Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கைதிகளுக்காக உயிர்நீத்த மாணவனின் உடல் தீயில் சங்கமம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதி வைத்த பின்னர், ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் உடல், கந்தன்காடு இந்து மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது. இந்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடமாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டது. மாணவனின் இறுதிக் கிரியைகள் கோப்பாய் வடக்கிலுள்ள அவரது வீட்டில் நடைபெற்று, கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களால் உடல் மயானத்துக்கு எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற இறுதிநிகழ்வி…

  2. மொஹமட் சியாம் படுகொலை : வாஸ் குணவர்தன, மகன் மற்றும் நால்வருக்கு மரணத் தண்டனை வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் நான்கு நபர்கள் உயர் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்துள்ளது. பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் ரவிந்து குணவர்த்தன, நான்கு பொலிஸ் கான்ஸ்டபில்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணையின் …

  3. சிங்களக் குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கொலை செய்துவிட்டு பிரபாகரன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தாராம் : மகிந்த எம்.பி வடக்கில் ஈழக் கொடியை ஏற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். சிங்கள கிராமங்களுக்குள் புகுந்து குழந்தைகளையும் கர்ப்பிணி பெண்களையும் கொலை செய்விட்டுத்தான் பிரபாகரன் அன்று மாவீரர் தினத்தை நினைவு கூரினார் எனவும் தெரிவித்தார். காலி நாக்கியாதெனிய விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் க…

  4. உரிமைக்காக போராடி உயிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை யாராலும் தடுக்க முடியாது: சம்பந்தன் உரிமைக்காக போராடி உயிரிழந்தவர்களுக்கு தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நாளை (27ம் தேதி) அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனிடையே, மாவீரர் நாள் பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் பொது இடங்களில் விளக்கேற்றி அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் கடும்போக்குடைய சிங்கள அரசியல்வாதிகளும், இலங்கை ராணுவத்தினரும், காவல்துறையினரு…

  5. யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய மணி ஒலிக்கவிடப்பட்டு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தகர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இராணுவ புலனாய்வாளர்களின் பிரசன்னத்துக்கு மத்தியிலும் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.seith…

  6. மாவீரர் தினம் அனுஷ்டிப்பதனை அரசாங்கம் தடைசெய்யக்கூடாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1989ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ஆம் திகதி கால்நூற்றாண்டுக்கு மேலாக மாவீரர் தினம் சில சமய நிகழ்வுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருவதை தடுப்பது அரசாங்கத்தின் புத்திசாதுரியமான செயலன்று. அன்று தொட்டு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் மக்களால் அந்தந்த இடத்தில் வாழும் தமிழ் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறியதாகவோ பெருமளவிலோ இந் நிகழ்வு நடைபெற்று வருகிறது. பிரபாகரனின் பிறந்த தினம் கார்த்திகை மாதம் 26ஆம் திகதியாகும். அப்படியிருந்தும் அவர் கார்த்திகை மாதம…

  7. உயிர்த்தியாகங்கள் விடிவைத் தராது : கூட்டான மக்கள் புரட்சி ஒன்றே தமிழருக்கான தீர்வு தமக்காக வேறு எவரும் இவ்வாறு உயிர்த்தியாகம் செய்து கொள்ள வேண்டாம் என தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாண மாணவன் செந்தூரன் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் அவர்கள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமது உயிரை மாய்த்துக் கொண்ட பிரிவு தங்களை மேலும்இ மீள முடியாத துன்பத்திற்கு தள்ளிவிட்டுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதுபோல் வேறு எவரும் இவ்வாறான தியாகங்களைச் செய்யக் கூடாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். …

  8.  கைதிகளை விடுவித்தால் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சிறைகளில், தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் குற்றஞ்சாட்டப்படாதவர்களை நீதிமன்றத்தின் ஊடாக விடுதலை செய்வதன் ஊடாக தேசியப் பாதுகாப்புக்கு எவ்விதமான பங்கமும் ஏற்படாது என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பிலான முழுமையான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன் பின்னர் தான், ,வ்வாறான செயற்பாடுகளில் இறங்கினோம் என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்…

  9. வடக்கில் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க நோர்வே அரசு தயார் வடக்கில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு முயற்சியினை எற்படுத்த நோர்வே அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப் ஜோர்ன் கோஸ்ரட்சீதர் தெரிவித்தார். இலங்கையின் பல்வேறு துறைகளில் அபிவிருத்திகளை ஆராய்ந்துவரும் இத்தருணத்தில் வடக்கில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் ஏன் முன்வரவில்லை. அதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப் ஜோர்ன் கோஸ்ரட்சீதர் தெரிவித்தார்.. இனங்களுக்கிடையில் நல்லிணக்கம்,சமத்தவம்,ஆன்மீகம் போன்ற பல செயற்பா…

