Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொறிமுறை அமைக்கப்படும் போது எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் ; அமெரிக்கா தெரிவிப்பு (ஆர்.ராம்) இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை, மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் பொறிமுறை அமைக்கப்படும் போது சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு அறிவிக்கப்படுமென பிரதான எதிர்க்கட்சியான தமிழ்தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அரசாங்கம் முன்னெடுக்கும் பொறுப்புக்கூறல் பொறிமுறையானது பொதுமக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமையவேண்டியது அவசியமானது என வலியுறுத்தியுள்ள அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் தமது பங்களிப்புக்கள் தொடருமெனவும் உறுதிபடக் கூறியுள்ளது. இலங்கைக்கு விஜ…

    • 2 replies
    • 334 views
  2. வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்கும் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூவினங்களையும் சேர்ந்த வியாபாரிகள் வவுனியா நகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனைச் சந்தைக்கு எதிரில் இருந்து வவுனியா அரச செயலகத்திற்கு பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், வவுனியா அரசாங்க அதிபரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் நிலவிய க…

    • 2 replies
    • 425 views
  3. தீர்வு வேண்டுமாயின் சமஷ்டி கோரிக்கையை தமிழர் தரப்பு கைவிடவேண்டியது அவசியம் - சம்பிக்க ரணவக்க (ஆர்.யசி) நாட்டில் நல்லிணக்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமாயின், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயின் முதலில் தமிழ் அரசியல் கட்சிகளும், குழுக்களும் தமது பிரிவினைவாத இனவாத கொள்கைகளையும் சமஷ்டி கோரிக்கையையும் கைவிட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தமிழர் தரப்பு கிடைக்காத ஒரு சமஷ்டி முறைமையினை எதிர்பார்த்து செயற்பட்டுவருகின்றது. எனினும் இலங்கையில் ஒருபோதும் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகவே சமஷ்டியை உடனடியாக கைவிட்டு ஒன்றிணைந்து எதிர்கால ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்ப…

  4. நாமலின் சகோதரர்களான யோஷித மற்றும் ரோஹித ஆகியோரும் தாய் ஷிரந்தியும், யோஷிதவின் காதலி யொஹானா ரத்வத்தே ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். யொஹானா என்பவர் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவினது மகள் எனக் கூறப்படுகின்றது.யோஷித மற்றும் யசாரா இடையிலான சம்பந்தம் முறிந்ததன் பின்பு 2013 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை யொஹானா மற்றும் யோஷித இடையிலான காதல் தொடர்வதாக சமூக வலையத்தளங்கள் சுட்டிக்காட்டுகின்றது. யொஹானாவின் பாட்டனார் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அனுருத்த ரத்வத்த எனப்படுபவர் ஆவார். அது எவ்வாறாயினும், யொஹானா சாதாரண ஆடையில் வந்திருக்காது இராணுவ ஆடையில் வந்திருந்தமை சர்ச்சைக்குள்ளாகியுள்ளதாகவே காணப்படுகின்றது. இராணுவ ஆடையினை அவ்வாறு அணிவது …

  5. மேற்குலக நாடுகள் தன்னை பழிவாங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள அவரது காரியாலத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். தனது அட்சியில், மேற்குலகத்தின் அழுத்தத்தினை எதிர்கொண்டு அவர்களின் எதிர்ப்பார்ப்புக்களை சிதைத்து, அவர்களின் கோரிக்கைக்கு அடிபணியாமல் செயற்பட்டமைக்காகவே, தான் பழிவாங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=161446&category=TamilNews&language=tamil

  6. முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் மனைவிக்கு தீ மூட்டிய கணவன், அந்த தீயில் தானும் அகப்பட்டு படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சௌந்தராஜா உதயராஜா (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார். மனைவி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இவர்கள் இருவரும், 3 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து வாழ்ந்து நிலையில் சில நாட்களாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபரின் மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கும் சென்று முரண்பட்ட கணவன், மனைவியை மாமரத்தில் தூக்கு போ…

  7. இந்திய மீனவர்களுக்கு 75 நிமிடங்களுக்கு கூட அரசாங்கம் அனுமதி வழங்காது (ப.பன்னீர்செல்வம்) இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் 75 நாட்கள் அல்ல 75 நிமிடங்கள் கூட மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. எனவே வடக்கு மீனவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் வருடமொன்றிற்கு 75 நாட்க்கள் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்து வடபகுதி மீனவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெளிவுபடுத்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் …

  8.  யுத்தத்தின் போது, இராணுவத்தினருக்கு தமிழர்கள் இலக்கு அல்ல மேனகா மூக்காண்டி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, புலிகள் அமைப்பினரால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான மனிதாபிமானப் போரையே படையினர் மேற்கொண்டிருந்தனர். தவிர, பொதுமக்களைக் கொன்றுதான் வெற்றிபெற வேண்டுமென்ற கொள்கையைப் படையினர் கொண்டிருக்கவில்லை என்று அரசாங்கம், நேற்று அறிவித்தது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, 40 ஆயிரம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டதாக, யுத்தத்தின் இறுதி மூன்றாண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராகவும் இலங்கையின் யுத்தம் பற்றி வ…

