Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'யானைகளுக்கு எயார் பஸ்' -அழகன் கனகராஜ் வழமைபோலவே, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது சூடுபிடித்திருக்கும் நாடாளுமன்றம், நேற்று செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தின் போதும் சூடுபிடித்திருந்தது. பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளைப் பிரேணையை, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியுமான இரா.சம்பந்தன் சமர்ப்பித்து உரையாற்றினார். பின்னர் உரையாற்றிய, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், காணாமல் போனதாக கூறப்படுவோர் புலிகள் என்றும், அவர்களை புலிகளே காணாமல் செய்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியது மட்…

  2.  ஆஸி.யா செல்ல முயன்றவர் கைது! அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் இடம்பெயர்வதற்கு முயற்சி செய்த 31 வயதுடைய நபரை, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்துள்ளனர். குறித்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அவரை இன்று நீர்கொழும்பு நீதிமன்ற நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http://onlineuthayan.com/news/10384

  3. தமிழ்மக்களை அழிக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களை இராணுவம் நடத்தவில்லையாம்! இறுதிக்கட்டப் போரின் போது, தமிழ் மக்களை அழிக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களை இலங்கை படையினர் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கை மீதான அனைத்துலக விசாரணைகள் என்ற கருத்து முன்வைக்கப்பட முன்னர், ஆரம்பத்தில் இருந்தே உள்ளக விசாரணைகளுக்குத் தான் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. நம்பகமாக உள்ளக விசாரணைகளைஅனைத்துலக தரப்பினர் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வந்தனர். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கத…

  4. எச்.ஐ.வி வதந்தியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கல்வியைத் தொடர வழி கிட்டியது! குளியாபிடிய சிறுவனை கண்டி டிரினிடி கல்லூரியில் அனுமதிப்பது தொடர்பிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. குளியாபிடிய பகுதியிலுள்ள சிறுவன் ஒருவனின் தந்தை சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு எயிட்ஸ் நோய் இருந்ததாகவும் அதனால், குறித்த சிறுவனும் எச்.ஐ.வி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் வதந்தி பரவியது. இதனையடுத்து, அவர் கல்வி கற்று வந்த பாடசாலையில், தொடர்ந்து கற்றல் செயற்பாடுகளை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக கருதி குறித்த பாடசாலையிலுள்ள மற்றைய மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மறுத்ததே இதற்குக் காரணம்…

  5. மஹிந்த என்னை புத்தி சுயாதீனமற்றவராக மாற்ற முயற்சித்தார் எனது ஆட்சிகாலத்தின் பின்னர் அரசியல் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் செயற்பட்ட நான், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் சிறுபான்மையினமான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூர தன்மையுடைய சர்வாதிகார செயற்பாடுகளை சகித்து கொள்ள முடியாமையினாலும் எமது நாட்டை அழிவு பாதையில் இருந்து மீட்டெடுக்கவுமே நான் மீண்டும் அரசியலில் பிரவேசித்ததோடு நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கவும் ஒத்துழைப்பு வழங்கினேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். மஹிந்தவின் ஆட்சிகாலத்தில் அவர் உச்சக்கட்ட அதிகாரத்தினை பயன்படுத்தி என்னுடன் சார்ந்தவர்…

  6. அரசியல் கைதிகளின் உயிருக்கு உத்தரவாதம் : விடுவிப்புக்குப் பின்னடிப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை தான் ஏற்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். எனினும் கைதிகளை விடுவிப்பதா இல்லையா என்பது குறித்து தன்னால் தீர்மானிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாட…

  7. தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது; அறுவரின் நிலைமை கவலைக்கிடம் [ Wednesday,9 March 2016, 02:55:06 ] மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகள் இன்று புதன்கிழமை 16ஆவது நாளாகவும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடல்நிலை பாதிக்கப்பட்ட கைதிகளில் அறுவரின் நிலை மேலும் மோசமடைந்த நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடேசன் குகநாதன், ந.தர்மராசா, முத்துசிவன் சிவநாதன், அகஸ்தின் ஞானசீலன், பாலசிங்கம் மனோதரன் மற்று…

    • 2 replies
    • 378 views
  8. ஆர்ப்பாட்டக்காரர்களை படமெடுத்த புலனாய்வாளர்கள் -எம்.றொசாந்த் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு மற்றும் வடமாகாண பெண்கள் மாற்றத்துக்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு ஆகியன இணைந்து பரமேஸ்வரா சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை புலனாய்வாளர்கள் தனித்தனியாக புகைப்படம் எடுத்தனர். அத்துடன், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் அவர்கள் புகைப்படம் எடுத்தனர். இவர்களின் வழமைக்கு மாறான இவ்வாறான செயற்பாட்டால் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/167694/%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%…

    • 3 replies
    • 544 views
  9. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனை மீட்க சர்வதேச முயற்சிகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 2009ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களின் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மீட்க சர்வதேச நாடுகள் முயன்றுள்ளன என்று கூறப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மீட்பது போன்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற நோர்வே மற்றும் அமெரிக்கா கூட்டு முயற்சியில் ஈடுபட்டது. இதற்காக அமெரிக்க பசிபிக் கட்டளையின் உயர்குழு ஒன்று இலங்கை கடல் எல்லைக்கு விஜயம் செய்துள்ளது போன்ற தகவல் கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச சில தகவல்களை வெளியிட்டுள்ளார். …

