Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிள்ளைகளை பௌத்த மதத்துறவிகளாக்கிய தமிழ் தந்தை தமது நான்கு பிள்ளைகளையும் பௌத்த மதத் துறவிகளாக, தமிழ் தந்தையொருவர் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வசித்து வந்த வீட்டை அடகு வைத்து மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த குறித்த நபர், மனைவி பற்றிய எவ்வித தகவல்களும் இல்லாத காரணத்தினால் இவ்வாறு பிள்ளைகளை பௌத்த மதத் துறவிகளாக மாற்றியுள்ளார். 56 வயதான சித்திரவேல் சுந்தரலிங்கம் என்ற நபரே இவ்வாறு தனது மூன்று ஆண் பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளையையும் பௌத்த மதத் துறவிகளாக மாற்றியுள்ளார். பிள்ளைகளை பராமரிக்க முடியாது என்ற காரணத்தினால் இந்த நபர் இவ்வாறு பிள்ளைகளை பௌத்த மதத் துறவற வாழ்க்கையில் ஈடுபடுத்தியுள்ளார். சுந்த…

  2. ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக முதலாவது பெண் அதிகாரி நியமனம் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மெகெலி (Una McCauley) வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு வெளிவிவகார அமைச்சின் கட்டடத் தொகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. இதன்போது இலங்கை – ஐ.நாவுக்கு இடையிலான நட்புறவு மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் காணப்படுகின்ற நாட்டின் சூழ்நிலையும், நடவடிக்கைகள் பற்றியும் உனா மெகெலி கேட்டறிந்துகொண்டார். பிரித்தானியாவைச் சேர்ந்த உனா மெகெலி ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவராவார். …

  3. இந்தியா செல்கிறது இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குழு இலங்கை– இந்திய மீனவப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர அங்கு செல்வதற்கு முன்னதாக இலங்கை மீனவப் பிரதிநிதிகள் சிலரை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த மாத இறுதிக்குள் இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு மீனவப் பிரச்சினை தொடர்பாக வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் அமைச்சர் மஹிந்த அமரவீரரை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். …

  4. தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இனவாத கருத்துக்களை பரப்பி வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் பெரும்பான்மையின சிங்கள மக்கள் தொடர்பில் ஏற்றுக்கொள்ள முடியாத தேவையற்ற கதைகளை பரப்பி வருகின்றார். அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் யாப்பு ஒன்று காணப்பட…

    • 3 replies
    • 366 views
  5. மூன்றரை கோடி பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது இலங்கையிலிருந்து சிங்கப்பூரிற்கு சட்டவிரோதமாக மூன்றரை கோடி பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 1.10 மணிக்கு இலங்கையிலிருந்து சிங்கப்பூரிற்கு செல்லவிருந்த சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கடத்தி செல்ல முயன்றுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் தங்களின் பயணப்பையில் வைத்திருந்த அலங்கார பூக்களினுள் வெளிநாட்டு நாணயங்ளை மறைத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கடத்தலில் சம்பவத்தில் ஈடுப்பட்ட கொழும்பை சேர்ந்த 35 மற்றும் 45 வயதுடைய இருவரும் கட்டுந…

  6. நோர்வே பிரதமர் இலங்கைக்கு விஜயம் நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். நாட்டுக்கு வந்துள்ள நோர்வே பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளைச் சந்தித்து பேசவுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/178622/ந-ர-வ-ப-ரதமர-இலங-க-க-க-வ-ஜயம-#sthash.9tZvF7cV.dpuf

  7.  ஜனாதிபதி செயலகத்திலிருந்து சென்ற அழைப்புகள் குறித்து விசாரணை றகர் விளையாட்டு வீரர் தாஜூதீன் படுகொலை செய்யப்பட்ட அன்றைய தினம், நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்தவர் மற்றும் இன்னும் சில அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைபேசி அழைப்புகள் சில வந்துள்ளன என்று நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் மிஹார் முன்னிலையில், நேற்றுப் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே, அரச சிரேஷ்ட சட்டத்தரணி டிலான் ரத்னாயக்க மேற்கண்ட விடயத்தை நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்திலிருந்து உள்வந்த தொலை…

  8. இலங்கை அரசு ஒப்புக்கொண்ட தீர்மானத்தினை அப்படியே நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லாவிடின் மாற்று வழிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அங்கு கருத்து வெளியிட்ட அவர், Go to Videos M.K.Sivajilingam Speech இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்ற நியாயப்பாடு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. வெளிநாட்டு நீதிபதிகளின் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென்ற கருத்தினை ஜனாதிபதி மற்றும் பி…

