ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
கிளிநொச்சி மாவட்டத்தில், கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் பொதுமக்களின் காணியை இராணுவத் தேவைக்கு சுவீகரிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26 ஆம் திகதி சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த நடவடிக்கை மீளவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில், திருவையாறு மேற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே காணி சுவீகரிக்கப்படவுள்ளது. இராணுவத்தின் 20 ஆவது பட்டாலியன் கஜபா ரெஜிமன்டுக்காக இந்தக் காணி சுவீகரிப்படுகின்றது. 5 குடும்பங்களுக்குச் சொந்த மான மேற்படி காணியை சுவீகரிப்பதற்கான வர்த்த மானி அறிவித்தல், கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இதனைச் சுவீகரிப்பதற்காக, கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆ…
-
- 0 replies
- 456 views
-
-
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் பேசவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு வரவிருக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ள நிலையில் சந்திப் பின்போது எவ்வாறான விடயங்கள் முன்வைக்கப்படுமென தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் வினவியப்போதே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரி…
-
- 1 reply
- 394 views
-
-
எமது அரசியல் எதிர்காலம் தொடர்பாக எமது, மக்களின் மத்தியில் பல்வேறு கேள்விகள், பல சந்தேகங்கள் உள்ளன. நாங்கள் ஒரு தனித்துவமான மக்கள். எமது கலாசாரத்தை, பண்பாட்டை, அபிவிருத்தியை மற்றும் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் வகையில் ஒரு நீதியான தீர்வு அமைய வேண்டும். அதனை பெறுவதற்கு நாம் ஒரு சுமுகமான பேச்சுவார்த்தைக்கு தயாராகவுள்ளோம். இவ்விதமான தீர்வுக்கு முஸ்லிம் மக்களும் உதவ வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். “கேட்காத குரல்கள்" எனும் குறுந்திரைப்பட அங்குரார்ப்பண நிகழ்வு திருகோணமலை விவேகானந்தாக்கல்லூரியில் நடைபெற்றது. அதன்போது அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்…
-
- 0 replies
- 325 views
-
-
முதல்வர் விக்னேஸ்வரன் மீது ரணில் சீற்றம் MAR 07, 2015 | 2:27by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததாக, வடக்கு மாகாணசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “முதலமைச்சரால் மிகவும் பொறுப்பற்ற முறையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற தீர்மானங்களை அவர் நிறைவேற்றும் போது, முதலமைச்சருடன் நாங்கள் தொடர்பு கொள்வது கடினமானதாகிறது. இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய தலைவர்…
-
- 1 reply
- 639 views
-
-
மோடி வருகையால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு MAR 07, 2015 | 2:11by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தவாரம் உரையாற்றவுள்ளதால், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதாக, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்துள்ளார். இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா வரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13ம் நாள் பிற்பகல் 3.15 மணியளவில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். இதனை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு ஒழுங்குகள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி விளக்கமளித்துள்ளார். இந்தியப் பிரதமர் உரையாற்றவுள்ள வரும் 13ம் நாள், பொதுமக்கள் அ…
-
- 0 replies
- 230 views
-
-
அனைத்துலக அரங்கில் இந்தியாவின் ஆதரவு தேவை – சுஸ்மாவிடம் கோரினார் மைத்திரி MAR 07, 2015 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தினார். நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சரை, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா வரவேற்றார். அதையடுத்து, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள சிறிலங்கா அதிபரின் வதிவிடத்துக்குச் சென்ற சுஸ்மா சுவராஜ், அவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று லண்டனுக்குப் புறப்படவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு…
-
- 0 replies
- 963 views
-
-
சிறிலங்காவை உன்னிப்பாக கண்காணிப்போம் – சீனா MAR 06, 2015 | 13:11by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரத்தை சிறிலங்கா பொருத்தமான முறையில் தீர்க்கும் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா எடுத்துள்ள முடிவு குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங், பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார். “இந்த நிலைமை குறித்து சிறிலங்கா அரசாங்கம் சீனாவுக்கு தகவல் அளித்துள்ளது. திட்டம் தற்காலிகமாகவே இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அது ரத்துச் செய்யப்படவில்லை என்றும் சிறிலங்கா கூறியுள்ளது. அத்துடன், இதுதொடர்பான தொடர் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சீனாவுடன் பரிமாறிக் கொள்வதாகவும், கலந்துரையா…
