ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143434 topics in this forum
-
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் மனைவிக்கு தீ மூட்டிய கணவன், அந்த தீயில் தானும் அகப்பட்டு படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சௌந்தராஜா உதயராஜா (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார். மனைவி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இவர்கள் இருவரும், 3 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து வாழ்ந்து நிலையில் சில நாட்களாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபரின் மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கும் சென்று முரண்பட்ட கணவன், மனைவியை மாமரத்தில் தூக்கு போ…
-
- 0 replies
- 373 views
-
-
இந்திய மீனவர்களுக்கு 75 நிமிடங்களுக்கு கூட அரசாங்கம் அனுமதி வழங்காது (ப.பன்னீர்செல்வம்) இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் 75 நாட்கள் அல்ல 75 நிமிடங்கள் கூட மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. எனவே வடக்கு மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் வருடமொன்றிற்கு 75 நாட்க்கள் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்து வடபகுதி மீனவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெளிவுபடுத்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் …
-
- 0 replies
- 160 views
-
-
யுத்தத்தின் போது, இராணுவத்தினருக்கு தமிழர்கள் இலக்கு அல்ல மேனகா மூக்காண்டி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, புலிகள் அமைப்பினரால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான மனிதாபிமானப் போரையே படையினர் மேற்கொண்டிருந்தனர். தவிர, பொதுமக்களைக் கொன்றுதான் வெற்றிபெற வேண்டுமென்ற கொள்கையைப் படையினர் கொண்டிருக்கவில்லை என்று அரசாங்கம், நேற்று அறிவித்தது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, 40 ஆயிரம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டதாக, யுத்தத்தின் இறுதி மூன்றாண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராகவும் இலங்கையின் யுத்தம் பற்றி வ…
-
- 3 replies
- 388 views
-
-
நாளை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது. நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றங்களைஎதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மத்திய மலைநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் காலி,மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனதெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. http://ww…
-
- 0 replies
- 283 views
-
-
திருட்டு குழுவின் உறுப்பினர் அவர்களை போல் ஏனையவர்களும் திருடுகிறார் என்று கருதி மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். தனது அமைச்சில் இன்று நடைபெற்ற ஊழியர் நலன்புரி நிதியத்தின் மூலம் வெளிநாடுகளில் பல்வேறு விபத்துக்களில் சிக்கி ஊனமுற்றோர் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே , அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு எதிராக இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டு இருப்பதாக கூறியிருந்தார். இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்ச…
-
- 0 replies
- 361 views
-
-
அனுராதபுரத்தில் தமது வாடிக்கையாளர்களக்கு பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார். தனது வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தப் பெண் பாலியல் தொழிலாளி இவ்வாறு மதுபான விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார். அனுரதபுரத்தைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு இவ்வாறு விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளது. அனுராதபுர நகரின் வர்த்தக கட்டடமொன்றில் இந்த விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளது. தமது பிறந்த நாளை முன்னிட்டு விருந்துபசாரம் வழங்குவதாக குறித்த பெண் பாலியல் தொழிலாளி தெரிவித்துள்ளார். இளம் மற்றும் மத்திய வயதுடைய வர்த்தகர்களும் அவர்களுடைய நண்பர்களும் இந்த விருந்துபசாரத்தில் பங்கேற்றுள்ளனர். …
-
- 0 replies
- 286 views
-
-
உள்ளூராட்சி சபை தேர்தல்களை கட்டம்கட்டமாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. எல்லை நிர்ணயப் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் முதற்கட்டமாக தேர்தல் நடத்துவதற்கு அரசு பச்சைக்கொடி காட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் எல்லை நிர்ணயம் முடிவுற்றிருக்கும் வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல்களை விரைவில் நடத்த முன்னேற்பாடுகளைச் செய்ய ஆயத்தங்கள் நடந்துவருவதாக அறிய முடிகின்றது. கூட்டு எதிர்க்கட்சிகளில் செல்வாக்கு குறைந்த மாவட்டங்களிலும் அரசுக்கு ஆதரவு - செல்வாக்கு - மிகுந்த பிரதேசங்களிலும் பகுதிபகுதியாக உள்ளூராட்சித் தேர்தல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன என்றும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறத…
-
- 0 replies
- 223 views
-
-
அயதுல்லா - பிரதமர் சந்திப்பு ஈரான் நாட்டின் மதத்தலைவர் அயதுல்லா ஹுசையின் கொமேனி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார்.
