Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சோலைகளை பாலைவனங்களாக்கும் அனல் மின் திட்டங்கள் இலங்கைக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பதை ஆராய வேண்டும். ஏனென்றால் முழு உலகமும் இன்று அனல் மின் திட்டங்களை முழுமையாக தடை செய்கின்ற நிலையில் இலங்கை அந்த மின் திட்டத்தை உள் வாங்குகின்றது என்றால் நிச்சயம் மர்மமான விடயங்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும் வருடத்தில் பெரும்பாலான நாட்கள் செயலிழந்து போகும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பாதிப்புகளையே அந்த மக்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இலங்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கையில் முழு நாட்டிற்கும் மரக்கறிகளை வழங்கிய நுரைச்சோலையின் பனையடி மற்றும் நரக்கள்ளி பகுதிகளை சார்ந்த சுமார் 400 குடும்பங்கள் இன்று விவசாயத்தை தொலைத்து விட்டுள்ளனர். நுரைச்சோலை அனல் மின் …

    • 0 replies
    • 342 views
  2. யாழில் மட்டுமல்ல மன்னாரிலும் வெடிபொருட்கள் மீட்பு நேற்று (30)புதன் கிழமை மாலை ஒரு தொகுதி வெடி பொருட்களை மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குஉபட்ட இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியின் பின் பகுதியில் இருந்து இலுப்பைக்கடவை பொலிஸார் மீட்டுள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான சுமார் 7 வருடங்களாக குறித்த கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியில் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையம் அமைந்திருந்தது.இந்த நிலையில் பொலிஸ் நிலையம் சற்று தொலைவில் மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் கமநல சேவைகள் நிலையம் இயங்கி வந்தது. இந்த நிலையில் குறித்த இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியின் பின் பகுதியில் பெருந்தொகைய…

  3. ஐ.நா சபை முன்றலில் இலங்கையின் பொது எதிரணியினர் இன்று போராட்டமொன்றை நடாத்தியுள்ளனர். நாட்டின் படைவீரர்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் மகிந்த சார்புடைய பொது எதிரணியால் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சொற்பளவான மக்களே கலந்து கொண்டதாக ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போராட்டத்தில் மகிந்த சார்பு அணியினருக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர். இரண்டாம் இணைப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது! இலங்கை நாடாளுமன்றத்தில் தமக்க அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சார்பு அணியினர் ஜெனிவாவில் வைத்து தெரிவித்துள்ளனர்…

  4. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 100 ரூபா நாணயத்தாளில் இதுவரை காலமும் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்டிருந்த முதலிடம், தற்போது தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் இனவாதப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும், மத்திய வங்கி இந்த வகையான முறையில் நாணயத்தாள்களை அச்சிடவில்லையென மறுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் 2016.03.12 ம் திகதி வெளியிடப்பட்டதாக கூறப்படும் புதிய நாணயத்தாள்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது. அந்த பணத்தாள்களில் நிதி அமைச்சராக மஹிந்த ராஜபக்சவே கையொப்பமிட்டுள்ளார். மத்திய வங்கி ஆளுநராக சுனில் மெண்டிஸ் ஒப்பமிட்டுள்ளார். சுனில் மெண்டிஸ் என்பவர் 2…

  5. கடந்த காலங்களில் மலையகத்தில் நிலவி வந்த வரட்சியான காலநிலை காரணமாக கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது. இதனால் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீரில் அமிழ்ந்துள்ள (மொறபே பழைய நகரில்) பௌத்த விகாரை ஒன்று 25 வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் வெளித் தெரிகிறது. இதனால் நீரில் மூழ்கிய பௌத்த விகாரை மற்றும் பழைய நகரம், கிராமம் மீண்டும் மக்களின் கண்களுக்கு தெரிகின்றது. இதனை பார்வையிட பல பகுதிகளிலும் இருந்து மக்கள் படையெடுத்து வருகின்றனர். அத்தோடு வழிபாடுகளில் ஈடுப்பட்டு செல்கின்றமையையும் காணக்கூடியதாக உள்ளது. கொத்மலை மொறபே பழைய நகரில் இருந்த பௌத்த விகாரை உட்பட கிராமம் கொத்மலை நீர்தேக்கம் ஆரம்பிக்கும் போது, நீரினால…