-
- 1 reply
- 1.8k views
-
-
சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்த பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நோர்வே கூடிய கவனம் செலுத்தியுள்ளதுடன் அது தொடர்பான சகல பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் கிறீற்டா லோசன் தெரிவித்ததாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். நோர்வே உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கும் இடையிலான சந்திப்பு, வெள்ளிக்கிழமை (06) அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தரையை ஊடுருவி நிலத்தில் என்ன இருக…
-
- 1 reply
- 338 views
-
-
மகிந்தவின் பாதுகாப்பு அணியில் இருந்து நீக்கப்பட்டார் மகன் யோசித MAR 06, 2015 | 12:50by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்து, அவரது மகனான லெப்.யோசித ராஜபக்ச நீக்கப்பட்டு, சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் இந்திக சில்வா, “தனது தந்தையின் பாதுகாப்பு அணியில் இணைத்துக் கொள்ளுமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று, லெப்.யோசித ராஜபக்ச கடந்த பெப்ரவரி 12ம் நாள் விடுத்த வேண்டுகாளை அடுத்து, மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில், சில நாட்களுக்கு முன்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். தற்போது வரும், 9ம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் வகைய…
-
- 0 replies
- 542 views
-
-
MAR 06, 2015by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சிறிலங்காவுக்கான இரண்டு நாள் பயணத்தை இன்று பிற்பகல் ஆரம்பித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சருடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கரும், சிறிலங்கா பயணத்தில் இணைந்து கொண்டுள்ளதாக, அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இன்று இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனினும், இந்திய இராஜதந்திரத்துக்கு ஹோலி விடுமுறை நாள் அல்ல என்றும் அவர் அதில் கூறியுள்ளார். அண்மையில் இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்ட பின்னர், எஸ்.ஜெய்சங்கர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வது இது வே …
-
- 0 replies
- 266 views
-
-
மைத்திரி ஆட்சியிலும் பயங்கரவாத தடைச்சட்டம் – பகீரதி மீது பாய்ந்தது MAR 06, 2015 | 5:04by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் பிரான்சில் இருந்து வந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட, முருகேசு பகீரதி என்ற பெண்ணை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைத்திருப்பதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் தனது தாய், தந்தையரைப் பார்ப்பதற்காக வந்து திரும்பிய போது, 41 வயதான, பகீரதியும் அவரது 8 வயது மகளும் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பகீரதி, 1997ம் ஆண்டு தொடக்கம், 2000ம் ஆண்டு வரை கடற்புலிகளின் தளபதியாக இருந்தவர் என்று கூறியே சிறிலங்கா காவல்துறை அவரை கைது ச…
-
- 0 replies
- 466 views
-
-
வெளி மாவட்ட மீனவர்களுக்கு தமது கடற்பரப்பினுள் மீன்பிடிக்க அனுமதி வழங்கக்கூடாதென வலியுறுத்தி திருகோணமலை மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்பது மணி தொடக்கம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திரியாய், குச்சவெளி, நிலாவெளி, திருகோணமலை பகுதிகளை சேர்ந்த சுமார் 800 மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறல்களால், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் உபாலி சமரதுங்க மீனவர்கள் நாட்டின் …
-
- 0 replies
- 336 views
-
-
தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வை காண முயற்சிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், உலக தமிழர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில் பேச்சு சுதந்திரம் மற்றும் நீதித்துறையில் தற்போது உரிய முனைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அரசியல் அமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதன் ஊடாக இலங்கையின் அரசியலில் நீண்டகால நலனை எதிர்பார்க்கலாம். வடக்கு மாகாணத்துக்கு சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டமை முக்கியமான விடயமாக அமைந்துள்ளது. எனினும் தமிழ் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வில் தாமதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந…
-
- 0 replies
- 363 views
-
-
