Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 30 பெரும்பான்மையின மருத்துவர்களில் தங்கியிருக்கும் முல்லை மாஞ்சோலை வைத்தியசாலை: 03 பெப்ரவரி 2016 முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை 30 பெரும்பான்மையின மருத்துவர்களில்தான் தங்கியிருக்கிறது. முல்லைத்தீவு நகரத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரத்தில் முல்லை - மாங்குளம் வீதியில் முள்ளியவளையை அண்டி அமைந்திருக்கும் முல்லைத்தீவு வைத்தியசாலை மாஞ்சோலை வைத்தியசாலை என்று அழைக்கபடுகிறது. பல்வேறு அடிப்படை பிரச்சினைகள், தேவைகள் மத்தியில்தான் இந்த வைத்தியசாலை இயங்குகின்றது. போரால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம் முல்லைத்தீவு. இறுதி யுத்தமே இந்த மாவட்டத்தில்தான் நடந்தது. யுத்த பாதிப்புக்களுக்கு உள்ளான பலர் வைத்தியசாலைக்கு வந்து செல்லும் காட்சியே இன்றும் பார்வையிடலாம். அப்பட…

  2. சரத் பொன்சேகா, ஐக்கிய தேசிய முன்னணியுடன் ஒப்பந்தம் [ Wednesday,3 February 2016, 03:16:05 ] ஜனநாயக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கொள்ளவுள்ளார். இது தொடர்பிலான விசேட வைபவம் இன்று புதன்கிழமை மாலை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. இதன்போது சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இதேவளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவிருப்பதை அவரது செயலாளர் பஸ்நாயக்க ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். காணி அமைச்சராக இருந்த எம்.கே.டி.எஸ் குணவர்தன சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிரு…

  3. ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கூடுதல் அதிகாரங்கள்! - வர்த்தமானியை வெளியிட்டார் மைத்திரி [Wednesday 2016-02-03 06:00] பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகளை சோதனைக்கு உட்படுத்துவதற்கு அவ்வாணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இ…

  4. புலிகளுடன் தொடர்பு பேணிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையருக்கு ஜெர்மனியில் தண்டனை: 03 பெப்ரவரி 2016 தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டுக்காக இலங்கையர் ஒருவருக்கு ஜெர்மனிய நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. ஜெர்மனியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே கருதப்படுகின்றது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியமைக்காக குறித்த நபருக்கு 18 மாத ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 53 வயதான ஜீ.யோகேந்திரன் என்ற இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெர்மனிய பிரஜைக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007-2009ம் ஆண்டு காலப் பகுதியல் யோகேந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் பணம்…

  5. ''கடவுளின் பெயரால் போய்த்தொலை''! ஒரு லட்சம் தேங்காய் உடைக்க திட்டம்! கடவுளின் சாபத்தை அரசாங்கத்தின் மீது செலுத்துமாறு கோரும் வகையில் ஒரு லட்சம் தேங்காய்களை தேவாலயத்தில் உடைக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. ''கடவுளின் பெயரால் போய்த் தொலை'' எனும் தலைப்பில் இந்த தேங்காய் உடைப்பு சாபம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. தென்னிலங்கையின் புகழ்பெற்ற பௌத்த தேவாலயமான சீனிகம தேவாலயத்தில் இந்த தேங்காய் உடைப்பு நிகழ்வு எதிர்வரும் ஆறாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன் பின்னர் இலங்கையின் பல பாகங்களிலும் காணப்படும் தேவாலயங்களில் இந்த நிகழ்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அத்துடன் இவ்வாறு உடைக்கப்படும் தேங்காய்களை சேகரித்து எண்ணெய் வடித்து அதனையும் தேவாலயங்களுக்கு…

  6. சுதந்திர தின விழாவுக்கு மகிந்தவுக்கு அழைப்பில்லை! [Wednesday 2016-02-03 07:00] தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடும் எதிர்பு வெளியிட்டுள்ளார். நாளை நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த முயற்சியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்தியாவை திருப்தி படுத்தும் நோக்கில் அரசாங்கம் தமிழில் தேசிய கீதம் பாட முயற்சிப்பதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடும் எதிர்பு வெளியிட்டுள்ளார். நாளை நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது தமிழ் …

