ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
முல்லை மாந்தை கிழக்கில் 43மில்லியனில் அமைக்கப்பட்ட அரிசி ஆலை எப்போது இயங்கும்? குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையில் மிகவும் பின்தங்கிய மாவட்டம். முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் தமது தேவைகளை நிவர்த்தி செய்ய பெரும்பாடு படவேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்திலேயே மாந்தை கிழக்கு மிக மிக பின்தங்கிய பகுதி. போக்குவரத்து, வர்த்தகநிலையம் போன்ற அடிப்படை வசதிகள் பலவும் இல்லாத நிலையில் மக்கள் வாழ்கின்றனர். இந்த நிலையில் மாந்தை கிழக்கு பொன்னகர் பகுதியில் 43 மில்லியன் ரூபா செலவில் அரிசி ஆலை ஒன்று அமைக்கப்பட்டது. யு.என்.டி.பி நிறுவனம் இந்த அரிசி ஆலையை நிர்மானித்து இரண்டு…
-
- 0 replies
- 441 views
-
-
இலங்கைப் போரின் போது பின்பற்றிய உத்திகளை கையாளவேண்டுமா? துருக்கித் தூதுவருடன் நேர்காணல் நேர்காணல் அருண் ஆரோக்கியநாதர் இலங்கைப் போரின் போது பின்பற்றிய உத்திகளை கையாளவேண்டும் என்று கூறுபவர்கள் இறுதிப் போரின் போது இங்கு நடந்தவை குறித்து போதுமான அறிவைக் கொண்டிராதவர்கள் என இலங்கைக்கான துருக்கி நாட்டுத்தூதுவர் டுன்ஜா ஒஷ்ஸுகதார் சுட்டிக்காட்டுகின்றார். இலங்கை பிரச்சனைக்கு தீர்வுகண்டவழியில் நாமும் தீர்வுகாணவேண்டும் என அவர்கள் எண்ணுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார். போரின் போது இலங்கை பின்பற்றிய உத்திகளை துருக்கியிலும் பின்பற்ற வேண்டும் என…
-
- 1 reply
- 369 views
-
-
மகிந்தவின் விகாரை அரசியலுக்கு ஆப்பு வைத்தது நீதிமன்றம்! - அபேராமயவில் கூட்டம் நடத்த தடை [Tuesday 2016-02-02 07:00] நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில், அரசியல் கூட்டங்களையே அல்லது வர்த்தக கூட்டங்களையோ நடத்துவதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.டி.குணசேகர, நேற்று தடை விதித்து உத்தரவிட்டார். நாரஹேன்பிட்டியில் உள்ள அபேராம விஹாரையில், அரசியல் கூட்டங்களையே அல்லது வர்த்தக கூட்டங்களையோ நடத்துவதற்கான தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, கிருலப்பனையில் அமைந்துள்ள பூர்வாயமாயா பௌத்த விகாரையின் தலைமை பிக்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தமையை அடுத்தே இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில், அரசியல் கூட்டங்களை…
-
- 0 replies
- 316 views
-
-
இரத்தம் வரும் அரிசி 02-02-2016 09:18 AM சிவப்பு வர்ணச் சாயம் கலந்த சிவப்பு அரிசி, மலையகத்திலுள்ள பெரும்பாலான நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹட்டன் உள்ளிட்ட நகரங்களில் இவ்வாறான அரிசி விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரியவருகிறது. வர்ணச் சாயம் பூசி கலப்படம் செய்யப்பட்ட அரிசி மாதிரிகள் சந்தையில் உள்ளதா என்பது குறித்து அறிந்துகொள்வதற்காக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நேற்று ஹட்டன் உள்ளிட்ட நகரங்களில் திடீர் சோதனை செய்தனர். இதன்போது அரிசியில் சிவப்பு வர்ணம் கலக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த …
-
- 0 replies
- 326 views
-
-
மைத்திரி அதிரடி! ரணில் அதிர்ச்சி! மகிந்த திணறல்! மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன அதிரடியாக கைது செய்யச் சொல்லி மிகப்பெரிய அதிர்வலைகளை இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ளார். மிகவும் அமைதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனா அவ்வப்போது எதிர்பாராத விதமாக திடீர் திடீரென்று தனது முடிவுகளை அறிவித்து இலங்கை அரசியலில் அவ்வப்போது தன்னை நிலைநிறுத்தி வருகின்றார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செல்வாக்கு இன்னமும் குறைவடையவில்லை என்பது உண்மையாயினும், மைத்திரிபால சிறிசேனவிற்கும் அதே அளவு இடம் சிங்கள மக்கள் மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களிடமும் உண்டு என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. இதனால் அரசியலில் இரு பெரும் துருவமா…
-
- 0 replies
- 491 views
-
-
விமான நிலைய அபிவிருத்திக்காக மயிலிட்டி நிலத்தை தர முடியாது! பிரதேச மக்கள் மறுப்பு [ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016, 04:30.04 AM GMT ] அள்ளி வழங்கும் நீலக் கடலையும், பொன் கொழிக்கும் சிவப்பு மண் விவசாயப் பூமியையும் விமான நிலைய அபிவிருத்திக்காக நாம் தாரை வார்க்க முடியாது என வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவரும் மயிலிட்டி மீள்குடியேற்றக் குழுவின் தலைவருமான அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். அபிவிருத்தியா? மீள் குடியேற்றமா? என்பதை மயிலிட்டி மக்களே முடிவு செய்ய வேண்டும் என்றும், அதற்கு மயிலிட்டி மக்களின் கருத்தறியும் கூட்டத்தை நடத்துமாறு பிரதமர் தெரிவித்திருப்பதாக, இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மாவட்ட ஒருங்…
