ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143544 topics in this forum
-
கிளாஸ்கோ பயணத்தைக் கைவிட்டார் ஜனாதிபதி மஹிந்த! [Tuesday 2014-07-22 20:00] கிளாஸ்கோவில் நாளை ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்க மாட்டார் என ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் விஜயத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், அவர், கிளாஸ்கோ சென்றால் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படக் கூடுமெனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அஞ்சி ஜனாதிபதி கிளாஸ்கோ விஜயத்தை ரத்து செய்யவில்லை என மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தவிசாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடமையாற்றி வருகின்ற…
-
- 17 replies
- 1.5k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் தன்னிச்சையான நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியாது என்பதால் இலங்கை அது குறித்து அலட்டிக்கொள்ள தேவையில்லை என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை வழங்கியுள்ளார். விவசாய நிலங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வெருளிகள் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை வர்ணித்துள்ள அவர் இலங்கை குறித்து ஏன் அவர்கள் அக்கறை கொள்ளவேண்டும் அவர்கள் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை விவகாரம் பாதுகாப்பு சபைக்குச் சென்றால் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பாவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இது குறித்த கவலையடைய தேவையில்லை, நாங்கள் ஒரு போதும் சர்வதேச விசாரணைணை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். ஐ.நா விசார…
-
- 5 replies
- 826 views
-
-
வடகொரியா போல சர்வாதிகார நாடாக மாறிவருகிறது இலங்கை! - ரணில் குற்றச்சாட்டு. [Thursday 2014-07-24 10:00] வடகொரியாவைப் போன்று இலங்கை சர்வாதிகார நாடாக மாற்றமடைந்து வருவதாக, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது பாதுகாப்பு அமைச்சு பல்வேறு வழிகளில் கட்டுபாடுகளை விதித்து வருகிறது. இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு பிரதமர் டி.எம். ஜயரட்னவிடம் கோரிய போதிலும் அதற்கு உரிய பதிலளிக்கப்படவில்லை. என்று தெரிவித்துள்ளார். அதற்கு, புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்…
-
- 0 replies
- 335 views
-
-
அரேபிய புரட்சியைப் போன்று இலங்கையில் புரட்சியை ஏற்படுத்துவது சுலபமானதல்ல என பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தெரிவிப்பதனைப் போன்று இலங்கையில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது சுலபமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் எதிர்க்கட்சி என்று கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்வதனை விடுத்து எதிர்க்கட்சிகள் கடுமையான போலிப் பிரச்சாரங்களை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் தாளத்திற்கு ஏற்ற வகையில் எதிர்க்கட்சிகள் நடனமாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாது எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சொந்த கட்ச…
-
- 0 replies
- 495 views
-
-
சில சக்திகள் பௌத்த பிக்குகளை பயன்படுத்தி சூழ்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பிக்குகளை தூண்டி விட்டு வன்முறைகளில் ஈடுபடுவதன் மூலம் ஒட்டுமொத்த பௌத்த பிக்குகளையே கொலையாளிகளாகவும் குண்டர்களாகவும் வெளிக்காட்ட சில சக்திகள் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பௌத்த பிக்குகளை சீரழித்து அ…
-
- 0 replies
- 219 views
-
-
