ல இலங்கையர் என எமிலி தனது பேஷ்புக் கணக்கில் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் விளம்பர …
-
- 4 replies
- 676 views
-
-
நீதி கிடைக்க வேண்டும் மூதூரில் அக் ஷன் பாம் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட 10ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மூதூரில் நடந்த படுகொலைச்சம்பவத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான அக் ஷன் பாம் (ACTION CONTRALA RAIM AGAINST HUNGER) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த 17, தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 10, வருடங்கள் பூர்த்தியான நிலையில் அப்பெற்றோர்களும் உறவினர்களும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையென்பதை கவலையுடன் தெரிவித்தமை இங்கு பதிவு செய்துகொள்ளப்படுகிறது. எனது மகள் ரொமிலா சிவப்பிரகாசம் மேற்படி சம்பவத்தில் படுகொலை செய்…
-
- 3 replies
- 907 views
-
-
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் 75 பேர் எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு திரும்பவுள்ள 75 பேரில் 43 ஆண்களும் 32 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர். குறித்த அனைவரும் இலங்கையை வந்தடைவதற்கான இலவச விமான பயணச்சீட்டு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, நாடு திரும்பு…
-
- 0 replies
- 197 views
-
-
குமாரபுரம் கொலை: மேன்முறையீட்டுக்கு பணிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை -கதிரவன், வடமலை ராஜ்குமார் குமாரபுரம் படுகொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, மேன்முறையீடு செய்யுமாறு சட்ட மா அதிபரை பணிக்க வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வேண்டுகோள் அடங்கிய கடிதமொன்றை, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவர், அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடிதத்தின் முழு விவரம் வருமாறு, அதி மேதகு ஜனாதிபதி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு. குமாரபுரம் படுகொலை வழக்கில் அளிக்கப்பட்ட த…
-
- 1 reply
- 222 views
-
-
சிறுபான்மையினர் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் , ரிட்டா இஸாக் டியாயி ஒக்டோபர் 10ஆம் திகதி முதல், 20 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசாங்கம், முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, விசேட அறிக்கையாளரின் ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=162921&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 487 views
-
-
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அண்மையில் சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிட முடியாது என இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. துறைமுக நகர் அபிவிருத்தித்திட்டம் தொடர்பில் இந்தியா அழுத்த கொடுத்தது எனவும் இதன் காரணமாகவே அபிவிருத்திப் பணிகளை இடைநிறுத்தி மீளாய்வு செய்ய நேரிட்டது எனவும் அமைச்சரவை தீர்மானங்கைள அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், டொக்டர் ராஜித சேனாரட்ன கூறியிருந்தார். துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் அப்போதைய எதிhக்கட்சித் தலைவரும் தற்போதைய பிரதமரும் குறித்த காலப்பகுதியில் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார் எனவும், இந்தியாவின் பாதுகாப்பு குறித்து கருத்து வெளியிட்டிருந்தார் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் ஒருவ…
-
- 1 reply
- 187 views
-
-
யாழ்.கரைநகரில் கோர விபத்து ; சம்பவ இடத்தில் ஒருவர் பலி யாழ்ப்பாணம், காரைநகர் வலந்தலை சந்திக்கு அண்மையில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இவ் விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த ரவிகரன் (வயது-21) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொணடு வருகின்றனர். http://www.virakesari.lk/article/9837
-
- 1 reply
- 345 views
-
-