இந்தியாவில் புத்தர் ஞானம் பெற்ற தலமான புத்தகாயவில் உள்ள பிரமாண்டமான பௌத்த விகாரை போன்று, இரத்தினபுரியில் புஞ்சி புத்தகயா என்ற பெயரில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த புஞ்சி புத்தகயாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்துள்ளார். இந்தியாவில் உள்ள புத்தகயா, இலங்கையில் உள்ள பௌத்தர்களால் யாத்திரைத் தலமாக போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்தகயா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=127761&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 647 views
-
-
கனடியத் தமிழர் தேசிய அவையின் இரவு விருந்து நிகழ்வில் மாண்புமிகு கிரிஸ் அலெக்சாண்டர் அவர்கள் இலங்கை பற்றி கூறுகையில்... கனடா தான் முதன் முதலாக இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டுமென வலியுறுத்தியது. கனடா தான் முதன் முதலாக இலங்கையில் நடந்த பொது நலவாய நாடுகளின் மகாநாட்டை புறக்கணித்தது. அதன் பின்பு பல நாடுகள் கனடாவின் முன்மாதிரியைப் பின்பற்றி இந்தியா உட்பட அந்த மகா நாட்டை புறக்கணித்திருந்தனர். கனடாவின் தொடர்ச்சியான அழுத்தங்கள் தான் இராஜபக்க்ஷே அரசாங்கத்தை தனிமைப்படுத்த உதவியது. கனடாவின் பங்கு தமிழருக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ச்சியாகவும் மிகவும் காத்திரமானதாகவும் இருக்கும். இலங்கையில் புதிய அரசாங்கத்திடம் நாம்இ சமரசம் என்ற ஒன்றிற்கு …
-
- 0 replies
- 420 views
-
-
”வலிகாமம் பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமைக்கு நோர்தன் பவர் நிறுவனம் காரணம் இல்லை. எவ்வாறு ஏற்பட்டது என்பதற்காக காரணத்தை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்து வெளியிடவேண்டும். கடந்த சில மாதங்களாக சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலப்பு தொடர்பான செய்திகள் பரவலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதில் எமக்கு தெரிந்த சில உண்மைகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கவேண்டியது அவசியம். நொர்தேன் பவர் மின் உற்பத்தி நிலையம் 2009ஆம் ஆண்டு செயற்பட ஆரம்பித்திருந்தது. அதற்கு 2 வருடங்களுக்கு முன்னர் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான அஸ்ரம் கூல் எயார் நிறுவனம் மின் உற்பத்தி செய்தது. சுன்னாகம் பகுதியிலுள்ள விவசாய அமைப்புக்களின் தலைவர் 2008ஆம் ஆண்டு அந்தப் பிரசேத்திலுள்ள நீரில் ஒயில் கலப்பு…
-
- 1 reply
- 479 views
-
-
இலங்கையில் நடந்ததைக் கூறி, நடந்த உண்மைகளை ஏற்றுக்கொண்டால்தான் நாம் முன்னேறமுடியும். அதன்மூலமே மக்களிடம் நல்லெண்ணத்தையும் சௌகரியத்தையும் ஏற்படுத்தமுடியும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்குமாகாண முதலமைச்சர். யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட நோர்வே தூதுவர் கில்டி ஹரல்ற்சட், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இன்று முற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து முதலமைச்சர் தெரிவித்தவை வருமாறு:- தற்போதைய அரசியல் சூழல், ஏற்பட்ட மாற்றம், மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகள் தமிழ்மக்களுக்கு சாதகமாகவுள்ளனவா போன்ற விடயங்களை நோர்வே தூதுவர் எம்மிடம் கேட்டறிந்தார். அரசியல் சூழ்சிலையில் மாற்றம் ஏற்பட்டுள்…
-
- 2 replies
- 385 views
-
-
வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நாளை வெள்ளிக்கிழமை தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார். யாழ். நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் காலை 9 மணிக்கு அவர் இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார். வட பகுதியில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள், இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை மீட்டுத் தரவும், மீள்குடியேற்றம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுமே இவர் இந்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில், வடபகுதியில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் அனந்தி சசிதரனுக்கு ஆதரவு வழங்கவுள்ளனர். காணாமல் போனவர்கள் மற்றும், இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் போனவர்கள், மீள்குடியேற்றம் போன…
-
- 9 replies
- 851 views
-
-
தனது பயன்பாட்டிற்காக காங்கேசன்துறை பகுதியில் ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டதாக வௌியாகும் செய்திகளில் உண்மையில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் அது சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்காக அமைக்கப்பட்ட கட்டிடம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 1980ம் ஆண்டு பயங்கரவாதிகளால் சேதப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மாளிகை ஒன்று யாழ்ப்பாணம் கோட்டையில் அமைந்துள்ளது என்பதை நினைவூட்டுகிறேன். அது இன்னும் மீள்நிர்மாணம் செய்யப்படவில்லை. காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டு வருவது, ஜனாதிபதி செயலகத்திற்கு கீழ் வரும், சர்வதேச மாநாட்டு…