இராணுவ பிரசன்ன ஆக்கிரமிப்பு அராஜகத்தை நீக்கி தமிழர் தீர்வை நோக்கி நகர வேண்டும் அரசு : - ஜ.ம.மு பாஸ்க்கரா [Thursday 2014-07-24 10:00] வட பகுதியில் இராணுவத்தை விலக்காமல் மேலும் மேலும் விஸ்தரிப்பதுடன் இராணுவ மேலாண்மை தன்மையை மேம்படுத்தி தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் தன்மையின் உச்சத்தால் நில அபகரிப்பு சிறுமி மீதான வற்புணர்வு வடமாகாண இராணுவ பிரசன்னத்தின் கொடூர தன்மையை புடம் போட்டுக்காட்டுகிறது. இவ்வேளையில் தமிழ் மக்கள் விடிவுக்கான தீர்வையும் உண்மை நிலையை பெரும்பான்மை மக்கள் உணராமல் தடுக்கிறது பெரும்பான்மை இனவாத மதவாதம். தீர்வையும் எட்டாக்கனியாக மாற்றுகிறது. அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில…
-
- 0 replies
- 191 views
-
-
கிளாஸ்கோ திருப்பலிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தார் ஜனாதிபதி மகிந்த! [Thursday 2014-07-24 10:00] கிளாஸ்கோ தேவாலயத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி நடைபெறவுள்ள முதலாவது உலக யுத்த ஞாபகார்த்த திருப்பலியில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார். இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு, பிரித்தானிய அரசாங்கம், விடுத்த அழைப்பு ஜூன் மாதம் 24 ம் திகதி கிடைத்ததாக இலங்கை அரசாங்க தகவல்கள் தெரிவித்தன. புலிகளின் ஆதரவு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டிருந்த எதிர்ப்பின் மத்தியிலும் பிரித்தானியா அரசாங்கம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற காரணத்தைக் காட்டி ஜனாதிபதி இந்த அழைப்பை மறுத்துள்ளதாக தகவல்…
-
- 0 replies
- 350 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளே போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என்று 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த சர்வதேசக் கருத்தரங்கில் கருத்துரை வழங்கிய டெஸ்மன் டீ சில்வாவே, காணாமற்போனோர் தொடர்பான ஆணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இலங்கை இராணுவத்தினரால் கொழும்பில் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டுக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு ராணி சட்டத்தரணியான டெஸ்மன் டீ சில்வா கருத்துரை வழங்கியிருந்தார். அவர் தனது கருத்துரையில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை (தருஸ்மன்) உண்மைகளைக் கண்டறியவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார். போர் நடைபெற்ற போது 3…
-
- 0 replies
- 182 views
-
-
யாழ்.பேருந்து நிலையமானது காகங்களின் இருப்பிடமாக மாறிவருவதுடன் அந்த தரிப்பிடம் மக்கள் உபயோகிப்பதற்கு மிக அசுத்தமாக இருப்பதால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர். எனினும் மக்களின் இந்த அசௌகரியங்களை போக்கும் விதத்தில் பேருந்து நிலையத்தை சுத்தமாக்கி காகக் கூடுகளை அப்புறப்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். இதேவேளை பேருந்து நிலையத்தை நோக்கி வரும் காகங்கள் மக்களின் மேல் எச்சங்கள் போடுவதுடன் நிலையத்தையும் அசுத்தமாக்குகின்றன. எனவே மக்களின் நலன் கருதி இந்த பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்த உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். http://www.onlineuthayan.com/News_More.php?id=137133253924637328
-
- 0 replies
- 253 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் வாழ்வாதாரத்துக்கான முக்கிய தொழில்கள் விவசாயமும் மீன்பிடியுமாகும். விவசாயத்தைப் பொறுத்தவரை நெற்செய்கையைப் பிரதானமாக மேற்கொள்ளும் காணி உரிமையாளர்கள் நல்ல வருவாய் பெறும் அதேவேளை, விவசாய கூலித் தொழிலை (அறுவடை)நம்பி வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்கள் இயந்திர பாவனை காரணமாக வருவாயிழந்து, தொழில் வாய்ப்பின்றி முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல்தான் இந்த மாவட்டத்தின் கரையோரப் பிரதேச கிராமங்களில் மீன்பிடித் தொழில், குறிப்பாக கரைவலை மீன்பிடித் தொழில், முன்னர் கடற்றொழிலாளர்களுக்கு தினசரி வருமானமீட்டும் தொழிலாக இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த கரைவலை மீன்பிடித் தொழில், முடங்கிவிட்ட ஒரு தொழிலாகவே மாறியுள்ளது. குறிப்பாக அம்பாறை ம…
-
- 0 replies
- 504 views
-
-
இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் பிரித்தானியா கவலைகளை வெளியிட்டு வரும் நிலையில், பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற குழு கண்டறிந்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதி 614 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் நடைமுறையில், 49.6 மில்லியன் பவுண்கள் ( 79 அனுமதிப்பத்திரங்கள்) மற்றும் 8.1 மில்லியன் பவுண்ட்ஸ்களுக்கான (49 அனுமதிப்பத்திரங்கள்) அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரியவந்துள்ளது. ஏனைய நாடுகளை விட இலங்கைக்கு அதிகளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளமை தொடர்பில் குறித்த நாடாளுமன்…
-
- 3 replies
- 508 views
-
-
நோர்வேஜியர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் நுழைவிசைவு வழங்கக் கூடாது என்று பாஜகவின், மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியுள்ளார். நேற்றுமுன்தினம் மாலை கொழும்பு பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில், இடம்பெற்ற மோடி ஆட்சியின் கீழ் இந்தியா என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய போதே சுப்பிரமணியன் சுவாமி, இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். நோர்வேயின் அமைதி முயற்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், மனித உரிமைகள் முனையில் சிறிலங்கா அரசாங்கம் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்று உசுப்பேற்றியதுடன், நோர்வேஜியர்களுக்கு நுழைவிசைவு வழங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் சிறிலங்காவுக்காக நோர்வே தூது…
-
- 1 reply
- 527 views
-
-
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு எவ்வளவு வேகமாகவும் எத்தகைய அநீதியாகவும் முன்னெடுக்கப்படுகிறது என்பதற்கு ஒதியமலையின் இன்றைய நிலமையும் பொருத்தமான எடுத்துக்காட்டு. ஒதியமலை வவுனியா மாவட்டத்தின் எல்லைப் பகுதி. அந்தப் பகுதியில் உள்ள சுமார் 3000 ஏக்கர் காணிகளை அபகரிக்க முற்ப்படுவதாகவும் அந்தப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யத் திட்டமிடப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் சமீபத்தில் ஒதியமலைக்குச் சென்றிருந்தேன். ஒதியமலையை நோக்கி குடியேற்ற நடவடிக்கை ஒன்று முன்நகர்ந்து கொண்டிருக்கும் அதிர்ச்சியை காண முடிந்தது. அந்த நடவடிக்கை ஒரு நில அபகரிப்பு யுத்தத்திற்கு ஒப்பானது. நில அபகரிப்பு யுத்தம் என்பது விமானங்கள் பறந்து குண்டுகளைக் கொட்ட யுத்த டாங்கிகளோடு யு…
-
- 0 replies
- 556 views
-
-
தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனையை குறைக்கும் முன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி தமிழக அரசு விடுதலை செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, விடுதலைக்கு தடை விதித்ததுடன் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. ஓர் அரசியல் சாசன அமைப்பு தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை பயன்படுத்திய பின், இன்னொரு அமைப்பு அந்த அதிகார…
-
- 0 replies
- 361 views
-
-
சீன உதவியுடன் அமையவுள்ள சர்ச்சைக்குரிய விமான பராமரிப்பு நிலையத்தை இராணுவத்தினரே கையாள்வர்- 24 ஜூலை 2014 திருகோணமலையில் சீனாவின் உதவியுடன் அமையவுள்ள சர்ச்சைக்குரிய விமான பராமரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினரே முழுமையாக கையாள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவாண் வணிகசூர்ய இதனை தெரிவித்துள்ளார். இலங்கையால் பயன்படுத்தப்படும் சீனா தயாரிப்பு விமானங்களின் பராமரிப்பிற்காகவே சீனா உதவியுடன் இதனை அமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது குறிப்பிட்ட சீனா விமானங்களை பாக்கிஸ்தானிற்கு பராமரிப்பு பணிகளுக்காக அனுப்பவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடற்படையினருக்கு ஜப்பானின் உதவியுடன் அவ்வாறான பராமரிப்பு நில…
-
- 2 replies
- 336 views
-
-
