ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143434 topics in this forum
-
யாழ். பல்கலைக்கழக மோதலை அடுத்து இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து பீடங்களிலும் இடைநிறுத்தப்பட்ட கல்விச் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை கலைப்பீடம், முகாமைத்துவ வணிக பீடம், விஞ்ஞான பீடம் உள்ளிட்ட பீடங்களில் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியுமா என பீடாதிபதிகளுடன் ஆராயப்பட்டது. இதன்போது, மேலும் சில நாட்கள் பொறுத்திருந்து சுமூக நிலையொன்று ஏற்படுத்தப்பட்ட பின்னர் இப் பீடங்களின் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம் என பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனினும் புதன்கிழமை ஆரம்ப…
-
- 0 replies
- 451 views
-
-
கேரள கஞ்சா பொதிகள் மீட்பு -எஸ்.றொசேரியன் லெம்பேட் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்பு அல்லிராணிக்கோட்டையை அண்மித்த கடற்கரைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 1 கோடி 39 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை, இன்று சனிக்கிழமை (23) காலை மீட்டுள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதய குமாரசிங்கம் கௌசிகன் தெரிவித்தார். அரிப்பு அல்லிராணிக்கோட்டையை அண்மித்த கடற்கரைப்பகுதியை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 5 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன. 139 கிலோ 500 கிராம் எடை கொண்ட குறித்த கஞ்…
-
- 1 reply
- 743 views
-
-
யாழ். பல்கலைக்கழக மோதலுடன் தொடர்புடைய தமிழ் மாணவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்காதது ஏன் என்று சிங்கள பேரினவாத அமைப்பான ராவணா பலய கேள்வி எழுப்பியுள்ளது. பகிடிவதை மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்பகுதியிலுள்ள பல்லைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிங்கள அப்பாவி மாணவர்களை தாக்கி காயப்படுத்திய தமிழ் மாணவர்களை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் நடவடிக்கை எடுக்காதிருக்க என்ன காரணம் என்றும் ராவணா பலய என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்த சத்ததிஸ்ஸ தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். அது மாத்திரமன்றி யாழ் பல்கலைக்கழக மோதல் சம்பவம…
-
- 0 replies
- 404 views
-
-
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரைப்போன்ற உருவத்தை ஒத்த இயந்திர மனிதனை (ரோபோ) பயன்படுத்திய இரகசியத்தை அவரது செயலாளர் அம்பலப்படுத்தியுள்ளார். கொழும்பில் வெளிவரும் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் செயலாளர் கே.எச்.ஜே விஜயதாஸ இந்த தகவலை வெளியிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ நேரடியாக மக்களிடம் சென்று அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து அவற்றை தீர்த்து வைக்கும் ஒரு மக்கள் தலைவனாக பிரபல்யமடைந்திருந்தார். இதற்காக நடமாடும் சேவையொன்றையும் அவர் முன்னெடுத்திருந்தார். வேலைப்பளுக்களுக்கு மத்தியில் நெருக்கடியான சூழ்நிலையை அவர் எதிர்கொண்டிருந்ததினால் மக்களை சந்திக்க முடியாத சந்தர்ப்பங…
-
- 0 replies
- 480 views
-
-
கிளிநொச்சி தருமபுரம் காட்டுப்பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி முறியடிப்பு கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி முறியடிப்பு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிாிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி பொலீஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. தா்மபுரம் பொலீஸாருக்கு பொது மக்கள் மூலம் கிடைத்த இரகசிய தகவலையடுத்து தா்மபுரம் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி சதுரங்க தலைமையில் பொலீஸாா் 23-07-2016 சனிக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையில் புளியம்பொக்கனை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டிருந்து நபரையும்,28 போத்தல் சகிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கான பெ…
-
- 4 replies
- 350 views
-
-
போக்குவரத்து விதிமுறையை மீறிய பெண்ணுக்கு அதிகூடிய தண்டம் போக்குவரத்து விதிமுறையை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய பெண் ஒருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் வெள்ளிக்கிழமை (22) தீர்ப்பளித்தார். சாரதியனுமதிபத்திரம், வருமானவரிபத்திரம், காப்புறுதிபத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியமை, மோட்டார் சைக்கிளை பதிவு செய்யாமை, ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்தை தடுக்கத் தவறியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இவருக்கு அதி கூடிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் போக்குவரத்து பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு, விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, ஆறு குற்ற…
