Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிப்பாய் உயிரிழப்பில் சந்தேகம்: உயரதிகாரி கைது வேலணையில் கடற்படைச் சிப்பாய் மரணத்திற்கு காரணம் உயர் அதிகாரிகளின் பாலியல் தொல்லை என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் படைமுகாமின் உயர் அதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வேலணையிலுள்ள கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படைச் சிப்பாயான கமல் ஜெயதிலக (வயது – 21) என்பவரே கடந்த புதன்கிழமை தனது உயிரை மாய்த்துள்ளார். அவர் படைமுகாமிலுள்ள உயரதிகாரிகளால் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையே அவரது உயிர் துறப்புக்குக் காரணம் என்று அவரின் பெற்றோரால் விசாரணையில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விசாரணை இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் விசாரண…

  2. நாளை அரசியல் கைதிகள் தொடர்பான விசேட கூட்டம் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை அலரிமாளிகையில் விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேற்படி விசேட கூட்டத்தில் சிறைச்சாலைகள் அமைச்சர், சிறைச்சாலைகள் ஆணையாளர், சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர் என தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விவரங்களையும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கான கார…

  3. கலை நிகழ்ச்சிக்காக ஒரு நிமிடத்துக்கு இரண்டு இலட்சம் ரூபா செலவிட்ட கோத்தபாய! [Sunday 2015-10-25 08:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் கலை நிகழ்ச்சிகளுக்காக நிமிடம் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வழிகாட்டல்களுக்கு அமைய பெல்லன்வில உடற் பயிற்சி பாதை மற்றும் உணவு கட்டமைப்பு ஆகியனவற்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்விற்காக இரண்டு கோடி எழுபத்தாறு லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் கலை நிகழ்ச்சிகளுக்காக நிமிடம் ஒன்…

  4. வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியுள்ள அரசியல்வாதிகள் குறித்து தகவல் தந்தால் சன்மானம்! [Sunday 2015-10-25 08:00] வெளிநாட்டு வங்கிகளின் கணக்கு வைத்திருக்கும் அரசியல் பிரமுகர்களின் விபரம் பற்றி தகவல் வழங்கினால், மொத்த வைப்புப் பணத்தில் மூன்று வீதத்தை சன்மானமாக வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பணம் அரசாங்கத்தால் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், தகவல் வழங்கியோருக்கான சன்மானத்தை வழங்குவதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு வங்கிகளின் கணக்கு வைத்திருக்கும் அரசியல் பிரமுகர்களின் விபரம் பற்றி தகவல் வழங்கினால், மொத்த வைப்புப் பணத்தில் மூன்று வீதத்தை சன்மானமாக வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பணம் அரசாங்கத்தால் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், த…

  5. லசந்தவின் படுகொலை விசாரணைகளை மேற்கொண்டுள்ள பிஎஸ் திசேராவிற்கு மரணஅச்சுறுத்தல்: 25 அக்டோபர் 2015 சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ள குற்றப்புலானய்வு பிரிவு அதிகாரி பிஎஸ் திசேராவிற்கு மரணஅச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 21ம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தான் சென்று கொண்டிருக்கையில் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் ஓருவர் லசந்தவின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள முயல்கின்றாயா என சிங்கள மொழியில் கேட்டு தகாத வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டதாக திசேரா தெரிவித்துள்ளார். முதலில் தான் அந்த அச்சுறுத்தலை அலட்சியம் செய்தபோதிலும் பின்னர் அந்த அழைப்பை மேற்கொண்டது யார் என விசாரிக்க முற்பட்டதாகவும்,அதன்பின்னர் தான்…

  6. வெள்ளைக் கொடிச் சம்பவம் கடந்த அரசாங்கம் இழைத்த வரலாற்றுத் தவறாகும் - பிரட் அடம்ஸ்: 25 அக்டோபர் 2015 வெள்ளைக் கொடிச் சம்பவம் கடந்த அரசாங்கம் இழைத்த வரலாற்றுத் தவறாகும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். சரணடைவதற்காக வெள்ளைக் கொடி ஏந்த வந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை மஹிந்த அரசாங்கம் சுட்டுக் கொலை செய்திருக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக் கொடி சம்பவம் இடம்பெற்றிருக்காவிட்டால் இந்த விடயங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். குற்ற விசாரணைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உட்படுத்தப்பட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலித் தலைமைகளுக்கு எதிரா…

  7. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் வலியுறுத்தினார். இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரøவயில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இது உங்களுடைய தீர்மானம். இதற்கு நீங்கள்தான் முழுச் சொந்தக்காரர். உங்களது இந்த முயற்சிக்கு நாங்கள் ப…

