Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்குக்கு இனிமேல் வரவே கூடாது சந்திரிக்கா தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைப்பின் தலைவராகப் பதவிவகிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எந்த அருகதையும் இல்லை என்றும், அவர் இனிமேல் வடபகுதிக்கு இந்த அமைப்பின் தலைவியாக வருகைதரக் கூடாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பிறிமுஸ் சிராய்வா தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், எதிர்கட்சித் தலைவர் தவராசாவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைப்பின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் இருக்கின்றார். ஜெயசிக்குறு என்று சொல்லி ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எல்லா…

    • 2 replies
    • 832 views
  2. மகிந்த வென்றிருந்தால் கடாபிக்கு நடந்ததே நடந்திருக்கும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தால் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருந்தால் அவரது செயற்பாடுகள் தொடர்ந்திருந்தால் லிபிய அதிபர் கடாபிக்கு ஏற்பட்ட நிலையே மகிந்தவுக்கு ஏற்பட்டிருக்கும் என்று அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசைனின் நிலையும் மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். சக்தி மிக்க அரசாங்கம் ஒன்று உருவாக்கி ஐ.நாவை எதிர்கொள்ள மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதன் காரணமாகவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியதாகவும் அந்த திட்டத்தின்படி…

  3. பனைவள அழிவு தீவகத்தில் தொடர்கிறது போரின்போது மாத்திரமின்றி போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் வடக்கில் பனைவளம் அழிக்கப்படும் நடவடிக்கை தொடர்ச்சியாகவும் பரவலாகவும் முன்னெடுக்கப்படுகிறது. இது தொடர்பில் மீள் மரநடுகை திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதில்லை என்று பலரும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். வடக்கின் தனித்துவமான அடையாளமாக பனைவளம் விளங்குகிறது. இதேவேளை பனை வளத்தை நம்பி வாழும் பல குடும்பங்கள் வடக்கில் வசித்து வருகின்றனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பனை மரங்கள் பெரியளவில் அழிக்கப்பட்டன. இதனால் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தீவகத்திலும் பனை வளம் அழிக்கப்பட்டு வருவதாகவும் அங்கு தொடர்ந்து பனை வளத்தை பாதுகாக்கும் வகையில் மர …

  4. யாழ். முனீஸ்வரா வீதியின் 25 கடைகளுக்கு பூட்டு யாழ். முனீஸ்வரா வீதியில் கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வந்த சுமார் 25 கடைகள் திடீரென மூடப்பட்டு, அவை யாழ். மாநகர சபையினால் பாரமெடுக்கப்பட்டுள்ளது. முனீஸ்வரா வீதியில் அமைந்துள்ள கட்டடத் தொகுதியில் உள்ள கடைகளின் கதவுகளில் ‘முனீஸ்வரா அங்காடி, கடை இலக்கம் குறிப்பிடப்பட்டு அவை மாநகர சபையால் பூட்டி பாரமெடுக்கப்படுகின்றது’ என்ற வாசகம் அடங்கிய அறிவித்தல் யாழ் மாநகர சபை ஆணையாளரின் கையொப்பத்துடன் கடைகளில் கதவுகளில் ஒட்டப்பட்டுள்ளன. இவை நேற்று நள்ளிரவு வேளையில் ஒட்டப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை கடைகளை திறப்பதற்காக அங்கு சென்ற கடை உரிமையாளர்கள், குறித்த அறிவித்தலை கண்டு ஆத்திரமடைந்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்ப…

    • 1 reply
    • 558 views
  5. இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 73 இலங்கை அகதிகள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், 73 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு உதவிகளை வழங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்தும் அகதிகளாக வாழ விரும்பாதவர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். போர் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவின் பல்வேறு அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2002ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்ப விரும்பிய…