  9. நாளை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது. நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றங்களைஎதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மத்திய மலைநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் காலி,மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனதெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. http://ww…

  10. திருட்டு குழுவின் உறுப்பினர் அவர்களை போல் ஏனையவர்களும் திருடுகிறார் என்று கருதி மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். தனது அமைச்சில் இன்று நடைபெற்ற ஊழியர் நலன்புரி நிதியத்தின் மூலம் வெளிநாடுகளில் பல்வேறு விபத்துக்களில் சிக்கி ஊனமுற்றோர் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே , அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு எதிராக இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டு இருப்பதாக கூறியிருந்தார். இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்ச…

  11. அனுராதபுரத்தில் தமது வாடிக்கையாளர்களக்கு பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார். தனது வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தப் பெண் பாலியல் தொழிலாளி இவ்வாறு மதுபான விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார். அனுரதபுரத்தைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு இவ்வாறு விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளது. அனுராதபுர நகரின் வர்த்தக கட்டடமொன்றில் இந்த விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளது. தமது பிறந்த நாளை முன்னிட்டு விருந்துபசாரம் வழங்குவதாக குறித்த பெண் பாலியல் தொழிலாளி தெரிவித்துள்ளார். இளம் மற்றும் மத்திய வயதுடைய வர்த்தகர்களும் அவர்களுடைய நண்பர்களும் இந்த விருந்துபசாரத்தில் பங்கேற்றுள்ளனர். …

  12. உள்ளூராட்சி சபை தேர்தல்களை கட்டம்கட்டமாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. எல்லை நிர்ணயப் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் முதற்கட்டமாக தேர்தல் நடத்துவதற்கு அரசு பச்சைக்கொடி காட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் எல்லை நிர்ணயம் முடிவுற்றிருக்கும் வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல்களை விரைவில் நடத்த முன்னேற்பாடுகளைச் செய்ய ஆயத்தங்கள் நடந்துவருவதாக அறிய முடிகின்றது. கூட்டு எதிர்க்கட்சிகளில் செல்வாக்கு குறைந்த மாவட்டங்களிலும் அரசுக்கு ஆதரவு - செல்வாக்கு - மிகுந்த பிரதேசங்களிலும் பகுதிபகுதியாக உள்ளூராட்சித் தேர்தல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன என்றும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறத…

  13. அயதுல்லா - பிரதமர் சந்திப்பு ஈரான் நாட்டின் மதத்தலைவர் அயதுல்லா ஹுசையின் கொமேனி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார்.

  14. உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு அதிகாரமில்லை மாகாண சபை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாகாண முதலமைச்சருக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது ?, அதற்கு உரிய சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றனவா ? அவ்வாறு இருந்தாதல் அதனை எனக்கு காட்டுங்கள் , என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் சபையில் ஆவேமாக கருத்து தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அந்த அமர்வில் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பில் பல்வேறுவகையான குற்றசாட்டுகள் தனக்கு வந்துள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை நடாத்த இரு ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஒரு ஓய்வு பெற்ற நிர்வாக சேவை…

  15. நாட்டிலுள்ள சுதந்திரமான ஊடக நிலையை சாதகமாக பயன்படுத்தி ஊடக தர்மத்துக்கு புறம்பாக அரசாங்கத்துக்கும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தலைவர்களுக்கு எதிராக பொய் செய்தி வெளியிடும் ஊடகங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலங்சூரிய, வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பொய் செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக, தற்போது நடைமுறையில் உள்ள ஊடக சட்டங்கள் மற்றும் முறைமைகளுக்கு அமைய தேவையான நடவடிக்கை எடுக்க அரசாங்கத்துக்கு நேரிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=16138…

  16. வகுப்பறைக்குள் நுழைந்த அதிபரைத் தாக்கிய ஆசிரியர் -சுப்பிரமணியம் பாஸ்கரன் வகுப்பறையில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் போது, வகுப்பறைக்குள் வந்த அதிபரை, ஆசிரியர் தாக்கிய சம்பவம், மாங்குளம் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (12), குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை வகுப்பு ரீதியாக பார்வையிட்டுக் கொண்டுச் சென்ற அதிபர், கற்றல் நடவடிக்கைகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்த வகுப்பறையொன்றுக்குள் சென்றுள்ளார். இதன்போது அங்கு மாணவர்களுக்கு பாடம் கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியரே, அவ்வாறு அதிபர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்காள அதிபர், மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

  17. 'பிரபாகரன் அஞ்சினார்' 'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், துப்பாக்கி மீது எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தவர். அவர், ஆயுதங்களைக் களைவதற்கு அஞ்சியமையால், ஒவ்வொரு செயற்பாடும் தோல்வியடைந்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகள்; மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவியாகச் செயற்பட்ட தமிழினி என்றழைக்கப்பட்ட சுப்ரமணியம் சிவகாமி எழுதியுள்ளார். அவர் மரணிப்பதற்கு முன்னர் எழுதிய இரண்டு புத்தகங்களிலேயே மேற்கண்டவாறு எழுதியுள்ளார். ஒரு கூர்வாளின் நிழலில், போர்க்காலம் ஆகிய இரண்டு புத்தகங்களையே அவர், எழுதியுள்ளார்.அவ்விரு புத்தகங்களின் வெளியீட்டு விழா, கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன…