  9. “ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்பது பழமொழி. ஆடை நாகரிகத்தின் நல்லிணக்கமாக திகழ்கிறது. உலக நாகரிகத்தின் ஊற்றுக் கண்ணாய் விளங்கிய தமிழ்ச்சமூகம் உடையை மானம் காக்க உருவாக்கியது. நாளடைவில் உடையே நமது சமூகத்தின் கலாசார குறியீடாக மாறி விட்டது. ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு நமது பாரம்பரிய உடையாக வேட்டி, சேலை இருந்து வந்தது. அவர்களின் வருகைக்குப்பின் நமது நடை, உடை, பாவனை என அனைத்திலும் அவர்களின் தாக்கம் அதிகரித்தது. ஆனால், அவர்கள் இன்று நமது கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். ஆங்கிலேயப் பெண்கள் சேலை உடுத்தி வருவதையும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. நாட்டில் சிறந்து வாழும் வழிமுறைகளை நம்மைவிட அதிகமாக அவர்கள் பின்பற்றத…

  10. நல்லூர் கந்தன் ஆலயத்தில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இம்முறை ஆலய சூழல் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா எதிர்வரும் 8ம் திகதி கொடியேற்றத்துடன், ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவுக்கான மாநகர சபையின் ஏற்பாடுகளை ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில் - நல்லூர் மஹோற்சவ காலத்தில் ‘பிளாஸ்ரிக் அர்ச்சனைத் தட்டுக்களுக்கு பதிலாக பனையோலையில் தயாரிக்கப…

  11. கடத்தப்பட்டோரை மீட்டு தருவதாக கூறி மோசடி செய்த நபர் பொட்டாசியம் குடித்தே உயிரிழந்து உள்ளார் கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனோரை மீட்டு தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் பொட்டாசியம் திரவத்தை குடித்தே உயிரிழந்துள்ளார் என யாழ்.போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரி உ.மயூரன் தெரிவித்துள்ளார். யாழில். கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனோரை மீட்டு தருவதாக கூறி பண மோசடி செய்த கந்தசுவாமி கிருஷ்ணன் (வயது 57) எனும் நபரை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து கடந்த திங்கட்கிழமை பொலிசாரிடம் ஒப்படைத்து இருந்தனர். குறித்த நபர் பொலிஸ் காவலில் இருந்த வேளை திரவம் ஒன்றினை குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு இரு…

  12. ஐரோப்பிய மக்களையே மிஞ்சிய இலங்கை “குடி”மக்கள் ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் மதுபான அளவை விட இலங்கை மக்கள் ஐந்து மடங்கு மதுபானத்தை அருந்துவதாக புகையிலை மற்றும் மதுசாரங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையை சேர்ந்த ஒருவர் தினமும் 3.3 லீற்றர் மதுபானத்தை அருந்துகிறார். ஐரோப்பாவில் ஒருவர் தினமும் 0.5 லீற்றர் மதுபானத்தையே அருந்துகிறார். இலங்கையில் மக்கள் தொகையில் 20 சத வீதமானவர்களே மதுபானம் அருந்துகின்றனர். ஐரோப்பாவில் 95 வீ…

  13. தொல்லை கொடுக்கும் ஒலிபெருக்கிகள் எதிராக சட்டநடவடிக்கை க.பொ.த உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெறும் நிலையில் மாணவர்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்ற ஆலயங்கள், கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார். பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அமைதியான முறையில் பாடங்களை ஆயத்தம் செய்வதற்கு ஆலயங்களின் ஒலிபெருக்கிகள் இடையூறாக இருந்து தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துகின்ற கோவில்கள் ஆலயங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ். குடா நாட்டில் …

  14.  'பௌத்த நாட்டின் இராணுவம், மிருகத்துக்கேனும் விஷம் வைக்காது' -மேனகா மூக்காண்டி இதுவொரு பௌத்த நாடு. இங்குள்ள மக்கள், தர்ம சிந்தனைகளைக் கொண்டவர்கள். இங்குள்ள மிருகத்துக்கேனும் விஷம் வைக்காத இலங்கை இராணுவம், முன்னாள் போராளிகளுக்கு ஒருபோதும் ஊசி மருந்தேற்றவில்லை. இக்குற்றச்சாட்டை, இராணுவம் முற்றாக மறுக்கின்றது' என, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். இறுதி யுத்தத்தின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளைத் தடுத்து வைத்திருந்தபோது, அவர்களுக்கு ஊசி மருந்தேற்றியதாகவும், அந்த மருந்தால், தாங்கள் மிகவும் பலவீனமடைந்தவர்களாக மாறியுள்ளதாகவு…