-
- 1 reply
- 218 views
-
-
உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு அதிகாரமில்லை மாகாண சபை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாகாண முதலமைச்சருக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது ?, அதற்கு உரிய சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றனவா ? அவ்வாறு இருந்தாதல் அதனை எனக்கு காட்டுங்கள் , என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் சபையில் ஆவேமாக கருத்து தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அந்த அமர்வில் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பில் பல்வேறுவகையான குற்றசாட்டுகள் தனக்கு வந்துள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை நடாத்த இரு ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஒரு ஓய்வு பெற்ற நிர்வாக சேவை…
-
- 3 replies
- 222 views
-
-
நாட்டிலுள்ள சுதந்திரமான ஊடக நிலையை சாதகமாக பயன்படுத்தி ஊடக தர்மத்துக்கு புறம்பாக அரசாங்கத்துக்கும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தலைவர்களுக்கு எதிராக பொய் செய்தி வெளியிடும் ஊடகங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலங்சூரிய, வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பொய் செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக, தற்போது நடைமுறையில் உள்ள ஊடக சட்டங்கள் மற்றும் முறைமைகளுக்கு அமைய தேவையான நடவடிக்கை எடுக்க அரசாங்கத்துக்கு நேரிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=16138…
-
- 0 replies
- 281 views
-
-
வகுப்பறைக்குள் நுழைந்த அதிபரைத் தாக்கிய ஆசிரியர் -சுப்பிரமணியம் பாஸ்கரன் வகுப்பறையில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் போது, வகுப்பறைக்குள் வந்த அதிபரை, ஆசிரியர் தாக்கிய சம்பவம், மாங்குளம் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (12), குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை வகுப்பு ரீதியாக பார்வையிட்டுக் கொண்டுச் சென்ற அதிபர், கற்றல் நடவடிக்கைகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்த வகுப்பறையொன்றுக்குள் சென்றுள்ளார். இதன்போது அங்கு மாணவர்களுக்கு பாடம் கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியரே, அவ்வாறு அதிபர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்காள அதிபர், மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…
-
- 2 replies
- 362 views
-
-
'பிரபாகரன் அஞ்சினார்' 'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், துப்பாக்கி மீது எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தவர். அவர், ஆயுதங்களைக் களைவதற்கு அஞ்சியமையால், ஒவ்வொரு செயற்பாடும் தோல்வியடைந்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகள்; மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவியாகச் செயற்பட்ட தமிழினி என்றழைக்கப்பட்ட சுப்ரமணியம் சிவகாமி எழுதியுள்ளார். அவர் மரணிப்பதற்கு முன்னர் எழுதிய இரண்டு புத்தகங்களிலேயே மேற்கண்டவாறு எழுதியுள்ளார். ஒரு கூர்வாளின் நிழலில், போர்க்காலம் ஆகிய இரண்டு புத்தகங்களையே அவர், எழுதியுள்ளார்.அவ்விரு புத்தகங்களின் வெளியீட்டு விழா, கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன…
-
- 95 replies
- 10.6k views
- 2 followers
-
-
அமிர்தலிங்கத்தின் 27ஆவது நினைவுதினம் -எஸ்.கர்ணன் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அ.அமிர்தலிங்கத்தின் 27ஆவது நினைவுதினம், இலங்கை தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை தொகுதி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (13) நடைபெற்றது. கட்சியின் பருத்தித்துறை தொகுதியின் செயலாளர் எஸ்.தீபானன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் எஸ்.குருசாமி அமிர்தலிங்கத்தின் படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை தொகுதியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். - See more at: http…
-
- 1 reply
- 234 views
-
-
