ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
போர்க்குற்ற விசாரணையில் ஜப்பானிய நீதிபதி! [Wednesday 2015-10-21 08:00] மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையின் போது இலங்கை, ஜப்பானிய நீதிபதியின் சேவைகளை பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைகளில் பங்கேற்ற ஜப்பானிய நீதிபதி மோட்டோ நொகுச்சியினுடைய சேவைகளை பெற்றுக்கொள்வது சிறப்பாக இருக்கும் என ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, தனது அண்மைய ஜப்பானிய விஜயத்தின்போது தனக்கு கூறியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்தார். மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையின் போது இலங்கை, ஜப்பானிய நீதிபதியின் சேவைகளை பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணாமல் போனோரைக் …
-
- 1 reply
- 458 views
-
-
டாக்டர் அமரர் செல்வி சிவா சின்னத்தம்பியினால் கொழும்பு பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கென அன்பளிப்பு செய்யயப்பட்ட கொழும்பில் உள்ள இல்லத்தில் பெறுமதிமிக்க தளபாடங்கள் உள்ளிட்ட மிதக்கும் பொருட்களை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் சபை முதல்வரையடுத்து ஐந்தாவது ஆசனத்திற்கு சொந்தமானவரே திருடிச் சென்றுள்ளார். இந்தத் திருட்டு தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்ற நிலை என்ன என்று எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவான அனுர குமார திசாநாயக்க நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல கூறுகையில் குறித்த சம்பவமானது 2014 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகும். இது தொடர்பில் இரகசிய பொலி…
-
- 1 reply
- 830 views
-
-
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் அமுல்படுத்தப்படுவதை, மஹாநாயக்க தேரர் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பிரீஸ் கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து சமயத் தலைவர்களுக்கு ஜி.எல்.பிரீஸ் எழுத்துமூலம் அறிவித்துள்ளார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மாத்திரமே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையால் அழுத்தம் கொடுக்க முடியும் என அவர் கூறினார். எனினும், நாட்டில் அரசியல் மறுசீரமைப்பை உரு…
-
- 1 reply
- 325 views
-
-
சந்திரிகா கொலைமுயற்சி: சிறை அளிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு 300 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ள இருவர், அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். 291 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வேலாயுதன் வரதராஜா மற்றும் 300 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரகுபதி ஷர்மா ஆகிய சந்தேகநபர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தங்களின் மனுக்களை நேற்றுத் தாக்கல் செய்துள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், பொலிஸாருக்கு அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை பயன்படுத்தியே அவர்கள் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குற்ற ஒப்புதல் வாக்…
-
- 1 reply
- 188 views
-
-
யாழ். பிராந்திய மருத்துவர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளில் நிலவும் மருத்துவர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்-தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப ஆளணி மதிப்பீட்டைச் செய்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்க யாழ்.பிராந்திய சுகாதார சேவை கள் பணிமனைக்குட்பட்ட கிளையின் பிரதிநிதிகளுக்கும் சுகாதார அமைச்சருக்குமான சந்திப்பு ஒன்று கொழும்பில் இடம்பெற்றது. அதில் சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்க யாழ்.பிராந்தியக் கிளையின் தலைவர் மருத்துவர் த.பால முரளி தெரிவித்தார். இது தொடர்பில் அவ…
-
- 1 reply
- 310 views
-
-
ஐ.நா தீர்மானம் குறித்து எழுத்து மூல யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை: 22 அக்டோபர் 2015 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் குறித்து எழுத்து மூல யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கட்சிகளிடம் கோரியுள்ளார். இரண்டு வார காலத்திற்குள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற கட்சிப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு மாற்றுக் கருத்துக்கள், வித்தியாசமான யோசனைகள் மற்றும் விமர்சனங்கள் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற…
-
- 0 replies
- 347 views
-
-