    • 2 replies
    • 581 views
  10. தமிழ் - முஸ்லிம் பகுதியில் கடைகள் உடைப்பு! இன ஒற்றுமையைக் குழப்பும் திட்டமிட்ட சதி! தமிழ், முஸ்லிம் எல்லைப் பகுதியில் ஒரே நேரத்தில் 6 கடைகள் உடைக்கப்பட்டமை இன ஒற்றுமையைக் குழப்பும் திட்டமிட்ட சதி - நாச வேலை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஏறாவூர் 4 ஆம் குறிச்சியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை அதிகாலை 6 கடைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுடன் கலந்துரையாடும்போது இதனைத் தெரிவித்தார். …

    • 1 reply
    • 481 views
  11. இலங்கை அரசின் மீது எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் குற்றச்சாட்டு இலங்கையில் நடந்த போரின்போது, காணாமல் போன மற்றும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க கடந்த அரசும் புதிய அரசும் தவறிவிட்டன என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நியாயத்தைப் பெற்றுத்தர அரசுகள் தவறிவிட்டதாக சம்பந்தன் கூறியிருக்கிறார். போரின்போது காணாமல்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான விவாதம், இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார். காணாமல் போனோர் தொடர்பில் முந்தைய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவிடம், பொதுக்களிடமிருந்து 17,…

    • 3 replies
    • 861 views
  12. இருண்ட தினம் பிரகடனம்! மகளிர் தினமாகிய இன்றைய தினத்தையும், இந்த மாதத்தினையும் நாம் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருண்ட நாட்களாக பிரகடனப்படுத்துகின்றோம் என வலியுறுத்தி யாழ்.பரமேஸ்வரா சந்தியில் வடமாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், கொலைகளும், சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், கொலைகளும் மிகவும் மோசமான முறையில் நாடளாவிய ரீதியில் அதிகரித்து வருவதாலும், இந்த வன்முறைகளுக்கான நீதி இதுவரை கிடைக்காததாலும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்றுப்போனதாலும் பெண்களுக்கான தினமாகிய இன்றைய தினம் மற்றும் இந்த ம…

    • 2 replies
    • 334 views
  13. எனது தாய்க்கு இராணுவம் செய்த கொடுமை காரணமாக பதினொரு வயதில் என்னுடைய பள்ளிப் படிப்பை தூக்கி எறிந்துவிட்டு தமிழ் மக்களின் விடிவுக்கான போராட்ட அமைப்பில் இணைந்து கொண்டேன் என இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட தேவராசா புலேந்திரன் தெரிவித்தார். வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புச்சாக்கேணி கிராமம் முனை வீதியில், சிறு வியாபாரத்தில் பெரும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்துவரும் முன்னாள் போராளியான புலேந்திரன் லங்காசிறி 24 சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலே இவ்வாறு தெரிவித்தார். போராட்ட காலத்தில் தனது இடது கையில் பாரிய காயம் ஏற்பட்டதன் காரணமாக தன்னால் பெரிய வேலைகளை தற்பொழுது செய்ய முடியாமையினால், வீட்டோடு சேர்த்தவாறு சிறு வியாபார நிலையத்தை ஆரம்பித்தும், தமத…

  14. உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் எம்.எஸ்.ஜீ எனும் சுவையூட்டியை இன்னும் இரு வாரங்களுக்குள் சந்தைகளில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த சுவையூட்டி களைநாசினியாக பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது என பாலித மஹிபால இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன்படி உணவு ஆலோசனை சபையின் பரிந்துரையின் அடிப்படையில் சோடியம் குளுமேட் எனப்படும் எம்.எஸ்.ஜீ சுவையூட்டி…

  15. வாழ்த்துச் சொல்லத் தொலைபேசியில் அழைத்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னை 19 நிமிடங்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மகளிர்தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர் “நான் பதவி விலகிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்த சமயம் அவரது 60 ஆவது பிறந்த தினமும் வந்ததால் வாழ்த்துத் தெரிவிப்பதற்காக தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டேன். சுமார் 19 நிமிடங்கள் மஹிந்த என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதுதொடர்பில் தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய சுதந்திரக்…

  16. அரசியல் கைதிகள் புனர்வாழ்வை ஏற்றுக் கொள்ள தயாராகவுள்ளனர் – சுமந்திரன் அரசியல் கைதிகள் புனர்வாழ்வை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் புனர்வாழ்வு அளிக்கப்படுவதனை தமிழ் அரசியல் கைதிகள் இணங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க தயார் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129813/language/ta-IN/article.aspx

  17. "பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் 158 தமிழர்கள்" இலங்கை முழுவதிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 158 தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். போர் நடைபெற்ற காலத்தில் காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பான விவாதமொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதனடிப்படையில், 103 கைதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகளும் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இப்படியான கைதிகளில், 14 பேர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், ஆன…