அதிபா் பெருமாள் கணேசனுக்கு இழைக்கப்பட்ட அநீதி வன்மையாக கண்டிக்கதக்கது கவிஞா் கருணாகரன்:- எழுத்தாளர் பெருமாள் கணேசன், அதிபர் நியமனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த விசயம் குறிப்பிடத்தக்களவு பொதுக்கவனத்தைப் பெற்றுமுள்ளது. இருந்தும் அவருக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை. அது தொடர்பான வெளிச்சங்களும் தென்படவில்லை. இதைச் சட்டரீதியாக அணுகுவதற்கும் அரசியல் ரீதியாக நீதியான தீர்வை நோக்கிக்கி, இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கும் பலரும் முன்வந்திருப்பதாகத் தகவல். குறிப்பாக வடக்கு முதலமைச்சர்ன் விக்கினேஸ்வரனின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் முன்வந்திருக்கின்றனர். இது சமரசமா?…
-
- 1 reply
- 425 views
-
-
சர்வதேச புகழ்பெற்ற பாடகராக விளங்கும் இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் புதல்வர் அர்ஜூன் குமாரசுவாமி 2016-07-13 14:43:44 இலங்கை மத்திய வங்கி தொடர்பான சர்ச்சைகள் தீவிரமடைந்த நிலையில், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் நியமித்தார். பொருளாதார நிபுணரான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை பற்றி அறிந்தவர்கள் இப் பதவிக்கு நியமிக்கப்பட்டதை வெகுவாக வரவேற்றுள்ளனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கலாநிதி இந்திரஜித் குமாரசாமி, இலங்கை மத்திய வங்கியில் தனது தொழில்சார் வாழ்க்கையை ஆரம்பித்து பொதுநலவாய செயலகத்திலும் பணியாற்றியவர். …
-
- 0 replies
- 801 views
-
-
55பேரை ஏமாற்றிய பெண் கைது -செல்வநாயகம் கபிலன் வங்கியில் கடன் பெற்றத்தருவதாகக் கூறி, 55 பேரிடம் தலா 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்த ஊரெழு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவரை, செவ்வாய்க்கிழமை (12) இரவு கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் மற்றும் சிறுப்பிட்டி பகுதியிலுள்ள அரச வங்கியொன்றில், 5 இலட்சம் ரூபாய் கடன் பெற்றுத்தருவதாகக் கூறிய மேற்படி பெண், கடன் பெற விரும்பிய 55பேரிடம், தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்துள்ளார். இருப்பினும், உரிய கடனைப் பெற்றுக்கொடுக்காமல் ஏமாற்றுவதை உணர்ந்த பணம் கொடுத்தவர்கள், அச்சுவேலி பொலிஸ் நிலை…
-
- 0 replies
- 327 views
-
-
யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது யாழ்.செம்மணி வீதியில் வைத்து 4 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கச்சாய் வீதி சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சா பொதியினை குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் செம்மணி வீதி வழியாக யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்துள்ளார். குறித்த தகவலை அறிந்த யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பிரிவினர் இன்று புதன்கிழமை காலை செம்மணி வீதியில் வைத்து சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர் தற்போது யாழ்.பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றா…
-
- 1 reply
- 201 views
-
-
நாமலின் கையூட்டல் -மேனகா மூக்காண்டி நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதலே, ராஜபக்ஷ குடும்பம் இலக்கு வைக்கப்பட்டு காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவே, அக்குடும்பத்தினரின் குற்றச்சாட்டாக இருந்து வருகின்றது. பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவில் தொடங்கி, யோஷித ராஜபக்ஷ, பின்னர் நாமல் ராஜபக்ஷ என்ற வரிசையில், சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு அக்குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு, இந்த அரசாங்கத்தினதும் அமைச்சர்களினதும் தெரிவாகவே இடம்பெறுவதாக, கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு சிறையிலடக்கப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வ…
-
- 0 replies
- 245 views
-
-
மஹிந்த - சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்உ ள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்றுக் காலையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதியக் கொள்கையுடன்கூடிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்குமாறு, மஹிந்தவிடம் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmirror.lk/176936/மஹ-ந-த-…
-
- 0 replies
- 189 views
-
-
