ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் செயல்முறைகளில், அனைத்துலக பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் உரையாற்றிய, நெதர்லாந்து தூதுவர், ரொடெறிக் வான் ஸ்கிரேவன், “நீண்ட செயல்முறையின் ஆரம்பக் கட்டத்திலேயே சிறிலங்கா இன்னமும் இருக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளில் இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டியவை அதிகம் உள்ளன. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி என்பனவற்றை உள்ளடக்கிய இந்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். நம்பகமானது என்பதை உறுதிப்படுத்துவதற்க…
-
- 1 reply
- 409 views
-
-
மது, புகைத்தல் மற்றும் போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள்:- யாழ் நகர பிரபல பாடசாலைகளில் மது, புகைத்தல் மற்றும் போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் யாழ் மேல் நீதிமன்றம் எச்சரிக்கை யாழ் நகர்ப்புறத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் போதை வஸ்து பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பாடசாலை நேரத்தில் போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் மாணவ்கள் ஈடுபடுவதாகவும் அத்தகைய மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வியாழனன்று எச்சரிக்கை செய்துள்ளது. நூறு கிலோ கஞ்சா உடைமையில் …
-
- 4 replies
- 571 views
-
-
ஊடகத்துறை நீதித்துறையில் தலையீடு செய்கிறது. - சட்டத்தரணிகள் குற்றசாட்டு ஊடகத்துறை நீதித்துறையில் தலையீடு செய்யும் போக்கு காணப்படுவதாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் நீதிவானிடம் முறையிட்டு உள்ளனர். வரணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் , அதனை மறைக்க முயன்றவர்கள் எனும் சந்தேகத்தில் எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான இரு சட்டத்தரணிகளும் ஊடகங்கள் மீது கடுமையான…
-
- 0 replies
- 206 views
-
-
கொழும்பில் வழிதவறிய நிலையில் தெருவில் அனாதையாக நின்ற ஒரு சிறுவனை பொலிஸார் மீட்டு அனாதை இல்லத்தில் தங்க வைத்துள்ளனர். புவலோஜன் என்ற சிறுவன் இன்று மதியம் கொழுப்பில் வழிதவறி நடமாடிக்கொண்டிருந்துள்ளார். இதை அவதானித்துள்ள பொலிஸார் சிறுவனை மீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுடன் மாகொல முஸ்லிம் அனாதையில்லத்தில் தங்க வைத்துள்ளனர். குறித்த சிறுவனின் தந்தையின் பெயர் புண்ணியசீலன் எனவும் தாயின் பெயர் குணவதி எனவும் சகோதரியின் பெயர் கலா எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிறுவன் மோதரை - இப்பாவத்தயில் வசிப்பதாகவும் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றுகொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். குறித்த சிறுவன் பற்றிய விபரம் தெரிந்தவர்க…
-
- 1 reply
- 542 views
-
-
மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் கடத்தல் -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார், பள்ளிமுனை தெற்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று புதன்கிழமை (29) அதிகாலை உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்குப் பணிமனையில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி நேற்று புதன்கிழமை இரவு மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடத்தப்பட்டு காணாமல் போனவர் மன்னார் பள்ளிமுனை தெற்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.அன்ரன் டெனி (வயது 38) எனத் தெரியவந்தள்ளது. குறித்த குடும்பஸ்தர், உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்குப் பணிமனையில் கடமையாற்றி வந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30க்கு ஆலய பங்குப் பணி…
-
- 4 replies
- 525 views
-
-
மாணவர்கள் உயர்ச்சி பெற உங்கள் கடமைகளைத் தொழிற் திறனுடன் ஆற்றுங்கள்: புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களிடம் சி.வி.கோரிக்கை. - குளோபல் தமிழ் செய்தியாளர் யாழ்ப்பாணம் வடபகுதியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக எமது பகுதியிலிருந்த கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியமையினாலும் ஓய்வு பெற்றமையினாலும் ஏற்பட்ட வெற்றிடங்கள் நிரப்பப் படாமையினால் எமது மாணவர்கள் கணித, விஞ்ஞான, ஆங்கிலக் கல்வியைப் பெறுவதில் இடர்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கணித , விஞ்ஞான மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் வைபவம் இன்று காலை யாழ்.இந்து மகளீர் கல்லூரியில் நடைபெற்றது…
-
- 0 replies
- 313 views
-
-