  18. அரவிந்தன் அண்ணன் பிரிந்து ஒரு வருடமாகின்றது. ஒவ்வொரு வருட முடிவிலும் இவ்வளவு விரைவாக காலம் கடக்கிறதே என்னும் பெருமூச்சு மட்டும் மிச்சமாகிக் கனக்கிறது. நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஈழ அரசியல் உரையாடல்களுடன் இரண்டறக் கலந்துகிடந்த அரவிந்தன், ஈழ அரசியலின் எதிர்காலம் பெருமளவிற்கு கேள்விக் குறியாகிவிட்ட ஒரு சூழலில்தான், எங்களை விட்டு நீங்கினார். அவரில்லாத இந்த ஒரு வருடம் வழமையான பெருமூச்சுக்கள், வழமையான அங்கலாய்ப்புக்கள் மேலும் வழமையான தடுமாற்றங்களாகவே கழிந்து சென்றது. அரவிந்தன் பற்றி ஒரு சில விடயங்களை எழுதுவது என்றவுடன் முதலில் எதைப் பேசுவது என்னும் வினாதான் துருத்திக் கொண்டு முன்நிற்கிறது. அரவிந்தன் பற்றி எண்ணும் போது, அவர் பற்றி பல விடயங்களை பேசலாம்…

  19. கழுகு ஒன்றை மிகவும் கொடுரமாக துன்புறுத்தி கொலை செய்த நபர்கள் பற்றியும் குறித்த நபர்களால் பரிதாபமாக கொல்லப்பட்ட கழுகு தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் வைரலாக வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்த புகைப்படங்கள் கெலேபந்த பிரதேசத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை 2009ஆம் இலக்கம் 22இன் கீழ் விலங்குகள் மற்றும் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் படி வன விலங்ககளை மிகவும் கொடுரமாக இம்சித்து கொலை செய்வது தண்டணைக்குறிய குற்றம் என்பதை சுட்டிக்காட்டி குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்ட நட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. FREEDOM SRILANKA FOUNTATION மற்றும் LET THEM LIVE ஆகிய அமைப்புக்களே குறித்த …

  20. ஏப்ரலில் அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி இலங்கை வர ஒபாமாவுக்கும் அழைப்பு விடுப்பார் (லியோ நிரோஷ தர்ஷன்) எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி அமெரிக்கவிற்கு செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை இலங்கைக்கு வருமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. சூழல் பாதுகாப்பு தொடர்பில் இடம்பெறவுள்ள மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க செல்லும் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன இந்த விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒ…

  21. குற்றமற்றவர்களை விடுதலை செய்தே தீருவோம் (எம்.எம்.மின்ஹாஜ்) யுத்தகாலத்தின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இருந்தபோதிலும் குற்றமற்றவர்களை நாங்கள் எப்படியாவது விடுதலை செய்தே தீருவோம். அவர்களை அரசாங்கம் பலவந்தமாக தடுத்து வைக்கவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தண தெரிவித்தார். அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார்கள். ஆகவே இது தொடர்பில் போராட்டங்களில் ஈடுப்பட வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியல் கைதிகள் விடுதலை முன்வைத்து ப…

  22. அபாயத்தில் அரசியல் கைதிகள்! அரசியல் கைதிகளின் உயிரை பாதுகாக்க வேண்டியது எம் பொறுப்பு! வடக்கு ஆளுநர் தமது விடுதலையை வலியுறுத்தி 15ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்து கொண்டு இருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று முதல் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் சிறுநீருடன் குருதி வெளியேறிக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகசீன் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு கைதிகளின் நிலை மோசமானதையடுத்து அவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்த…

  23. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வடமாகாண சுகாதார அமைச்சின் மகளிர் விவகார பிரிவினரின் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள், நாளை பிற்பகல் 2 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் 'நிலையான எதிர்காலத்துக்கு வலுவான பெண்கள்' எனும் தலைப்பில் கோகிலா மகேந்திரனும் 'பெண்கள்' என்ற தலைப்பில் பி.எஸ்.அஜிதாவும் சிறப்புரையாற்றவுள்ளனர். அத்துடன், மகளிர் விவகாரக் குழுவினரால் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் வெற்றியீட்டிய குறுடம்படங்கள் திரையிடப்படுவதுடன் வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா ம…

  24. வந்தடைந்தார் தாய்லாந்து பிரதிப் பிரதமர் தாய்லாந்தின் பிரதிப் பிரதமர் சொம்கிட் ஜட்டுஸ்ரிபிடக், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இவருடன், அரசாங்க மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவினர் வருகை தந்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/167708/%E0%AE%B5%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0-#sthash.VeXVx6gt.dpuf

  25. யோஷிதவின் பிணை விவகாரம்: மார்ச் 14இல் இறுதி முடிவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ மற்றும் ஏனைய நால்வர் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுத் தொடர்பான இறுதி முடிவு, மார்ச் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/167702/%E0%AE%AF-%E0%AE%B7-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%B5-#sthash.gJDMfD9x.dpuf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.