-
- 0 replies
- 230 views
-
-
கொழும்பில் அதிகரித்து வரும் வாகன விபத்தை கட்டுப்படுத்த பொலிஸார் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சாரதி அனுமதிப்பத்திரம் , வாகன காப்புறுதி பத்திரங்களை மாத்திரம் பரிசோதனை செய்த பொலிஸார் இன்று முதல் முழுமையாக வாகனங்களையும் அதனுடைய தரங்களையும் பற்றிய சோதனையை மேற்கொள்ளுகின்றனர். குறிப்பாக, hand brake, steering, gear, brake ஆகியவற்றை பரிசேதனை செய்கின்றனர். வாகன உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களை உரிய முறையில் பழுது பார்க்காமையினால் இந்த விபத்துகள் அதிகரிக்கின்றன. மேலும், இந்த பரிசோதனை மூலம் உரிய முறையில் வாகனங்களை பராமரிக்காதவர்களுக்கு தண்டப்பணமும் அறவிடுப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக, எதிர் காலத்தில் சாரதிகள் வாகனங்களை சரியான முறையில்…
-
- 1 reply
- 289 views
-
-
நல்லாட்சி அரசை அட்சிபீடமேற்றிய இரு கல்விமான்கள் பணிநீக்கம்! தேசிய கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்திலிருந்து பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான கடிதங்களை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். சிவில் சமூக அமைப்புகளின் ஊடாக நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதில் பாரிய பங்களிப்பை நல்கியதன் காரணமாக மேற்குறித்த இருவரும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் சிற்சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித…
-
- 0 replies
- 237 views
-
-
கத்தோலிக்கத் திருச்சபையின் ஆசிய ஆயர்கள் மாநாடு முதல் முறையாக சிறிலங்காவில் வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நொவம்பர் 28ஆம் நாள் தொடக்கம், டிசெம்பர் 5ஆம் நாள் வரை, ஆசிய ஆயர்கள் மாநாடு நீர்கொழும்பில் நடைபெறவுள்ளது. ஆசியப் பிராந்தியத்தில் உள்ள 150 கத்தோலிக்க ஆயர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டுக்கான ஒழுங்கமைப்புப் பணிகள் தொடர்பாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன், கர்தினால் மல்கம் ரஞ்சித் நேற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். http://www.puthinappalakai.net/2016/07/23/news/17604
-
- 0 replies
- 325 views
-
-
சிறிலங்காப் படைகளில் இருந்து தப்பிஓடிய 18,847 பேர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிறிலங்காவின் முப்படைகளில் இருந்தும் தப்பிஓடியவர்கள், முறைப்படி விலகிக் கொள்வதற்கான பொதுமன்னிப்புக் காலமாக கடந்த ஜூன் 13ஆம் நாள் தொடக்கம், ஜூலை 13ஆம் நாள் வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பொதுமன்னிப்புக் காலத்தில், சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 16,920 பேரும், கடற்படையில் இருந்து தப்பி ஓடிய 831 பேரும், விமானப்படையில் இருந்து தப்பிச்சென்ற 629 பேரும், தாமாக விலகிக் கொள்ள முன்வந்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். இந்தப் பொது மன்னிப்புக்காலத்தை கடற…
-
- 0 replies
- 235 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் ராஜபக்சர்கள், உகண்டா, தாய்லாந்து மற்றும் ஜப்பானுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் பின்னர் பெருந்தொகை பணத்தை நாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். பயணங்கள் மேற்கொள்ளும் நாடுகளிலுள்ள இலங்கை மக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து பல மில்லியன் டொலர்கள் பணமாக கிடைப்பதாக காட்டிக் கொள்ளப்படுகிறது. இந்த பணம் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாக ராஜபக்ஷர்களால் காரணம் சொல்லப்படுகிறது. கடந்த ஆட்சியின் போது தவறான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பணம், வெளிநாடுகளில் வைப்பு செய்து மீண்டும், அதனை சட்டரீதியான பணமாக …
-
- 0 replies
- 362 views
-
-
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களை எடுத்து வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள் வைத்திருந்தால் பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவொரு அரசாங்கப் பரீட்சைகளும் எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரீடசாத்திகளிடம் இருந்து கண்டு பிடிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் அரசுடமையாக்கப்படும். எதிர்வரும் இர…
-
- 0 replies
- 320 views
-
-