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு: இரகசிய வாக்குமூலங்களை தர மறுப்பு - எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், நீதிமன்றத்தில் தனியாக வழங்கிய வாக்குமூலங்களை குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு வழங்க முடியாது என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் கூறினார். வன்புணர்வுக்குட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட, புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 'இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் இடம்பெற்ற வழக்கு விசாரணை தொடர்பான அறி…
-
- 0 replies
- 293 views
-
-
இலங்கையின் வடபகுதியில் 2018ஆம் ஆண்டு இராணுவத்தினர் இருக்கமாட்டார்கள் என வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார். அப்படியானால் அவர்கள் வெளியேறும்போது விகாரைகளையும் கொண்டு செல்லட்டும் என வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், முல்லைத்தீவானது பாரம்பரிய தமிழ்க் கிராமம் ஆகும். யுத்தத்திற்கு முன்பு எந்தவொரு இடத்தில் பௌத்த அடையாளங்கள் இருந்ததில்லை. தற்போது இராணுவத்தினரால் ஒன்பது விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் இது இன்னமும் அதிகரிக்கப்படலாம். நல்லிணக்கம் எனப் பெரிதாகக் கூறிக்கொண்டு மதத்திணிப்பைச் செய்கின்றார்கள். கொக்கிளாயில் பௌத்தர்கள் இல்லை. சிறீ சம்போதி மகா விகாரை தனியார் காணியில் முளைத்துள்ளது. நாயாறு நீராவிய…
-
- 2 replies
- 326 views
-
-
இந்தியாவிலிருந்து நாடு திரும்பினர் 35 அகதிகள் இலங்கை தமிழ் அகதிகள் 35 பேர் நேற்று இந்தியாவிலிருந்து நாடுதிரும்பியுள்ளனர். 16 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரே தமது சுய விருப்பின் பேரில் நாடு திரும்பியுள்ளனர். குறித்த அகதிகளுக்கான பயண ஏற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்டுள்ளது. இவர்களில் 11 ஆண்களும் 24 பெண்களும் அடங்குகின்றனர். அவர்களில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மதுரையிலிருந்து மிஹின்லங்கா விமான சேவையூடாக நேற்று மு.ப. 9.15 மணியளவிலும் ஏனைய 8 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் சென்னையிலிருந்து மிஹின்லங்கா விமானசேவையூடாக பகல் 12.05 மணியளவிலு…
-
- 1 reply
- 281 views
-
-
சி.வி. கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிப்பு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகவீனமுற்று நிலையில் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள மாகாண சபைக்கட்டடத்தில் நடைபெற்றது. அந்த அமர்வில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மின்னஞ்சல் மூலம் தனக்கு தகவல் அனுப்பி உள்ளார் என அவைத்தலைவர் தெரவித்தார். முதலமைச்சர் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளாத காரணத்தால் , முதலமைச்சரிடம் கேட்பதற்கு என மாகாண சபை உறுப்பினர் பரம்சோதியினால் முன் வைக்கப்பட்ட 14 கேள்விகளும் அடுத்த அமர்வுக்கு …
-
- 5 replies
- 357 views
-
-
சிவில் நடவடிக்கைகளில் முப்படையும் தலையிடக்கூடாது - எம்.றொசாந்த் சிவில் நடவடிக்கைகள் மற்றும் கூட்டங்களில் முப்படைகளும் தலையிடக்கூடாது என்ற தீர்மானம் வடமாகாண சபையின் இன்று செவ்வாய்க்கிழமை (12) நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் து.ரவிகரன் இந்த பிரேரணையைக் கொண்டு வந்தார். முல்லைத்தீவில் ஒரு கூட்டத்துக்குச் சென்ற கடற்படை அதிகாரிகள், இங்கு தமிழர்களின் கரைவலைப்பாடுகள் இல்லை. அனைத்தும் சிங்கள மக்களுடைய கரைவலைப்பாடுகள் என்று பொய்யான கருத்துக்களைக் கூறியுள்ளார். இதனால் சிவில் நடவடிக்கையில் இராணுவம் தலையிடக்கூடாது என ரவிகரன் கூறினார். இராணுவம் மட்டுமல…
-
- 1 reply
- 279 views
-
-
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு - செல்வநாயகம் கபிலன் கோப்பாய் பகுதியில் அமைந்துள்ள 15ஆவது தேசியப்படையணியின் ஏற்பாட்டில், கோப்பாய் கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஜந்து பாடசாலைகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான பூரண அனுசரனையினை பிரிட்டிஸ் கல்லூரி வழங்கியிருந்தது. இந்த உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (12) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 15ஆவது தேசியப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ரோஹித விதானகேவின் ஏற்பாட்டில், நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம், கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி, நீர்வேலி அத்தியார் கல்லூரி, நீர்வேலி…
-
- 0 replies
- 151 views
-