சர்வதேச நீதிபதிகளைக்கொண்ட விசாரணையை அரசாங்கத்திடம் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது : தமிழர் தரப்பு பிரதிநிதிகள் ஜெனிவாவில் சுட்டிக்காட்டு (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிபதிகளை உள்ளக பொறிமுறையை உள்ளீர்க்கும் விடயத்தில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. எனவே அரசாங்கம் உள்ள விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கி நீதி வழங்கும் என ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என ஜெனிவாவில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள், புலம்பெயர் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலதரப்பட்டோரும் வலியுறுத்தினர். ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உப குழுக்கூட்டத்திலேயே இந்த கருத்துக்கள் முன்வைக்கப…
-
- 0 replies
- 204 views
-
-
வடக்கில் காணிகளை விடுவிக்கும் அரசு முல்லைத்தீவில் அபகரிக்கின்றது :ஜெனிவாவில் வடக்கு மனித உரிமை அமைப்பு தெரிவிப்பு (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) அரசாங்கம் வடக்கில் காணிகளை விடுவித்துவிட்டு முல்லைத்தீவு பகுதிகளில் காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டுவருகின்றது. அத்துடன் வடக்கில் இராணுவத்தினரின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து செல்கின்றது என்று வடக்கு மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி டி.பாலமுரளி தெரிவித்தார். ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உப குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடக்கு மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி டி.பாலமுரளி உரையாற்…
-
- 0 replies
- 206 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் நிறைவடைந்தது (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஜெனிவாவில் கடந்த மூன்று வாரகாலமாக நடைபெற்றுவந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் இன்று நிறைவடைந்தது. கடந்த மாதம் 13 ஆம் திகதியிருந்து இன்று ஜூலை மாதம் முதலாம் திகதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெற்றது. இதன்போது பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கூட்டத் தொடர் முழுவதும் ஆராயப்பட்டது. அத்துடன் இலங்கை மனித உரிமை நிலைமை குறித்த வாய்மூல அறிக்கையும் இம்முறை மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் வெ ளியிடப்பட்டது. மேலும் இலங்கைக்கு சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர பேரவையில் உரையாற்றியதுடன் இலங்கை விவகாரத்தை மு…
-
- 0 replies
- 326 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் ஆட்சியமைக்க சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பழிவாங்கும் தேவையே அவருக்கு இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டது கட்சிக்கு பலமானது. மகிந்தவின் சக்திகளுக்கு மீண்டும் நாட்டில் இடம் கிடைக்காது. இதனை தேர்தல் ஒன்றில் கண்டுகொள்ள முடியும். அதேவேளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வீதிகளை நிர்மாணிக்க எனக் கூறி, தேசிய சேமிப்பு வங்கி 28 பில்லியன் ரூபாவை கடனாக பெற்று அதனை வேறு பணி…
-
- 0 replies
- 238 views
-
-
இலங்கையின் சமகால தேசிய அரசாங்கத்தில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், நல்லாட்சி அரசாங்கம் தொடருமா என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்டகால போராட்டத்தின் பின்னர் அதிகாரத்தை பெற்றிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனிப்பெரும் கட்சியின் கீழ் அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவு பட்டு பலவீனம் அடைந்துள்ள நிலையில், கூட்டு எதிர்க்கட்சியினரின் ஆதரவை பெற்றுக்கொள்ள பிரதமர் முயற்சிகளை எடுத்துள்ளார். இதன்மூலம் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி, ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் அரசாங்கத்தை அமைப்பது அவரின் நோக்கமாகும். இதன்…
-
- 0 replies
- 267 views
-
-
மாணவி மீது துஷ்பிரயோகம் ; 5 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு ( மயூரன் ) வரணிப் பகுதியிலுள்ள பாடசாலையில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றசாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களில் 5 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தினார் எனும் குற்றசாட்டில் ஆசிரியர் ஒருவரும் அந்த குற்றத்தை மறைக்க உதவியவர்கள் எனும் குற்றத்தில் குறித்த பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியைகள் உட்பட எட்டு பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு இருந்தனர். அதில் நேற்று முன்தினம் அதிபர் மற்றும் …
-
- 0 replies
- 266 views
-
-