-
- 1 reply
- 192 views
-
-
போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்கவே கொழும்பு வருகிறாராம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்! [Tuesday 2016-02-02 07:00] ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் - ஹுசைன் போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் பெயரில் விசேட பொறிமுறையுடன் கூடிய நீதிமன்றத்தை உருவாக்கவே இலங்கை வருகிறார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பொரளை எம்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் - ஹுசைன் போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் பெயரில் விசேட பொறிமுறையுடன் கூடிய நீதிமன்றத்தை உருவாக்கவே இலங்கை வருகிறார் என்று தேசிய சுத…
-
- 0 replies
- 405 views
-
-
சென்னை நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ஆஜராவதற்கான செலவை டக்ளஸ் தேவானந்தா ஏற்பதாக தகவல் சென்னை சூளைமேட்டில் 1986ம் ஆண்டு திருநாவுக்கரசு என்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், காணொலி காட்சி மூலம் ஆஜராவதற்கு தேவையான செலவுகளை ஏற்பதாக இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காணொலி காட்சி மூலம் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அதற்கான வசதிகள் இல்லாததால், அந்தக் கருவிகள் அமைக்க தேவையான செலவுகளை ஏற்பதாக டக்ளஸ் தேவானந்தா சார்பில் தெரிவிக்கப்பட்டது. http://www.nakkheeran.in/
-
- 1 reply
- 427 views
-
-
யாழில் பட்டப் பகலில் துணிகரக் கொள்ளை! : உரிமையாளரின் துணிச்சலினால் திருடர்கள் வசமாக மாட்டினர்! யாழ்.கட்டப்பிராய் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்றவர்கள் வீட்டின் உரிமையாளரின் துணிச்சலினால் கொள்ளையர்கள் வசமாக மாட்டிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்.கல்வியங்காடு- கட்டப்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வீட்டின் உரிமையாளர்கள் இல்லாத நிலையில் உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த அலுமாரிகள், மேசை லாச்சிகளை உடைத்து தேடுதல் நடத்தி சுமார் 55ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளனர். …
-
- 1 reply
- 625 views
-
-
யோஷித ராஜபக்ஷவின் கைது 'அரசியல் பழிவாங்கல் அல்ல': சிவில் அமைப்பினர் 'முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பழிவாங்க முடியாத நிலையில் இருக்கின்ற அரசாங்கம் இன்று அவரது குடும்பத்தினரை பழிவாங்கி வருகின்றது' என்றார் தினேஷ் குணவர்தன நிதிமோசடி குற்றச்சாட்டில் நீதிமன்றத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷவை பார்ப்பதற்காக அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் பொது எதிரணிக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்று கொழும்பு சிறைச்சாலைக்கு சென்றனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட விளக்க மறியலில் வைக்கப…
-
- 0 replies
- 530 views
-
-
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய கோரி தென்கொரியாவில் வசிக்கும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் அங்கு வசிக்கும் அதிகளவிலான இலங்கையர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கைது செய்யப்பட ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல எதிர்ப்பு பதாதைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து கொண்டுள்ளனர். …
-
- 2 replies
- 467 views
- 1 follower
-
-
ஜேர்மன் நாட்டு உல்லாசக் கப்பல் திருகோணமலையில் ஜேர்மன் நாட்டின் 420 பயணிகளுடன் கூடிய அதிசொகுசு யுரோப்பா 2 எனும் குறூஸ் வகை உல்லாசப் பயணிகள் கப்பல் இன்று காலை திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகார சபையின் இறங்குதுறைக்கு வருகை தந்துள்ளது. மொரிசியஸ் நாட்டிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த குறித்த கப்பலானது இலங்கையின் பிரதான துறைமுகங்களாகிய காலி, கொளும்பு, அம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களில் தரித்து நின்றதுடன் இன்று காலை திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்தது. இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக இது போன்ற ஒரு உல்லாசப் பயணிகள் கப்பல் நாட்டின் பிரதான துறைமுகங்களில் தரித்து நின்றது எனவும் இதுபோன்ற முயற்சிகள்…
