ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143499 topics in this forum
-
மீரியபெத்தை மக்கள் ஆர்ப்பாட்டம் பதுளை மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வீடுகளை கட்டித்தர வேண்டும் என கோரி இன்று பண்டாரவளையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மண்சரிவு இடம்பெற்று ஒருவருடம் முடிவடைந்துள்ள போதும் பாதிக்கப்பட்ட மக்கள் பூனாகலையில் உள்ள 200 வருட பழமையான தொழிற்சாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமக்கு மூன்று மாதத்தில் வீடுகள் கட்டித் தருவதாக அரசியல் வாதிகள் வாக்களித்த போதும் ஒரு வருடம் நிறைவடைந்து வீடுகள் கட்டித் தரவில்லை. மக்கள் தெனிய என்ற இடத்தில் புதிதாக வீடுகள் கட்டப்படுகின்ற போதும் நான்கு வீடுகள் மாத்திரமே கட்டப்பட்டுள்ளன. அவையும் முழுமை பெறாமல் உள்ளது. இந்நிலையில் மண்சரிவில் பாதிக்கப்பட்டு தொழிற்சாலையில் தங்க வைக…
-
- 0 replies
- 481 views
-
-
தடுப்பு அணைகள் அகற்றல் வரணி, எழுதுமட்டுவாள் பகுதிகளில் படையினரால் அமைக்கப்பட்ட தடுப்பு மண் அணைகள் கடந்த சில தினங்களாக இரண்டு மில்லியன் ரூபா செலவில் மாவட்டச் செயலக ஏற்பாட்டில் அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 1996ம் ஆண்டு முதல் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ள வரணி, எழுதுமட்டுவாள் ஆகிய மக்களின் வாழ்விடப் பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசத்தில் படையினர் நிலை கொண்டிருந்ததோடு அப்பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக பாரிய மண் தடுப்பணைகளும் அமைக்கப் பட்டிருந்தன. எனினும் இப்பகுதியில் தற்போது மக்கள் குடியிருக்க அனுமதிக்கும் நோக்கில் படையினர் வெளியேறியபோதும் படையினரால் அமைக்கப்பட்ட தடுப்பணைகள் அகற்றப்படாத நிலையிலேயே நீண்ட காலமாக காணப்பட்டது. …
-
- 0 replies
- 589 views
-
-
என்னை கைது செய்யப் போவதாக அறியக் கிடைத்துள்ளது: கம்மன்பில பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவின் ஊடாக தன்னை கைது செய்யத் தயாராகி வருவதாக, அறியக் கிடைத்துள்ளது என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன், சுயாதீன ஆணைக்குழுவில் அதிகமாக உள்ளவர்கள் அன்னத் தரப்பினருக்கு கடைக்குச் சென்றவர்களே எனவும், நிதி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொரும் அதில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் உதய கம்மன்பில இதன்போது தெரிவித்துள்ளார். கடந்த ஆட்ச…
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கை அரசு தங்களுடன் இணைந்து செயற்படும் மனோநிலையில் இல்லை : வியட்னாம் தூதுவர் இலங்கை அரசாங்கம் தங்களுடன் நடந்து கொள்வதில் தாமதத்தையும், இணைந்து முன்னேற வேண்டிய மனோநிலையிலும் அவர்கள் இல்லை என வியட்னாம் தூதுவர் வடக்கு முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டினார். யாழ். விஜயம் செய்த இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் பான் கியு து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் வியட்னாம் தூதுவரின் வருகை தொடர்பில் வடக்கு முதல்வர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வியட்னாம் தூதுவரின் பயணம் வடமாகாணத்திற்கான முதற் பயணமாக உள்ளது.அரசியல் காரணங்களுக்காகவும், வடமாகாணத்திற்கு வருகை தந்த…
-
- 0 replies
- 341 views
-
-
இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது யாழ்.உயர் தொழில்நுட்பவியல் மாணவர்களின் போராட்டம் யாழ்ப்பாண உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்களால் நேற்றைய தினம் மேற்கொண்ட வகுப்புப் புறக்கணிப்பு மற்றும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இக்கவனயீர்ப்பு போராட்டமானது 29/10/2015 அன்று கொழும்பு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இக்கற்கை நெறியானது பல்கலைக்கழக பட்டத்திற்கு சமமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 4 வருட ஆங்கில மொழி மூலமான உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா கற்க…