  7. உயிரை கொடுத்தாலும், மண்ணை கொடுக்கோம் - வலி.வடக்கு மீள் குடியேற்ற புனர்வாழ்வு சங்கம் 02 பெப்ரவரி 2016 குளோபல் தமிழ்ச்செய்தியாளர் - யாழ்ப்பாணம்:- உயிரை கொடுத்தாலும் கொடுப்போம் ஆனால் எம் மண்ணை விட்டுக்கொடுக்க மாட்டோம் என வலி.வடக்கு மீள் குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது. அதில் பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசதுறை துறைமுகம் அபிவிருத்…

  8. நிதி மோசடி விசாரணைப் பிரிவினை கலைக்குமாறு சில பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதிடம் கோரவுள்ளனர் நிதி மோசடி விசாரணைப் பிரிவினை கலைக்குமாறு சில பிரதி அமை;சர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதி அமைச்சர்களே இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்க உள்ளனர். சில பிரதி அமைச்சர்கள் யோசித ராஜபக்ஸவை பார்வையிடுவதற்காக இன்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நிதி மோசடி விசாரணைப் பிரிவினை கலைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் அது சட்டவிரோதமானது எனவும் பிரதி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். நிதி மோசடி விசாரணைப் பிரிவு கலைக்கப்படாவிட்டால் பிரதி அம…

  9. திருப்பி அடிக்க வேண்டி ஏற்படும்! மகிந்த யோசிதவுக்காக கண்ணீர் சிந்தியதை ஊடகங்கள் மகிழ்வோடு வெளியிட்டுள்ளன பொறுமை காத்துக் கொண்டிருக்கும் தங்களை தொடர்ந்து தாக்கிக் கொண்டு வந்தால் திருப்பி அடிக்க வேண்டிய நிலமை ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக எங்களை தள்ளிக் கொண்டே இருந்தால் நாம் என்ன செய்ய முடியும் என்று தெரிவித்த மகிந்த சுவருடன் மோதினால் திரும்ப நேரிடும் என்றும் அதனால் திருப்பி அடிக்க வேண்டி ஏற்படும் மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்னமும் சுவரில் தள்ளவில்லை என்றும் அதற்கு இன்னமும் காலம் இருப்பதாக தான் கருதுவ…

  10. ஒரு குழந்தையைக் கைது செய்து அக்குழந்தையின் தந்தைக்கு சிக்கலைக் கொடுக்கும் பழிவாங்கும் அரசியல் என்று ராஜபக்சேவின் மகன் யோசித ராஜபக்சேவைக் கைது செய்ததை விமர்சித்துள்ளார் கோத்தபயா ராஜபக்சே. ஆனால் அவர் போட்ட இந்த டிவிட்டுக்கு பலரும் கடுமையாக பதில் டிவிட் போட்டு கோத்தபயாவை கலங்கடித்து வருகின்றனர். தமிழர்களும், சிங்களர்களும் பாரபட்சமே இல்லாமல் கோத்தபயாவை அவரது டிவிட்டுக்குப் பதிலடி கொடுத்தும், சமூக வலைதளத்தின் பிற பக்கங்களிலும் சரமாரியாக கமெண்ட் போட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.ராஜபக்சேவின் மகனான யோசித ராஜபக்சே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் ஆவார். சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார். 2வது மகன் ராஜபக்சேவின் 2வது மகன்தான் இந்த யோசித ராஜபக்சே. ராஜபக்சேவின் மற…

  11. ஊழ்வினை உறுத்துவந்தூட்டும்! ஆலமரத்தடி- நிலவன் 02 பெப்ரவரி 2016 அண்ணே அண்ணே மகிந்தவின்டை கண்ணிலை கண்ணீர் என்றபடி கையில் நாளிதழுடன் ஆலமரத்தடிக்கு ஓடிவந்தான் சின்னத்தம்பி. இரத்தம் வடிஞ்ச முகத்திலை கண்ணீரே? என்றார் இரத்தினத்தார். உனக்குப் புதினம் தெரியாதே மகிந்தவின்டை மகன் யோசித ராஜபக்சவை சிறையிலை வைச்சுப் போட்டினம் எண்டு மகிந்த மகரா லென்ஸைப் பாத்து கண்ணீர் விட்ட படத்தைத்தான் பொடி பொட்டையள் எல்லாம் பேஸ் புக்கிலை போடுகுதுகளாம் என்றார் கந்தையா. சின்னத்தம்பி நாளிதழை விரித்தான். என்டை மகனை மட்டுமில்லை, என்னை மனுசியையும் என்னையும் சிறையிலை போட்டாலும் ராஜபக்ச குடும்பத்தை அடக்க ஏலாது எண்டு மகிந்தர் சொல்லு…