-
- 1 reply
- 417 views
-
-
யோஷித்தவை விடுவிக்கக்கோரி மக்களை அணிதிரட்டி போராடுவோம் : மஹிந்த அணி அறிவிப்பு கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் யோஷித்த மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் கைதிகளேயாவர். இவர்களை விடுதலை செய்யக்கோரி மக்களை ஒன்றிணைத்து போராடவுள்ளோம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்தது. அதேபோல் இவர்கள் விடுதலையாகும் நாளில் பத்து இலட்சம் தேங்காய்களை உடைத்து எமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் உள்ளோம். இன்றில் இருந்து எந்தவொரு அரச நிகழ்சிகளிலும் கலந்துகொள்வதில்லை எனவும் சுதந்திரதின விழாவை புறக்கணிப்பதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி…
-
- 0 replies
- 393 views
-
-
பிழையாக வழிநடத்தப்பட்ட சிங்கள பௌத்தர்கள் இந்தியாவிற்கு அஞ்சுகின்றனர் பிழையாக வழிநடத்தப்பட்ட சிங்கள பௌத்தர்கள் இந்தியாவிற்கு அஞ்சுகின்றனர் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். விஜயன் வருகை இந்தியாவுடனான இரத்த பந்தம் பற்றி புராணம் பேசும் சிங்கள பௌத்தர்களே அதிகளவில் இந்தியாவைக் கண்டு அஞ்சுகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஆழ் கடல் மீன்பிடியின் மூலம் ஆயிரக் காணக்கான இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமன்றி ஒட்டுமொத்த கடல் வளமும் பாதிக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், மீனவர்களின் பிரச்சினை போன்றன காரணமாக இந்திய எதிர்ப்பு கொள்கை பின்பற்றக் கூடாது …
-
- 0 replies
- 440 views
-
-
யுத்தக்குற்ற விசாரணையில் தடுமாறும் அரசாங்கம் [ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2016, 12:41.09 AM GMT ] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படவிருக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்குபற்றுதல் இருக்கவேண்டும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நீதி வழங்குவதற்கான பொறிமுறைகளில் சர்வதேச பங்களிப்பில் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது என்பதே ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிலைப்பாடு என்று அவரது பேச்சாளர் ஸ்டீபனே துஜாரிக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் இடைமாறுபாட்டுக்கால நீதிக்கான பொறிமுறைகள் …
-
- 1 reply
- 756 views
-
-
பௌத்த விகாரையை மகிந்தவின் 'அரசியலுக்கு' பயன்படுத்துவதற்கு எதிராக வழக்கு அபயாராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மகிந்த ராஜபக்ஷவுடன் இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான நாராஹேன்பிட்டியில் உள்ள அபயாராம பௌத்த விகாரையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடைசெய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கிருலப்பனை பூர்வாராம விகாரையின் விகாராதிபதி பத்பேரிய விமலஞான தேரர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அபயாராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இந்த …
-
- 0 replies
- 370 views
-
-
எமில் காந்தனுக்கான பிடியாணை இரத்து தமிழீழ விடுதலை புலிகளின் உயர்மட்ட தலைவர் என்று கூறப்படும் எமில் காந்தனுக்கு விடுக்கப்பட்டிருந்த பிடியாணை மற்றும் சிவப்பு அறிவித்தல்களை, மேல்நீதிமன்றம் இன்று இரத்து செய்துள்ளது. எமில் காந்தன், சரணடைவதாக வழங்கி உறுதியை அடுத்தே இவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/165130/%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%A3-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4-#sthash.IqUTrqIi.dpuf
-
- 1 reply
- 435 views
-
-
மஹிந்தவை மீளவும் ஆட்சிப் பீடம் ஏற்றுவதனை எவராலும் தடுக்க முடியாது – விமல் வீரவன்ச குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆட்சிப் பீடம் ஏற்றுவதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மஹிந்த தலைமையிலான அராசங்கமொன்றை உருவாக்குவதனை துரிதப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் தம் அனைவரையு…
-
- 0 replies
- 329 views
-
-