இலங்கை தொலைக்காட்சிகளில் செனல்4 ஆவணப்படம் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டும் - கலெம் மக்ரே:- 22 அக்டோபர் 2015 இலங்கை தொலைக்காட்சிகளில் செனல்4 ஊடகத்தினால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படம் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டுமென ஊடகவிலயாளர் கலெம் மக்ரே கோரியுள்ளார். ஆவணப்படம் தொடர்பில் மெக்ஸ்வெல் பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு மட்டுமன்றி இலங்கை அரசாங்கமும் ஆவணப்படத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இனியும் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஆவணப்படத்தை ஒளிபரப்புச் செய்வதனை தாமதிக்கக் கூடாது என அவர் தெரிவி;த்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை முடிவுக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சட்ட ரீதியான் பாதுகாப்பைத் தருமாறு, இலங்கைப் பாலியல் தொழிலாளர் சங்கம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைக் கோரியிருக்கிறது. இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய, அந்த சங்கத்தின் துணைத் தலைவி பி.மகேஸ்வரி தற்போது பாலியல் தொழிலில் 8000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபடுவதாகத் தெரிவித்தார். பலத்த வறுமை காரணமாகவே பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்ட வருவதாக தெரிவித்த அவர் சட்டத்தில் இருக்கின்ற சில அவகாசங்களை பயன்படுத்தி போலீசார் அவர்களைக் கைது செய்து வருவதாக குற்றம் சாட்டினார். எனவே பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு பாதுகாப்பைத் தரக்கூடிய சட்ட திருத்தங்களை அரசாங்கம் கொண்டுவரவேண்டும் என்று பி.மகேஸ்வரி கூறினார். தங்களது உரிமைகளை பாதுகாப்பதற்கு …
-
- 20 replies
- 2.5k views
-
-
இலங்கையை மேற்குலகத்தின் அடிமையாக்குவதற்கு முயற்சி இலங்கையையும், இந்த நாட்டு மக்களையும் மேற்குலகத்தின் அடிமைகளாக மாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு முனைகின்றது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மகிந்த ஆதரவு அணியினர் கடந்த திங்கட்கிழமை விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமைந…
-
- 1 reply
- 387 views
-
-
இரு தரப்பினராலும் குற்றம் இழைக்கப்பட்டது என நாம் உறுதியாக கூறவில்லை! எமது அறிக்கை குறித்து தவறான கோணத்தில் தகவல்கள் வௌிவந்துள்ளது, என மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று எமக்கு வழங்கிய செவ்வியில் கூறியதாவது, எமது ஆணைக்குழு நியமிக்கப்பட்டது இரு விடயங்களுக்காக, ஒன்று யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வது. மற்றையது, இரு தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்ந்து, யரேனும் தவறிழைத்துள்ளனரா எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காதிருக்க என்ன சேய்ய வேண்டு என கூறுவதே. இது குறித்து ஆராய்ந்து நாம் சமர்ப்பித்த அறிக்கையே பாராளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்டது அது பற்றி இன்று விவாதம் இடம்பெறவுள்ளது. அத்துடன் 40,000பேர் இறந்ததாக…
-
- 1 reply
- 831 views
-
-
இலங்கையில் மீண்டும் போருக்கு இடமில்லை : ஜனாதிபதி மூன்று தசாப்தகால போரால் பாதிக்கப்பட்ட தேசமான இலங்கையில் மீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டின் பிரதிநிதிகள் குழு இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார்கள். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிகழ்ச்சித் திட்டங்களை இந்தச்சந்திப்பின் போது பாராட்டிய சமயத் தலைவர்கள், இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றிக்கு தங்களது நல்லாச…
-
- 1 reply
- 660 views
-
-
ரவி கருணாநாயக்கவின் பெயர் ரவீந்திர சந்தேஷ் கணேசன் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன புதிதாக நேற்று சபையில் தமிழ்ப் பெயரை சூட்டி அவரை தமிழராகவர்ணித்தார். அத்துடன் ரவீந்திர சந்தேஷ் கணேசன் என்பதுவே ரவி கருணாநாயக்கவின் உண்மையான பெயர் என்றும் அந்த பெயரே பாராளுமன்ற ஹன்சாட்டில் பதியப்பட்டிருப்பதாகவும் பந்துல குணவர்தன அடித் துக் கூறினார். எனினும் பந்துல குணவர்தன எம்.பி.யினால் மேற்படி கூறப்பட்டதையடுத்து சபைக்குள் குழப்பநிலை தோன்றியது. இனவாதத்தை தூண்டி உரைநிகழ்த்த வேண்டாம் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல பந்துல குணவர்தனவுடன் முரண…
-
- 4 replies
- 1.5k views
-
-
