ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
கடந்த அசராங்கத்தினால் வழங்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்து மீளாய்வு செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் சுமார் 2000 பேருக்கு இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கியுள்ளது. இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்ட பலரது இரட்டைக் குடியுரிமை ரத்து செய்யப்படலாம். 2010ம் ஆண்டு முதல் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது. எனினும், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் ஒரு சிலருக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. கையூட்டல் பெற்றுக்கொண்டு இவ்வாறு சிலருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எட…
-
- 0 replies
- 332 views
-
-
மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றுக்கு பாரியளவு கடன் வட்டி செலுத்த நேரிட்டுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிர்மானிக்கப்பட்ட மத்தள விமான நிலையம் மற்றும் மற்றம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியனவற்றுக்காக பாரியளவில் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கடன்களுக்காக மிகக் கூடுதலான வட்டித் தொகையை செலுத்த நேரிட்டுள்ளது. எவ்வாறெனினும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதலாம் பகுதியின் இரண்டாம் கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் அதனை தொடர்ந்தும் முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மத்தளை விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியன தொடர்வில் எவ்வாறான தீர்மானம் எடுப்பது என்பது குறித்து எத…
-
- 0 replies
- 311 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. கடந்த சுதந்திர தின நிகழ்வில் அணி வகுப்பு மரியாதையின் போது ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அது குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் காரணமாக சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குண்டு துளைக்காத விசேட மேலாடையை அணிந்திருந்தாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டாம் இணைப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நாடாளுமன்றத்திற்கு அருகில் கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் போது ஜனாதிபதி உட்பட பிரதம அதிதிகள் மீது தாக்குதல் நடத்த திட…
-
- 0 replies
- 262 views
-
-
வழங்கப்பட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்தி, நாட்டில் இனவாதத்தை தூண்ட சில உள்ளூர் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. இவ்வாறான ஊடக உரிமையாளர்களை அழைத்து உரையாடவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இனவாதத்தை ஏற்படுத்தும் வகையில் சில பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன. முன்னைய அரசுக்கு சார்பாகவும், விடுதலைப் புலிகள் மீள எழுச்சிபெறுகின்றனர் என்றும் சிங்கள மொழி பத்திரிகைகள் பிசராரங்களைச் செய்கின்றன. அத்துடன் புதிய அரசையும் இவர்கள் இழிவு படுத்திவருகின்றனர். பத்திரிகையாளர்கள் பங்கு சந்தைபோன்று பத்திரிகையை நடத்தமுடியாது. எனவே …
-
- 0 replies
- 268 views
-
-
ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழலாம். ஆனால் ஓரே இலங்கைக்குள் வாழ இயலாது. ஏன் என்றால் சிங்கள் தேசம், தமிழ் தேசம் என்று இந்த நாட்டில் இரண்டு தேசங்கள் உள்ளன என்று யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவருமான ஆ.இராசகுமாரன், தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த மாற்றம் அமைப்பின் ஏற்பாட்டிலான இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், மாற்றம் அமைப்பின் தலைவர் உரையாற்றும் போது இன வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப முடியும். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் தற்போது நாட்டில் சிங்கள தேசம், தமிழ் தேசம் என்று இரண்டு தேசங்கள் உள்ளன. இந்ந…
-
- 0 replies
- 945 views
-
-
இலங்கையின் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி கரையோரப் பிரதேசத்தில் உள்ள பல மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் தொழில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டார்கள். கற்பிட்டி கடற்பகுதியலில் சட்டவிரோத மீன்பிடி முறைகளையும் தடைசெய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தி தொடரும் தொழில் நடவடிக்கைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் இன்று நடந்துள்ளது. கடந்த வாரத்தில் சுமார் 100 டால்பின் மீன்கள் கொல்லப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர் இன்று காலை பாலாவி பிரதான வீதியில் குறிஞ்சம்பிட்டி சந்தியில் வீதியை மறித்த மீனவர்கள் ஒன்றரை மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டைனமைட் வெடி வைத்து மீன்கள் பிடிக்கப்படுவதால் பெருமளவிலான கடல் வளங்கள் தொடர்ந்து அப்பகுதியில் அழிந…