  6. தீர்வை எட்ட கிட்டியுள்ளது சந்தர்ப்பம்:சோபித தேரர் தமிழ் பேசும் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வை எட்டுவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கோட்டே நாகவிஹாரையின் விகா ராதிபதியும், சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களை சமபிரஜைகளாக மதித்தாலே பாதிப்பிரச்சினைக்கு தீர்வைக் கண்டுவிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டும் இன்று வரையில் அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவித ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குற…

  7. ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு பொலிஸ்மா அதிபர் நட்டஈடு ஜே.வி.பி கட்சியின் உறுப்பினர்கள் இருவருக்கு நட்டஈடு வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி தெமட்டகொட பகுதியில் வைத்து இரண்டு ஜே.வி.பி உறுப்பினர்களைப் பொலிஸார் கைது செய்திருந்தனர். பொரளை பகுதியைச் சேர்ந்த ஜோசப் சில்வா மற்றும் சந்திரசேன யஹட்டியாரச்சி ஆகிய இரண்டு உறுப்பினர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர். ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தவேண்டுமெனக் கோரும் வகையிலான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது, சட்டவிரோதமாக அவற்றை வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். பொலிஸாரின் இந்தக் கைது சட்டவிரோதமானது எனவு…

  8. சிறைச்சாலைகள் ஆணையாளர் பதவிக்கு மும்முனைப் போட்டி சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தற்போதைய ஆணையாளர் நாயகம் ஹோஹண புஷ்பகுமார இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு தற்போதைய சிறைச்சாலைகள் ஆணையாளர்கள் மூவர் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாக சிறைச்சாலை அதிகாரிகளின் ஒன்றியம், சட்டம், சமாதானம் மற்றும் சிறைச்சாலைகள் புனருத்தாபன அமைச்சர் திலக்மாரப்பனவுக்கு கடிதமூலம் அறிவித்துள்ளதாகத் தெரியவருகின்றது. தற்போதைய சிறைச்சாலை ஆணையாளர்கள் எவருக்கும் ஆணையாளர் நாயகமாகப் பதவியேற்கக் கூடிய தகுதி இல்லையயனவும் அந்தப் பதவிக்கு இலங்கை பரிபாலன சேவை அதிகாரியயாருவரே நியமிக்கப்படவேண்டுமெனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இந்தக் கடிதத்த…

  9. யாழில் 14 பேர் கைது சுன்னாகம் பொலிஸார் நேற்று முன்தினம் இரவு மேற்க் கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸ்மந்த தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் ஏழாலை பகுதியில் மது போதையில் பொது மக்களுக்கு இடையூறாக நடந்து கொண்ட நான்கு பேரையும் மற்றும் சந்தேகத்தின் பெயரில் நான்கு பேரையும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரையும் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்திய நான்கு பேரையும் கைது செய்துள்ளார்கள். கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவினுள் கடந்த சில நாள்களாக இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்களைக் கட்டுப்படுத்தும…

  10. குற்றம் புரிந்த பலர் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை உட்பட பல்வேறு மோசமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். அவ்வாறானவர்களைக் கைது செய்வதற்கும், போர் முடிந்த பின்னரும் சுமார் 7 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கும் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் நேற்றுக் கோரிக்கை விடுத்தார். ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்த நபர் யார் என்ற தகவலை கடந்த அரசாங்கத்துக்கு பெயர் விபரங்களுடன் வழங்கிய போதும் அவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாட…

  11. மக்களின் வாழ்வாதாரம், சமூக பொருளாதாரத்தில் தாக்கம் வரும் என இலங்கை அரசு எடுத்துரைப்பு திருகோணமலை சம்பூரில் அமைக்கத் திட்டமிட்டப்பட்டுள்ள அனல் மின்னிலையத்தை இடம்மாற்ற இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இதற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சம்பூரில் அமைக்கப்பட இருந்த அனல் மின்னிலையம் திருகோணமலை துறைமுக நுழைவாயில் பகுதியாக பவுல் பொயின்ட் பகுதிக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இடமாற்றும் இலங்கை அரசின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இந்தியாவின் இன்போலைன் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டள்ளது. இந்தியாவின் அரச நிறுவனமான தேசிய அனல் மின் கழகத்துடன் இணைந்து 2006இல் அனல் மின்னிலையம் அமைக்க உடன்…

