Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் ஜனவரி 8, 2015 அன்று நடைபெறவிருக்கும் சனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வகிபாகம் தொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் பொருட்டு தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கையொன்றினை இன்று இரவு வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையினில்: இத்தேர்தலில் பிரதானவேட்பாளர்கள் இருவர் களத்தில் உள்ளனர். ஒருவர் தற்போதுபதவியிலிருக்கும் திரு. மகிந்த ராஜபக்ச.மற்றையவர் அண்மைக் காலம் வரை தற்போதைய சனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அமைச்சரவையில் ஏறத்தாள 10 வருடங்கள் முன்ணணி அமைச்சர்களில் ஒருவராகவிருந்து இப்போது எதிரணியின் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடும் திரு. மைத்ரிபாலசிறிசேன. தற்போதைய சனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் சொல்லொணாத் துன்பங்கள் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. என்பது விவ…

  2. மக்­களின் எண்­ணங்­களை பிர­தி­ப­லிக்­கின்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை ஒரு வருட காலத்­துக்குள் நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்பேன். இதற்­காக அனைத்து அர­சியல் கட்­சி­க­ளு­டைய மக்கள் பிர­தி­நி­தி­களைக் கொண்ட முழுப்­பா­ரா­ளு­மன்­றத்தையும் சட்­ட­வாக்க பேர­வை­யாக மாற்­றுவேன் என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்ற முறையில் உள்ள பல­வீ­னத்தைக் கருத்­திற்­கொண்டு சட்­ட­வாக்கப் பேர­வையின் தீர்­மா­னத்­துக்கு அமைய நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை திருத்தம் செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்பேன். பிர­தே­ச­ பிரதி நி­தித்­துவ மற்றும் தொகுதி முறையை கொண்ட கலப்புத் தேர்தல் முறை­மைக்கு செல் வேன் என்றும் ஜனா…

  3. - வி.விஜயவாசகன், கி.பகவான் யாழ். சாவகச்சேரி நாரசபையால் 9.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட மீன் சந்தை கட்டடத்தொகுதி செவ்வாய்க்கிழமை (23) திறந்து வைக்கப்பட்டுள்ளது. நகரசபை தவிசாளர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண சபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், பாலச்சந்திரன் கஜதீபன், அரியகுட்டி பரஞ்சோதி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். மொத்த, சில்லறை மீன் விற்பனைக்கு தனித்தனியாக கட்டடங்களும் மீன் வெட்டி சுத்தப்படுத்துவதற்கும் தனியான கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தை அமைக்கப்பட்டதன் மூலம் சுத்தமான முறையில் மீன் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ததுடன், அதிகளவான மீன் விற்பனையை மேற்கொள்ள வழிசமைக்கப்பட்டுள்ளதாக…

    • 2 replies
    • 647 views
  4. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு செல்வம் அடைக்கலநாதன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் ஆகியோர் கொண்ட அணியினர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் உடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு சென்றனர். அங்கு எதிர்கட்சித் தலைவர் திரு ரணில் விக்கிரமசிங்க, திருமதி சந்திரிகா குமாரதுங்கா ,பொதுவேட்பாளர் திரு மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இருந்துள்ளனர். கூட்டமைப்பின் குழுவினர் திரு ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சை தொடக்கினர், அதற்கு அவர் இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை எல்லாத்துக்கும் திருமதி சந்திரிக்காதான் பொறுப்பு என்றார். அதற்கு திருமதி சந்திரிக்கா, என்னிடம் எந்த அதிகாரமும் இல்ல எனக்கு …

  5. இன்றும் நாளையும் தபால் மூல வாக்களிப்பு! [Tuesday 2014-12-23 08:00] ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு நாடு முழுவதும் இன்றும் நாளையும் நடத்தப்படவுள்ளது. அஞ்சல்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் அரசாங்க அலுவலகத்தில் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிக்குள்ளாக தமது அஞ்சல் வாக்கினை செலுத்த முடியும்.இம்முறை 5 இலட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமது வாக்காளர் தொகுதியி லிருந்து இடமாற்றம் பெற்று வேறொரு பிரதேசத்தில் பணிபுரியும் அரசாங்க உத்தியோகத்தர்கள், முப்படையினர், பொலிஸார், தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக மேற்படி இரு தினங்களிலும் அஞ்சல் மூல வாக்…