  8. ஐ.நா. தீர்மானம் வரவேற்கத்தக்கது. இதை ஏற்று அரசு பொறுப்புக்கூறவேண்டும். இதை நாமும் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். போரால் பாதிக்கப்பட்ட மக்களைப் புறக்கணித்துவிடமுடியாது. அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அவர்கள் கௌரவமாக வாழவேண்டும். இழப்பீடு வழங்கப்படவேண்டும். உண்மை கண்டறிப்படவேண்டும். இவற்றை செய்தால்தான் நல்லிணக்கத்துக்கான வழி திறக்கப்படும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்ப…

  9. குடும்பஸ்தரின் எலும்புக் கூடு மீட்பு -ஏ.எஸ்.எம்.யாசீம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்பட்ட புவனேந்திரன் தேவராசா (43 வயது) என்ற குடும்பஸ்த்தரின் எலும்புக்கூடு, நொச்சிக்குளம் -சாந்திபுரம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று மாலை(23) மீட்கப்பட்டுள்ளதென திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 8ஆம் மாதம் 27ஆம் திகதி தேவராசாவின் மனைவி, தனது கணவன் காணமல் போயுள்ளதாகவும் அதற்கு தர்ஷன் என்பரே காரணம் எனவும் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். கடந்த 08ஆம் மாதம் 27ஆம் திகதி தர்ஷன் என்பவர் தனக்கு அழைப்பை ஏற்படுத்தி காட்டுப்பகுதியில் கணவரை தடுத்து வைத்துள்ளதாகவும் பணம் மற்றும் நகைகளை கொண்டு வந்து கொடுத்து விட்டு அவரை மீட்டு செல்லும்ப…

  10. 'புலித்தேவனை காப்பாற்றும் தேவை மஹிந்த அரசுக்கு இருந்தது' bbc வெளிநாட்டு பிரமுகர் சந்திப்பில் புலித்தேவன் மற்றும் நடேசன் (ஆவணப்படம்) விடுதலைப்புலிகளின் புலித்தேவனை காப்பாற்று தேவை மஹிந்த அரசாங்கத்துக்கு இருந்ததாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்ததாகக் கூறப்படுகின்ற விடுதலைப்புலிகளின் சமாதான செயகத்தின் தலைவர் புலித்தேவனை காப்பாற்றும் தேவை ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கூறியிருக்கிறார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேறிய தீர்மானம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடந்தபோதே பிரத…

  11. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலசிங்கம் பிரசாந்தனை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/articles/2015/10/23/தமவிபுவின்-செயலாளர்-பிரசாந்தன்-கைது

  12. ஐ.நாவின் பிரதான நோக்கங்களை இலங்கை நிறைவேற்றும் மனித உரிமைகளைப் பேணுதல் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் ஆகியன ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நோக்கங்களாக இருக்கின்றது. இவற்றை பூரணமாக பொறுப்புடன் நிறைவேற்ற இலங்கை தயாராக இருக்கின்றது. இதன்பிரகாரம் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு நாம் இலங்கையில் ஒரு புதிய நிகழ்ச்சித் திட்டத்தையும் செயற்றிட்டத்தையும் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நீ…

  13. பேராதனை பல்கலைக்கழகம் புதிய மருந்து கண்டுபிடித்து சாதனை பேராதனை பல்கலைக்கழகத்தினால் பாம்பு கடிக்கான புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் தம்மிக கவரம்மான உட்பட்ட குழுவினரால் இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பலனாக இந்த மருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். இந்த மருந்தை அறிமுகப்படுத்துவதால் பல பிரதிபலன்கள் கிடைக்கும் என்று பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=73781

  14. ராஜித கூறியிருப்பது தர்மசங்கட நிலையை ஏற்படுத்தும்: சங்கரி இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகள் இல்லையென சுகாதார அமைச்சர் ராஜித சோனரத்ன கூறியிருப்பது சிறைக் கைதிகள் மத்தியில் மீண்டுமொரு சங்கடமான நிலைமையை ஏற்படுத்திவிடும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆனந்தசங்கரி வெள்ளிக்கிழமை (23) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லையென்று தெரிவித்தமை விரைவில் மீண்டுமொரு சங்கடமான நிலைமையை சிறைக்கைதிகள் மத்தியில் ஏற்படுத்திவிடும் என்ற ஐயம் எனக்கு எழுக்கிறது. கைதிகள் குற்றம் செய்தது அல்லது இல்லை என்பது எமது பிரச்சனை இல்லை. அவர்கள் நீண்டகாலம் …