வசதிப்படைத்தவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொய் வழக்குகளில் சிக்க வைத்து பணம் பறித்ததாக கூறப்படும் கொஹூவளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த மூன்று பேருக்கு எதிராக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கொஹூவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கல்கிஸ்சை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரிடம் விடயங்கள் கேட்டறியப்பட்டுள்ளன. மகரகம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் மேவன் சில்வா இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். விருந்து ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் நித்திரை ஏற்பட்டதால், வாகனத்தை வீதியில் ஓரமாக நிறுத்தி விட்டு…
-
- 0 replies
- 230 views
-
-
வட மாகாண சபையினால் பல விதமான அபிவிருத்தி திட்டங்களை மருந்தங்கேணியில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையும் யாழ் மாவட்டச் செயலகமும் இணைந்து மருதங்கேணியில் நடத்திய குறை நிவர்த்தி நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பாண்டியன்குளம், புளியங்குளம், செட்டிக்குளம், மடு ,நெடுந்தீவு போன்ற இடங்களில் முன்னைய நடமாடும் சேவைகள் நடைபெற்றுள்ளன. பல தடவைகள் மருதங்கேணியில் நடமாடுஞ்சேவையை நடாத்த வேண்டும் என்று நாம் திட்டமிட்டிருந்தாலும் ஏதோ தவிர்க்க முடியாத காரணங்களினால் எமது வருகை தடைப்பட்டுக் கொண்டே வந…
-
- 4 replies
- 344 views
-
-
கீரிமலை தீர்த்தக்கடலில் கற்பாறைகள் அகற்றல் யாழ். கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தக் கடலில் உள்ள கற்பாறைகள் பக்தர்கள் நீராடுவதற்காக சுமார் 5.6 மில்லியன் ரூபா செலவில் அகற்றப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் என்.வேதநாயகன் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிலுள்ள கீரிமலை தீர்த்தக்கடலானது இந்து மக்கள் ஆடி அமாவாசை தினத்தில் பிதிர்க்கடன் செலுத்துவதில் முக்கியம் வாய்ந்த இடமாகும். இவ்வாறு விசேட தினங்களில் தீர்த்தக்கடலில் நீராடுபவர்கள் அங்கு காணப்படும் கட…
-
- 6 replies
- 564 views
-
-
கூட்டு எதிர்க்கட்சியினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாத யாத்திரையில் இரண்டு கோடி மக்கள் பங்கேற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். அல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது… பசியை தாங்கிக்கொண்டு, மழை வெயிலை கருத்திற்கொள்ளாது கொழும்பிலிருந்து கண்டி நோக்கி வந்த கோடிக்கணக்கான மக்கள் பாத யாத்திரையில் பங்கேற்றனர். ஆகக்குறைந்தது இந்த பாத யாத்திரையில் இரண்டு கோடி பேர் பங்கேற்றிருப்பார்கள். இதனைப் பார்த்த சிலர் மண்ணெண்ணை ஊற்றப்பட்ட சாரைப்பாம்புகளைப் போன்று துடிக்கத் தொடங்கியுள்ளனர். துடிப்பதற்கு ஒன்றுமில்லை இதுவே மக்களின் ஆணையாகும். …
-
- 3 replies
- 448 views
-
-
உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை, சர்வதேச விசாரணை வேண்டும் என அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறை தொடர்பான செயலணியிடம் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு, கிழக்கு மக்கள் இதனையே விரும்புவதாக நல்லிணக்க செயலணியின் செயலாளரும், மாற்று கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளனர். ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக பிரதமர் ரணில் விக்ரம சிங்கவினால் சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய குழு ஒன்று கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டது. இந்த செயலணியினர் யுத்த பாதிப்புக்களில் இருந்து இன்றுவரை மீளமுடியாது பல்வேறு வக…
-
- 1 reply
- 376 views
-
-
இந்திய–இலங்கை பாலம் அமைக்கப்பட்டால் அதனை தகர்ப்பேன் : உதய கம்மன்பில இந்தியா - இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால் அது வடக்கு, கிழக்கையும் இந்தியாவையும் இணைப்பதாக அமையும். எனவே இந்தியா- இலங்கைக்கு இடையில் பாலம் ஒன்றை அமைத்தால் அதனை தகர்ப்பேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பு பாகொடையில் அமைந்துள்ள தூய்மையான நாளைக்கான அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ஆசிய அபிவிருத்தியின் உதவியில் இலங்கை–இந்தியாவை நிரந்தரம…
-
- 2 replies
- 397 views
-
-
வவுனியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட கணவரின் சடலத்தினை கையளிப்பதானால் விடுதலை புலிகளுடன் தொடர்புபட்டவர் என தெரிவிக்க வேண்டும் என இராணுவம் தெரிவித்தது என்று கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் பெண்ணொருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வு இன்று கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த அமர்வில் பங்கேற்று தமது கருத்துக்களை பதிவு செய்த பெண் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ‘2014ம் ஆண்டு வவுனியாவில் வைத்து எனது கணவர் சுட்டு கொல்லப்பட்டார். மறவங்குளம் செல்லும் போது புதுக்குளம் பகுதியில் வைத்தது கணவர் கொலை செய்யப்பட்டார். க…
