Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மனித உரிமைகள், ஜனநாயகம், பொறுப்புக்கூறல் குறித்து சிறிலங்காவுடன் அமெரிக்கா பேச்சு APR 14, 2015 | 0:38by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அரசாங்கத்துடன், மனித உரிமைகள், ஜனநாயகத்தை வலுப்படுத்தல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்கள் குறித்து, அமெரிக்கா கலந்துரையாடியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், ஜனநாயகம்,மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலராகப் பணியாற்றும், ரொம் மாலினோவ்ஸ்கி கடந்த 2ம் நாள் தொடக்கம், 10ம் நாள் வரை சிறிலங்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று செய்திக் குறிப்பு ஒன்…

    • 1 reply
    • 447 views
  2. ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் அரசியலுக்குள் வருவாரா அல்லது இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்கு பல தரப்பினரும் ஆர்வமாக இருந்துவருகின்றன. எனினும், இதற்கு விடையளிக்காமல் இதுவரையில் மெளனம் காத்துவந்த மஹிந்த, தனது மெளனத்தை வெகுவிரைவில் கலைக்கவுள்ளார். மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான அத்திபாரத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி அவர் இடவுள்ளார். இந்திய சோதிடர்களின் ஆலோசனையின் பிரகாரம், அன்றைய தினம் கொழும்பிலுள்ள பீகொக் மாளிகையில் குடும்பம் சகிதம் அவர் குடியேறவுள்ளார். மே தினத்துக்குப் பின்னர் அங்கு அரசியல் அலுவலகம் ஒன்றும் திறக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது. இந்த வீட்டில் குடியேறிய பின்னர், அரசியல் பயணத்தை மீள ஆரம்பிக்கவுள்ளார் என்பதை அறிவிக்க…

  3. ஐ.நா விசாரணைக்கு சிறிலங்கா ஆதரவு வழங்க வேண்டும் – புத்தாண்டுச் செய்தியில் பிரித்தானிய பிரதமர் APR 14, 2015 | 1:35by பிரித்தானியாச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற அட்டூழியங்கள் குறித்த ஐ.நா விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் முழுமையான ஆதரவை அளிக்க வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இன்று கொண்டாடப்படும், தமிழ்-சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “பிரித்தானியாவிலும், சிறிலங்காவிலும், உலகின் ஏனைய நாடுகளிலும் இன்று புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மில்லியன் கணக்கான மக்க…

    • 0 replies
    • 450 views
  4. அரசியல் தீர்வு விவகாரத்தை சிறிலங்கா அரசாங்கம் கிடப்பில் போட அனுமதியோம் – இரா.சம்பந்தன் APR 14, 2015 | 0:25by புதினப்பணிமனைin செய்திகள் அரசியல் தீர்வு சம்பந்தமாக புதிய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு காலஅவகாசம் தேவை என்பது உண்மையே என்றாலும், அதற்காக தீர்வு விடயங்களை கிடப்பில் போடுவதை நாம் அனுமதிக்கமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று கொண்டாடப்படும், சித்திரைப் புத்தாண்டையொட்டி வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “கடந்த காலங்களில் கொடிய ஆட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், தமது சொந்த நிலத்தில் போதிய சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக – கௌரவமாக – நிரந்தரமாக வாழும் நிலை வரவேண்டும் எ…

    • 0 replies
    • 412 views
  5. இலங்கையில் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தீர்வு காண சில நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டாலும், செய்ய வேண்டியவை இன்னும் நிறைய இருப்பதாக இலங்கை சென்றிருந்த ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதியான பாப்லோ டி கிரீப் தெரிவித்துள்ளார். ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதி பாப்லோ டீ கிரீப்(படம் ஐ நா) இராணுவ வெற்றியின் மூலமே அனைவரும் ஒன்றாக வாழ்ந்துவிட முடியும் என்பது தவறான அணுகுமுறை என்பதை இலங்கை புரிந்துகொள்ளத் தொடங்கியிருந்தாலும் அனைத்து மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய விஷயத்தில் ஏராளமான பணிகள் இன்னும் உள்ளன என்று அவர் தனது அதிகாரபூர்வ பயணத்துக்கு பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள்,…

    • 0 replies
    • 305 views
  6. முன்னாள் ரஸ்ய தூதுவரை கைதுசெய்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்குலக நாடுகளின் புலானய்வு அமைப்புகளின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஸ்சியாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கண்டுபிடிப்பதற்கு அமெரிக்காவின் உதவியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதா என்பது குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் பதிலளிக்க மறுத்துள்ளது. இது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கேட்டறிந்துகொள்ளுமாறு தூதரகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆயுதவிற்பனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள உதயங்கவை கண்டுபிடிப்பதற்கு மேற்குலகின் உதவிநாடப்பட்டுள்ளதாக பிரதிவெளிவிவகாரஅமைச்சர் அஜித்பெரேரா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரான அவரை விரைவில் கைதுசெய்…