  12. சிறிலங்கா பற்றிய மூன்று கடப்பாடுகளை லிபரல் கட்சி முன்மொழிந்துள்ளது: [Thursday 2015-10-08 19:00] அக்டோபர் 3, 2015 அன்று ஸ்காபரோ- றூச் பார்க் கனடா லிபரல் கட்சி வேட்பாளர் கரி ஆனந்தசங்கரி, சக வேட்பாளர்கள் மார்க் ஹொலந்து (Ajax) நவ்தீப் பெயின்ஸ் (Mississauga - Malton) யோன் மக்கலம் (Markham-Thornhill) மற்றும் ஜெனிபர் கொனல் (Pickering - Uxbridge) ஒரு தமிழ் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்கள். கரி ஆனந்தசங்கரி, லிபரல் அரசு சிறிலங்காவோடு இணக்கப்பாட்டுடன் நடப்பதாயின் சிறிலங்கா பின்பற்றவேண்டிய மூன்று கடப்பாடுகளை முன்மொழிந்தார்: 1. இலங்கையில் பொறுப்புக் கூறல் a. ஐக்கிய நாடுகள் அவை ஆணையாளர் அவர்களால் நடத்தப்பட்ட புலன் விசாரணை அறிக்கைகையின் (OISL) அடிப்படையில் ஒக்தோபர் 01, 2015 அ…

  13. இலங்கையில் ‘அகிம்சை வழியை பின்பற்றிவந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் போன்ற சத்தியத்தைப் பேணிய தலைவர் வழிகாட்டியிருந்தும்கூட, தமிழ் மக்கள் வன்முறையை ஏன் பின்பற்றினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதன் பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். வன்முறையை இனியொரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கின்றார். இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச ‘அகிம்சை’ தின நிகழ்வில் சம்பந்தன் முக்கிய விருந்தினராக கலந்துகொண்ட…

  14. 5வயது சிறுமியின் தந்தையிடம் மரபணு பரிசோதனை : நீதிமன்றம் உத்தரவு கொட்டதெனியா பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட, சிறுமி சேயாவின் தந்தையிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளுமாறு மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேயா கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார். சேயாவின் தந்தை ஏற்கனவே சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் என்ற வகையில், ஆரம்பத்தில் குறித்த நபர் மீதே பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டனர். குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டே நீதவான் இந்த உ…

  15. சுங்கவரி அதிகரிப்பு - எகிறியது ஜப்பானிய வாகனங்களின் விலை! [Thursday 2015-10-08 07:00] சுங்க வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் ஜப்பானிய வாகனங்களின் விலைகள் பாரியளவில் உயரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1993-16 வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் வாகனங்களுக்கான சுங்கத் தீர்வையை அரசாங்கம் அதிகரித்துள்ளது. டொயொடா அக்சியோ ரக வாகனம் 700,000 ரூபாவினாலும், டொயொடா அக்வா ரக வாகனம்; 770,000 ரூபாவினாலும், டொயொடா ஹை ஏஸ் பெற்றோல் வாகனம் 1350000 ரூபாவினாலும், டொயொடா ஹை ஏஸ் டீசல் வாகனம் 1700,000 ரூபாவினாலும், டொயொடா பிரிமியோ மற்றம் அலியான் வாகனம் 675000 ரூபாவினாலும், டொயொடா பிரியுஸ் வாகனம் 1150000 ரூபாவினாலும், டொயொடா ஹாரியார் வாகனம் 1150000 ரூபாவினாலு…