-
- 2 replies
- 411 views
-
-
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையை, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிண்ண அலுவலகம் வரவேற்றுள்ளது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையிலான இந்த அலுவலகம், அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லவென்று தெரிவித்துள்ள பரிந்துரைகள் வரவேற்கக்கூடியவை என்று அறிக்கை ஒன்றின்மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலையில்லாத வாழ்க்கை என்ற தலைப்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், காணாமல் போனோரின் குடும்பங்களுக்கான தேவைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. சமூகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைப்படுத்தல், நியாயமான நீதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையிலேயே நல்லிணக்க அலுவலகம…
-
- 0 replies
- 295 views
-
-
பாவோ நோய் வைரஸ் மூலம் பரவும் ஒரு வித நோயாகும். நாய்கள் மூலம் தொற்றும் நோயாகும். இந்நிலையில், யாழ் உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகளான நாய்கள் கடந்த இரண்டு மாதங்களாக ‘பாவோ’ நோய்த் தொற்றின் தாக்கத்துக்கு இலக்காகி வருவதாக உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.சி. விமலகுமார் தெரிவித்துள்ளார்.குறித்த நோய்த் தொற்றுக்கு இலக்கான நாய்க்கு ஆரம்பத்தில் உணவில் நாட்டமிருக்காது. பின்னர் கடுமையான வாந்தி, வயிற்றோட்டம், இரத்தத்துடன் வயிற்றோட்டம் அல்லது நீரிழப்பு ஏற்பட்டு இறப்பு ஏற்படும். கடந்த இரண்டு மாதத்தில் மாத்திரம் ‘பாவோ’ நோய்த் தொற்றுக்கு இலக்கான 30ற்கும் மேற்பட்ட நாய்களுக்கு எம்மால் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 578 views
-
-
கீரிமலையில் மீன்பிடிதுறைமுகம் தீர்மானம் எதுவுமில்லை-அரசாங்கம் யாழ்ப்பாணம், கீரிமலை பிரதேசத்தில் புதிய மீன்படி துறைமுகம் நிர்மாணிப்பது தொடர்பாக அரசாங்கம் எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்துக்கள் புனிதமாகக் கருதும் யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அவ்வாறு கோவிலுக்கு அருகில் மீன்படித் துறைமுகைம் அமைக்கப்பட கூடாது என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, கீரிமலை பிரதேசத்தில் மீன்பிடி…
-
- 0 replies
- 308 views
-
-
நுவரெலியா உயர் நீதிமன்றம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்பளித்துள்ளது. 2004.02.01ஆம் திகதி இரவு 09.30 மணியளவில் நடந்த கொலை சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதித்து நீதவான் தீர்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நுவரெலியா வென்ச்சர் தோட்டத்தை சேர்ந்த பெரியசாமி அறிராம் என்பவருக்கும், தண்டனை விதிக்கப்பட்ட எழுவருக்கும் இடையில் மின்சார பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே குறித்த நபரை கத்தியால் தாக்கி கொலை செய்ததாக கொலைசெய்யப்பட்டவரின் மனைவி இன்று சாட்சியமளித்துள்ளார். இதில், பழனியாண்டி முத்துராஜா, பழனியாண்டி அறிராமர், பழனியாண்டி நீலமேகம், நீலமேகம் கமலநாதன், நீலமேகம் பாலசந்திரன், சுப்பிரமணியம், சுப்பிரமணியம் வி…
-
- 0 replies
- 513 views
-
-
உள்ளூராட்சித் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா குமாரணதுங்க ஆகிய மூவரையும் ஒரே மேடையில் கொண்டுவரும் எமது கனவு இனிமேலும் மெய்ப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லையென அதன் பொதுச் செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் கை நழுவி சென்றுள்ளபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுசேர்க்கும் முயற்சியினை தாங்கல் இதுவரை கைவிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். “நாம் ப…
-
- 0 replies
- 232 views
-
-
