ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142659 topics in this forum
-
மட்டக்களப்பில் கோலாகலமாக வரவேற்கப்பட்ட புத்தாண்டு! Jan 1, 2026 - 08:01 AM 2026ஆம் ஆண்டுப் பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நள்ளிரவு விசேட நிகழ்வுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு நகரில் நள்ளிரவு 12.00 மணிக்கு பட்டாசுகள் கொளுத்தப்பட்டு, இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பெருமளவான பொதுமக்கள் இன, மத வேறுபாடுகளின்றி மட்டக்களப்பு நகரில் ஒன்றுகூடியதைக் காணமுடிந்தது. சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகப் பலர் உயிரிழந்தும், சொத்துகளை இழந்தும் தவிக்கும் நிலையில், இம்முறை புத்தாண்டை அமைதியான முறையில் கொண்டாடுமாறு மாநகர முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். முதல்வரின் …
-
- 0 replies
- 78 views
- 1 follower
-
-
தையிட்டியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள்! Dec 31, 2025 - 03:57 PM தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று (31) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், தையிட்டி காணி தொடர்பாக, நீண்டகாலமாக தீர்க்கப்படாத விடயங்களுக்கான ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைய வேண்டும் என்பதே இக் கலந்துரையாடலின் நோக்கம் எனத் தெரிவித்து, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் அடுத்த கட்டம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார். இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் - ஏகமனதாக திஸ்ஸ விகாரை அமைந்துள்ள…
-
- 4 replies
- 345 views
- 1 follower
-
-
'Rebuilding Sri Lanka' ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு Dec 31, 2025 - 10:00 PM 'டித்வா' புயலைத் தொடர்ந்து பேரழிவுக்குப் பின்னரான மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 'Rebuilding Sri Lanka' ஜனாதிபதி செயலணியை நிறுவி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (31) மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவை இந்தச் செயலணி உள்ளடக்கியுள்ளது. இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்தச் செயலணி நிறுவப்பட்டுள்ளது. https://docs.google.com/viewerng/viewer?url=https://ada-derana-tamil.s3.amazonaws.com/news-…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு Dec 31, 2025 - 09:18 PM இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில், கடந்த 8 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் இரு வேறு பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (30) இடம்பெற்ற இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் வழிநடத்தப்பட்டவை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொஹுவலை, போதியவத்தை பகுதியில் நேற்று இரவ…
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
மீன் வருகின்ற பாதையை தடுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது - மீனவர் சங்க பிரதிநிதி தெரிவிப்பு! 31 Dec, 2025 | 05:00 PM ஊர்காவற்துறைக்கு செல்கின்ற நீரோட்டம் கீழ் கடலில் இருந்து தங்குவாய்க்கால் ஊடாகத்தான் வரும். அவை எல்லாம் தற்போது தடைப்பட்டுள்ளது. இந்த தடைகளை நீக்கினால் தான் மீன் உற்பத்திகள் அதிகரிக்கும் என நாங்கள் பலமுறை கூறினோம். அதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை என அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் இராஜச்சந்திரன் தெரிவித்தார். நேற்றையதினம் நடைபெற்ற காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை இறால் உற்பத்தியானது 10 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. வழமையாக மாரி காலத்தி…
-
- 0 replies
- 104 views
- 1 follower
-
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது Oct 31, 2025 - 03:20 PM - 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ், பொலிஸார் நாடு முழுவதும் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், நேற்றைய தினம் 987 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சுற்றிவளைப்புகளின்போது, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம், மொத்தமாக 971 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்ட நப…
-
- 12 replies
- 629 views
- 1 follower
-
-
யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது! யாழ்ப்பாணத்தில் 04 கிலோ கிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றைய தினம் அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டார். வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய போதைப்பொருளை கையளிப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com…
-
-
- 16 replies
- 847 views
-
-
தண்ணீருக்குள் மிதக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – பரீட்சாத்த போட்டிகள் இடைநிறுத்தம்! ஜனவரி மாதம் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்த கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற மைதானத்திற்குள் அதிகவான தண்ணீர் நிற்பதை அவதானிக்க முடிந்துள்ளது. யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றது. ஆனால் டித்வா சூறாவளி காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. எனினும் தற்போது மைதானத்திற்குள் அதிகளவான தண்ணீர் தேங்கியுள்ளது. டித்வா சூறாவளி தாக்கத்திற்கு முன்னர் ச…
-
- 0 replies
- 140 views
-
-