-
- 0 replies
- 542 views
-
-
இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்: 15 வயது சிறுவன் உட்பட ராமேசுவரம் மீனவர் 6 பேர் சிறைபிடிப்பு மன்னார் மீன்வளத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காகக் காத்திருந்த ராமேசுவரம் மீனவர்கள். இலங்கை கடற்படையினர், 15 வயது மீனவச் சிறுவன் உட்பட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை நேற்று சிறைபிடித்து வவுனியா சிறையில் அடைத்தனர். ராமேசுவரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்ற னர். கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண் டிருந்த ஒரு படகின் கீழ் பகுதியில் உள்ள புரொப்பல்லரில் மீன்பிடி வலை சிக்கியது. இதனால் படகு பழுதாகி நடுக்கடலில் நின்றது. அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் விசைப் …
-
- 0 replies
- 584 views
-
-
ரஜமஹா விகாரையில் ரூ.860,000 பணம் கொள்ளை மஹியங்கனை, ரஜமஹா விகாரையின் விஹாராதிபதியின் அறையிலிருந்து சுமார் 860,000 ரூபாய் பணம், வீடியோ கமரா மற்றும் பெறுமதிமிக்க கடிகாரம் என்பன நேற்று பகல் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விஹாராதிபதியின் அறைக்கு ஜன்னல் வழியாக நுழைந்தவர்கள் இப்பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/158101/ரஜமஹ-வ-க-ர-ய-ல-ர-பணம-க-ள-ள-#sthash.Sj27hQcl.dpuf
-
- 0 replies
- 425 views
-
-
எயிட்ஸ் நோயாளிகள் இலங்கையில் அதிகரிப்பு இலங்கையில் அண்மைக்காலமாக இளவயது எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது. இந்த வருடத்தின் கடந்த பத்து மாதங்களில் மட்டும் 15-25 வயதுக்குட்பட்ட 19 எயிட்ஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணியகத்தின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இவ்வாறு கண்டறியப்பட்ட எயிட்ஸ் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்றும் யுவதிகள் குறைவான எண்ணிக்கையிலேயே எயிட்ஸ் நோய் தாக்கத்துக்கு உள்ளாவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் ஒப்பீட்டளவில் இலங்கையின் ஏனைய மாவட்டங்களை விட கொழும்பு மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் கண்டறியப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. http://onlineuth…
-
- 0 replies
- 359 views
-
-
மணல் கடத்தல் வாகனத்தை நீண்ட தூரம் துரத்திப் பிடித்த பொலிஸார் கொடிகாமம், பாலாவி பகுதியிலிருந்து நேற்று இரவு மணல் கடத்தலில் ஈடுபட்ட கன்ரர் ரக வாகனத்தை நீண்ட தூரம் துரத்திப் பிடித்து கொடிகாமப் பொலிஸார் கைப்பற்றினர். எனினும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்களும் தப்பித்துச் சென்றுள்ளனர். குறித்த கன்ரர் ரகவாகனத்தை மீசாலைப் பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளனர். மணல் கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த பொலிஸார், கடத்தலில் ஈடுபட்ட கன்ரர் வாகனத்தை மறித்தனர். எனினும், அந்த வாகனம் நிறுத்தாமல் தொடர்ந்து சென்றமையால் பொலிஸார் வாகனத்தை துரத்தினர். இதன்போது, மணல் ஏற்றிச் செல்லப்பட்ட வாகனத்தில் இருந்தவர்கள் வாகனத்தில் இருந்த மண…
-
- 0 replies
- 620 views
-
-
போர் முடிவுற்றும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை : வடக்கு முதல்வர் கடந்தகால தவறுகளை சீர் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கார்த்திகை மாதம் மரம் நடுகை மாதமாக வடமாகாண சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மரம் நடுகை செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தநிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், காட்டு மரங்கள் அழிக்கப்பட்டதால், காட்டில் மழை இல்லாமல் போய் விட்டது. சுவாசிக்க காற்று இல்லாமல் போய்விட்டது.நாடு விட்டு நாடு வந்து, கடற்கரையோரங்களில் மிதக்கும் சையிரியன் தாராக்கள் போன்ற பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடம் இல்லாமல் ப…