    • 0 replies
    • 312 views
  7. கச்சதீவு மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படாது- சென்னையில் சிறிலங்கா அமைச்சர் APR 13, 2015 | 11:00by அ.எழிலரசன்in செய்திகள் கச்சதீவு மீண்டும் இந்தியாவுக்கு வழங்கப்படமாட்டாது என்று சிறிலங்காவின் பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குத் தனிப்பட்ட பயணமாகச் சென்றுள்ள அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போதே, கச்சதீவு இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார். ‘கச்சதீவை ஒரு உடன்பாட்டின் மூலம், சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கியது. அதனைத் திருப்பிக் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. கச்சதீவின் மீதான சிறிலங்காவின் உரிமையை இந்தியா 1974ஆம் ஆண்டு உடன்பாட்டின் மூலம் அங்கீகரித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிய…

    • 0 replies
    • 534 views
  8. எமது குடியிருப்பு பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதைத் தடுத்து நிறுத்தி தாம் மீள்குடியேற வழியை ஏற்படுத்தித் தாருங்கள் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் வலி.வடக்கு, வீமன்காமம் வடக்கு மக்கள். இன்று திங்கட்கிழமை சிவசக்கி ஆனந்தனைச் சந்தித்த மக்கள் இதுகுறித்த மனு ஒன்றையும் கையளித்தனர். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம், வலி.வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 25 கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு சில கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டமை மகிழ்ச்சி அளிக்கின்றது. எனினும் நாம் 25 வருடங்களாக எமது கிராமத்திற்கு திரும்பிச் செல்லமுடியாது தவிக்கின்றோம். கடந்த 11 ஆம் திகதி வீமன்காமம் வடக்கு (காங்கேசன் துறை தெற்கு) ஜே-236 கிராம சே…

    • 0 replies
    • 435 views
  9. செப்ரெம்பருக்குப் பின்னரே உள்நாட்டு விசாரணை – இழுத்தடிக்கத் தொடங்கியது சிறிலங்கா APR 13, 2015 | 2:48by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் போரின் போது இடம் பெற்ற மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க, உள்நாட்டு விசாரணை உடனடியாக ஆரம்பிக்கப்படாது என்றும், வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் முடிந்த பின்னரே அது ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தகவல் வெளியிடுகையில், “கடந்த மார்ச் மாதம் நாங்கள் பெரியதொரு இராஜதந்திர வெற்றியைப் பெற்றுள்ளோம். போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள…

  10. பிரிட்டனில் வாழும் தமிழர்களின் வணிக முயற்சிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோகும் நோக்கில் இங்கு லண்டனில் ஹரோ பகுதியில் தமிழர் சந்தை என்னும் இரு நாள் நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது. ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடந்த இந்த நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான தமிழர் வணிக நிறுவனங்கள் கலந்து கொண்டன. பலசரக்கு கடைகள் முதல், முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வரை தமிழர்களால் நடத்தப்படும் பல நிறுவனங்கள் தமது உற்பத்திகளை அங்கு காட்சிப்படுத்தியிருந்தனர். தமிழர் மத்தியில் தமிழரின் வணிகத்தை பிரபலப்படுத்துவதோடு, ஏனைய சமூகங்களை நோக்கி, தமிழர் வணிகத்தை கொண்டு போவதையும் இலக்காகக் கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக, அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தை…

  11. தமிழ் - சிங்கள புத்தாண்டு எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்காக ஆடைகள் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு வியாபாரத்துக்காக வெளிமாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர். இவர்கள் யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 அடி கடைகளை அமைத்து வியாபாரம் செய்வதற்கு கட்டணமாக 16,950 ரூபாய் மாநகர சபையால் அறவிடப்படுகின்றது. இக்கடைகள் முத்தவெளி, புல்லுக்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன http://www.tamilmirror.lk/143957#sthash.VX5QcZhS.dpuf

  12. சரத் பொன்சேகாவை இராணுவ முகாமில் அடைக்குமாறு கேட்டுக் கொண்டேன் – என்கிறார் கோத்தா APR 13, 2015 | 1:47by கார்வண்ணன்in செய்திகள் தன் மீது சுமத்தப்படும் ஊழல் மற்றும், அதிபர் தேர்தலை அடுத்து ஆட்சியைத் தக்கவைப்பதற்கான சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நிராகரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “புதிய அரசாங்கத்தில் உள்ள சிலர் கூறுவது போன்று சீஷெல்சில் எனக்கு எந்த வங்கிக் கணக்கும் கிடையாது. சிறிலங்காவில் எனக்கு ஒரே ஒரு வங்கிக் கணக்கு மாத்திரம் உள்ளது. அமெரிக்காவில் ஒரு வங்கிக் கணக்கு இருந்தது. பின்னர் அதனையும் மூடி விட்டேன். கடந்த ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்…