  6. மன்னாரில் மீண்டும் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வருவதால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிற்கு முன்பாக குறித்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 பாதையில் உள்ள மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டுள்ளமை மற்றும் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியின் பின் பகுதியில் இருந்து நேற்று மாலை ஒரு தொகுதி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளமையை அடுத்து மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டு வருகிறது. இதன் அடிப்படையில் A14 மன்…

  7. கனடாவின் வுட்ஸ்டோக் எனும் இடத்திலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2009ம் ஆண்டு இடம்பெற்ற இந்த தீ வைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் இவர் அந்த நாட்டு விமான நிலையத்தில் வைத்தே கைதாகியுள்ளார். இலங்கையில் இருந்து இவர் மீண்டும் கனடாவுக்கு திரும்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் ஜெயக்குமார் சண்முகநாதன் என தெரியவந்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=154542&category=WorldNews&language=tamil

  8. கைது செய்யப்பட்டவரின் இரண்டாவது மனைவியே வெடிபொருட்களைக் காட்டிக் கொடுத்தார் சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளவரின் மனைவியே தகவல்களை சிறிலங்கா காவல்துறைக்குத் தெரியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு- மறவன்புலவில் நேற்றுமுன்தினம் இரவு நடத்தப்பட்ட தேடுதலில் வெடிபொருட்கள் சிக்கியதையடுத்து, வீட்டின் உரிமையாளர் தப்பிச் சென்றி்ருந்தார். அவரைப் பிடிப்பதற்காக, வன்னேரிக்குளம் பகுதியில் வீதித்தடைகளை காவல்துறையினர் அமைத்திருந்தனர். நேற்றுமதியம் அவர், அங்கு வைத்த…

    • 1 reply
    • 406 views
  9. வெடிபொருட்கள் மீட்கப்பட்டது வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதை பாதிக்கலாம் - நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்- குளோபல் தமிழ் செய்திகளிற்காக தமிழில் ரஜீபன்:- இலங்கை தமிழர்களின் யுத்தத்திற்கு பிந்திய முக்கிய கோரிக்கையாகயுள்ள இராணுவத்தை அகற்றுதல் என்பதை சாவகச்சேரியில் தற்செயலாக வெடிபொருட்களும் தற்கொலை அங்கியும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளமை பாதிக்கலாம். இலங்கை அரசாங்கமும் ஜெனீவாவில் இராணுவத்தினரை அகற்றுவது குறித்த வாக்குறுதியை வழங்கியிருந்தது. வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச போன்றவர்கள் உடனடியாக இது விடுதலைப்புலிகளின் மீள் வருகையை உணர்த்துக்கின்றது, இராணுவத்தின் கண்காணிப்பை தளர்த்தவேண்டிய சூழல் இன்னமும் உருவாகவில்லை …

    • 2 replies
    • 306 views
  10. மே தின நிகழ்வுகளிலும் சுதந்திரக் கட்சிக்குள் பிளவு! மைத்திரி தலைமையில் சமரசப் பேச்சுக்கள் மும்முரம்! மே தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பிரதான கட்சிகள் தீவிரமாக ஆலோசனை செய்துவரும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் அடங்கிய பெருமளவிலான உறுப்பினர்கள் மஹிந்த ஆதரவு பொது எதிரணியினர் ஏற்பாடு செய்யவுள்ள மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும், இதனைத் தடுத்துக் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்கான பேச்சுக்கள் - முயற்சிகளில் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சு.க. மத்திய செயற்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த முறை நடைபெற்ற மே தின நிகழ்வுகள…

  11. வலிவடக்கில் நடேஸ்வராக் கல்லூரி முதல் தல்சவன ஹோட்டல் வரையான பகுதிகளை மக்களிடம் கையளிக்கும் சாத்தியம்? வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் நடேஸ்வராக் கல்லூரி முதல் தல்சவன ஹோட்டல் வரையிலான பகுதிகளை மக்களிடம் கையளிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த 12 ம் திகதி யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி சிறிசேன நடேஸ்வராக் கல்லூரியை உள்ளடக்கிய பகுதியை பொதுமக்களிடம் ஒப்படைத்திருந்தார். எனினும் விடுவிக்கப்பட்ட இந்த பகுதிகளில் இன்னமும் பல இராணுவ முகாம்கள் உள்ளதால் மக்கள் அப்பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. இரு வாரம் கடந்த நிலையிலும் மக்கள் அந்த பகுதிக்கு செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில்…