  15. ஏமாற்றி பணம் சம்பாதிக்க முற்பட்டவர் வெளிநாட்டுப் பிரஜையிடம் வசமாக மாட்டினார் (காணொளி இணைப்பு) ஏமாற்றி பணம் சம்பாதிக்க முயன்றவரை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணியொருவர் தரவேற்றியுள்ளார். இச் சம்பவம் தலைநகர் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டவரை குறி வைத்த இருவர் இலங்கையில் இன்று விடுமுறை தினம் எனவும் கோவில் நிகழ்வொன்றில் யானை நிகழ்வொன்று இடம்பெறுவதாகவும் தெரிவித்து தனது நண்பரின் முச்சக்கரவண்டியில் ஏறுமாறு தெரிவித்துள்ளார். அதிலொருவர் முச்சக்கரவண்டி சாரதி, அந்த முச்சக்கர வண்டியில் குறித்த வெளிநாட்ட ஏற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கு…

  16.  கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டவருக்கு விளக்கமறியல் -எஸ்.கர்ணன் பருத்தித்துறை நகர்ப்பகுதியில் 2.010 கிலோகிராம் கஞ்சாவை கைமாற்றுவதற்காக கடந்த திங்கட்கிழமை (01) அதிகாலை கொண்டு செல்லும் போது கைதுசெய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (02) உத்தரவிட்டார். பதுக்கி வைத்திருந்த கஞ்சாவைக் கைமாற்றச் செல்லும் வழியில் இவர் பருத்தித்துறையில் வைத்து கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்டவர், அல்வாயைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஆவார். பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை செய்த பின்னர…

  17. விபத்தில் உதயன் ஊடகவியலாளர் பலி யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் கண்டி வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் உதயன் பத்திரிக்கை ஊடகவியலாளர் உயிரிழந்தார். யாழ் உதயன் பத்திரிகையின் புகைப்பட ஊடகவியலாளரான கந்தையா நவரட்ணம் (ரட்ணம் ஐயா) வயது 68. தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்து – கண்டி வீதியில் சோமசுந்தரம் அவனியூ வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதிய வேளையே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ் பொலிசார் …

  18. கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தி வைத்தமைக்காக, சிறிலங்காவிடம் இழப்பீடு கோரும் முடிவை சீன நிறுவனம் கைவிட்டுள்ளதையடுத்து, சீனாவுடன் இதுபற்றிய புதிய உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக விளக்கமளித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக, துறைமுக நகரத் திட்டத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இடைநிறுத்தி வைக்கப்பட்டமைக்காக, சிறிலங்கா அரசாங்கம் 150 மில்லியன் டொலர் வரை இழப்பீடு தர வேண்டும் என்று இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சீன நிறுவனம் கோரியிருந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, சீன நிறுவனம் இழப்…

  19. சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்தவாரம் தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவுடன், சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் தென்கொரியாவுக்குப் பயணமாகவுள்ளார். எனினும், இந்தப் பயணத்துக்கான காரணம் எதையும், கொழும்பு ஆங்கில நாளிதழ் வெளியிடவில்லை. மகிந்த ராஜபக்ச ஆட்சியிழந்த பின்னர், அண்மையில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் அவர் உகண்டாவுக்கும், ஜப்பானுக்கும் பயணங்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2016/08/03/news/17786

  20. கண்டியில் ஒன்பது மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக, பொலிஸாரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கண்டி ஹந்தான பிரதேசத்தில் இயங்கும் மனித தலைமைத்துவ உயர்கல்விப் பயிற்சி பாடநெறியில் இணைந்திருந்த 9 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15 முதல் 17 வயது வரை மாணவிகள் 9 பேர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கண்டி பொலிஸ் தலைமையக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். பயிற்சி மையத்தில் தாங்கள் பாலியல் ரீதியாக …

  21. நாமல் ராஜபக்ஷவுக்கு பிரேக் டான்ஸ் ஆட முடியும் என நன்றாக நிரூபித்துள்ளதாக, பெருந் தெருக்கல் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைய, ரியாலிடி சோவில் கலந்து கொணடு நாமலுக்கு டான்சிங் ஸ்டாராக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். "நாமல் பபா" மற்றும் "பஷில் பபா" ஆகியோர் அரசியல்வாதிகளாக வளர்ந்தது சுதந்திரக் கட்சியாலேயே என குறிப்பிட்ட அமைச்சர் டிலான் பெரேரா, அந்த இடத்தில் சிலர் ஒன்று கூடிய விதம் கவலைக் குரியது மற்றும் கோபத்தை வரவைப்பதாக இருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.thinakkural.lk/ar…