    • 0 replies
    • 784 views
  13. ஒரு குற்றத்துக்காக ஒரு தடவைக்கு மேல் ஒருவர் தண்டிக்கப்பட முடியாது என்பது சட்டமாகும். அந்த வகையில் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் நடத்தவுள்ள உள்ளக விசாரணையில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் விசாரிக்கவேண்டும் எனக்கோருவது சட்டத்துக்கு மாறான ஒரு விடயமாகும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் சனிக்கிழமை(11) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் போராளிகளை போருக்குப் பின்னர் கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்குட்படுத்தியும், கொலை செய்…

  14. யாழ் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி, பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருந்த கழிவு எண்ணெய் கலந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற சுன்னாகம் நிலத்தடி நீரில் உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறு இல்லையென்று மீண்டும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. வடமாகாண ஆளுனர் பளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகிய முக்கியஸ்தர்களின் தலைமையில் யாழ் அரச செயலகத்தில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டம் ஒன்றில் இந்த நிலத்தடி நீர் விவகாரம் குறித்து சுமார் 3 மணித்தியாலங்கள் ஆராயப்பட்டதன் பின்னர் இந்தத் தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதேநேரம் பலதரப்பட்ட மாசுகள் நீரில் கலந்திருக்கின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் எனவே, அது குடிப்பதற்கு உக…

  15. சிறிலங்காவில் எந்த மறைமுக நிகழ்ச்சி நிரலும் கிடையாது – என்கிறது சீனா APR 12, 2015 | 8:43 by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் தமக்கு எந்த மறைமுகமான நிகழ்ச்சி நிரலும் கிடையாது என்று, சிறிலங்காவுக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ரென் பகியாங் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சிறிலங்காவில் சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பல இடைநிறுத்தப்பட்டுள்ளன. சிறிலங்காவுக்கு உதவும் நோக்கம் மட்டும் சீனாவுக்கு இருந்தது. ஆனால், சில சீனத் திட்டங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் சீனாவின் நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளன. துறைமுக நகரத் …

  16. வடக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின்னரே தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு – கூட்டமைப்பு கோரிக்கை APR 12, 2015 | 2:14by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியமரும் வரை, வடக்கு மாகாணத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் கோரியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினரும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்…

  17. நன்றாக கையாளப்பட்டால் சிறிலங்கா உலகிற்கு முன்னுதாரணமாக அமையும் – ஐ.நா நிபுணர் APR 12, 2015 | 9:47by கார்வண்ணன்in செய்திகள் நன்றாக கையாளப்பட்டால், பிராந்தியத்துக்கும், உலகத்துக்கும், நிலையான அமைதியை எட்டுவது என்பதில் சிறிலங்கா விவகாரம் ஒரு முன்னுதாரணமானதாக இருக்கும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார். உண்மையை ஊக்குவித்தல், நீதி, நல்லிணக்கத்துக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான பப்லோ டி கிரெய்ப் சிறிலங்காவில் தனது பயணத்தின் முடிவில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இவர் கடந்த மார்ச் 30ம் நாள் தொடக்கம், ஏப்ரல் 3ம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டிருந்தார். பல்வேறு அதிகாரிகளையும் சந்தித்த அவர், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்…

  18. முன்னாள் புலி உறுப்பினரை நாடு கடத்த கனேடிய உயர்நீதிமன்றம் தடை APR 11, 2015 | 1:27by கனடாச் செய்தியாளர்in செய்திகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வரிவசூலிப்பாளராக பணியாற்றியவரை கனடாவில் இருந்து நாடு கடத்துவதற்கு, கனேடிய சமஷ்டி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான புவனேசன் துரைராஜா என்பவரை போர்க்குற்றவாளி என்று கூறி, அவரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப, கனேடிய அரசாங்கம் முடிவு செய்திருந்தது. ஆனால்,அவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்புவது ஆபத்தானது என்று கூறி, கனேடிய உயர்நீதிமன்ற நீதிபதி சீன் ஹரிங்டன் அந்த முடிவுக்குத் தடைவிதித்துள்ளார். இந்த உத்தரவு கனேடிய உயர்நீதிமன்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புவனேசன் துரைரா…