  12. இராணுவத்தின்வசமிருந்த வவுனியா நெற் களஞ்சியசாலை விடுவிப்பு! 1997ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையின் வசமிருந்த வவுனியா நெற்களஞ்சிய சாலை இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த நெற்களஞ்சிய சாலையை விடுவிக்குமாறு வவுனியா மாவட்ட விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இதேவேளை இந்த விடயம் தொடர்பில் குளோபல் தமிழ் செய்திகள் பலமுறை சுட்டிக்காட்டியது. இந்த நிலையில் இன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். ரோகண புஸ்பகுமார மற்றும் மாவட்ட விசாய பணிப்பாளர் ஆகியோர் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட நெற்களஞ்சியசாலையை சென்று பார்வையிட்டுள்ளனர். விவசாய அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே இதனை விடுவிப்பதாக வவுன…

  13. 118வது பிறந்த தினம் தந்தை செல்வாவின் 118வது பிறந்த தினமான இன்று மலர்மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தந்தை செல்வா அறங்காவல் சபை தலைவர் பேராயர் ஜெபநேசன் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை 09.30 அளவில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தும், சதுக்கத்திற்கு மலர் வைத்தும் அஞ்சலி செலுத்தினார்கள். http://tamil.adaderana.lk/news.php?nid=2109&mode=head

  14. இலங்கை பூராகவும் இருந்து பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் பல தடவைகள் இடம்பெயர்ந்துவருகின்றனர். மறுசீரமைப்பை பரிந்துரை செய்தும் நீதியற்ற மற்றும் தன்னிச்சையான நடைமுறைகள் தொடர்பில் எதிர்த்து வழக்காடியும் இடம்பெயர்வு மற்றும் மீள்வருகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆவணப்படுத்தி வருகின்றது. வழக்காடலுக்கு ஆதரவளித்தும் காணி விடுவிப்புகள் மற்றும் நிலையான தீர்வுகளுக்கு பரிந்துரை செய்தும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் பல வருடங்களாக உன்னிப்பாக பின்பற்றி வந்துள்ள இரு வழக்குகளில் யாழ். மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டம், சம்பூரிலும் உள்ள பிரதேசங்களும் உள்ளடங்குகின்றன. புதிய அரசாங்கத்தின் இழப்பீடுகள் மற்றும் மறுசீரமைப்புக்கான…

    • 0 replies
    • 367 views
  15.  கிளிநொச்சியில் கைதானவர்: 13 வயதில் புலி அமைப்பில் இணைந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை படையணி பயன்படுத்தும் தற்கொலை அங்கி உட்பட, வெடிப்பொருட்கள் பல, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து அப்பகுதியில், அவ்வப்போது பொதுமக்களுக்கு இடையூறோ, சங்கடங்களையே ஏற்படுத்தாக வகையில் பொலிஸார், தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வெடிபொருட்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர், அவ்வீட்டுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அறியமுடிகி…

  16. குமார் குணரத்தினத்திற்கு ஒரு வருட சிறை! முன்னிலை சோசலிக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினரான குமார் குணரத்தினத்திற்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து கேகாலை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். அத்தோடு, இவருக்கு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய தலைவராக செயற்பட்ட இவர் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அந் நாட்டின் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து கடந்தஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு மீண்டும் சுற்றுலா விசாவில் வந்த அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பின்னர் அவுஸ்திரேலியாவுக…

  17. இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணாமல், அரசாங்கங்கள் அதனை பந்தாடியமையாலேயே வடக்கில் ஆயுதப் போராட்டம் தலைதூக்கியதுடன், பிரபாகரன் என்ற இளைஞர் ஆயுதமேந்தினார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இனவாத, பிரதேசவாத, குலவாத செயற்பாடுகளுக்கு இனி ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாங்கள் கட்சியை விஸ்தரிப்பதற்காக பல்வேறு பகுதிகளிலும் அடிமட்ட கூட்டங்கள் மற்றும் இளைஞர் மாநாடுகளை நடத்தியிருந்தோம். அந்தவகை…