ஜோன்ஸ்டனை தேடி 5 பொலிஸ் குழுக்கள் களத்தில் Dec 30, 2025 - 11:05 PM சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளுக்காகப் பயன்படுத்தியதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2.5 இலட்சம் ரூபாய் (250,000) நிதி இழப்பு ஏற்…
-
- 2 replies
- 172 views
- 1 follower
-
-
நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளது - ஜனாதிபதி 31 Dec, 2025 | 10:45 AM அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் மதுவரித் திணைக்களத்தின் முன்னேற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகள் குறித்து மீளாய்வு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் அதன் சிரேஷ்ட அதிகாரிகளுடன் மதுவரித் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைப…
-
- 0 replies
- 101 views
- 1 follower
-
-
தையிட்டியில் போராடும் மக்களிடம் கள்ள உறுதி தான் உள்ளது என்று அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது. முடிந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டியில் போராடுபவர்களின் காணி உறுதி பொய் என்பதை நிரூபிக்கட்டும் என தையிட்டி காணி உரிமையாளர்கள் சவால் விடுத்துள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ச்சுனாவை தொடர்பு கொள்ள முடியவில்லை மேலும் தெரிவிக்கையில், சிங்கள மக்களுக்காக தமிழ் மக்களின் காணிகளை அர்ச்சுனா பெற்றுக் கொடுக்க வேண்டாம். நீங்கள் எதிர்காலத்தில் இங்கு போட்டியிட்டும் வெல்லப் போவதில்லை. நீங்கள் தென் இலங்கையை நோக்கி நகரப் போகிறீர்கள். தையிட்டி மக்களின் காணிகள் பற…
-
- 0 replies
- 112 views
-
-
செம்மணி யாழ் வளைவு பகுதியில் தடை - நல்லூர் பிரதேச சபையின் சர்ச்சைக்குரிய தீர்மானம் யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் உள்ள யாழ் வளைவு மற்றும் நல்லூரான் வளைவு ஆகியவற்றுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் அமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தவிசாளர் ப. மயூரன் தலைமையில் நடைபெற்றது. செம்மணி வளைவு அதன் போது யாழ்ப்பாணத்தின் நுளைவு வாசலாக இருக்கின்ற செம்மணி வளைவு பகுதியில் எமது சமய காலசாரங்களை பிரதிபலிக்கின்ற நல்லூரான் செம்மணி வளைவு, சிவலிங்கம். மற்றும் கோவில்கள் ஆகியன காணப்படுவதன் அடிப்படையில் அச் சூழலில் அசைவ உணவங்கள், விடுதிகள், விருந்தகங்கள் போன்ற அச்சூழலுக்கு பொருத்தமில்லாத விய…
-
- 2 replies
- 167 views
-
-
கொழும்பு மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டது 31 December 2025 கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு கடும் இழுபறிக்கு மத்தியில் இன்று நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் முடிவில், இந்த பாதீட்டுக்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2 வாக்குகள் வித்தியாசத்தில் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 22 ஆம் திகதி கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலீ பல்தாசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு தோல்வியடைந்திருந்தது. அதன்போது, ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இன்றைய தினம் மீண்டும் பாதீடு முன்வைக்கப்பட்டு மறு வாக்கெடுப்பு…
-
- 0 replies
- 118 views
-
-
முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இரு முறைமைகளின் கீழ் தலா 50 இலட்சம் ரூபா - அரசாங்கம் 31 Dec, 2025 | 11:22 AM (எம்.மனோசித்ரா) தித்வா புயலால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இரு முறைமைகளின் கீழ் தலா 50 இலட்சம் ரூபா வழங்கப்படும். அத்தோடு பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு சேத மதிப்பீடு இன்றி 5 இலட்சம் ரூபா வழங்கப்படுவதோடு, சேத மதிப்பீடுகளுக்கமைய அந்த தொகை 25 இலட்சம் வரை அதிகரிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் பலவந்தமாக இடைத்தங்கல் முகாம்களிலிருந்து வெளியேற்ற அரசாங்கம் தயாராக இல்லை. குடியிருப்புக்களை இழந்தவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் பாதுகாப்பாக மீள் குடியேற்றப்படுவர் என்றும்…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
”தையிட்டி போராட்டம் நில அபகரிப்புக்கு எதிரானதே – பௌத்தத்திற்க எதிரானது அல்ல” யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கடுமானத்தை மக்கள் ஒரு போதும் வலுக்கட்டாயமாக அகற்ற விரும்பவில்லை சட்டத்துக்கு உட்பட்டு சட்டவிரோத கட்டிடத்தை உரியவர்கள் அகற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எம்மைப் பொறுத்தவரையில் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸவிகாரை விகாரையல்ல தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் அடாத்தாக கட்டப்பட்ட சட்ட விரோத கட்டிடம் . இதற்கு எதிராக இரண்டு வருடங்கள் கடந்தும் ஜனநாயக நீதியாக மக்கள் ப…
-
- 0 replies
- 102 views
-
-
குடிநீர் இணைப்பில் புறக்கணிக்கப்பட்ட காரைநகர் - தவிசாளர் சுட்டிக்காட்டு! 31 Dec, 2025 | 11:08 AM காரைநகர் பகுதியில் எல்லா பகுதிகளிலும் இன்னமும் குடிநீர் வழங்கல் குழாய்கள் தாழ்க்கப்படவில்லை. நிறைய பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் சுட்டிக்காட்டினார். காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். காரைநகர் பகுதியில் கரையோர பகுதிகளுக்கே அதிகளவான நீர் தேவை உள்ளது. ஆனால் அங்கே பிரதான குழாய்கள் பொருத்தப்படவில்லை என தவிசாளர் சுட்டிக்காட்டினார். உரிய அதிகாரி அதற்கு பதிலளிக்கையில், நீர்த்தாங்கி வரைக்கும் தண்ணீர் வந்துவிட்டது. குழாய் இணைப்புகளை…
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவாநந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா உடல் நலகுறைபாடு காரணமாக தற்போது மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டார் கடந்த 2019 ஆம் ஆண்டு, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த ‘மாகந…