  6. தமிழ் சிவில் சமூகஅமையம் - சனாதிபதித் தேர்தல் 2015 எதிர்வரும் ஜனவரி 8, 2015 அன்றுநடை பெறவிருக்கும் சனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வகிபாகம் தொடர்பில் எமதுநிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் பொருட்டு இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது. இத்தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் இருவர் களத்தில் உள்ளனர். ஒருவர் தற்போது பதவியிலிருக்கும் திரு. மகிந்த ராஜபக்ச. மற்றையவர் அண்மைக் காலம் வரை தற்போதைய சனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அமைச்சரவையில் ஏறத்தாள 10 வருடங்கள் முன்ணணி அமைச்சர்களில் ஒருவராகவிருந்து இப்போது எதிரணியின் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடும்; திரு. மைத்ரிபாலசிறிசேன. தற்போதைய சனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் சொல்லொணாத் துன்பங்கள் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது எ…

  7. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள ஆபத்து நிலைமையானது மேலும் தொடருவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. இன்றுவரை14 பிரதேசசெயலாளர் பிரிவுகளிலிருந்தும் சுமார் 300000 க்கும் மேற்பட்டமக்கள் இடம் பெர்ந்தநிலையில் 78 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்காக உடனடித் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும் தொடரும் பருவநிலையின் காரணமாக பல்லாயிரக்கணக் கானமக்கள் இடம்பெயரும் நிலை உருவாகலாம். எனவே அரசநிறுவனங்கள், தொண்டர் தாபனங்கள் தயார்நிலையில் இருந்தாலும் அதனை மேலும் ஸ்திரப்படுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது. காரணம் எதிர்வரும் நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு சாதகமானதாககத் தென்படவில்லை. தொடர்ச்சியாக இன்று (23.12.2014) முதல் எதிர்வரும் வெள்ளிக் கிழமை வரை கடுமையான மழ…

  8. முஸ்லிம்களுக்குத் தனியான 'கரையோர' மாவட்டம் வழங்கப்பட வேண்டும் என்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையைப் பரிசீலிப்பதற்காக இன்று செவ்வாய் இரவு 8 மணி தொடக்கம் விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்று வருகின்றது. அத்துடன் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான அமைச்சரவைப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக உயர் மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிக் கரையோர மாவட்டக் கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளரான மஹிந்தவுக்கே ஆதரவு வழங்கும் என நம்பப்படுகின்றது. இதேவேளை நேற்று திங்கட்கிழமை இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சித் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அரச கட்சியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக…

  9. நாங்கள் ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து வாக்களிப்போம்; யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். எனவே நாம் எல்லோரும் நன்கு சிந்தித்துச் செயல்படுவோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எமது உறவுகள் கொத்துக் கொத்தாக வயது பால் வேறுபாடின்றி உடல் சிதறி இறந்ததையா? இறந்த உடல்கள் அதே இடத்தில் அழுகியதையா? கைது செய்யப்பட்டுக் காணாமற் போனவர்களையா? போர் முடிந்த பின்பும் முகாம்கள் அமைக்கவென சுவீகரிக்கப்படும் எமது காணிகளையா? திட்டமிட்டு அரங்கேறும் குடியேற்றங்களையா? இறந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்த முடியாதிருக்கும் அவல நிலையையா? சிங்களமும் போற்றும் சீமான் இராமநாதனின் நினைவு தினத்த…