  18. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரிவினைவாத, இனவாத அடிப்படையில் செயற்படுகிறார். அவரது நடவடிக்கைகள், நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க குற்றம்சாட்டியுள்ளார். “நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி, வடக்கு மாகாணசபை நடவடிக்கைகளை மீளமைப்பதில் அரசாங்கம் முன்னின்று செயற்படுகிறது. எனினும் விக்னேஸ்வரன் அந்த முயற்சிகளுக்கு ஆதரவை வழங்குவதைப் போன்று தெரியவில்லை. அரசியலமைப்புக்கு எதிராக விக்னேஸ்வரன் செயற்பட்டால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வடமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20…

  19. 7 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுதலை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு பெற்று வந்த 46 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் 7 பேரே நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். http://onlineuthayan.com/news/12067

  20. சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டமை தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் இராணுவத்தினரிடம் சரணடையாத பலர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறானவர்கள், நாட்டிற்கு பாரதூரமான அச்சுறுத்தலாக மாறக்கூடும் எனவும் கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=154497&category=TamilNews&language=tamil

  21. மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய வயோதிபருக்கு நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு பதினான்கு வயது பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வழக்கில் எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 லட்சம் ரூபா நட்டயீடு செலுத்துமாறும் நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி இந்த வல்லுறவு சம்பவம் நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் 14 வயது பாடசாலை மாணவியாக இருந்தார். அவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய எதிரி 62 வயதுடைய வயோதிபராக இருந்தார். இதில் 16 வயதுக்குக் குறைந்த பாடசாலை மாணவியைக் கடத்தியமை, அவருடன் பாலியல் வல்லுறவு கொண்டமை…

  22. கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை! தனது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்த திருநெல்வேலி பனிக்கர் வீதியைச் சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது 28) என்பவருக்கு, மரணதண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று தீரப்பளித்தார். 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், 5 முறை கத்திக்குத்துக்கு இலக்காகிய கந்தசாமி ஜெயன் என்பவர் உயிரிழந்தார். கந்தசாமி ஜெயனின் மனைவி திருநெல்வேலி பனிக்கர் வீதியிலுள்ள வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார். தனது தங்கையின் மரணத்துக்கு மைத்துனனே காரணம் எனக்கருதிய சதீஸ், தனது மைத்துனரை துரத்தித்துரத்தி கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.…

  23. சவூதி அரேபியாவிற்கு 24 வருடங்களுக்கு முன்னர் பணிப் பெண்ணாக சென்று எந்தவொரு தகவலும் இன்றி இருந்த பெண்ணொருவரின் சடலம் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் ஆனைமடு பிரதேசத்தை சேர்ந்த பெண் (62) என தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் உறவினர்கள் இந்த தகவலினை உறுதிப்படுத்தியுள்ளனர். இவர் 1992ம் அண்டு பணிப் பெண்ணாக சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். எனினும் 2 மாதங்களுக்கு பிறகு அவர் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். பல வருடங்களாக அவர் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் அவர் இறந்திருக்க கூடும் என நினைத்து உறவி…

  24. எத்தகைய அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் இராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக, யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். சாவகச்சேரி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முழுமையான விசாரணைகளின் பின்னரே, கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் நோக்கங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், இராணுவத்தினர் மூலோபாய ரீதியாக தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=154498&category=TamilNews&language=tamil

  25. காணாமல் போனோரை புலனாய்வாளர்கள் விசாரிக்கும் நிலைமை இனி ஏற்படாது; மனோ நம்பிக்கை காணாமல் போனவர்களை விசாரிப்பதற்கு எந்தப் புலனாய்வாளர்களுக்கும் இந்த அரசாங்கத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் இவ்வாறான நிலைமை நடப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். காணாமல் ஆக்குவதை காணாமல் ஆக்குவோம் என்னும் தொனிப் பொருளில் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், இந்த நாட்டில் தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் உருவாகக் கூடாது. அதற்கென கடந்த காலங்களில் கடத்தப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.