  15. வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் வடக்கு மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நேற்று ஜும்ஆத் தொழுகையை தொடர்ந்து மருதானை ஷாஹிரா கல்லூரிக்கு முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பும் தேசப்பற்று இளைஞர் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் வடமாகாண முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்டு இம்மாதத்துடன் கால் நூற்றாண்டை தாண்டும் நிலையில் அம்மக்களின் மீள்குடியேற்றம் கேள்விக்குறியாக இருப்பதையிட்டு அதனை உடன் நிவர்த்தி செய்யுமாறு கோரி இதன் போது அரசுக்கு கோரிக்கைஆர்ப்பாட்டக்காரர்களால் விடுக்கப்பட்டது. முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் உறுப்ப…

  16. வெளிமாவட்ட வியாபாரிகளின் அங்காடிச் சந்தைகளால் பாதிப்பு உள்ளூர் உற்பத்திகளை ஊக்கு விப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு நாம் முயற்சித்து வருகின்றோம். ஆனால் சில உள்ளூராட்சிச் சபைகளின் உதவியுடன் இங்கே நடத்தப்படும் வெளிமாவட்ட வியாபாரிகளின் அங்காடிச் சந்தைகளால் எமது வியாபாரிகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது. இவற்றைச் சீர்செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம். எனவே இது குறித்து வடக்கு மாகாண சபையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று யாழ். வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தல் என்பதற்கு அமைவாகச் சித்தன்கேணிப் பகுதியைச் சேர்ந்த ஏ.ஆர்.பி.பாதணிகளை விற்பனை முகவர்களிடம் அறிமுகம் செய்…

  17. கே.கே.எஸ். சந்தி வரையாவது மக்களைக் குடியமர்த்துங்கள் தல்செவன விடுதிக்கு எல்லோரையும் தாராளமாகச் சென்று வர அனுமதிக்கும் படையினர் பின்னர் எம்மை ஏன் மீளக்குடியமர அனுமதிக்கவில்லை? இவ்வாறு மக்கள் தமக்குக் கடும் நெருக்கு வாரங்கள் கொடுக்கின்றனர். எனவே, உடனடியாக கே.கே.எஸ். சந்தி வரையிலாவது மக்களை மீளக்குடியமர அனுமதிக்க வேண்டும் என்று பலாலியில் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் அரச அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி வசந்த பண்டார தலைமையில் பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தில் நேற்றுக் காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், இராணுவ அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் உள்ள…

  18. சுன்னாகம் மின் நிலையத்தை சீனக்குழு நேற்றுப் பார்வை சுன்னாகத்திலுள்ள 3 மின் உற்பத்தி நிலையங்களையும், சில கிணறுகளையும் சீனாவிலிருந்து வந்த குழுவினர் நேற்றுப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அடுத்த வருடம் அவர்கள் ஆய்வில் ஈடுபடுவதாகவும் கூறிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. சீனாவிலுள்ள விஞ்ஞான அக்கடமியிலிருந்து சுமார் 15 பேர் கொண்ட பேராசிரியர் குழுவினர் இலங்கை வந்துள்ளனர். அநுராதபுரம், பொலனறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுநீரக நோய் அதிகமாகவுள்ளதால் அது பற்றிய ஆய்வில் அந்தக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒரு குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் யாழ். அரச அதிபர் உள்ளிட்ட தி…

  19. ராஜபக்சர்களின் லண்டன் கணக்கில் 3.88 பில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள்? ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 3.88 பில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள் வைப்பு செய்யப்பட்டுள்ள வங்கி கணக்கு தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகியுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் ஊடாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜபக்ச குடும்பத்தின் டுபாய் வங்கி கணக்கு தொடர்பில் பரவும் கதைகள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று கேள்வியெழுப்பிய சந்தர்ப்பத்தில் அவர் இதனை வெளியிட்டுள்ளார். லண்டன் வங்கி கணக்கு மற்றும் ஏனைய தகவல்களை தற்போது வெளியிடமுடியாதென கூறிய அவர் வங்கி கணக்கு தொடர்பில் மேலதிக விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வங்கி கணக்கு போலியானதென வெளியாகும் ஊடக அறிக்கை…

