Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு, கிழக்கில் கைது செய்யும் சூழல் இருக்கிறதா: அடைக்கலநாதன் கேள்வி அழகன் கனகராஜ் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்படுவது தொடர்பில் அரசாங்கம் தெளிவாகச் சொன்னால் உகந்ததாக இருக்கும் என்று தெரிவித்த நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மற்றும் கிழக்கில் கைது செய்வதற்கான சூழல் இருக்கின்றதா என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரினார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை (04) இடம்பெற்ற நுண்நிதியளிப்புச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்க…

  2. மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது, சாணாக்கிய இராஐபுத்திரன் என்ற கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் ஐனாதிபதி மகிந்தராயபக்‌ஷவின் விசுவாசியாக ஐக்கியமக்கள் சுதந்திரகூட்டமைப்பில் போட்டியிட்டு 549வாக்குகளை பெற்று படுதோல்வியைதளுவிக்கொண்ட களுவாஞ்சிகுடியை சேர்ந்த சாணாக்கியன் என்பவருக்கு நல்லாட்சி ஐனாதிபதியால் வெல்லாவெளி,பட்டிப்பளை ஆகிய இரண்டு பிரதேச செயலக பிரிவிலும் பிரதேச ஒருங்குணைப்பு இணையத் தலைவர் பதவி க்கான நியமனக்கடிதம் கடந்த மேதினத்தில் வழங்கப்பட்டுள்ளது, ஏற்கனவே வெல்லாவெளிபிரதேச்செயலகபிரிவில் தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசன் பிரதி அமைச்சர் அமிர்அலி,இராஐங்க…

    • 0 replies
    • 369 views
  3. பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிதடி வீடியோ இதோ! நேற்று முன்தினம் (03) பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க மீது எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கருத்து வௌியிட்ட போதே, பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இது தொடர்பான காணொளியை கீழே காணலாம். http://tamil.adaderana.lk/news.php?nid=79514

    • 3 replies
    • 1.5k views
  4. பாராளுமன்ற கைகலப்பு : மோதலில் ஈடுபட்ட எம்.பி.க்கள் இடைநிறுத்தம் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிரடி தீர்மானம் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற குழப்பநிலை தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் களுத்­துறை மாவட்ட பாரா­ளுமன்ற உறுப்­பினர் பாலித்த தெவரப்­பெ­ரும மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கம்­பஹா மாவட்ட எம்.பி. பிர­சன்ன ரண­வீர ஆகி­யோ­ருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் ஒரு வாரத்திற்கு பங்கேற்க முடியாது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/6010

  5. யாழில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குழுவின் தலைவர் கைது: நகைகளும் மீட்பு (பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வீடுடைப்பு முகம் மறைத்து வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் இன்று (05) கைது செய்துள்ளதுடன் பெருந்தொகையாக தங்க நகைகளையும் மீட்டுள்ளனர். கடந்த ஒரு மாதங்களிற்கு மேலாக இது தொடர்பாக சுன்னாகம் பகுதியில் 15 முறைப்பாடுகளும் தெல்லிப்பழை பகுதியில் மூன்று முறைப்பாடுகளும் அச்சுவேலி பகுதியில் நான்கு முறைப்பாடுகளும் கோப்பாய் பகுதியில் ஒரு முறைப்பாடும் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றிருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டார். - S…

  6. கட்டி­பு­ரண்டு சண்­டை­யிட்­டனர், ஒருவருக்கு இரத்த வடிந்தது, சிலருக்கு முகம் வீங்கியது, ஆடைகள் கலைந்தன : பாராளுமன்றத்தில் நடந்தது என்ன? (முழு விபரம்) (ப.பன்­னீர்­செல்வம்,- ஆர்.ராம்) முன்னாள் ஜனா­தி­ப­தியும், தற்­போ­தைய குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­ப­க் ஷவின் இரா­ணு­வ பாது­காப்பு நீக்­கப்­பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு அணி­யி­ன­ர் இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சையையடுத்து அவர்களுக் கும் ஆளும் தரப்­புக்­கு­மி­டையே ஏற்­பட்ட வாய்த்த­ர்க்கம் திடீ­ரென கைக­லப்­பாக மாறி­யது. இதன்­போது ஆளும்கட்சி மற்றும், மஹிந்த ஆதரவு அணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபா மண்­ட பத்தின் மத்­தியில் ஒரு­வ­ரை­யொ…

    • 6 replies
    • 948 views
  7. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு பிரஜாவுரிமை : பாராளுமன்றத்தில் அறிவித்தார் பிரதமர் (ப. பன்னீர்செல்வம், ஆர். ராம்) இந்தியாவில் உள்ள அகதிகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.என். டக்ளஸ்…