  12. படைவீரர் நலன்புரி அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 02 பெப்ரவரி 2016 படைவீரர்களின் நலன்புரி விவகார அமைச்சராக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என ஆளும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 9ம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சரத்பொன்சேகா பதவிப் பிரமணம் செய்து கொள்ள உள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் அமரர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, சரத் பொன்சேகா நியமிக்கப்பட உள்ளார். ஐக்கிய தேசிய முன்னணிக்கும் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் நாளை புரி…

  13. யோசிதவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு, கடற்படைக்கு உத்தரவு குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடற்படை லெப்டினன் யோசித ராஜபக்ஸ வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டமை குறித்து விசாரணை நடத்தப்பட்டிருந்தது. கடற்படை நியதிகளுக்கு புறம்பான வகையில் யோசித வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் யோசித ராஜபக்ஸ, ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றி வந்தார். இந்தக் காலப்பகுதியில் யோசித ராஜபக்ஸ பல நாடுகளுக்கு பல தடவைகள் பயணங்கள…

  14. 'எனது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட ஏற்பாடுகளே எனதுமகனுக்கு வினையாகிப் போனது' மஹிந்த ராஜபக்ஷ: 'எனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே, எனது மகன் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது' என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கண்டியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'பணச் சலவை சட்டத்தின் கீழேயே யோஷிதவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் பணம், இலங்கையில் முதலிடுவதற்கு தடை விதிக்கும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் 7 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள், போதைப்பொருட்கள், 16 வயத…

  15. எம்பிலிபிட்டிய சம்பவம் : பொலிஸாருக்கு எதிராக இழப்பீடு கோரி மனைவி மனு தாக்கல் எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த இளைஞனின் மனைவி, 10 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கதல் செய்துள்ளார். உயர்நீதிமன்றில் அவர் இன்று இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் தனது கணவனின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை காலம் தாழ்த்தாது உடன் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 29 வயதான இளம் குடும்பஸ்தர் பலியானார். குறித்த இளைஞனை பொலிஸார் மாடியிலிருந்து தள்ளிவிட்ட காரணத…

  16. எம்பிலிப்பிட்டிய உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைது குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டபிள்யு.டி.சி. தர்மரத்ன கைதுசெய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்றிருந்த நிலையிலேயே முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 29 வயதான இளம் குடும்பஸ்தர் பலியானார். குறித்த குடும்ப…

  17. யாரை பழிவாங்குவது என்பதிலேயே அரசு குறியாக உள்ளது;நாமல் குற்றச்சாட்டு நல்லாட்சி அரசாங்கத்திற்கு மக்களை பற்றி சிந்திக்க நேரமில்லையென்றும், யாரை பழிவாங்குவது யாரை கைதுசெய்வது என்பதிலேயே குறியாக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு நேற்று (திங்கட்கிழமை) நாமலின் தாயார் சிராந்தி ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது கருத்துத் தெரிவிகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் . அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் , நல்லாட்சி அரசாங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு நேரமில்லை. அதற்காக முயற்சிகளையும் எடுப்பதாக இல்லை. எனது த…

  18. அடுத்து தன்னையே அரசாங்கம் கைது செய்யப் போகிறது! : மகிந்த எம்.பி! அடுத்ததாக தன்னை அரசாங்கம் கைது செய்யவுள்ளதாக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று, தலதா மாளிகையில் வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “உள்ளூராட்சித் தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதில் அரசாங்கத்துக்கு அக்கறையில்லை. எமது ஆட்சிக்காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக எல்லாத் தேர்தல்களும் உரிய காலத்தில் நடத்தப்பட்டன. தற்போதைய அரசாங்கம் க…

  19. 70 தங்க பிஸ்கட்டுகளுடன் பெண்ணொருவர் யாழ் சாவகச்சேரியில் கைது! யாழ்சாவகச்சேரி, சங்காணை புகையிரத நிலையத்துக்கு அருகில் வைத்து இன்று (02) அதிகாலை 70 தங்க பிஸ்கட்டுகளுடன் 50 வயதான பெண்ணொருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன் பெறுமதி சுமார் 3 கோடியே 93 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=14594#sthash.ENyIHXIr.dpuf