-
- 0 replies
- 289 views
-
-
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கிய பெருமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவையே சாரும் என்று உரைப்போர் உளர். எனினும் மைத்திரி ஜனாதிபதியாக வருவதில் ரணில் விக்கிரமசிங்க கொண்டிருந்த வகிபாகம் மிகவும் காத்திரமானது. மைத்திரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர். ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் போட்டியிட்டிருக்க முடியும். தேர்தல் முடிவு ரணிலுக்கு சாதகமாக அமையாது என்ற கருத்து இருக்குமாயின், சஜித் பிரேமதாச, கரு ஜெயசூரிய போன்றவர்களில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் கெளரவத்தைக் காப்பாற்றி இருக்கலாம். எனினும் ரணில் விக்கிரமசிங்க இதை எல்லாம் தியாகம் செய்து மைத்திரிக்கு இடம் கொடு…
-
- 1 reply
- 421 views
-
-
ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழலாம். ஆனால் ஓர் இலங்கைக்குள் வாழ இயலாது. ஏன் என்றால் சிங்கள் தேசம், தமிழ் தேசம் என்று இந்த நாட்டில் இரண்டு தேசங்கள் காணப்படுகின்றன என யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவருமான ஆ.இராசகுமாரன், ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார். மாற்றம் அமைப்பின் ஏற்பாட்டிலான இளைஞர் மாநாடு யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், மாற்றம் அமைப்பின் தலைவர் உரையாற்றும் போது இன வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப முடியும் என்று கூறினார். இதில் எனக்கு உடன்;பாடு இல்லை. ஏனென்றால் தற்போது நாட்டில் சி…
-
- 0 replies
- 531 views
-
-
- கிளிநொச்சியிருந்து குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்ந்தும் இடம்பெறுவதாக மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப்பு தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கிட்லர் மேற்கொண்டதைப்போல துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அழிப்பது மாத்திரம் இன அழிப்பல்ல என்று தெரிவித்த ஆயர் பல்வேறு நுட்பமான நடவடிக்கைகள் மூலமும் ஓர் இனத்தை அழிக்கலாம் என்றும் குறிப்பிட்டார். சிங்கள மக்களிம் உள்ள அதி உச்சமான சிங்கள தேசிய உணர்வின் அச்சத்தால் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய அடையாளங்கள் அழிக்கப்படுவதா…
-
- 0 replies
- 318 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை அவரது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தினார். இலங்கை போக்குவரத்து சபைக்கு 140 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இதனையடுத்தே முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க ஆலோசிப்பதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=103363886622273572
-
- 0 replies
- 331 views
-
-
ஏற்கனவே திட்டமிட்டபடி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் வெளியிட வேண்டும் எனக்கோரி யாழ்.பல்கலைக் கழகச் சமூகம் நடத்தும் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கவுள்ளது என்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை. சேனாதிராசா அறிவித் துள்ளார். இந்தப் பேரணியில் அனைவரையும் அணி திரண்டு ஐ.நா. அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துமாறு அவர் கோரியுள்ளார். இலங்கையின் இறுதிப் போர் தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் சபை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என்றும், அதனை ஒரு போதும் ஒத்திவைக்கக் கூடாது என்றும் கோரி நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணி ஒன்று நடை பெறவுள்ளது. யா…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிடுமாறு வலியுறுத்தி நாளைமறுதினம் இடம்பெறும் பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் விடுத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இறுதிப் போரிலே எம் இனத்தின் மீது இலங்கை அரசு அதன் இராணுவ இயந்திரத்தைக் கொண்டு ஈவிரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலங்களுக்கு ஆறு வருடங்களை எட்டிய நிலையிலும் நீதி கிடைக்கவில்லை. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் நம்பிக்கை ஊட்டும் வகையில் ஐ.நா. மனித உரிமைச் சபையிலே இது தொடர்பான பிரேரணைகள் சர்வதேச நாடுகளின் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்டு வந்தன. ஆனால் அதற்கெல்லாம் கடுகளவும் அசையாத நிலையிலேயே மஹிந்த தலைமையிலான இலங்க…
-
- 0 replies
- 315 views