  10. என்மீது அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி! – மட்டக்களப்பில் இயக்குனர் பாரதிராஜா. [Tuesday 2014-12-23 08:00] அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னை வந்து சந்தித்த விடயத்தை உலகம் பூராகப் பரப்பி உலகத் தமிழர்கள் அத்தனை பேர்களுக்கும் என்மீது அவப் பெயரை உண்டாக்க சிலர் முனைவதாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்தார். நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற கலைஞர்களைப் பாராட்டும் நிகழ்வில் பிரதம அதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இயக்குனர் பி.பாரதிராஜா இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது- நான் அகிலன் பவுண்டேசன் நிறுவனர் நண்பர் கோபாலகிருஸ்ணனின் அறக்கட்டளை சார்பாக அவரின் வேண்டுதலின் நிமித்தம் கலைஞர்களைச் சந்தித்து பாராட்டுவதற்காக இலங்கை வந்தேன். இந்த …

  11. மகிந்த சிந்தனை வெளியீட்டு நிகழ்வில் ரத்னசிறி பங்கேற்காததால் பரபரப்பு DEC 23, 2014 | 7:24by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில், மூத்த அமைச்சரும், முன்னாள் பிரதமருமான ரத்னசிறி விக்கிரமநாயக்க கலந்து கொள்ளவில்லை. பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ‘மகிந்த சிந்தனை – முக்கால நோக்கு’ என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டு வைத்தார். இந்தநிகழ்வில் அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க பங்கேற்காதது, அவர் எதிரணிக்குத் தாவலாம் என்ற சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது. எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆதர…

  12. வெளிநாட்டுத் தலையீடுகளை அனுமதியேன் – மகிந்த சூளுரை DEC 23, 2014 | 6:55by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளிநாடுகள் முயற்சிப்பதாகவும், அதற்குத் தான் ஒருபோதும், இடமளிக்க மாட்டேன் என்றும் சூளுரைத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ‘மகிந்த சிந்தனை – முக்கால நோக்கு’ என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ”நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு உள்நாட்டு சக்திகளும், வெளிநாட்டு சக்திகளும் முயற்சிக்கின்றன. நாட்டின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பல்வேறு கட்சி…

  13. தோல்வியுற்றால் அமைதியாக ஆட்சியை ஒப்படைப்பேன் – உறுதி கூறுகிறார் மகிந்த DEC 22, 2014 | 11:25by கார்வண்ணன்in செய்திகள் அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றால் அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்து விடுவேன் என்று மீண்டும் உறுதியளித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. பினான்சியல் ரைம்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள செவ்வியில் அவர், “முதலில், நான் தோற்கமாட்டேன். ஆனால், முதிர்ந்த துடிப்பான ஜனநாயக நாடான சிறிலங்காவில் எப்போதுமே அமைதியான முறையில் அதிகாரமாற்றம் இடம்பெற்று வந்திருக்கிறது. ஆனால், மீண்டும் சொல்கிறேன், நாம் வெற்றி பெறுவோம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மூன்றாவது பதவிக்காலத்தில், இ…

  14. பொலனறுவைக்கு 9 இராணுவப் பிரிவுகள் அனுப்பி வைப்பு பொலனறுவைக்கு ஒன்பது இராணுவப் பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச இவ்வாறு இராணுவப் பிரிவுகளை அனுப்பி வைத்துள்ளார். தேர்தல் விதி மீறல்களில் ஈடுபடுவதற்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றியை உறுதி செய்யவும் இவ்வாறு இராணுவ் பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடாபில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஸ எழுத்து மூலம் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஊரான பொலனறுவைக்கு ஒன்பது இராணுவப் பிரிவுகளை அவசரமாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ அனுப்ப…

  15. மனச்சாட்சியின்படி வாக்களியுங்கள்! - அரச ஊழியர்களிடம் ஹக்கீம் வேண்டுகோள். [Tuesday 2014-12-23 08:00] ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவின் போது தமது மனச்சாட்சியின்படி வாக்குப் பதியுமாறு அரச ஊழியர்களிடம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூகம் மற்றும் கட்சி ஆகியவற்றின் பாதுகாப்பையும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக உரிமைகளையும் முதன்மைப்படுத்தி, 23ஆம் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல வாக்குப்பதிவின் போது வாக்குப்பதியுமாறும் அவர் கோரியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=123207&category=TamilNews&language=tamil