  20. இறுதி மோதல்களின் போது யுத்த சூனியப் பிரதேசம் என்ற எந்தப் பகுதிகளும் காணப்படவில்லை என்று காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. “இறுதி மோதல்களின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள், ஒருபோதும் யுத்த சூனியப் பிரதேசத்துக்கு இணங்கியிருக்கவில்லை. எனவே, யுத்த சூனியப் பிரதேசத்தை இராணுவம் தாக்கியது என்று கூறப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. யுத்த சூனியப் பிரதேசம் என்ற ஒன்று ஒருபோதும் இருக்கவில்லை” என்று பரணகம ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, இறுதி மோதல்களின் போது, பொதுமக்கள் 40,000 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவது புனைவு என்றும் அந்த ஆணைக்குழு …

  21. ஒரு நாடு ஒரு தேசம் மென்பொருள் அறிமுகம்! சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில், “ஒரு நாடு ஒரு தேசம்” எனும் புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம், எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முகப்புத்தகத்தில் தங்கள் முகப்பு படத்தில் இந்த மென்பொருளை பயனாளர்கள் பயன்படுத்தக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/news/8007

  22. வீரசிங்கம் மண்டபம் முதல் ஸ்கொட்லாந்து வரை... ப. தெய்வீகன் முதலிலே உலகை வலம் வருபவருக்கு மாங்கனியை பரிசளிப்பதாகக் கூறிய சிவபெருமானின் கூற்றுக்கு இணங்க, மயில் மீது பறந்து சென்ற முருகனை, அம்மை அப்பனை வலம் வந்து மிகச்சுலபமாக வெற்றி கொண்ட விநாயகரின் கதை கடந்த சில நாட்களாக அடிக்கடி நினைவில் வந்து போனது. அதற்கு காரணம் வேறொன்றுமில்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை கற்றறிவதற்கு சம்பந்தர், ஸ்கொட்லாந்துக்கு பறந்திருக்கும் செய்தியும் மறுபுறத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து, விக்னேஸ்வரன் அவர்கள் தமது தரப்பு தீர்வு வரைவை முன்மொழிந்திருக்கும் செய்தியும் கடந்த சில வாரங்களாக ஊடகங்களை ஆக்கிரமித்திருப…

  23. யோசித உட்பட நால்வர் சிறைச்சாலை உணவை உட்கொள்வதற்கு மறுப்பு! சி.எஸ்.என் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதிமோசடிகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்;டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித உட்பட நால்வர் சிறைச்சாலை உணவை உட்கொள்வதற்கு மறுத்து விட்டதாக சிறைச்சாலை பேச்சாளர் துசாரஉபுல் தெனிய தெரிவித்துள்ளார். அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து உணவை பெறுவதற்கான அனுமதியை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதல் நாள் சிறைச்சாலை உணவை உட்கொள்வதற்கு இணங்கிய அவர்கள் மறுநாள் அதனை உட்கொள்ள மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வெளியிலிருந்து உணவை பெறுவதற்கான அவர்களது கோரிக்கையை சிறைச்சாலை திணைக்களம் ஏற்றுக் கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். …

  24. ஜனவரி மாதத்தில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016, 05:26.45 AM GMT ] இந்த வருடம் ஜனவரி மாதத்தில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 4685 என தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இதில் 1533 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை 585 பேர் யாழ் மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 403 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு நோயின் அறிகுறிகளோடு சீகா என்ற புதுவகையான வைரஸ் நோய் பரவும் அபாயம் நாட்டிற்குள் ஏற்பட்டுள்ளதால், டெங…

  25. சுதந்திரதின ஒத்திகை காரணமாக கொழும்பின் பிரதான நகரங்களில் வாகன நெரிசல் [ Tuesday,2 February 2016, 07:21:17 ] ஸ்ரீலங்காவின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை நடவடிக்கை காலிமுகத்திடல் பிரதான வீதியில் இடம்பெற்றுவருவதால் கொழும்பின் பிரதான மற்றும் குறுக்கு வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 68ஆவது சுதந்திரதின நிகழ்வு கொழும்பு – காலிமுகத்திடலில் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதனை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நகரத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய இன்று நண்பகல் 12 மணி முதல் காலி வீதியில் காலி முகத்திடல் சுற்றுவட்டம் முதல் பழைய நாடாளுமன்றம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.