  16. மைத்திரி அரசு நீண்டநாள் நிலைக்காது! - சபிக்கிறார் வாசுதேவ[Thursday 2015-10-08 07:00] நாட்டு மக்களை ஏமாற்றி பொய்யான உறுதி மொழிகளை வழங்கி ஆட்சியைப் பிடித்த இந்த அரசாங்கம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காதுஎன நேற்று சபையில் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்தியாவில் தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 1 வீதம் உள்ளூர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அத்துடன் வறுமையில் வாழும் மக்களுக்கு சலுகை விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனைத்தான் இங்கு நடைமுறைப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் பாண் ஒரு இறாத்தலின் விலை 400 ரூபாவாகும். "பிரெட் டோக்கிலும்" இங்கு மேற்கண்ட விலையில்தான் பாண…

  17. 18 கோடி ரூபா குறை நிரப்பு பிரேரணை ஏன்? - ஜனாதிபதியின் செயலர் விளக்கம்.[Thursday 2015-10-08 07:00] பழைமையான இரண்டு வாசஸ்தலங்களை இணைத்து ஜனாதிபதியின் பாவனைக்கு தேவையான விதத்தில் புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர். இவ் விடயம் தொடர்பாக உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்பாகவும் தேசிய பத்திரிகைகளில் வெளியான செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்திற்கு முன்வைத்த குறைநிரப்பு பிரேரணையில் ஜனாதிபதி அலுவலகம் தொடர்பான செலவுகள் மற்றும் பிரதமரின் அலுவலகம், வ…

  18. விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு ரோஸி தாக்கல் செய்த வழக்கு இன்று ஆராயப்பட்டது முன்னாள் அமைச்சரான ரோஸி சேனநாயக்க தாக்கல் செய்த தேர்தல் தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தினால் இன்று ஆராயப்பட்டது. புவனேக அலுவிஹாரே, பியந்த ஜயவர்தன மற்றும் அனில் குணரத்ன ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு ஆராயப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட தனக்கு கிடைத்த வாக்குகளை மீள எண்ணுமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு ரோஸி சேனநாயக்க மனுவில் குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றுள்ளதாக ரோஸி சேனநாயக்க நம்பிக்கை கொண்டிருப்பதாக, அவரது சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி …

  19. வடமாகாண மக்கள் யாழில் எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு,இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை பெறலாம் வடமாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களும் வடமாகாணத்திலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்.வேதநாயகன் அவர்கள்தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கணினியின் உபயோகத்துடன் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழினை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்,மன்னார்,வவுனியா,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய அனைத்து மாவட்டங்களிற்கும் உரிய கணனிமயப்படுத்தப்பட்ட பிறப்பு,இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களின் பிரதிகள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலுள்ள அனைத்து பிரதேச செய…

  20. தேசிய ஓய்வூதியர் தினம் இன்றாகும் தேசிய ஓய்வூதியர் தினம் இன்றாகும் . ஓய்வு பெற்றோர் மற்றும் அவர்களுடைய தேவைகளை மதிப்பளிக்கும் வகையில் இத்தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு ஓய்வூதியர் திணைக்களம் சர்வதேச சிம்போசியம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 'தேசிய ஓய்வூதிய கட்டமைப்பை நோக்கி...' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு இலங்கை மன்றக் கல்லூரியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. மாலை 3.00 மணி வரை நடைபெறும் சிம்போசியம் நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். இந்நிகழ்வின் ஆரம்ப உரையை மலேசிய அரச நிர்வாக திணைக்களத்தின் தலைவர் டாடோ யீயோவ் சிங் கிங் ஆற்றவுள்ளார். ஓய்வூதிய ஆணையாளர் நாயகம் எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி, தே…