    • 2 replies
    • 321 views
  16. நாமல் என்ன சின்னக் குழந்தையா? – ஹிருணிகா கேள்வி. [Tuesday 2014-12-23 08:00] நாட்டு மக்களே போதைவஸ்துக்காரர்கள் தொடர்பாக அறிந்திருக்கும் போது, அதனைப் பற்றி அறியாதிருக்க நாமல் என்ன சின்ன குழந்தையா? என்று மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் போதைவஸ்து கடத்தல்காரர்கள் யார் என்று தெரியும். எனினும் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்சவுக்கு மாத்திரம் அது தெரிந்திருக்கவில்லை. தாம் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கப் போவதாக தெரிந்த நிலையில் நாமல் ராஜபக்ச என்னையும் எனது தாயாரையும் சந்தித்திருந்தார். இதன்போது…

  17. கொழும்பு, கம்பஹா, கண்டி, நுவரெலியா, பொலன்னறுவை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கேகாலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில், பொது எதிரணி கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்றது. ஏனைய மாவட்டங்களிலும், அரசின் ஆதரவு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் ஏனைய 8 மாவட்டங்களையும் வெற்றிக்கொள்ளும் கடுமையான பல்முனை பிரச்சாரங்களில் நாம் தற்போது ஈடுபட்டுள்ளோம். எதிரணியின் இந்த வெற்றிப்பாதைக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு பெரும் பலம் சேர்த்து வருகிறது என தெல்தெனிய, நாவலப்பிட்டி, மாத்தளை, கம்பளை, எட்டியாந்தோட்டை, வலப்பனை, ஹங்குரான்கத, பதுரெலிய ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தொடர் பிரச்சார…

  18. யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அழகுபடுத்தி செழுமைப்படுத்தும் வகையில் ‪‎பிரான்ஸ்‬ (‪france‬) நாட்டில் இருந்து வருகை தந்த ஓவியக் கலைப் பெண்ணாண ‪‎Rose Robin‬ என்பவர் ஒவியங்களை வரைந்து வருகிறார். இவர் கடந்த வாரம் யாழ்ப்பாணம் வருகை தந்து புகையிரத நிலையத்தின் நிலக்கீழ் வழி சுவரில் வர்ணங்களை வரைந்து வருகிறார். பல்வேறு நாடுகளில் பலவர்ண சித்திரங்களை வரைந்து பிரபல்யம் பெற்றவராகவும் உள்ளார் . தனது முதல் பயணமாக யாழ்ப்பாணம் வந்ததாகவும் தெரிவித்தார். Painting ‪‎Pirates Club‬ என்ற கழகம் ஒன்றையும் வைத்துள்ளார். அதன் இணையத்தளத்தில் பிரான்ஸ், அமெரிக்கா, மெக்ஸிக்கோ, மற்றும் கனடா ஆகிய நாட்டுக்கு விஜயம் செய்துள்ளதாகவும் தான் விரைவில் ‪‎இலங்கைக்கு‬ பயணம் செய்யவுள்ளதாகவும் தனது இணையத்தில் கு…

  19. புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய முன்பள்ளிக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு. [saturday 2014-12-20 00:00] யாழ்.. புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய முன்பள்ளி சிறுவர் பாடசாலைக்கான தளபாடங்கள் இன்று (19.12.2014) புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வட மாகாணசபை நிதியிலிருந்து 30000 ரூபாய் பெறுமதியுடைய தளபாடங்களே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. ரஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு கெங்கா அவர்கள் உள்ளிட்ட சனசமூக நிலைய ந…