-
- 2 replies
- 501 views
-
-
நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் சிறிலங்கா – சீனா கூறுகிறது MAR 05, 2015 | 12:09by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சீன- சிறிலங்கா நட்பின் ஒட்டுமொத்த நலன்களுக்காக, சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள, சீன நிறுவனங்களின் நம்பிக்கையை காப்பாற்ற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சீனா தெரிவித்துள்ளது. கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாகவே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், ஹுவா சுன்யிங் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பீஜிங்கில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு குறித்து, சீனாவுக்கு சிறிலங்கா எவ்வாறு விளக்கமளித்துள்ளது, இதற…
-
- 3 replies
- 738 views
-
-
17 பேர் கொண்ட குழுவுடன் நாளை பிரித்தானியா செல்கிறார் மைத்திரி MAR 06, 2015 | 1:24by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்கான ஐந்து நாள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். அவருடன் 17 பேர் கொண்ட குழுவொன்றும் லண்டன் செல்லவுள்ளது. சிறிலங்கா அதிபருடன் பிரித்தானியா செல்லும் குழுவில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், ஊடக குழுவை சேர்ந்த ஒருவர் ஆகியோரே இடம்பெறவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பயணத்தின் போது, கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில், சிறிலங்கா அதிபர் பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் கொமன்வெல்த் பொதுச்செயலர் கமலேஷ் சர்மாவும் பங்கேற்பார். மேலும் அவர் லண்ட…
-
- 0 replies
- 434 views
-
-
மீண்டும் தவறு இழைக்கக் கூடாது – சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை MAR 06, 2015 | 0:42by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் மீண்டும் இடம்பெறக் கூடாது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் எச்சரித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில் நேற்று அவர், ஆண்டறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். அதன்போதே அவர் சிறிலங்காவுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்தார். “ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல் தொடர்பான பேரவையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் குறித்த எனது அறிக்கைய…
-
- 0 replies
- 567 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை பாராட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழு அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழுவின் கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.முஹைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கிழக்கு மகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இருந்துவந்த இழுபறி நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சமயோசிதமாக அரசியல் பட்டறிவு சாணக்கியத்துடன் எடுத்த முடிவு, கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் இன ஐக்கியத்தை வலுப்படுத்த உதவியுள்ளது. இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாகும். கிழக்கு மாகாணசபை ஆட்ச…
-
- 13 replies
- 745 views
-
-
நாடாளுமன்ற தேர்தல்கள் வரும் போது பொறாமை இல்லாமல் போட்டிகளில் பங்குபற்ற நாங்கள் திடசங்கற்பம் பூணவேண்டும். மக்கள் சேவையை முன்வைத்து முன்னேறவேண்டும். எங்கள் ஒற்றுமையும் ஒருங்கிணைந்த சேவையும் இங்கிருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்லதொரு வாழ்க்கையை ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, குழந்தைகள் விடுதி மற்றும் பழைய கட்டடத்தில் அமைக்கப்பட்ட பற்சிகிச்சை நிலையம் ஆகியவற்றைத் திறந்து வியாழக்கிழமை (05) வைத்தும், 24 கட்டில்களைக் கொண்ட விடுதிக்கான அடிக்கல்லை நாட்டிய பின்னர் உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில…
-
- 0 replies
- 401 views
-
-
சிக்கலில் சிக்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பட்டம் MAR 05, 2015 | 7:40by கார்வண்ணன்in செய்திகள் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தன்னை மீண்டும் இராணுவ சேவைக்குள் ஈர்க்க வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கையால், பீல்ட் மார்ஷலாக அவருக்குப் பதவிஉயர்வு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வரும் 22ம் நாள் பீல்ட் மார்ஷல் பட்டத்தை அளிக்கும் நிகழ்வுக்கு பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தது. இந்தநிலையில், தன்னை இராணுவ சேவைக்குள் ஈர்க்க ஜெனரல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அரசாங்கத்தில் உள்ள முக்கிய பிரம…
-
- 0 replies
- 643 views
-