  18. அமிர்தலிங்கத்தின் 27ஆவது நினைவுதினம் -எஸ்.கர்ணன் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அ.அமிர்தலிங்கத்தின் 27ஆவது நினைவுதினம், இலங்கை தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை தொகுதி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (13) நடைபெற்றது. கட்சியின் பருத்தித்துறை தொகுதியின் செயலாளர் எஸ்.தீபானன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் எஸ்.குருசாமி அமிர்தலிங்கத்தின் படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை தொகுதியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். - See more at: http…

  19. அதிபா் பெருமாள் கணேசனுக்கு இழைக்கப்பட்ட அநீதி வன்மையாக கண்டிக்கதக்கது கவிஞா் கருணாகரன்:- எழுத்தாளர் பெருமாள் கணேசன், அதிபர் நியமனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த விசயம் குறிப்பிடத்தக்களவு பொதுக்கவனத்தைப் பெற்றுமுள்ளது. இருந்தும் அவருக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை. அது தொடர்பான வெளிச்சங்களும் தென்படவில்லை. இதைச் சட்டரீதியாக அணுகுவதற்கும் அரசியல் ரீதியாக நீதியான தீர்வை நோக்கிக்கி, இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கும் பலரும் முன்வந்திருப்பதாகத் தகவல். குறிப்பாக வடக்கு முதலமைச்சர்ன் விக்கினேஸ்வரனின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் முன்வந்திருக்கின்றனர். இது சமரசமா?…

  20. சர்வதேச புகழ்பெற்ற பாடகராக விளங்கும் இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் புதல்வர் அர்ஜூன் குமாரசுவாமி 2016-07-13 14:43:44 இலங்கை மத்திய வங்கி தொடர்பான சர்ச்சைகள் தீவிரமடைந்த நிலையில், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் நியமித்தார். பொருளாதார நிபுணரான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை பற்றி அறிந்தவர்கள் இப் பதவிக்கு நியமிக்கப்பட்டதை வெகுவாக வரவேற்றுள்ளனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கலாநிதி இந்திரஜித் குமாரசாமி, இலங்கை மத்திய வங்கியில் தனது தொழில்சார் வாழ்க்கையை ஆரம்பித்து பொதுநலவாய செயலகத்திலும் பணியாற்றியவர். …

  21.  55பேரை ஏமாற்றிய பெண் கைது -செல்வநாயகம் கபிலன் வங்கியில் கடன் பெற்றத்தருவதாகக் கூறி, 55 பேரிடம் தலா 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்த ஊரெழு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவரை, செவ்வாய்க்கிழமை (12) இரவு கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் மற்றும் சிறுப்பிட்டி பகுதியிலுள்ள அரச வங்கியொன்றில், 5 இலட்சம் ரூபாய் கடன் பெற்றுத்தருவதாகக் கூறிய மேற்படி பெண், கடன் பெற விரும்பிய 55பேரிடம், தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்துள்ளார். இருப்பினும், உரிய கடனைப் பெற்றுக்கொடுக்காமல் ஏமாற்றுவதை உணர்ந்த பணம் கொடுத்தவர்கள், அச்சுவேலி பொலிஸ் நிலை…

  22. யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது யாழ்.செம்மணி வீதியில் வைத்து 4 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கச்சாய் வீதி சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சா பொதியினை குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் செம்மணி வீதி வழியாக யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்துள்ளார். குறித்த தகவலை அறிந்த யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பிரிவினர் இன்று புதன்கிழமை காலை செம்மணி வீதியில் வைத்து சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர் தற்போது யாழ்.பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றா…

  23.  நாமலின் கையூட்டல் -மேனகா மூக்காண்டி நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதலே, ராஜபக்ஷ குடும்பம் இலக்கு வைக்கப்பட்டு காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவே, அக்குடும்பத்தினரின் குற்றச்சாட்டாக இருந்து வருகின்றது. பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவில் தொடங்கி, யோஷித ராஜபக்ஷ, பின்னர் நாமல் ராஜபக்ஷ என்ற வரிசையில், சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு அக்குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு, இந்த அரசாங்கத்தினதும் அமைச்சர்களினதும் தெரிவாகவே இடம்பெறுவதாக, கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு சிறையிலடக்கப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வ…

  24. மஹிந்த - சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்உ ள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்றுக் காலையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதியக் கொள்கையுடன்கூடிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்குமாறு, மஹிந்தவிடம் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmirror.lk/176936/மஹ-ந-த-…

  25.  புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு: இரகசிய வாக்குமூலங்களை தர மறுப்பு - எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், நீதிமன்றத்தில் தனியாக வழங்கிய வாக்குமூலங்களை குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு வழங்க முடியாது என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் கூறினார். வன்புணர்வுக்குட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட, புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 'இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் இடம்பெற்ற வழக்கு விசாரணை தொடர்பான அறி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.