  20. கிழக்கில் நான்கு இலட்சம் பேர் வெள்ளத்தினால் பாதிப்பு! – மட்டக்களப்பிலேயே மோசம். [Tuesday 2014-12-23 09:00] வெள்ளப்பெருக்குக் காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 354 குடும்பங்களைச் சார்ந்த 4 இலட்சத்து 4 ஆயிரத்து 609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 96 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 9 ஆயிரத்து 354 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 276 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டமே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பில் 88,925 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில…

  21. நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோனது DEC 22, 2014 | 10:54by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் விலகியதை அடுத்து. சிறிலங்கா நாடாளுமன்றத்தில், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது. இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன் மற்றும், அமீர் அலி ஆகியோர் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியின் பலம், 148 உறுப்பினர்களாக குறைந்தள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு குறைந்தது 150 ஆசனங்கள் தேவையாகும். தற்போது, ஆளு…

  22. படையினரை அரசாங்கம் இழிவுபடுத்தவில்லை என்கிறார் கோத்தபாய! [Tuesday 2014-12-23 08:00] அரசாங்கம் இராணுவத்தை இழிவுபடுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கதிர்காமம் வெடிஹிட்டி கந்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். படையினரைக் கொண்டு வடிகால்கள் வெட்டப்படுவதாகவும், சாப்பாட்டுத் தட்டுகள் கழுவப்படுவதாகவும் சிலர் குற்றம்சுமத்துகின்றனர். எனினும், படையினரை இழிவுபடுத்தும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. இன்று அனுராதபுரம், பொலனறுவை மற்றும் திருகோணமலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படையினரே உதவிகளை…

  23. ஜனாதிபதி தேர்தலில் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும்! – தேர்தல் ஆணையாளர் [Tuesday 2014-12-23 08:00] ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்கள் விரும்பினால், இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்கினையும் அளிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டில் தாம் வாக்களிக்கும் வேட்பாளரின் சின்னத்திற்கு எதிரில் 1 என்ற இலக்கத்தை எழுதுவதன் மூலம் முதலாம் விருப்பத் தெரிவினை செய்ய முடியும். மேலும் இரண்டு வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கினை அளிக்க வேண்டுமாயின் குறித்த வேட்பாளர்களின் சின்னங்களுக்கு எதிரில் 2 மற்றும் 3 என குறிப்பிட முடியும். இரண்டாம் மூன்றாம் விருப்பத் தெரிவுகளை அடையாளப்படுத்தாது ஒரே ஒரு வேட்பாளருக்கு மட்டும…

  24. மீனவர் ஜேசுதாசனின் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும்! – இறுதிச்சடங்கில் கஜதீபன். [Tuesday 2014-12-23 08:00] கடற்படைப் படகினால் மோதிப் படுகொலை செய்யப்பட்ட எழுவைதீவு சேர்ந்த மீனவர் அலெக்ஸாண்டர் அன்ரனி ஜேசுதாசனின் உடல் மக்களின் உணர்வுக் கொந்தளிப்புடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் கலந்து கொண்டார். இதன் போது இரங்கலுரை நிகழ்த்திய அவர் பெரிய குடும்பமொன்றின் தலைவரான அன்ரனி ஜேசுதாசன் அவர்கள் கடற்றொழிலை மேற்கொண்டே தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறார். வழமை போல தொழிலுக்குச் சென்ற அவரின் படகை கடற்படையினரின் அதிவேகப் படகினால் மோதி விட்டு, அவர் கடலில் வீழ்ந்து தத்தள…

  25. ரணில் – மைத்திரி இரகசிய உடன்பாடு - விபரங்களை வெளிப்படுத்துகிறார் திஸ்ஸ அத்தநாயக்க! [Tuesday 2014-12-23 08:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும்,யுத்தத்தில் ஈடுபட்ட யினரையும் போர்க்குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் மைத்திரிபால செய்து கொண்டுள்ள இரகசிய ஒப்பந்தத்தை சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்டுள்ளார். சர்வதேச சக்திகளின் தேவையையும் புலி டயஸ்போராவின் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் இந்த இரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 2014 நவம்பர் மாதம் 1ம் திகதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் செய்து கொண்ட உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.