  10. மாணவன் செந்தூரனின் உணர்வுகளை அரசாங்கம் புரிந்து கொள்ளும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை : முதலமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தற்கொலைச் செய்து கொண்ட மாணவன் செந்தூரனின் உணர்வுகளையும், எதிர்ப்பார்ப்பினையும் இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளும் என்பதில் நம்பிக்கை இல்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வடக்கு முதல்வரைச் சந்தித்த ஊடகவியலாளர்கள் மாணவனின் தற்கொலை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் மாணவனின் மரணம் வீணாக மாறிவிடக்கூடாது எனவும், இந்த அரசாங்கம் வித்தியாசமான சிந்தனையுடன் செயற்…

  11. தற்கொலை செய்த மாணவனின் கடிதம் தொடர்பில் இருவேறு கோணங்களில் விசாரணை யாழ்.கோண்டாவிலில் புகையிரதத்தின் முன் பாய்ந்து பாடசாலை மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். 18 வயதான ராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது சடலத்துக்கு அருகே காணப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய கடிதம் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். குறித்த அப்பியாசக் கொப்பியில் இருந்த அந்த கடிதமானது உண்மையில் தற்கொலை செய்ய முன்னர் அந்த மாணவனினால…

  12. நல்லூரில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று காலை நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகத்திலும், அதன் பின்னர் யாழ்.புனித மரியன்னை பேராலயத்திற்கும் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி அவர் மாவீரர்களுக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். மாவீரர் தினத்தினை முன்னிட்டு வடக்கில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலும் அவர் இன்று தமது அஞ்சலியினையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார். …

  13. அரசியல் கைதிகள் விடயத்தில் அரசு ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறிக்கிறது : வடக்கு முதல்வர் காட்டம் முன்னைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பது எமக்கு தெரியவில்லை. குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நினைத்திருந்தால் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆனால் ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்துக் கொள்வதை ஒத்ததாக, சில அரசியல் கைதிகளை 10 லட்சம் ரூபா பிணையில் விடுவித்தது எமக்கு மனவேதனையளிக்கின்றது என வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் நோர்வே தூதுவரிடம் எடுத்துரைத்தார். இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கோஸ்றட்சீதர் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கான வ…

  14. ஈழத் தமிழ் அரசியல் கைதிகளே! புலம் பெயர்ந்த மக்களை மன்னியுங்கள்- இப்படிக்கு வெட்கம் கெட்ட மீராபாரதி:- 27 நவம்பர் 2015 கவனிப்பார் யாருமின்றி இலங்கை அரசின் சிறைகளில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளே! நாளாந்த வாழ்விற்காகப் புலத்தில் இன்றும் போராடும் முன்பு ஆயுதம் ஏந்திய போராளிகளே, உங்களுக்குப் பொது மன்னிப்புக் கிடைக்கிறதோ இல்லையோ உங்களிடத்தில் பொதுமன்னிப்பொன்றை இக்கடித மூலம் கோர விரும்புகிறேன். என்னையும் புலம் பெயர்ந்தவர்களையும் தயவு கூர்ந்து நீங்கள் மன்னிக்க வேண்டும். உங்களைச் சிறைகளில் இருந்து விடுவிவிக்கத் தேவையான அழுத்தங்களை வழங்குவதற்குரிய வெகுசனப் போராட்டத்தை நாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் முன்னெடுப்பொம் என்று நீங்கள் உண்ணாவிர…

  15. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மாணவன் தற்கொலை - குளோல்தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:- 26 நவம்பர் 2015 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளான். தற்கொலைக்கு முன்பாக அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி ஐனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளான். கோப்பாய் வடக்கை சேர்ந்த 18 வயதுடைய ராஜேஸ்வரன் செந்தூரன் எனும் மாணவனே தற்கொலை செய்து கொண்டுள்ளான். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126293/language/ta-IN/article.aspx

  16. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எச்சரிக்கை [ வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015, 04:37.22 AM GMT ] இலங்கை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை உடனடியாக கிடைக்காமல் போகலாம் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது ஒன்றியத்தின் இலங்கை தூதுவர் டேவிட் டெலி இதனை தெரிவித்துள்ளார். அண்மைக்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைமீறல் விடயங்கள் இதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தனியார் வர்த்தகத்துறையினர் மனித உரிமைகள் விடயத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தம் தரவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். கொழும்பில் ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இலங்கையின் உள்ளுர் பிரச்சினைகள் தொடர்பில் பி…

  17. செந்தூரனின் மரணமும், புதிய தலை முறையினரின் நீறு பூத்த நெருப்பாக உள்ள உணர்வும் தமிழ் மக்களின் உரிமைக்காக சிறுவயதில் உயிர்த் தியாகம் செய்த செந்தூரனுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்ளுகின்றோம். அவரின்இழப்பால் பரிதவிர்த்து போயுள்ள அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலினை தெரிவித்துகொள்கின்றோம். அதே நேரம் இப்படியான செயல்களில் எந்த தன்மானத் தமிழனும் தங்கள் விலைமதிப்பற்ற உயிரை மாய்த்து விடவேண்டாம் என்றும்இந்நேரத்தில் கேட்டுக்கொள்கின்றோம். உங்கள் உணர்வுகளை அரசியலில் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியவாறு அகிம்சை வழியில் மேற்கொள்ளுங்கள்.இம் மாணவனின் இழப்பானது தமிழ் மண்ணில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். …