    • 0 replies
    • 222 views
  22. விடுதலை புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவின் முன்னாள் தலைவியான சிவகாமி ஜெயகுமாரன் (தமிழினி) எழுதிய 'கூர்மையான வாளின் நிழலில்' என்ற புத்தக பிரதிகளின் விற்பனை ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட இலாபத்தில் 3 இலட்சம் ரூபாய், மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வழங்கிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை அவரது கணவர் மற்றும் புத்தக வெளியீட்டு நிறுவனம் என்பன வெள்ளிக்கிழமை வழங்கவுள்ளனர். மகரகம வைத்தியசாலையின் சிறுவர் பிரிவுக்கு மருந்துகள் கொள்வனவு செய்வதற்கு இந்த பணத்தை கொடுப்பதாக புத்தக வெளியீட்டாளரும் திரைப்பட இயக்குநருமான தர்மசிறி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். தன்னால் எழுதி முடிக்கப்பட்ட புத்தகங்களின் இலாபத்தில் ஒரு பகுதியை புற்றுநோய் வைத்தியசாலையில் சிக்ச்சைப்பெறும…

    • 0 replies
    • 300 views
  23. அதிக தற்கொலை இடம்பெறும் 5 நாடுகளுள் இலங்கை.! உலகில் கூடு­த­லாக தற்­கொலை செய்­து­கொள்ளும் மக்கள் உள்ள ஐந்து நாடு­களுள் இலங்­கையும் உள்­ள­டங்­கி­யிருப்­ப­தற்கு உடல் மற்றும் மன நிலையில் அதிக பாதிப்­புக்கள் ஏற்­பட்டு வரு­வதே முக்­கிய கார­ண­மாகும். இதனை யோகா உடற் பயிற்சி முறை மூலம் சம­நிலைப்படுத்­தலாம் என களனி பல்­க­லைக்கழ­கத்தின் வெகு­சனத் தொடர் புத்­துறை பேரா­சி­ரியர் கலா­நிதி ரோஹன லக் ஷ்மன் பிய­தாச தெரி­வித்தார். கண்டி பேரா­தனை வீதியில் அமைந்­துள்ள குடும்ப யோகா கல்வி நிலையம் ஒழுங்கு செய்த ஊடக சந்­திப்பின் போதே அவர் இதனை தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது-, இன்று எமது நாட்டில் உயர் மட்­டத்தில் வாழ்­ப­வர்…

    • 2 replies
    • 322 views
  24. வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் குறித்த விசாரணைகளுடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இருந்து திருடப்பட்டுள்ளன. உயர் படை அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமான 'சண்டே லீடர்' பத்திரிகை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்கள் குறித்து சாட்சியமளித்திருந்த லெப்.கொமாண்டர் கே.சி.வெலகெதரவுடன் தொடர்புடைய ஆவணங்களே காணாமற்போயுள்ளன. திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த ஆவணங்கள், கடந்த மார்ச் 29 ஆம் திகதி களவாடப்பட்டுள்ளன. ஆள்கடத்தல்கள், கடத்தல்கள், ஆயுதக் கடத்தல்களுக்கும் அரசியல்வாதிகள் மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகளை வெளிப்படுத்தக் கூடிய ஆவணங்களே த…

    • 0 replies
    • 223 views
  25. "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும், அவரின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷவும் போர்க்குற்றவாளிகள். இறுதிப் போரில் அரச படைகள் குறிவைத்து ஏவிய கொத்துக்குண்டுகளினாலும், ஏனைய வெடிகுண்டுகளினாலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் செத்துமடிவதற்கு இவர்கள் இருவருமே முக்கிய காரணமானவர்கள். இவர்களுக்குத் தண்டனை வழங்க சர்வதேச விசாரணையே எமக்கு வேண்டும். இவர்களுக்குத் தண்டனை வழங்கினால்தான் நாட்டில் இனவாதம் ஒழிந்து உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்.'' - இவ்வாறு மீண்டும் ஆணித்தரமாகத் தெரிவித்தனர் வடக்கு மாகாண மக்கள். போர்க்குற்ற விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை எவ்வாறு அமைப்பது என்பன தொடர்பில் நல்லிணக்கச் செயலணியால் வடக…

    • 0 replies
    • 282 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.