போர்க்குற்ற விவகாரம்: உண்மையும் நம்பிக்கையும் அவசியம்! ஒரே குரலில் இலங்கைத் தமிழ் நாளிதழ்கள் இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்ற விவகாரத்தில் உண்மையும் நம்பிக்கையும் அவசியம் என்பதை இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்கள் தமது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளன. குளோபல் தமிழ் குழுமத்தின் உலக தமிழ் வானொலியான GTBC.FMஇன் பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இன்றைய நாளிதழ்களின் ஆசிரியர் தலையங்கம் குறித்த பார்வையை இங்கு தருகிறோம். இன்றைய தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர் தலையகங்கள் யாவும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட மாக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை குறித்து தமது குரலை பதிவு செய்துள்ளன. பரணகமவி…
-
- 0 replies
- 1k views
-
-
ஜனநாயகத்தின் ஊடாக இலங்கையில் நன்மைகள் ஏற்பட்டுள்ளன – ஜோன் கெரி ஜனநாயகத்தின் ஊடாக இலங்கையில் நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். ஆண்டுக்கான சிறந்த ராஜதந்திரிக்கான விருது வழங்கும் நிகழ்வு வொஸிங்டனில் நடைபெற்ற போது அதில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் அமெரிக்காவின் பங்களிப்புடன் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் அமெரிக்காவின் தலைமையினால் இந்த மாற்றங்கள் தனித்து மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடுகளில் நடைபெற்ற மாற்றங்கள் அமெரிக்காவின் ஒத்துழைப்பு இன்றியே இடம்பெற்றிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.n…
-
- 0 replies
- 355 views
-
-
'இந்தியாவின் பரிசீலனையை ஜெயவர்தன நிராகரித்தார்' இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில், இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வட, கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையிலேயே அதன் வரைவு காணப்பட்டதாக, இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்ததாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வருகை தந்த ப. சிதம்பரம், இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்காத நிலையில் வட மாகாண முதலமைச்சரான தன்னைச் சந்திக்க வேண்டுமென்ற வகையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்ததாகவும், தங்களுடைய சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பாக அமைந்ததாகவும் முதலமைச்சர் …
-
- 0 replies
- 439 views
-
-
எடுத்துக்காட்டாக திகழும் கிழக்கு மாகாண சபை இலங்கையில் உள்ள அனைத்து சபைகளுக்கும் ஓர் எடுத்துக் காட்டாக கிழக்கு மாகாண சபை திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கிழக்கு மாகாணசபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன ஒன்றிணைந்து ஆட்சியமைத்திருக்கும் இந்தவேளையில், எதிர்க்கட்சியில் மீதமாக இருக்கும் உறுப்பினர்களும் ஆளும்தரப்பின் பக்கம் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. கிழ…
-
- 0 replies
- 229 views
-
-
குறுகிய காலத்துக்குள் ஒன்றரை லட்சம் காணி உறுதிப் பத்திரங்கள் காணி அமைச்சினூடாக நாட்டில் குறுகிய காலத்தில் ஒன்றரை இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னமும் வழங்க இருக்கின்றோம் என காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி. எஸ்.குணவர்த்தன தெரிவித்தார். கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலையில் கேட்போர் கூடத்தில் நிலஅளவை உதவியாளர் பதவிக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தற்போது நல்லாட்சி மலர்ந்துள்ளது. அமைச்சர்கள் சுயாதீனமாக தங்களது சேவைகளை வழங்குவதற்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று அரச தொழில்கள் பெறுவோர் சிறந்த நம்பிக்கையான ச…
-
- 0 replies
- 261 views
-
-
பலம்மிக்க வகையில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும்:ஜனாதிபதி சகல இனங்கள் மற்றும் சமயங்களுக்கு மத்தியில் நம்பிக்கையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் உறுதிப்படுத்தி நாட்டில் பலமான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பு மிகச் சரியாக நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சேர்.ஜோன்கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பட்ட மளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்காக 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக தனியான ஒரு நிறுவனத்தை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் செயற்பாடுகள…
-
- 0 replies
- 221 views
-
-
'கலப்பு நீதிமன்ற' பரிந்துரையை கூட்டமைப்பு வரவேற்கிறது போர்க் காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள், இறுதிப் போரின்போது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பவை தொடர்பில் விசாரணை செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள கலப்பு நீதிமன்ற விசாரணையை நாம் வரவேற்கிறோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றுமுன்தினம் கையளித்தது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய…