  21. நாட்டில் இனியும் எந்தவொரு மத அடிப்படைவாதத்துக்கும் இடமில்லை மத்திய கொழும்பின் பார்பர் வீதி என்ற மகா வித்தியாலய வீதியின் 36ஆம் தோட்டத்தில் அமைந்துள்ள இந்துக் கோவிலின் பூஜைகள் மற்றும் தேர்த் திருவிழா எந்த வித தடையும் இன்றி நடைபெற வேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு ஆகும். இந்த நாட்டில் இனிமேல் எந்தவித அடிப்படைவாதத்துக்கும் இடம் கொடுக்க முடியாது. கடந்த காலத்தில் பொதுபல சேனா போன்ற அடிப்படைவாதிகள் இந்நாட்டின் பள்ளிவாசல்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, இஸ்லாமிய மக்களின் மத சுதந்திரத்துக்கு ஊறு விளைவித்ததை இந்நாடு கண்டது. அதற்கு எதிரான போராட்டத்தில் நாம் முதன்மை வகித்தோம். இன்று நாங்கள் பாடுபட்டு பெற்றுக் கொடுத்துள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இந்நாட்டு இந்து…

  22. இலங்கை இலவசமாக எதையும் எதிர்பார்ப்பதில்லை : இந்திய துணைத்தூதுவர் இலங்கை மற்றைய நாடுகளுக்குள்ளே அவர்களுடைய உதவிகளை எதிர்ப்பார்க்காது, நமது இந்திய தேசத்தில் இருந்து தான் கூடுதலான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் கூறினாலும், கூறாவிட்டாலும் இது ஒரு உண்மையான விடயம், என்றாலும் அவர்கள் எதனையும் இலவசமாக எதிர்பார்ப்பதில்லை என்று யாழ்.இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் தெரிவித்தார். இன்றைய தினம் இந்திய வர்த்தகத்தினை மேம்படுத்தும் விசேட மாநாடு யாழில் இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். எமது இந்திய தேசம் வர்த்தகத்திலும் சரி,பொருளாதாரத்திலும் வேகமாக உயர்ந்து சென்றாலும் எமது அண்டை நாடான இலங்கையும் முன்னேற வேண்டும். இலங்கை …

  23. யாழ்.பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிச இளைஞர் சங்கத்தினால் யாழ்.பொது நூலகத்திற்கு பல தொகுதிப் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை யாழ்.பொதுநூலகத்திற்கு வருகை தந்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான விமல் ரத்னாயக்கவால் யாழ்.நூலக பிரதம அதிகாரி சுகந்தி சதாசிவமூர்த்திக்கு நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. http://onlineuthayan.com/news/1010

  24. கடித்தது என்பதை அடித்தது என்று பொலிஸாருக்கு கூறிய தமிழ் தெரியாத கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர் கடித்தது என்பதை அடித்தது என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் இலங்கை பொலிசாருக்கு வாக்குமூலம் அளித்தமையால் ஒரு குடும்பத்தினர் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக கூறுகின்றனர். கடந்த 3 நாட்களின் முன்பு விச ஜந்து தீண்டிய 13 வயதான மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது மாணவிக்கு ஏதோ விச ஜந்து கடித்துவிட்டது என்றும் அதனால் மாணவி மயக்கமுற்றதாகவும் பெற்றோர் வைத்தியருக்குத் தெரிவித்தனர். பெற்றோர் கடித்தது என்பதை அடித்தது என்று விளங்கிக்கொண்ட தமிழ் மொழி தெரியாத வைத்தியர் பொலிசாருக்கு 13 வயதான குறித்த மாணவிக்கு குடும்பத்தினர் அடித்…

  25. சர்வதேச சமூகத்தின் ஊடாக புலிகள் சரணடைய எத்தனித்தனர் – கோதபாய: தமிழில் : குளோபல் தமிழ்ச் செய்திகள் சர்வதேச சமூகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய எத்தனித்தனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சரணடைதல் விவகாரம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித நேரடி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்த போது, கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பிரதானமாக குற்றம் சுமத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் இடம…

    • 1 reply
    • 553 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.