-எம்.என்.எம்.ஹிஜாஸ் உலகில் பெண்கள் பல்வேறு சாதனைகள் படைத்துவரும் இக் காலப்பகுதியில் 36 வருடங்களாக பெண்ணொருவர் தனியாக கடலுக்கு சென்று மீன்பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றார். புத்தளம், முள்ளிபுரம் கிராமத்தில் வதியும் ஆர். பாத்திமா எனும் 54 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு மீன்பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றார். இவர் மாலை 5.00 மணிக்கு கடலுக்கு சென்று, அடுத்த நாள் காலையிலேயே கரை திரும்புவது வழமையாகும். குறித்த பெண் அவருடைய அனுபவம் தொடர்பில் பின்வருமாறு தெரிவித்தார். ''நான் கல்வி கற்கும் போதே மீன்பிடித்தொழிலில் அதிகம் ஆர்வமுடையவளாக இருந்தேன். இதனால் கல்வியில் அதிக அக்கறை காட்டவில்லை. எனது தந்தை மீன்பிடித்தொழில் ஈடுப்பட்டதினால் எனக்கு அத்தொழிலில் அதிக ஆர…
-
- 0 replies
- 511 views
-
-
வவுனியா கல்வாரி ஆலயத்தில் விஷமிகள் அட்டகாசம் சிலைகள் உடைப்பு ஜூலை 24, 2014 வவுனியா கோமரசம் குளத்தில் அமைந்துள்ள கல்வாரி ஆலயத்தின் புகழ்மிக்க சிலைத்தொகுதிகளை விஷமிகள் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். நேற்று இரவு இந்தச் சிலைகள் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளன. யேசுநாதர் சிலைகளுக்கு அருகில் இருந்த யூதர் சிலைகளின் 8 தொகுதிகளும், மாதா சிலை ஒன்றுமே உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/44395/64//d,fullart.aspx
-
- 0 replies
- 410 views
-
-
நட்டஈடு வழங்குவதற்கே காணிகளை அளக்கிறோம்; இப்படிக் கூறுகின்றார் இராணுவப் பேச்சாளர் news நட்டஈடு வழங்குவதற்காகவே காணிகளை அளவீடு செய்கின்றோம். காணிகளைப் புதிதாக இராணுவம் கையகப்படுத்துகின்றது என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். 2009 ஆம்ஆண்டுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் 200 இற்கும் மேற்பட்ட முகாம்கள் மூடப்பட்டுள்ளன இவ்வாறு தெரிவித்துள்ளார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிக சூரிய கொழும்பில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சந்திப்பின்போது, அச்சுவேலி மற்றும் மிருசுவிலில் இராணுவம் தமது புதிய முகாம்களை அமைப்பதற்காக காணிகளை அளவீடு செய்து வருவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது. அ…
-
- 0 replies
- 329 views
-
-
பிரித்தானியா, இலங்கை ஜனாதிபதிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு:- 24 ஜூலை 2014 நிகழ்வுகளில் பங்கேற்பது பாதுகாப்பு சிக்கல்களை தோற்றுவிக்கும் - பிரித்தானியா:- பிரித்தானியா இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜப்கஷவிற்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவிற்கு விஜயம் செய்திருந்த போது புலி ஆதரவாளர்கள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலாம் உலக யுத்தத்தில்…
-
- 0 replies
- 315 views
-
-
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கணக்கை மூடியது பேஸ்புக் நிறுவனம்! [Thursday 2014-07-24 10:00] அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பேஸ்புக் கணக்கு செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமக்கு எவ்வித அறிவித்தல்களும் வழங்காது பேஸ்புக் கணக்கை முடக்கியுள்ளதாக அமைச்சர் ரணவக்க தெரிவித்துள்ளார்.'எனது பேஸ்புக் கணக்கில் 21 ஆயிரம், நண்பர்கள் இணைந்து கொண்டுள்ளனர். கணக்கு செயலிழந்துள்ளமை குறித்து பேஸ்புக் நிறுவனத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக கணக்கு செயலிழக்கச் செய்யப்பட்டது என்பது குறித்த தகவல்களை பின்னர் அறிவிப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனது பேஸ்புக் கணக்கை திட்டமிட்டு முடக்க சிலர் முயற்சித்துள்ளதாக கருதுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 421 views
-
-