இலங்கையர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இ-வீசாக்களை வழங்குவதற்கு மலேசியா தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேசிய பிரதிப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு ஒன்றில் மலேசியப் பிரதமர், பங்கேற்கும் போது இ-வீசா பற்றிய உடன்பாடு கையெழுத்திடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=162085&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 352 views
-
-
இலங்கை - அமெரிக்க கடற்படையினருக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் விஸ்தரிக்கும் வகையில், அமெரிக்க கடற்படையின் நெருக்கடியை விரைந்து கையாளும் படையினரை உள்ளடக்கிய யூ.எஸ்.எஸ் நியூ ஒலீயன்ஸ் கப்பல் நாளை கொழும்புத் துறைமுகத்தை சென்றடையவுள்ளது. கடற்பாதுகாப்பு மற்றும் ஸ்தீரத்தன்மை தொடர்பில் இலங்கைக் கடற்படையுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க கடற்படை கப்பலும் அதிலுள்ள நெருக்கடியை விரைந்து கையாளும் படையினரும் இலங்கைக் கடற்படையுடனான இருதரப்பு உறவுகளை விஸ்தரிக்கவுள்ளனர். அத்துடன் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளுக்கான பயிற்சிகள் மற்றும் ஒத்துழைப்புக்களையும் அமெரிக்கா வழங்கவுள்ளது. கேந்திர முக்கிய…
-
- 0 replies
- 523 views
-
-
மலேசியஅரசு எங்களுக்காக வழங்கிய 1,000,000.00 அமெரிக்க டாலரை தமிழர் பேரவை மலேசியாஅமைப்பு என்ன செய்தது: அனந்தி சசிதரன்:- இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளிலும் பல அமைப்புக்கள் பெருந்தொகை நிதியைத் திரட்டி வந்துள்ளன. அவ்வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு மலேசியாவில்இ தமிழர் பேரவை மலேசியா என்ற அமைப்பு பெருந்தொகைப் பணத்தை (1,000,000.00) மலேசிய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது. இந்த பணத்தொகையானது உண்மையில் எமது மக்களைச் சென்றடையுமானால் நிச்சயம் இன்று இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு கையேந்தும் நிலையோஇ வறுமையின் உச்சத்தில் தற்கொலைகளுக்கு தூண்டப்படும் துர்ப்பாக்கிய நிலையோ ஏற்பட்டிருக்குமா …
-
- 1 reply
- 382 views
-
-
யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு 55 மில்லியன் -செல்வநாயகம் கபிலன் உலக வங்கியின் ஊடாக யாழ். மாவட்டத்தின் நகர அபிவிருத்தி செயற்றிட்ட பணிகளுக்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (22) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் அலுவலர்களான பீற்றர் டி எலிஸ், ஜெசிக்கா ரசல் ஸ்மிற், யென் மற்றும் நெல்சிப் திட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி மனோகரன் ஆகியோர் வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இக் கலந்துரையாடல் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ம…
-
- 0 replies
- 233 views
-
-
நிரந்தர சகோதரத்துவத்திற்கான காலமிது ; யாழில் துண்டுப் பிரசுரம் கறுப்பு ஜூலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அணியினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி அப்போதைய ஆட்சியாளர் ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் இன படுகொலையின் 33ஆவது ஆண்டு இன்று நினைவுகூறப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அணியினரால் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 1948 ஆம் …
-
- 3 replies
- 482 views
-
-
வடக்குக்கு ஐந்து எம்.பி.க்களை மேலதிகமாக வழங்குவது அவசியம் : சுதந்திரக் கட்சி அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் வடக்கு மாகாணத்துக்கு ஐந்து பாராளுமன்ற ஆசனங்கள் மேலதிகமாக வழங்கப்படவேண்டும். யுத்தத்தின் பின்னரான வடக்கை கட்டியெழுப்புவதற்கு அதிகரித்த பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் அவசியமாகும். எனவே நாங்கள் இந்த விடயத்தில் மிகவும் உறுதியாக இருக்கின்றோம் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். அடுத்த பாராளுமன்றத் தேர்தலானது புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும். புதிய தேர்தல் முறைமையானது 65 வீதம் தொகுதி அடிப்படையிலும் 35 வீதம் விகிதாராரச அடிப்படையிலும் அ…
-
- 1 reply
- 360 views
-
-
என் மீது இனவாத சாயத்தைப் பூச ஊடகங்கள் முயற்சி! - வடக்கு ஆளுனர் குற்றச்சாட்டு [Saturday 2016-07-23 09:00] இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயற்படும் என் மீது இனவாத சாயத்தைப் பூசும் வகையில் எனது கருத்துகள் திரிவுபடுத்தப்படுகின்றன என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்தார். "இலங்கை பல்லின, மத, காலாசாரம், மொழிகளைக் கொண்ட ஒரு நாடு. இந்த நாட்டில் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக இரத்த ஆறு ஓடியது. அந்தக் கசப்பான அனுபவங்கள் மறக்கப்பட சமாதானமும், நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்படும் சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நல்லிணக்கத்தை அரச…