முருகன் விடுதலைக்கு பத்து இலட்சம் கையெழுத்து பெறுவதற்காகவேனும் உதவுங்கள் : தாயார் சோமணி உருக்கமான வேண்கோள் - குளோபல் தமிழ் விசேட செய்தியாளா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு சிறையில் இருக்கும் மகன் முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கா இலங்கையில் பத்து இலட்சம் கையெழுத்து பெறுவதற்கு இருக்கின்றேன். அதற்காக எனக்கு உதவி செய்யுங்கள் என முருகனின் தாயார் வெற்றிவேல் சோமணி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசியல் வாதிகள்இ அமைப்புகள்ஈ பொது மக்கள்ஆகியோரிடமே அவா் இ்நதக் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளாா் இன்று திங்கள் கிழமை…
-
- 0 replies
- 459 views
-
-
11 பிக்குமார்கள் சரணடைந்தனர் ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சுமார் 11 பிக்குமார்கள், ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/165134/-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0-#sthash.mQOZ0iru.dpuf
-
- 0 replies
- 580 views
-
-
இலங்கை: ராஜபக்சாக்களின் ~கண்ணீர் - அப்சரா பொன்சேகா( அவரது முகப்புத்தகத்தில்) முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல்ராஜபக்ச தனது பெற்றோர்கள் கண்ணீர் விடுவதை தாங்கி;க்கொள்ள முடியவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.நல்லது—நாமல் ராஜபக்சவிற்கு தனது தந்தை மற்றும் தந்தையின் சகோதரர்களின் செயற்பாடுகளால் துன்புறுத்தப்பட்ட,கொல்லப்பட்டவர்களின் பல குடும்பங்கள்,தந்தைமார், பெற்றோர்,குழந்தைகள் அழுதது நினைவில் இல்லையா? அவரது அரசாங்கம் இந்த நாட்டின் சட்டத்தினை மதிக்கும் அதற்கு கட்டுப்படும் அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அவலத்தை , அவமானத்தை, அநீதியை ஓருபோதும் மறக்க முடியாது. எனது தந்தையை அவர்கள்…
-
- 0 replies
- 579 views
-
-
அதிகாரப் பகிர்வு: எங்கிருந்து எதுவரை? கே. சஞ்சயன் அரசியலமைப்பு மாற்றம், போர்க்குற்ற விசாரணை உள்ளிட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுக்கள் நெருங்கி வரத் தொடங்கியுள்ள நிலையில், இதனைக் குழப்புகின்ற முயற்சிகள், பரவலாக நடந்து வருவதை அவதானிக்க முடிகிறது. இத்தகைய முயற்சிகளைக் குழப்ப விரும்பும் அரசியல் சக்திகள், நாடெங்கும் பரவலாகவே இருக்கின்றன. அதாவது, தற்போதைய அரசாங்கமும் கூட, இவற்றில் எந்தளவுக்குப் பற்றுறுதி கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால், போர்க்குற்ற விசாரணை அவசியம் என்று கூறும் அரசாங்கத்துக்கு, அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற குழப்பம், இன்னும் தீரவில்லை. அரசியலமைப்பு மா…
-
- 0 replies
- 319 views
-
-
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் கவனயீர்ப்பு! வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என உறுதியளித்திருந்த போதும், இதுவரையில் தங்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதனைத் தொடர்ந்து வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் செந்தில் நந்தனனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். வடமாகாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக உள்வாரி, வெளிவாரி பட்டதாரிகள். தேசிய உயர் தொழில்நுட்பக் கல்லூரி பட…
-
- 0 replies
- 429 views
-
-
கட்சி அனுபவங்களை முன்வைத்து, தமிழர் வாழ்வை பாழடிக்காதீர்கள்! (வீடியோ) கடந்த கால கட்சி அனுபவங்களை முன்வைத்து, தமிழ் மக்களின் வருங்கால வாழ்வை பாழடித்து விடாதீர்கள் என அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டலும், அது தொடர்பாக முதல் அறிக்கை வெளியிடுதலும் நேற்று யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றது. பேரவையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைத் தலைவர் ப.லக்ஸ்மன், ஏ.வசந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே விக்கினேஸ்வரன் இவ்வா…
-
- 0 replies
- 360 views
-
-
யோசிதவுக்கு எதிராக 6 குற்றச்சாட்டுக்கள்! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ச உள்ளிட்ட சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் ஐவருக்கு எதிராக 6 குற்றச்சாட்டுக்களின் கீழ், வழக்கு தொடரவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பணச் சலவைக் குற்றத்தில் ஈடுபட்டமை, போலி ஆவணங்கள் தயாரித்தமை, நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டமை, சுங்கச் சட்டத்தை மீறியமை, நிறுவன சட்டங்களை மீறியமை மற்றும் தவறான நிதி கையாளுகை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ், இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். http://onlineuthayan.com/news/7905
-
- 0 replies
- 339 views
-