ராஜபக்ஷவினரின் பெருந்தொகைப் பணம் பாகிஸ்தான் செல்வந்தர்கள் மூலம் வெளிநாட்டில் முதலீடு? - சர்வதேச விசாரணைக்குழு கண்டறிந்துள்ளதாம். [Wednesday 2014-07-23 18:00] விடுதலைப்புலிகளின் சொத்துக்கள், புதையல்கள் மற்றும் தரகுப் பணம் மூலம் ராஜபக்ஷவினர் பெற்ற பெருந்தொகையான பணம் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு செல்வந்தர்கள் ஊடாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம் பற்றி விசாரணை நடத்தும் சர்வதேச குழுவொன்று கண்டறிந்துள்ளது. இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள இணையத்தளம் ஒன்று விசாரணை நடத்தும் குழுவின் பெயரை தற்போது வெளியிட முடியாது எனக் கூறியுள்ளது. மேற்படி பாகிஸ்தான் செல்வந்தர்களில் ஒருவர் சில காலம் பாகிஸ்தான் அமைச்சராக இருந்த சலீம் மெண்டிவிவாலா ஆவார், இவர் பாகிஸ்…
-
- 0 replies
- 421 views
-
-
பாலஸ்தீன மக்கள் மிருகத்தனமாக தாக்கி அழிக்கப்படுவதும் அத்தாக்குதலின் தன்மை, அளவு, நேரம், காலம் என்பனவற்றை வைத்து இதை எதிப்பவர்கள் ஆதரிப்பவர்கள் தத்தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதும் ஒரு அரசியல், சமூக வழக்கமாகி விட்டது. ஏன் ஒருவகையில் அது ஒரு சடங்காக் கூட ஆகிவிட்டது. எதிரி வீழ்த்தப்படுவது தொடர்பான நம்பிக்கைகள் தெளிவில்லாத போது போராட்டங்களும் எதிர்ப்புகளும் சடங்காகின்றன. இது போராடுபவர்களின் தவறல்ல! இன்று உலக மக்களை கேட்பாரற்ற நிலையில் அழித்தொழித்துக் கொண்டிருக்கும் உலக அதிகார சக்திகளின் எல்லையில்லா அட்டூழியங்களின் எதார்த்த நிலைதான். பாலஸ்தீனர்களின் எதிரிகள் அவர்களை விட பல மடங்கு ஆயுத பலமானவர்கள். இஸ்ரேல் என்னும் தேசம் யூத இன, மத அடிப்படைவாதத்தில் உருவான சியோனிச தேசமாகும். மத …
-
- 0 replies
- 384 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 23 இணைப்பாளர்கள்! [Wednesday 2014-07-23 09:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இணைப்பாளர்களாக 23 பேர் கடமையாற்றி வருவதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இணைப்புச் செயலாளர் ஒருவருக்கு மாதாந்த சம்பளம் 30,000 ரூபாவாகும். இதற்கு மேலதிகமாக போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. மாதமொன்றுக்கு 170 லீற்றர் பெற்றோல் வழங்கப்படுகின்றது. பெற்றோல் கொடுப்பனவிற்கு மேலதிகமாக 30, 000 ரூபா கொடுப்பனவும், 5000 ரூபா தொலைபேசி கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. இதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் …
-
- 1 reply
- 386 views
-
-
ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ நகரில் தற்போது பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் எழுச்சிபூர்வமாக அணி திரண்டுள்ளனர். பிரித்தானியாவின் பல பாகங்களிலிருந்தும் பேருந்துகளிலும், மகிழுந்துகளில் வருகை தந்த பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் உணர்வுடன் எழுச்சி கொண்டுள்ளனர். 54 சர்வதேச நாடுகள் பங்கு பற்றும் இவ்விளையாட்டுப் போட்டியில் மகிந்த ராஜபக்சவின் கொடூர முகத்தை அம்பலப்படுத்துவடன், 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு யூலை இனக் கலவரத்தையும் அதில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான எமது மக்களையும் இன்றைய நாளில் நினைவேந்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com/news/44380/64//d,fullart.aspx
-
- 6 replies
- 566 views
-
-
மத்தல விமான நிலையத்தை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு விமானிகளை பயிற்றுவிக்கும் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக தெரியவருகிறது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன அண்மையில் வெளியிட்ட தகவல் மூலம் இது தெரியவந்துள்ளது. சிங்கப்பூர் அரசாங்கத்தின் எரோ ஸ்பேஸ் நிறுவனம் இலங்கையின் சீனேட் நிறுவனம் இணைந்து விமான பயிற்சி பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்கள் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளதாகவும் இதற்கு இடத்தை ஒதுக்குமாறு மத்தல விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு தான் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியிருந்தார். மத்தல விமான நிலையத்திற்கு சர்…
-
- 4 replies
- 676 views
-