    • 1 reply
    • 494 views
  8. :- எங்களுடைய நிபுணர் குழு அறிக்கையில் எந்த இடத்திலும் சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலக்கவில்லை என்று குறிப்பிடப்படவில்லை. இதை நாம் மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றோம். நிபுணர் குழு ஆராய்ந்த விடயங்களில் கண்டுபிடிக்கப்பட்டது என்னவென்றால் எண்ணெயில் இருக்கின்ற ஆபத்தான நச்சு மாசுக்கள்தான் நீரில் கலக்கவில்லை என்பதே. மாறாக எண்ணெய் கலக்கவில்லை என்று நிபுணர் குழு எந்த முடிவையும் எடுக்கவில்லை என வட மாகாண விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் அடித்துக் கூறுகின்றார். இன்று புதன் கிழமை 04-05-2016 கிளிநொச்சியில் வடக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்த பின்னர் சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பில் நக…

    • 0 replies
    • 265 views
  9. திருகோணமலைப் பிரதேசத்தில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் திட்டமிடல் மீளாய்வு ஒன்றினை நடாத்துவதற்கு சிறீலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் கடந்த புதன் கிழமை அமைச்சரவையில் சிறீலங்காப் பிரதமரால் முன்வைக்கப்பட்டது. விவசாயம் மற்றும் மின்சக்தி கேந்திரமாகவும், உற்பத்தி மற்றும் சுற்றுலா வலயமாகவும் திருகோணமலையை அபிவிருத்தி செய்யமுடியும் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன்காரணமாக திருகோணமலையை பெருநகரத் திட்டமாக வடிவமைப்பதற்கு நன்கு அனுபவம் பெற்ற வெளிநாட்டு நிறுவனமொன்றின் உதவியைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. http://tamilleader.com/

    • 0 replies
    • 307 views
  10. நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு 4 வாரங்களுள் கடவுச்சீட்டு அழகன் கனகராஜ் இந்தியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கின்ற அகதிகளுக்கு, இரண்டு வார காலத்திலிருந்து நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்தார். பிரதமரிடம் கேள்விகளைக் கேட்கும் நேரத்தில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தொடுத்த கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, பிரதமர் ரணில், மேற்கண்டவாறு பதிலளித்தார். பிரதமர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், 'குழப்பங்கள் காரணமாக இந்தியாவுக்கும் ஏனைய நாடுகள…

  11. கேரள கஞ்சா 120 கிலோ கிராமுடன் இந்திய பிரஜைகள் 5 பேர் கைது கேரள கஞ்சா 120 கிலோ கிராமுடன் இந்திய பிரஜைகள் 5 பேர் மன்னார் - சிலாவத்துறை கடற்பரப்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் பின் கடற்படையினர் இவர்களை சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி இன்னும் மதிப்பிடப்படவில்லை. http://www.virakesari.lk/article/6004

  12.  'பிழைக்கு முதற்காரணம் கோழியா, முட்டையா'? நாடாளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், வாக்குகளைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்துக்கு வந்த உறுப்பினர்களுக்கா அல்லது வாக்களித்த மக்களுக்கா தண்டனை வழங்கவேண்டும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பினார். ஹொரனை றோயல் கல்லூரியில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'மக்கள், தங்களுடைய வாக்குகளை, நல்ல வளங்களைக் கொண்ட நாட்டைக் கட்டியெழும்பும் நோக்கிலேயே பயன்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்துக்குப் போனால் என்…

  13. சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு என்பதுதான் இன்றைய சூழலின் பிரதான பேசு பொருள். அவ்வாறானதொரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை பல்வேறு தரப்பினர்களும் மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கம் ஒரு புறமாகவும் அரசுசாரா நிறுவனங்கள் இன்னொரு புறமாகவும் இயங்கிவருகின்றனர். ஆனால், இன்னொரு இனத்துடன் நல்லிணக்கத்தை காண்பதற்கு முன்னர் அது நமக்குள் இருக்கிறதா என்பதைக் காண்பது அவசியம். அந்த அடிப்படையிலேயே சில விடயங்களை இப்பத்தி முன்கொண்டுவர முயல்கிறது. இது எவர் மீதான விமர்சனமும் அல்ல. எங்கள் அரசியல் போக்கில் உள்ளார்ந்து காணப்படும் ஒரு பலவீனம் பற்றியது மட்டுமே! இது அனைவர் மீதுமான விமர்சனம். ஒரு சமூகம் தன்னுடைய பலவீனத்தை விளங்கிக் கொள்ள மு…

    • 0 replies
    • 690 views
  14. கோதபாய ராஜபக்ஸ மீது புலிகள் தாக்குதல் நடத்தவில்லை? – சரத் பொன்சேகா தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது என பீல்ட் மார்ஸல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன் போது முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா ஆற்றிய உரையின் தமிழ் வடிவம் கீழே தரப்பட்டுள்ளது. 'போர் இடம்பெறாத காலத்தில் காவல்துறையினரின் பணிகளை இராணுவத்தினர் மேற்கொள்ளத் தேவையில்லை, எனவே மஹிந்த ராஜபக்ச என்ற …