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணம் முழுவதையும் உள்ளடக்கி 15 ஆண்டுகள் இலக்குடன் 44 பில்லியன் அமெரிக்க டொலரில் மேற்கொள்ளும் பெருநகர அபிவிருத்தித் திட்டத்திற்குள் இந்தியாவின் உயர் மட்ட நிறுவனங்களான டாடாஸ் (Tatas) மற்றும் இன்போசிஸ் (Infosys) ஆகியவற்றை உள்ளீர்க்க சிறிலங்கா விருப்பம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ‘டாடாஸ் ஏற்கனவே இங்கு செயற்படுகின்றது. இந்திய வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் தொழிற்றுறை சம்மேளனங்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு இந்திய அரசாங்கத்திடம் நாங்கள் கோரியுள்ளோம். ஏற்கனவே நாங்கள் தென்கொரியா மற்றும் ஜேர்மனியுடன் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ள…
-
- 0 replies
- 385 views
-
-
மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமன விடயத்தில் தேசிய அரசாங்கத்துக்குள் பிளவு என்ற அடிப்படையில் கொழும்பின் செய்தித்தாள்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய ஆளுநராக தமது சிரேஸ்ட ஆலோசகர் ச்சரித்த ரத்வத்தை நியமிக்கவேண்டும் என்று கோருகின்ற நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கியின் உதவி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை புதிய ஆளுநராக நியமிக்கவேண்டும் என்று தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இரண்டு தலைவர்களுக்கும் இடையில் இன்னும் முரண்பாடு தீர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமையன்று மத்திய வங்கிக்கு விஜயம் செய்த, ஜனாதிபதி அங்கு நந்தலாலின் பெயரை புதிய ஆளுநர் என்ற அடிப்படையில் கு…
-
- 0 replies
- 340 views
-
-
திருகோணமலை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் 1983ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு படையினரால் சிறிய பாதுகாப்பு சோதனைமுகாமாக பயன்படுத்தப்பட்டு வந்த இடங்களில் இருந்து படையினர் அகன்றுள்ளனர். குச்சவெளி பிரதேசத்தில் புல்மோட்டை பிரதான வீதியிலுள்ள சாம்பல்தீவு, முச்சந்தி, நிலாவெளி மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தனியார் காணிகளிலும் பொது இடங்களிலும் பரிசோதனை கூடங்களை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தி வந்தார்காள். தற்போது குறித்த சோதனை முகாம்கள் இருந்த இடங்களின் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இடங்களிலிருந்து படையினர் அகன்று பழைய சோதனை முகாம்கள் வெறிச்சோடிக் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு முகாம்கள் அகற்றப்பட்டதால் பிரதேச மக்கள் அ…
-
- 0 replies
- 374 views
-
-
இலங்கையில் பணம் படைத்த உயர் அந்தஸ்துள்ளவர்கள் ஆண் பாலியல் தொழிலாளர்களை நாடுவதாகவும் இதனால் ஆண்களுக்கு எயிட்ஸ் நோய் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். சமூதாயத்தில் உயர் அந்தஸ்த்திலுள்ள பலர் ஓரின சேர்க்கையாளர்களின் சேவையை பெற்றுகொள்கின்றனர். இந்நிலைமை தற்போது நகர்புறங்களில் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் ஆண் பாலியல் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் எயிட்ஸ் நோயாளர்களினும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=160598&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 442 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்கு முன்னர் எந்த பௌத்த விகாரையும் இருந்திருக்காத நிலையில் தற்போது, 9 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். மாவட்டத்திலுள்ள அரச காணிகள் மற்றும் அடாத்தாகப் பிடித்துள்ள தனியார் காணிகளிலேயே இந்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாங்குளம், வட்டுவாகல், ஒட்டுசுட்டான், கொக்கிளாய், மண்ணாகண்டல், சமளம்குளம், புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் மற்றும் கோப்பாபுலவு ஆகிய இடங்களில் இந்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மாங்குளம் மற்றும் கோப்பாபுலவு விகாரைகள் பெரிய விகாரைகள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=160601&category=Ta…
-
- 0 replies
- 429 views
-
-
யாழ்ப்பாணத்தில் களிமண் சிற்பப் பயிற்சி நெறி திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள களிமண் சிற்ப பயிற்சிநெறி, இனிவரும் காலங்களில் தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நடைபெறுமனெ அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியில் இப்பயிற்சி நெறி ஆரம்பிகப்பட்டுள்ளது. திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடம் வடமாகாணத்தின் முதலாவது ஓவியக்கூடமாக யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டு மூன்றாவது ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதன் முதலாவது சான்றிதழ் பயிற்சி நெறியாக இப்பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி நெறியின் ஆரம்ப வைபவம் திருமறைக் கலாமன்றத்தின் ஊடக இணைப்பா…