  18. தங்கப் புதையலை தோண்ட பரு. நீதிமன்றம் அனுமதி 2015-11-26 10:28:29 வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் உள்ள கடற்கரைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் காலத்தில் புதைத்ததாக கருதப்படும் தங்கப் புதையலை தோண்டுவதற்கு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மா. கணேசராஜா அனுமதியளித்துள்ளார். கடந்த வாரம் புதையல் தோண்டிய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களிடமும் மேற்கொண்ட விசாரணை அறிக்கையினை நீதிமன்றில் பொலிஸார் நேற்று சமர்ப்பித்தனர் அறிக்கையினை கவனத்தில் எடுத்த நீத வான் இன்று வியாழக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை வரையான காலப்பகுதிக்குள் தோண்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு …

  19. புதிய நோர்வே தூதுவர் வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்களுடன் சந்திப்பு! [Friday 2015-11-27 09:00] வடமாகாண மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறுகின்ற போதிலும், அரசாங்கம் அதுகுறித்து எதுவித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நோர்வே தூதுவருக்கு எடுத்துரைத்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இலங்கைக்கான தூதுவர் தோர்ப் ஜோர்ன் கோஸ்ரட்சீதருக்கும் இடையில் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடமாகாண மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறுகின்ற போதிலும், அரசாங்கம் அதுகுறித்து எதுவித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என வடமாகாண முதலமைச்சர் …

  20. சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம் [ Thursday,26 November 2015, 17:12:12 ] சவுதி அரேபியாவில் கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த பெண்னை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு முன்னால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை முஸ்லிம் முற்போக்கு முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. முஸ்லிம் முற்போக்கு முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நவ சமசமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி, அரசியல் வாதிகளை விடுவித்துக்கொள்ளும் தேசிய முன்னணி உட்பட பல தரப்பினர் கலந்துகொண்டனர். …

  21. மாவீரர் தினம் அனுஷ்டித்தால் கடும் நடவடிக்கை வேண்டும்! அரச தரப்பு சு.க. எம்.பிக்கள் போர்க்கொடி [ வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2015, 01:55.40 AM GMT ] விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்து மாவீரர் தினம் வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்படுமாயின், அதற்கு எதிராக அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தது. மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதானது நாட்டின் சட்டத்திட்டத்துக்கு முரணான செயல் என்பதால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு என்று அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூற…

  22. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு மோல்டாவில் ஆரம்பம் [ Friday,27 November 2015, 03:30:40 ] இருபத்தினான்காவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு மோல்டாவில், இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று வியாழக்கிழமை மோல்டாவை சென்றடைந்துள்ளார். இன்று ஆரம்பமாகும் 24ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 29ஆம் திகதிவரை சென்.ஏஞ்சலோ கோட்டையில் நடைபெறவுள்ளது. 53 அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள், இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவத்தை வகிக்கும் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உட்பட பல அரச தல…

  23. தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலுயுறுத்தி கோண்டாவில் தொடருந்து வழித்தடத்தில் தொடருந்து முன் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்ட மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனது சம்பவத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் சுதன்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மாவீரர்களை நினைவேந்தி நிற்கும் இந்நாட்களில் சிறிலங்காவின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி தனது உயிரை மாய்த்துக் கொண்ட மாணவனின் சம்பவம் எம்மையெல்லாம் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ தாயகத்தின் கோப்பாயைச் சேர்ந்த அகவை …

  24. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செந்தூரன் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அனைவரையும் அமைதி காக்குமாறு கோரியுள்ளது. மாணவன் செந்தூரனின் மரணம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடகஅறிக்கை பதினெட்டு வயது மாணவன் ராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம். அவருடைய உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை …

  25. அமெரிக்காவின் ஐ.நாவுக்கான தூதுவர் சமந்தா பவர் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கும் வந்திருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த சமந்தா பவர், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இலங்கையை அவதானித்துக் கொண்டு இருப்பதாகக் கூறியுள்ளார். சர்வதேச நாடுகள் எந்தளவு தூரம் இலங்கையைக் கவனிக்கின்றன என்பதும் சர்வதேசம் ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்தது? என்பதும் தமிழ் மக்கள் தெரியாதவர்கள் அல்ல. சர்வதேசம் எங்களைக் காப்பாற்றும் என்று நம்பி அழிந்து போன ஓர் இனத்திடம் வந்து, அமெரிக்க அதிபர் இலங்கையை அவதானித்துக் கொண்டிருக்கிறார். இலங்கைத் தமிழ் மக்களுக்கு அமெரிக்கா உதவும் எனக் கூறியுள்ளார். இலங்கைக்கும் கூடவே யாழ்ப்பாணத்துக்கும் வருகின்ற வெளிநாட்டுத் தூதுவர்களின் நோக்கம் என்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.