-
- 0 replies
- 388 views
-
-
யாழ். கோண்டாவில் மக்கள் நலன்பேணும் கழகத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவும், உதவித் திட்ட நிகழ்வும், பிரபல சட்டத்தரணி ஞானலோஜினி சிவஞானம் அவர்களுடைய சேவைக்கான கௌரவிப்பு விழாவும் நேற்று பிற்பகல் 2மணியளவில் நடைபெற்றது. பிரபல சட்டத்தரணி ஞானலோஜினி சிவஞானம் அவர்கள் அந்தப் பகுதியிலே இருக்கின்ற பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்காக மிகப் பெரிய அளவிலே உதவி வருகின்றவர். மேற்படி கழகத்தின் விழாவும், பிரபல சட்டத்தரணி ஞானலோஜினி சிவஞானம் அவர்களின் கௌரவிப்பு விழாவும் கோண்டாவில் மக்கள் நலன்பேணும் கழகத்தின் தலைவர் செ.ஜெகபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், சிறப்பு விருந்தினர்களாக…
-
- 0 replies
- 387 views
-
-
கொடிகாமம், பாலாவி வடக்கு பகுதியைச் சேர்ந்த குணரட்ணம் சஞ்சீவினி (வயது 15) என்ற சிறுமியை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) மதியம் முதல் காணவில்லையென சிறுமியின் உறவினர்களால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் சில மாதங்களுக்கு முன்னர் குடும்பச் சண்டை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிச் சென்ற நிலையில் சிறுமியும் அவரது சகோதரரும் தந்தையுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் தானும் வீட்டை விட்டுச் செல்லவுள்ளதாக சிறுமி அடிக்கடி கூறி வந்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். t: http://www.tamilmirror.lk/158108#sthash.2kMAvdxc.dpuf
-
- 0 replies
- 421 views
-
-
அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு பொன்னான சந்தர்ப்பம் உருவாகியள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் கூறியுள்ளதாவது, தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் அரசியல் தீர்வுத் திட்டம் எட்டுவது தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடிய சாத்தியம் எழுந்துள்ளது.இந்த நிலைமையானது மிகவும் ஆரோக் கியமானது என்றார். http…
-
- 0 replies
- 273 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மௌனமாக இல்லாது உறுதியான நிலைப்பாட்டை வெளியிட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 250இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் நீண்ட காலமாக எவ்வித காரணமும் இன்றி அரசியல் கைதிகளாக சிறையில் வாடி வருகின்றனர். குறிப்பாக விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்ற போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டும் பல உயர் மட்டத்தினர் அரசியல் செல்வாக்கினால் அரசின் செல்லப்பிள்ளைகளாகவும் வலம் வரும் நிலையில் நீர் கொடுத்தார்கள், உணவு கொடுத்தார்கள் என்ற குற்…
-
- 0 replies
- 308 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பனை மரங்கள், அநாவசியமான முறையில் அழிக்கப்பட்டு வருவதை தடுத்துநிறுத்த வேண்டும் என கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார். பச்சிலைப்பள்ளி (பளை), பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகளவான பனைமரங்கள் அழிக்கப்படுவதாக முறைப்பாடுகள் தொடர்ந்து கிடைக்கப்பெறுகின்றன. வீட்டுத்திட்டத்துக்கான தேவை போன்ற மிக அவசியமான தேவைக்கு மட்டும் பனைமரங்களை பயன்படுத்தவேண்டும். அதனை விடுத்து வர்த்தக ரீதியான நோக்கத்துடன் பனைமரங்கள் அழிப்பதை தடுக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். http://www.tamilmirror.lk/158087/பன-மரங-கள-அழ-க-கப-பட-வத-தட-க-க-வ-ண-ட-ம-#sthash.Gr6ty0ap.dpuf
-
- 0 replies
- 361 views
-
-
வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது – கோதபாய - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 02 நவம்பர் 2015 வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தம்மீது சுமத்தியுள்ள கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித்தேவனுடன் தாம் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். புலித்தேவன் மட்டுமன்றி பிரபாகரன் கூட சரணடைந்திருந்தால் மீ…
-
- 0 replies
- 418 views
-
-
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மத்தளவிற்கு திசை திருப்பப்பட்டது: 02 நவம்பர் 2015 ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று மத்தள விமான நிலையத்திற்கு திசை திருப்பப்பட்டுள்ளது. குறித்த விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது இவ்வாறு மாத்தளை மஹிந்த ராஜபக்ஸ விமான நிலையத்திற்கு திசை திருப்பப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான நிலையத்திற்கு சொந்தமான யூ.எல். 230 என்ற விமனமே இவ்வாறு திசை திருப்பப் பட்டுள்ளது. பண்டாரநாயக்க விமான நிலையத்தில் நிலவி வரும் கடுமையான பனியுடன் கூடிய காலநிலையினால் இவ்வாறு விமானம் திசை திருப்பப்பட்டுள்ளது. அண்மைய வாரங்களில் இ;வ்வாறு திசை திருப்பப்பட்ட இரண்டாவது விமானம் இதுவென்பது குறிப்பிட…
-
- 0 replies
- 374 views
-
-
நேரம் வரும் போது இலங்கை வருவேன்! - மைத்திரிக்கு அருட்தந்தை இம்மானுவேல் பதில் [Monday 2015-11-02 09:00] உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்காக மக்களுக்கும் அவர்களது தலைவர்களுக்கும் உதவக்கூடிய பொருத்தமான நேரம் எனக்கு அமையும்போது இலங்கைக்கு வருவேன் என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல், தெரிவித்துள்ளார். உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்காக மக்களுக்கும் அவர்களது தலைவர்களுக்கும் உதவக்கூடிய பொருத்தமான நேரம் எனக்கு அமையும்போது இலங்கைக்கு வருவேன் என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல், தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை உலகத் தமிழர் பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை…
-
- 0 replies
- 540 views
-
-
ஆனந்த சங்கரியின் கட்சியில் இணைந்து கொள்வதற்காக வெயிட்ங் லிஸ்ட்டில் காத்திருக்கும் கருணா: 02 நவம்பர் 2015 ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்வதற்காக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் காத்திருப்புப் பட்டியலில் (வெயிட்டிங் லிஸ்டில்) காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கருணா அம்மானுக்கு கட்சியின் உறுப்புரிமை வழங்குவது குறித்து இன்னமும் தமிழர் விடுதலைக் கூட்டணி இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். கட்சியில் இணைந்து கொள்வது குறித்து கருணா, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொஞ்ச காலத்திற்கு காத்திருக்குமாறு தாம் கருணாவிடம் கோரியதாக ஆனந்தசங்க…
-
- 0 replies
- 302 views
-
-
தாய்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு [ திங்கட்கிழமை, 02 நவம்பர் 2015, 02:26.21 AM GMT ] நாட்டினுள் சுதந்திரம், ஜனநாயகம் உறுதியாகியுள்ளமையினால் மீண்டும் தாய் நாட்டிற்கு வருமாறு தாய்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நேற்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் மூலம் உறுதியளித்துள்ள அனைத்து உரிமைகளை வலுப்படுத்துவதற்கு சுயாதீன விசாரணைக் குழு நிறுவப்படுவதற்கு தங்கள் அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங…
-
- 0 replies
- 362 views
-
-