-
-
- 5 replies
- 368 views
-
-
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைத் திரும்பப் பெறக் கோரி நீதி அமைச்சில் கோரிக்கை 30 Dec, 2025 | 04:45 PM இன்று நீதி அமைச்சில் ஒன்றுதிரண்ட இலங்கையின் சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்" (PSTA) குறித்துத் தமது ஆழ்ந்த கவலையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதற்குப் பதிலாக, அதனை மேலும் வலுப்படுத்தும் ஒரு அடக்குமுறை கருவியாகவே இந்தப் புதிய சட்டமூலம் அமைந்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தினர். இந்தச் சட்டமானது குடிமக்களின் அடிப்படை உரிமைகள், பேச்சுச் சுதந்திரம், தனிமனித உரிமை மற்றும் ஜனநாயகம் …
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது Dec 30, 2025 - 12:40 PM முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அதேநேரம் சம்பளம் மற்றும் கொடுப்பனவு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cmjs8znxs03a9o29ndhg8ar4l
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க தீர்மானம் Dec 30, 2025 - 03:47 PM தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 14 பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மத்திய, ஊவா, சப்பரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள தேயிலை மற்றும் இறப்பர் தோட்டப் பகுதிகளில் தற்போது 864 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இப்பாடசாலைகளில் பெரும்பாலானவை நகரங்களிலிருந்து மிகத் தூரமான மற்றும் அசாத்தியமான பிரதேசங்களில் அமைந்துள்ளதால், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கு சென்று கடமையாற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முறையான …
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிரான முறைப்பாடு - நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை!! 30 Dec, 2025 | 10:02 AM முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை கல்வி அமைச்சிற்கு கையளித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை வழங்கியுள்ளது. பிரதமர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளர் T. ஸ்ரீமன்ன மேற்கண்ட முறைப்பாட்டை 12.12.2025 ஆம் இலக்க கடிதம் மூலம் கல்வி அமைச்சுக்கு பாரப்படுத்தி உள்ளார். மேற்குறித்த அதிபர் அரச சட்டதிட்டங்களை மீறி சமூக ஊடகங்கள் வாயிலாக நிதி…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம் 30 Dec, 2025 | 03:51 PM மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு காரணமாகக் குவிந்துள்ள மண் ஒரு சமூகப்பிரச்சினையாக மாறி வருகிறது. கடந்த அனர்த்தின் போது ஏற்பட்ட பல்வேறு மண்சரிவுகள் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் பாதைகளில் இருந்து நான்கு இலட்சம் கியுபிக் மண் அகற்றப்படுள்ளதாக நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆரச்சி தெரிவித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மதகதண வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றால் இவை அகற்றப்பட்டுள்ளன. அதே நேரம் இவற்றை அப்புறபப்டுத்தி கொட்டுவதற்குஇடமில்லாது காணப்படுகிறது. பொருத்த மற்ற இடங்களில் கொட்டப்பட்டால் அவை மீண்டும் நீரினால் கழுவப்பட்டு அல்லது மீ…
-
- 2 replies
- 173 views
- 1 follower
-
-
இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு! யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னரே தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரையில் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார். எனவே பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 15 தோட்டாக்களுடன் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதத்தை பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படும் என ராமநாதன் அர்ச்சுனா மேலும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த ராமநாதன் அர்ச்சுனா, யாழ் மாவட்ட அபிவிருந்த்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னர் எனக்கு கொலை மிரட்டல் விடுக…
-
-
- 2 replies
- 215 views
-
-
பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை நிறுத்துங்கள் ; வவுனியாவில் போராட்டம் 30 Dec, 2025 | 02:19 PM வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், வவுனியா உட்பட வடகிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் மிலேச்சத்தனமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரு மதகுரு என்று கூட பாராமல் மோசமான முறையில் வேலன் சுவாமி நடாத்தப்பட்டிர…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
அரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் Dec 30, 2025 - 03:20 PM இந்த டித்வா சூறாவளி ஏற்பட்ட சமயத்திலும் அதற்குப் பின்னரும், பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும், மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்வைத்து அவற்றை முன்னெடுப்போம் என்று அரசாங்கமும் ஜனாதிபதியும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். ஆனால் அவ்வாறு வாக்குறுதியளித்த சலுகைகள், நிவாரணங்கள், அவற்றுக்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. ஒரு தகரத் துண்டு அடிபட்டுச் சென்றாலும் அதற்கும் 10 இலட்சம் ரூபா தருவோம் என்று உறுதியளித்த அரசாங்கம், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தருவோம் என்று உறுதியளித்த 50 இலட்சம் ரூபாயையோ, அல்லது வாழத் தகுதியற்ற …
-
- 0 replies
- 92 views
- 1 follower
-