இலங்கை - சீனா கூட்டு ஆணைக்குழுவை உருவாக்க இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக சீன தூதுவர் யி ஸியாங்லியாங் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட உள்ள சீனாவின் சிறப்பு பொருளாதார வலயத்திற்காக 55 சதுர கிலோமீற்றர் காணி கோரப்பட்டுள்ளது. மேலும் இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சீனாவின் உயர் மட்ட குழு அடுத்த வாரம் இலங்கை வர உள்ளது. அம்பாந்தோட்டையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சீனாவின் சிறப்பு பொருளாதார வலயத்தை பார்வையிட சென்றிருந்த சீன தூதுவர் அங்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து விஷேட கலந்துரையாடலில் ஈடுப்பட்டதாக சீன தூதுரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 391 views
-
-
மல்லாகம் பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவைக்கு பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு கோரி அப்பகுதி மக்கள் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் தபால் ரயிலை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணியளவில் மல்லாகம் கோட்டைகாடு ரயில் கடவைக்கு அண்மையில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது. குறித்த பகுதியில் உள்ள ரயில் கடவையில் சமிஞ்சை விளக்குகளும் சமிஞ்சை ஒலியும் பொருத்தப்பட்டுள்ள போதும் அதற்கான தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருக்கவில்லை. நேற்று முற்பகல் காங்கேசன்துறை இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயிலுடன் சண்முகம் சிவசங்கரன் (வயது 48) எனும் காது கேட்காத நபரொருவர் மல்லாகம் கோட்டைகாடு பகுதியில் உள்ள ரயில் கடவையில் மோதி உயிரிழந்திரு…
-
- 0 replies
- 376 views
-
-
கொழும்பில் கைப்பற்றப்பட்ட 314 கிலோ கொக்கெய்ன் போதைப் பொருள் கனடாவுக்குக் கடத்தப்பட இருந்ததால் சர்வதேச பொலிசாரின் உதவியுடன் கனடாவில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற சுகாதார அமைச்சின் நிகழ்வொன்றில் உரையாற்றிய பொலிஸ் மா அதிபர், இறுதியாக கைப்பற்றப்பட்ட 314 கிலோ கொக்கேய்ன் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கனடாவுக்குக் கடத்தும் முயற்சியே எடுக்கப்பட்டிருந்ததால் கனடாவுடன் நாம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். எதிர்காலத்திலும் தகவல்களின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும். என்றும் அவர் மேலும் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=162924&ca…
-
- 0 replies
- 223 views
-
-
15 வயது சிறுமியொருவரை 22 வயது இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து நேற்று பளையில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, கடந்த 3 நாட்களிற்கு முன்னர் குறித்த விடுதியில் வைத்து சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பளை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது, முறைப்பாட்டை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். குறித்த சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் விடுதியில் கடமையில் இருந்த நபர்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆ…
-
- 1 reply
- 431 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாயில் தமிழ் மீனவர்கள் அத்துமீறி வாடி அமைத்தார்கள் என சிறீலங்கா நீரியல்வளத் துறை அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீதான வழக்கு விசாரணை நேற்று ஆரம்பமானது. சிங்கள மீனவர்கள் வசப்படுத்தி வைத்திருந்த பகுதியில் தமிழ் மீனவருக்குப் பாரம்பரியமாக இருந்து வந்த உரிமை பிரதேச செயலகத்தால் மீளப் பெற்றுக் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து நீரியல்வளத் துறை அமைச்சின் உத்தரவுக்கமைய முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வாறு திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்திருப்பது, அது ஓர் இனத்துக்குச் சார்பாக மட்டுமே செயற்படுகின்றதைக் காட்டுகின்றது …
-
- 1 reply
- 395 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வெட்கம் இல்லையென்றால் நாம் என்ன செய்ய முடியும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எப்போதும் முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் இதன் காரணமாக சிரேஸ்ட அரசியல்வாதி டொக்டர் எஸ்.ஏ. விக்ரமசிங்க இது கட்சியல்ல ஓர் கூட்டணி என கூறியிருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் அது கட்சியை பலப்படுத்த வேண்டுமே தவிர கட்சியை பிளவடையச் செய்யும் வகையில் அமைந்துவிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற பாத யாத்திரை நல்ல விடயம் எனவும், 3 -4 மில்லியன் மக்கள் அணி திரண்டதாக கூறப்பட்ட போதிலும் உண்மையில் 12000 பேர் மட்ட…
-
- 0 replies
- 232 views
-