-
- 0 replies
- 245 views
-
-
ஐ.நா தீர்மானத்தை தோற்கடிக்க விமல் வீரவன்சவுடன் கூட இணையத் தயார் - சோமவன்ச அமரசிங்க ஐக்கிய நாடுகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை தோற்கடிப்பதற்கு ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவுடன் கூட இணையத் தயார் என முன்னாள் ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு அரசியல் கட்சி எந்தவொரு அரசியல்வாதியுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை தோற்கடிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைப் பொறிமுறைமை தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். கிரமமான ஓர் திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டுமெ…
-
- 6 replies
- 1.2k views
-
-
பூமிக்குள் புதையுண்டு போன கிணறு! தம்புள்ளையில் நம்ப முடியாத ஆச்சரியம்! [ புதன்கிழமை, 21 ஒக்ரோபர் 2015, 10:06.39 PM GMT ] தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தனது தோட்டத்தில் அமைந்திருந்த கிணறு பூமிக்குள் புதையுண்டு போயுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 40 அடி ஆழத்தில் தோண்டப்பட்டிருந்த இந்தக் கிணறு தற்போது சுமார் 20 அடி வரை பூமிக்குள் புதையுண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து நாவுல பிரதேச செயலாளர் ஊடாக கட்டிட நிர…
-
- 1 reply
- 1.1k views
-
-
யுத்தகுற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு உள்நாட்டில் சட்டங்கள் எதுவும் இல்லை: 22 அக்டோபர் 2015 இலங்கையில் யுத்தகுற்றவிசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் உள்நாட்டின் சட்டங்களை மாற்றவேண்டும் என கருத்துதெரிவித்துள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம இறுதி யுத்தத்தில் 40000பேர்கொல்லப்படவில்லை என தங்களது ஆணைக்குழு கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவரது ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் இந்திய ஊடகமொன்றிற்கு கருத்துதெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. ஈழயுத்தத்தின் இறுதி தருணங்களில் இடம்பெற்றதாக குற்றம்ச்சாட்டப்பட்டுள்ள யுத்தகுற்றங்கள் குறித்…
-
- 0 replies
- 499 views
-
-
பாராளுமன்ற அமர்வுக்கான ஒரு நாள் செலவு 46 இலட்சம் ரூபா! - சபாநாயகர் தகவல் Thursday 2015-10-22 08:00 இடையூறுகளை ஏற்படுத்தி பாராளுமன்ற செயற்பாடுகளை குழப்பியடிப்பதற்கு முயலவேண்டாம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு அறிவுரை வழங்கிய சபாநாயகர் கரு ஜயசூரிய நாள் ஒன்றின் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கென 46 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். இடையூறுகளை ஏற்படுத்தி பாராளுமன்ற செயற்பாடுகளை குழப்பியடிப்பதற்கு முயலவேண்டாம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு அறிவுரை வழங்கிய சபாநாயகர் கரு ஜயசூரிய நாள் ஒன்றின் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கென 4…
-
- 0 replies
- 455 views
-
-
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரணகம ஆணைக் குழுவின் அறிக்கையில் பல்வேறு வகையிலான முரண்பட்ட விட யங்களும் தகவல்களும் முன்வைக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யுத்தத்தின் முடிவில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 40 ஆயிரம் பேரின் அழிவுகளை இராணுவ ரீதியாக நியாயப்படுத்தியுள்ள அறிக்கை சனல்–4 ஆவணப்படம் மற்றும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென சிபார்சு செய்திருப்பது முரண்பட்ட தன்மையை காட்டுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். வெளியிடப்படாமல் இருந்த அறிக்கையை தற்பொழுது வெளியிட்டுள்ளது அரசாங்கம் என்பதே உண்மையாகும். மா…
-
- 0 replies
- 392 views
-
-
சில நாட்களுக்கு முன்பு எக்ஸ் கதிர்ப் பரிசோதனைக்காக (Computer tomography) ஒருவர் வந்திருந்தார். உதைபந்தாட்டக்காரன் ஒருவனின் கம்பீரத்தோடு இருந்த அவரின் சிறு நீர்ப்பையில் இருந்து சிறுநீர் வழி ஆரம்பிக்கும் பகுதியைச் சுற்றி இருக்கும் புரொஸ்ரேற் (prostate) சுரப்பியிற் புற்றுநோய் தோன்றியிருந்தது. பரிசோதனைக்குத் தேவையான மருந்தை உட்செலுத்தும் ஊசியை அவருடைய நாளத்தில் ஏற்றுவதற்காக அவரைத் தயாரிப்பறைக்கு அழைத்துச் சென்றபொழுது உரையாடத் தொடங்கினார். ` நான்கு மாதங்களுக்கு முன்புதான் என் மனைவி வயிற்றிற் புற்று நோய் வந்து இறந்து போனார். அவரை வழியனுப்பி விட்டு வந்த பின்னர் எனக்கும் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டேன் ’ எனச் சிரித்துகொண்டு கூறினார். அவரது சி…
-
- 0 replies
- 336 views
-