-
- 1 reply
- 450 views
-
-
கடந்த 16ம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தும் ஊடக மாநாடு கட்சியின் யாழ்-கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றம் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து நடாத்திய மேற்படி ஊடக மாநாட்டிலேயே கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழத்தில் கடந்த 16ம் திகதி விஞ்ஞான பீடத்திற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதல் சம்பவம் …
-
- 1 reply
- 470 views
-
-
தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரை, அவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப் போவதில்லை என்று, சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களின் பெற்றோர் சிலர் கலந்து கொண்டனர். “யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலை அடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் எமக்குத் திருப்தி அளிக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் இருந்து சிங்கள மாணவர்கள், வவுனியா வரை பேருந்தில் கொண்டு வந்து விடப்பட்டனர். அதற்கு அப்பால் அவர்களின் பாதுகாப்பு பற்றி கரிசனை கொள்ளவில்லை. மோதல்கள் நிகழ்ந்து 40 நிமிடம் கழித்தே, பல்கலைக்கழக பாதுகாப்…
-
- 7 replies
- 405 views
-
-
முல்லைத்தீவு பஸ் நிலையம் அடுத்த வருடம் அமைக்கப்படும் -நடராசா கிருஸ்ணகுமார் 'முல்லைத்தீவு பஸ் நிலையம் 2017ஆம் ஆண்டில்தான் அமைக்கப்படும்' என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். தற்போதுள்ள தற்காலிக பஸ் நிலையம் அடிப்படை வசதிகளற்றுக் காணப்படும் நிலையில் முல்லைத்தீவு பஸ் நிலையம் அமைக்கப்படுவது தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 'பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளோம். 2017ஆம் ஆண்டுதான் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பஸ் நிலையம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுமெனக் கூறப்பட்ட…
-
- 0 replies
- 191 views
-
-
தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது தமிழர் கடமை 'தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம், ஓலைச் சுவடிகளிலேயே எழுதப்பட்டது. சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ் கணக்கு நூல்கள், தேவாரத் திருமுறைகள், சித்த மருத்துவ நூல்கள் என்று தமிழை வளப்படுத்திய அத்தனை நூல்களும் ஓலைச் சுவடிகள் வழியாகவே எங்களிடம் கையளிக்கப்பட்டன. தமிழை வளர்த்தது பனை. பனை இல்லாமல் இருந்திருந்தால் தமிழுக்கு இவ்வளவு வளங்களும் வந்து சேர்ந்திராது. தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது எமது கடமை' என்று வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண பனை அபிவிருத்தி வாரத் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (22)…
-
- 0 replies
- 288 views
-
-
இந்திய மீனவர்களுக்கு விடுதலை கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டிற்காக இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 79 இந்திய மீனவர்களை விடுதலை செய்யவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்படவில்லை. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கோரிக்கையை அடுத்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதேவேளை இவர்கள் விடுதலை செய்வதற்கான உரிய பரிந்துரைகளை அமைச்சு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜுன் 6 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரையிலான காலப்பகுதிகளில் கைதுசெய்யப்பட்டவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.v…
-
- 0 replies
- 311 views
-
-
அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் சம்பந்தனுக்கு அக்கறை அதிகார பகிர்வு தொடர்பாக சிங்கள, தமிழ் மக்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.எனினும் அதிகார பகிர்வு விடயத்தில் எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தனும் தானும் அக்கறையுடன் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தி சவால்கள் குறித்த விசேட கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும் அதிகார பகிர்வு விடயத்தில் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தனும் தானும் அக்கறையுடன் செயற்படுவதாக தெரிவித்த அவர், மத்திய அரசிற்கும் மாகாணங்களுக்கும், பிரதேச சபைகளுக்கும் இடையிலா…
-
- 0 replies
- 250 views
-