சங்குப்பிட்டி பாலத்தினூடாக மரக்கடத்தல் நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி, பூநகரியின் சங்குப்பிட்டி பாலத்தினூடாக தினமும் பெருமளவு மரங்கள் யாழ்ப்பாணத்துக்கு கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மீள்குடியேற்றம் நடைபெற்று கடந்த ஐந்தாண்டுகளில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் மற்றும் பிரதேச செயலக மட்டக் கூட்டங்களில், சங்குப்பிட்டிப்பாலம் வழியாக யாழ்ப்பாணத்துக்கு விறகுகூட கொண்டுசெல்லக் கூடாதென்ற கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட நிலையில் பெருமளவிலான பச்சைமரங்கள் சங்குப்பிட்டி வழியாக கொண்டுசெல்லப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பூநகரிப் பிரதேசம், உவராபத்தினை எதிர்கொண்டுள்ள பிரதேசமாகும். மரங்களை அழிப்பதனூடாக பூநகரியில் எஞ்சியுள்ள ப…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல மருத்துவப் பிரிவு கூறியுள்ளது. இலங்கையில் நாளொன்றுக்கு சராசரி 650 கருக்கலைப்பு அதேவேளை இலங்கையில் 77 வீதமான கருத்தரிப்புகள் எதிர்பாராத கருத்தரிப்புகள் என்று சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுவதாகவும் தமது ஆய்வுகள் கூறுவதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து பிபிசியிடம் பேசிய கிழக்கு மாகாண சமூக நல மருத்துவ நிபுணரான டாக்டர் எஸ். அருள்குமரன், கருக்கலைப்புக்கள் 1000 என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 650ஆக குறைந்துள்ளதாக கூறுகிறார். கருக்கலைப்புகள் மருத்துவ காரணங்களுக்காக மாத்திரமே அரசாங்க மருத்துவமனைகளில் நடப்பதாகவும், ஆனாலும் சில சட்டவிரோத நிலையங்கள் இதற்காக…
-
- 3 replies
- 696 views
-
-
ஜனாதிபதி மாளிகை நிலக்கீழ் பங்களாவிலிருந்து துறைமுகத்திற்கு செல்ல சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டது? 01 நவம்பர் 2015 கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த ஆடம்பர பங்களாவிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு செல்வதற்கான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னை இனம் காட்டவிரும்பாத ஜனாதிபதி செயலக பணியாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். நான் கடந்த பல வருடங்களாக அங்கு பணியாற்றுகின்றேன், நான் அறிந்த வகையில் மகிந்த ராஜபக்ச இரண்டு தடவையே அங்கு வந்துள்ளார், நாமல் மற்றும் யோசிதவும் அவரது ரக்பி நண்பர்களுமே அதனை பயன்படுத்துவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகை விடுதலைப்புலிகளின் இலக்குகளாக …
-
- 1 reply
- 239 views
-
-
பெரும்பான்மை வாதமே நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியது வடக்கு மற்றும் தெற்கில் காணப்பட்ட பெரும்பான்மை வாதமே சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டில் சமாதானத்தையும்அமைதியையும் ஏற்படுத்த முடியாமல் போனமைக்கு பிரதான காரணம் என வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். வடக்கில் எல்.ரி.ரி.ஈயினர் தமிழ் சமூகத்தின் பெரும்பான்மை வாதத்தை உறுதிப்படுத்தவே முஸ்லிம்களை வெளியேற்றி யிருந்தனர். அதேபோல தென்பகுதியில் தமது பெரும்பான்மைவாதத்தை காண்பிப்பதற்கே அடிப்படை வாதத்தை தூண்டி விடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் தற்பொழுது தோன்றியிருக்கும் வரலாற்று முக்கியத்துவமான சந் தர்ப்பத்தை பயன்படுத்தி கடந்தகால அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு கலந்துரையாடல்கள…
-
- 1 reply
- 309 views
-
-
யாழில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்துவரும் பருவமழை காரணமா வெள்ளப் பாதிப்பு யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்துவரும் பருவமழை காரணமாக கரையோரப்பகுதிகள் மற்றும் தாள்நிலப்பரப்புகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக நாவாந்துறை, பெம்மைவெளி, வசந்தபுரம், சூரியவெளி, காக்கைதீவு, குருநகர் போன்ற பகுதிகளிலேயே மழை வெள்ளம் தேங்கியுள்ளது. இனிவரும் நாட்களிலும் தொடர் மழை பெய்யுமானால் தமது குடியிருப்புக்களில் இருந்து இடம்பெயர வேண்டிய அவல நிலை ஏற்படும் என்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் தமது உடமைகளை பாதுகாத்துக் கொள்வதில் சிக்சல் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெள்ள…
-
- 2 replies
- 908 views
-