-
- 0 replies
- 254 views
-
-
மீள்குடியேறவுள்ள மக்களுக்கு வெடிபொருள் விழிப்புணர்வு -செல்வநாயகம் கபிலன் வலிகாமம் வடக்கில் கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து 25ஆம் திகதி விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிடும் மற்றும் காணிகளை துப்பரவு செய்யும் மக்களுக்கு வெடிபொருட்கள் அபாயம் தொடர்பான விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகின்றது. சொன்ட் மற்றும் யூனிசெப் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால், பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டு, இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகின்றது. காணிகளை துப்பரவு செய்யும்போது சந்தேகத்துக்;கிடமான பொருட்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும், அதனை தொடவே, உரசவோ கூடாது, மற்றும் குப்பைகளுக்கு தீ மூட்டும்போது பொதுவாக…
-
- 0 replies
- 238 views
-
-
ஆர்.பி.ஜி ரக ஷெல்கள் மீட்பு எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி, கண்டாவளை சுண்டிக்குளம் காட்டுப் பகுதியிலிருந்து ஆர்.பி.ஜ ரக ஷெல்கள் நான்கை பொலிஸார் நேற்று (30) மீட்டுள்ளதுடன் நீதவானின் உத்தரவுக்கமைய அவற்றை செயலிழக்கச் செய்துள்ளனர். மேற்படி பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/175989/ஆர-ப-ஜ-ரக-ஷ-ல-கள-ம-ட-ப-#sthash.tPytccAX.dpuf
-
- 0 replies
- 226 views
-
-
சகல விதமான பீடைகொல்லிகளையும் நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கும் விநியோகம் செய்வதற்கும் தடைவிதிக்குமாறு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். பீடைக்கொல்லி, கிருமிநாசினி மற்றும் இரசாயன பொருட்களை அதிகளவு பயன்படுத்துவதன்மூலம் மக்களின் சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கிளைபோசிட் பீடைக்கொல்லி போன்ற சகல விதமான பீடைகொல்லிகளையும் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் இறக்குமதி செய்ய தடைவிதிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சிறீலங்கா மங்கள் சுகதேகிகளாக வாழ்வதற்கு சிறீலங்கா அதிபரால் பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாகவே பீடைகொல்லிக்குத் தடைவிதி…
-
- 6 replies
- 738 views
-
-
Special interview with Gajendrakumar Ponnambalam for Athavan TV Special interview with Gajendrakumar Ponnambalam for Athavan TV (part 02)
-
- 0 replies
- 289 views
-
-
ரவி நாடு திரும்பிய பின்னரே புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார்..! ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாடு திரும்பிய பின்னரே இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது. நாணய சபையின் சட்டத்தின் பிரகாரம் புதிய ஆளுநர் ஒருவர் நிமிக்கப்பட வேண்டுமாயின் நிதியமைச்சரின் ஆசோசனையை கட்டாயம் பெறவேண்டும். இதற்கமைய நிதியமைச்சர் நாடுதிரும்பிய பின்னரே புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் எதிர்வரும் 4 ஆம் திகதி நாடு திரும்புவார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/8376
-
- 0 replies
- 345 views
-
-
ஆட்கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கையை அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது: ஆட்கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கையை அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பலவந்த தொழில் மற்றும் பாலியல் நடவடிக்கைகளுக்காக ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் கடத்தப்படும் நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகள், தென்கிழக்காசிய மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்கள் பலவந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது. தொழில் முகவர் நிறுவனங்களுக்கு …
-
- 0 replies
- 168 views
-
-
100 இலங்கை அகதிகள் நியூசிலாந்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தமை அம்பலம்: 100 இலங்கை அகதிகள் படகு மூலம் நியூசிலாந்திற்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. தமிழக கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் இந்த முயற்சியை முறியடித்துள்ளனர். ஈ.பாலஜீ மற்றும் ஆர்.யுவகுமார் ஆகிய இருவரிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. கண்ணியாகுமாரி மாவட்டத்திலிருந்து 100 இலங்கை தமிழ் அகதிகளை படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப…
-
- 0 replies
- 556 views
-