  19. எங்கட சனங்கள 27 வருசமாய் தங்கட சொந்த நிலத்தப் பறிச்சு அகதியளாய் அல்லல்பட வைச்வையள் இப்ப அந்த சனங்கள புதுசாய் ஒரு டிசைனில வருத்துறினம்... அது என்ன தெரியுமே? வாங்கோ உங்கட காணியள தாறம் எண்டு கூப்பிட்டிட்டு தற ஏலாது எண்டு பெரிய இராணுவ வேலிக்கு அங்கால பாழடைந்த ஊரைக் காட்டி சனங்களின்ட வயிற்றில நெருப்பெரிய வைக்கிறது... நேற்று வலி வடக்கில ஒன்பது கிராம சேவையாளர் பிரிவுகள விடுறம் எண்டு வறச்சொல்லிப்போட்டு ஒரு கிராம சேவையாளர் பிரிவ மட்டும் விட்டிருக்கினம்... எங்கட சனம் தங்கட சொந்த நிலத்துக்கு போகலாம் எண்டுதான் நிலத்த ஆக்கிரமிச்சிருந்த மகிந்தவை தோற்கடிச்சு மைத்திரிக்கு வாக்களிச்சதுகள்... இவையள் விடுறம் விடுறம் என்று சனங்களிட்ட வித்தை காட்டுறினம்.. கேட்டால் கட்டம் …

    • 0 replies
    • 389 views
  20. இறுதியுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் தெற்கிலிருந்து வருகை தந்துள்ள பெரும்பான்மையின மீனவர்கள் அங்கு முகாமிட்டு மீன் பிடியில் ஈடுபடுகின்றனர். இலங்கை அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இறுதியுத்தம் நடைபெற்ற பகுதி தற்போது சுற்றுலாத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியிலேயே குறித்த மீனவர்கள் முகாமிட்டுள்ளனர். இதனால் முள்ளிவாய்க்காலை சேர்ந்த மீனவர்கள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை இவ்வாறு அடிக்கடி தெற்கு மீனவர்கள் அங்கு வந்து கடற்கரையில் முகாமிட்டு மீன்பிடியில் ஈடுபடுவதாக முள்ளிவாய்க்கால் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வேறு மாவட்டங்களிலி…

    • 0 replies
    • 338 views
  21. நாங்கள், வெளிநாடுகளில் உள்ள எமது மக்கள் சந்தோசமாக சுகமாக வாழ்வதற்கு, முன்னாள் போராளிகளின் தியாகம், அதற்காக அவர்கள் பட்ட கஷ்டம் தான் காரணம். அதனை மறுக்க முடியாது. எனவே அவர்களுக்கு உதவ வேண்டிய கடமை, கடப்பாடு எமக்கு உண்டு. அவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று வெள்ளவத்தை நித்திய கல்யாணி நகைமாட உரிமையாளர் ஜெயராஜ் தெரிவித்தார். வடக்கிலுள்ள முன்னாள் போராளிகளுக்கு உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நேற்றுமுற்பகல் இடம் பெற்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்களுக்கு உதவுவதன் மூலமாக நாம் கொடையாளிகள் ஆகிவி…

  22. 19வது திருத்தத்தை எதிர்த்தால், தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடையாது- மைத்திரி கடும் போக்கு APR 12, 2015 | 10:51 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்குவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதில், சிறிலங்கா அதிபரும், பிரதமரும் தீவிர அக்கறை காண்பித்து வருகின்றனர். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக இருந்தாலும், அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர்…

    • 0 replies
    • 418 views
  23. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில் இப்போது கவனம் செலுத்தப்படாது – விஜேதாச ராஜபக்ச APR 12, 2015 | 10:27by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் 19வது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வரையில், சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ‘இப்போது முதன்மையாக உள்ள விடயம் 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவது மட்டும் தான். அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதிலேயே நாம் கவனம் செலுத்தி வருகிறோம். ஏனைய விவகாரங்கள் எல்லாமே, அதற்குப் பின்னர் தான். சில மனித உரிமை அமைப்புகள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. பயங்கரவாத தடைச்…

    • 0 replies
    • 454 views
  24. அமெரிக்கா அதிபர் ஒபாமாவும் சிறிலங்கா வருவதற்கு வாய்ப்பு –வொசிங்டனில் இருந்து தகவல் APR 12, 2015 | 9:09by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கூட, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக, வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் அனுப்பியுள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, “அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி கூடிய விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக, வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் தகவல் அனுப்பியுள்ளது. மேலதிகமாக, அமெ…

    • 0 replies
    • 470 views
  25. மகிந்த ஆதரவாளர்களைக் களையெடுக்கத் தொடங்கினார் மைத்திரி APR 12, 2015 | 2:27by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களைக் களையெடுக்கும் அதிரடி நடவடிக்கையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இறங்கியுள்ளார். இதன்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் பந்துல குணவர்த்தன, ரி.பி.எக்கநாயக்க, சாலிந்த திசநாயக்க, எம்.எம்.சந்திரசேன ஆகியோர் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற முறையில், அதிபர மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். மகிந்த ராஜபக்சவை மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வருவ…

    • 0 replies
    • 354 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.