  20. தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்ட விவகாரத்தில், ஒரு தற்காலிக இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. கடந்த 11ஆம் திகதி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 217 தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம், ஆறாவது நாளை எட்டியிருந்த போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியின் பேரில் வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மூலம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைப் பயன்படுத்தி, அரசியல் கைதிகளிடம் இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார் ஜனாதிபதி. அரசியல் கைதிகள், தம்மைப் பொதுமன்னிப்பு அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்ய வேண்டும் என்றே கோரியிருந்தனர். ஆனால், அவர்களின் அந்தக் கோரிக்கை அரசாங…

  21. வடமாகாண இலக்கிய பெருவிழா கிளிநொச்சியில் கோலாகலம் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வடக்கு மாகாண இலக்கிய பெருவிழா இவ் வருடம் கிளிநொச்சி கூட்டுறவாளா் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. நேற்றும்,இன்றுமாக இரண்டு நாட்களும் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இவ்விழா இடம்பெறுகின்றது.நேற்று பி.ப 2 மணிக்கு ஆரம்பமாகிய நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அ.அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது. நேற்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற .உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அழைக்கப்பட்ட போதிலும், அவர் சமூகம் கொடு…

  22. ஊடகங்களே தன்னை கொண்டயா என்று முத்திரை குத்தியது வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியான சேயா கொலையுடன் தொடர்புடைய ஒப்புதல் வாக்குமூலமடங்கிய போலிப்பத்திரத்தில், என்னை கட்டாயப்படுத்தி கைச்சாத்திட வைத்தார்கள் என்று 'கொண்டயா' என்று அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்த தெரிவித்துள்ளார். அவரை பிணையில் எடுப்பதற்காக அவரது தாயார் கையொப்பம் இட்டுள்ளமையால் அவரை விடுதலை செய்ய, கம்பஹா நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதியளித்ததையடுத்து, முதன்முறையாக ஊடகங்களுக்கு முன்னால் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அதன்பின்னர், ஒரு நீண்ட வாக்குமூலத்தில் கையொப்பமிடதான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அ…

  23. உயர்மட்டக் கட்டளையே பாலச்சந்திரன் கொலை வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் களத்தில் இருந்த இராணுவத்தினருக்கு இருக்கவில்லை என்றும், உயர்மட்டத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையின்படியே அவ்வாறு நடைபெற்றது என்றும் கூறப்படுகின்றது. கட்டளையிட்டவர்களை விசாரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் அவசியம். இதற்கான பரிந்துரையையும் பரணகம குழு முன்வைத்துள்ளது.இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கைக்கே உரித்தான பாணியில் உள்ளக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படும் என்றும், அத்தகைய விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்றும…

  24. வவுனியாவில் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாக நடந்த தில்லு முல்லு…October 24, 2015ஆசிரியர் - Editor II வவுனியா, புளியங்குளம் வடக்கு பகுதியில் வழங்கப்பட்டுள்ள இந்திய வீட்டுத் திட்ட வீடுகளில் மோசடி பல இடம்பெற்றுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் குறித்த பகுதியில் வீடுகள் அற்ற பலர் இன்றும் கொட்டில்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருந்து தமக்கு ஒரு வீடு கிடைக்காதா என ஏங்கியவாறு அப் பகுதி கிராம அலுவலர் தனுஜா மற்றும் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் ஆகியோரிடம் பல தடவை கேட்ட போதும் சாட்டுப்போக்குகள் கூறி அவர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் புறக்கணிக்கபட்டுள்ளன. ஆனால் அப் பகுதியல் நிரந்தர வீடுகள் உள்ள சிலருக்கும், அங்கு வசிக்காது வேறு இடங்களில் வசிக்கும் சிலருக்கும் வீடுகள…

    • 0 replies
    • 706 views
  25. யாழ்ப்பாணத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 483.06 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 செயற்றிட்டங்கள், 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுக்கு இடையில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருபாலை நீர் வழங்கலை செயற்படுத்த, 64.51 மில்லியன் ரூபாயும் பருத்தித்துறை நீர்வழங்கல் திட்டத்திலிருந்து இன்பசிட்டி, சக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு நீர்வழங்க 33.17 மில்லியன் ரூபாயும், பொக்கனையிலிருந்து சுன்னாகம், நிலாவரை பகுதிக்கு நீர் வழங்க 35.00 மில்லியன் ரூபாயும், வல்வெட்டித்துறை நீர்வழங்கல் திட்டத்திலிருந்து அக்கரைக்கு நீர் வழங்க 12 மில்லியன் ரூபாயும், யாழ்.மாவட்ட கிராமிய மட்டத்திலான நீர் வழங்கலைச் செயற்படுத்த 338.38 மில்லியன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.