-
-
நாங்கள் தொடர்ந்தும் அதே அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். ஐ.நா. விசாரணைக்குத் தகவல்களை வழங்கியவர்கள் - குறிப்பாக, பலத்த அச்சுறுத்தல் மத்தியில் தகவல்களை வழங்கியவர்கள் இந்தத் தாமதத்தை ஏற்பதற்கு சிரமப்படலாம். எனினும், இது சரியான செயற்பாடே. இலங்கையின் புதிய அரசு, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை, நல்லிணக்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புகளுடன் ஒத்துழைப்பது போன்ற விடயங்களில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த விடயங்களில் முன்னேற்றம் காண்பது, மோதலின் பாரம்பரியத்துக்குத் தீர்வை காண்பதற்கும் இலங்கையில் பல வருடங்களாகப் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்கள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வலுவான உள்நாட்டு சுயாதீன கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் அவசி…
-
- 6 replies
- 1.2k views
-
-
இந்த நாடும் இங்கு வாழும் மக்களும் என்னுடைய மக்கள் எனது உறவினர்கள் என்ற ரீதியிலேயே நான் செயற்பட்டு வருகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினவின் பிறப்பிடமான கம்பகா மாவட்டத்தில் ஜாகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. குடும்ப ஆட்சி என்ற கொள்கை என்னிடம் இல்லை. இவ்வாறான ஆட்சியை இந்த நாட்டில் ஏற்படுத்த நான் நினைத்திருந்தால் ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்னர் கடந்த 25 ஆண்டு காலத்திற்குள் அமைத்திருக்க முடியும். இந்த நாடு என்னுடையது இங்குள்ள மக்கள் என்னுடைய உறவினர்கள் என்ற அடிப்படையில் தான் எனது செயற்பாடு இடம…
-
- 0 replies
- 367 views
-
-
ஊர்காவற்றுறை நாரந்தனைப் வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விபூசனா (வயது 19) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்று வருகின்றார். நேற்று முற்பகல் 11மணியளவில் கல்வி நிலையத்திற்குச் செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார் விபூசிகா. மாலை 4 மணியளவில் அவரது வீட்டில் இருந்து 700 மீற்றர் தூரத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் விபூசிகாவின் சடலம் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ச…
-
- 0 replies
- 481 views
-
-
இலங்கை குறித்த ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதற்கு ஜப்பான், அமெரிக்கா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்துள்ளன. ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரவதிவிடப் பிரதிநிதி காரியாலயம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இது குறித்து கால அவகாசம் வழங்க வேண்டும் என அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன. யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விசாரணை அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்தது. எனினும் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க, குறித்த அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. மேலும் இந்த தீர்மானத்…
-
- 0 replies
- 311 views
-
-
எமக்கு புலிச்சாயம் பூசும் தரப்பினர்களின் கைக்குள்ளே கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன், கருணா போன்றோர் உள்ளனர். ஈழம் உருவாகுவதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. அதற்குத் துணை போவதாக எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு அவர் வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் 2005ம் ஆண்டு தேர்தலில் இரகசிய ஒப்பந்தத்தினூடாகவும் பாரிய தொகை நிதியை வழங்கி தமிழ் மக்கள் வாக்களிப்பதை நிறுத்தி என்னை தோற்கடித்தார்கள். அது மாத்திரமன்றி எமது தரப்பினர்களில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகா, முன்னைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரை கொலை செய்ய விடுதலைப் புலிகளே ம…
-
- 0 replies
- 283 views
-
-
மகிந்த ராஜபக்சவை பேிரதமர் வேட்பாளராக நிறுத்த வலியுறுத்தி நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகச்வை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி கடந்த 18ஆம் திகதி கொழும்பு - நுகேகொட பிரதேசத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு யாருக்கும் தடையில்லை என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரிதர்ஷன யாப்பா மற்றும் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த ஆ…
-
- 0 replies
- 281 views
-
-
யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு கோரிக்கை:- யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- இறுதிப் போரிலே எம் இனத்தின் மீது இலங்கை அரசாங்கம், அதன் இராணுவ இயந்திரத்தைக் கொண்டு ஈவிரக்கமின்றி நிகழ்த்திய மனிதப் பேரவலங்களுக்கு, ஆறு வருடங்களை எட்டிய நிலையிலும் நீதி கிடைக்கவில்லை. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் நம்பிக்கை ஊட்டும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் இது தொடர்பான ப…
-
- 0 replies
- 239 views
-
-
யுத்த காலப்பகுதிகளினில் இடம்பெற்ற வெவ்வேறான சம்பவங்களினில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்தக் கோரி யாழ். நகரில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று நடை பெற்று கொண்டு உள்ளது. இதன் போது முத்தவெளியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியபட்டியல் உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவியை இளைஞர்கள் எரித்தனர். http://www.pathivu.com/news/37995/57//d,article_full.aspx
-
- 7 replies
- 898 views
-
-
சிறிலங்காவுக்கான தூதுவராக முக்கிய இராஜதந்திரியை நியமிக்கிறது அமெரிக்கா FEB 22, 2015 | 1:11by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக, தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அதுல் கெசாப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த மிச்சேல் ஜே சிசன் கடந்த ஆண்டு இறுதியில் ஐ.நாவுக்கான துணைத் தூதுவராக நியமிக்கப்பட்டதை அடுத்து, சிறிலங்காவுக்கான தூதுவர் பதவி இன்னமும் நிரப்பப்படாமல் உள்ளது. சிறிலங்காவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவுள்ள நிலையில், முக்கியமான ஒரு இராஜதந்திரியை இந்தப் பதவிக்கு நியமிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கமையவே, ந…
-
- 1 reply
- 599 views
-
-
புதுடெல்லியில் மைத்திரியை சந்தித்த சிறிலங்காவின் முக்கிய போர்க்குற்றவாளி FEB 22, 2015 | 0:59by கார்வண்ணன்in செய்திகள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, போர்க்குற்றவாளிகளில் முக்கியமானவராக குற்றம்சாட்டப்பட்டு வரும் சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சந்தித்துப் பேசியுள்ளார். அண்மையில் இந்தியா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, புதுடெல்லியில் உள்ள ஐரிசி மௌரியா செரட்டன் விடுதியில் தங்கியிருந்தார். எதிர்பாராத வகையில், அங்கு வந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். முன்னர், ஐ.நாவுக்கான துணைத் தூதுவராக பணியாற்றிய …
-
- 0 replies
- 422 views
-
-
தனது அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை என்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் FEB 22, 2015 | 0:42 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் பாதுகாப்பு அமைச்சில் தனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக, ஊடகங்களில் வெளியான செய்திகளை சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மறுத்துள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு அளித்த செவ்வியில் அவர், பாதுகாப்பு அமைச்சின் நான்கு துறைகளை நிர்வகிக்கும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலைக் கொண்டு, தனது சிறகுகள் சிறிலங்கா அதிபரால் வெட்டப்பட்டு விட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் தன்மீது நம்பிக்கை வைத்து பல விடயங்களை ஒதுக்கியுள்ளதாகவும்…
-
- 0 replies
- 392 views
-
-
சுதந்திர நாள் அணிவகுப்பில் அரச தலைவர்களைக் கொல்லச் சதி – புலனாய்வுத் தகவலால் முறியடிப்பு FEB 22, 2015 | 0:18by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில், புதிய அரசாங்கத்தின் தலைவர்களைக் கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்று குறித்து முன்னரே தகவல் கிடைத்ததால், அதனைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 4ம் நாள் கொண்டாடப்பட்ட சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கு முன்னதாக, அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு புலனாய்வு எச்சரிக்கை கிடைத்தது. கோட்டே நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே நடக்கும் இராணுவ அணிவகுப்பில் அரச தலைவர் ஒருவர் அல்லது தலைவர்கள் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு இருப்பதாக அந்…
-
- 0 replies
- 452 views
-
-
மாவீரர் குடும்பங்கள்,முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டமானது வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் வரவு -செலவுத்திட்ட அமர்வின் போது அமைச்சர் டெனீஸ்வரனால் குறித்த கொள்கைத் திட்டம் சபையில் வெளியிடப்பட்டது. அதற்கமைய நாளை முதல் சகல கிராம / மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களிடமும் படிவங்களை பெற்று சரியான தரவுகளை பூர்த்தி செய்து எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/New…
-
- 17 replies
- 834 views
-