    • 4 replies
    • 944 views
  15. அமெரிக்காவில் பசில் ராஜபக்ஸவின் இல்லத்திற்கும் இலங்கை இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது? கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவில் பெசில் ராஜபக்ஸவின் இல்லத்திற்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. என்ன காரணத்திற்காக அமெரிக்காவில் அமைந்துள்ள பெசில் ராஜபக்ஸவின் இல்லத்திற்கு இரண்டு இலங்கை இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர் என்ப…

  16. “வடக்கில் உள்ள இராணுவம், சமாதான இராணுவம், அபிவிருத்திக்கான இராணுவம், ஒற்றுமைக்கான தூதர்கள்" என்கிறார் வடக்கு ஆளுனர்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- தினரை அனுப்புவதல்ல நோக்கம் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து கிளிநொச்சி பூநகரி விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட கட்டிடம் ஒன்றினை திறந்து வைத்துவிட்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் மற்றும் கல்விச் செயற்பாட்டில் இராணுவம் இணையக்கூடாது என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றதே இதுசம்பந்தமாக உங்களது கருத்து…

  17. பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவம் தொடர்பில் அங்குள்ள 225 பேருக்கும் பொறுப்புள்ளது – ஜனாதிபதி inShare பாராளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஹொரணையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். பின்னர், அங்கு உரையாற்றிய ஜனாதிபதி நேற்று (03) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பின்வருமாறு விளக்கமளித்தார். நேற்று பாராளுமன்றத்தில் நிகழ்ந்த விடயத்தை நோக…

  18. புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் திருப்பம்: குளோபல் தமிழ்ச்செய்தியாளர் யாழ்ப்பாணம் சந்தேக நபர்கள் 9 பேரையும் 11 ஆம் திகதி மேல் நீதிமன்றில் ஆஜராக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி முழு நாட்டையும் பரபரப்படையச் செய்திருந்த புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் புதனன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்த…

  19. முட்டுக்கட்டைகளுக்கு மத்தியிலும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் வரும் : சுவாமிநாதன் (ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) வடக்கில் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு பல முட்டுக்கட்டைகள் காணப்படுகின்றன. எனினும் நாம் அதனை தொடர்ந்தும் முன்னெடுப்போமென சிறைச்சாலைகளின் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று புதன்கிழமை 23 இன் கீழ் இரண்டு என்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ்மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார திட்டங்கள், அபி…

  20. வடமாகாணசபை தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம்: அண்மையில் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மேல் மாகாணசபையின் உறுப்பினர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்கவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம்;, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டம் உள்ளட்ட திர்மானங்களை வலியுறுத்தி வடக்கு மாகாண சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைத்தல் மற்றும் சமஸ்டி ஆட்சி முறைமையை வழங்குதல் ஆகியன ஆபத்தானவை என நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். மொழியை அடிப்படையாகக் கொண்ட …

  21. "தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சமஷ்டி தொடர்பில் தென்பகுதி மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள். இதன் மூலமாகவே தென்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க முடியும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்திய கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். இதன்போதே, இரா.சம்பந்தனிடம் மேற்படி கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந…

    • 0 replies
    • 310 views
  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தை சீர்குலைப்பது யார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் தமிழரசுக்கட்சி நடத்திய மேதினக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பிரதம பேச்சாள ராகக் கலந்துகொண்டார். அவருடைய உரையில் அவர் வலியுறுத்திய ஓரிரு விடயங்களில் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒற்றுமையாகச் செயற்படுமாக இருந்தால் 2017ஆம் ஆண்டு புதியதோர் சூழலில் மேதினத்தைக் கொண்டாட முடியும் என்று கூறியுள்ளார். மேதினத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் மூன்று நாட்கள் பயணத்தை மேற்கொண்டு யா…

    • 0 replies
    • 299 views
  23. ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி உதயம் -கவிதா சுப்ரமணியம் ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி, இன்று புதன்கிழமை அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரபா கணேஷன், ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/171388/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE-#sthash.TpTOCU2a.dpuf

  24. தொடருமா புலி வேட்டை? கருணாகரன் புலிகள் மீண்டும் கைது செய்யப்படுகிறனர். ஆனால், இது முன்னாள் புலிகள். அதிகாரம் இல்லாத, கட்டமைப்பு இல்லாத, தலைமை இல்லாத, ஒருங்கிணைப்பும் திட்டங்களுமில்லாத புலிகள். மட்டுமல்ல, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போராளிகள். போரின் பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்து, விசாரணைகள், புனர்வாழ்வு நடவடிக்கைகளை எல்லாம் முடிந்து, இயல்பு வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களே கைதாகியிருக்கிறார்கள். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட தளபதியாக இருந்த ராம், சார்ள்ஸ் அன்டனி படையணியின் தளபதியாக இருந்த நகுலன், புலனாய்வுத்துறையில் செயற்பட்ட கலையரசன் உட்பட பலர், கடந்த வாரங்களில் கைதாகியிருக்கின்றனர். இந்தக் கைதுகளுக்கான காரணங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.