ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
இலங்கைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டுள்ளார். நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகள் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதி இந்தியப் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரக்கூடாது என தமிழக கட்சிகள், தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதேவேளையில், இலங்கைத் தமிழர் நலன் கருதியே இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்து வந்தது. இந்நிலையில், எதிர்ப்புகளுக்கு இடையே இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி , பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தச் சந்த…
-
- 0 replies
- 575 views
-
-
மோடி மஹிந்த சந்திப்பு இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையுடனான அதன் உறவுகளை இந்தியா மதிப்பதாக ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட இலங்கையில் சமத்துவம், நீதி மற்றும் சமாதானம் மிக்க ஒரு வாழ்க்கைக்கான தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலான தேசிய நல்லிணக்கத்துக்கான செயல்முறையை துரிதப்படுத்த ராஜபக்ஷவிடம் மோடி கோரிக்கை விடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆவது சட்டத்திருத்தத்தை கூடியவிரைவில் அமல்படுத்துவது இந்த செயல்முறைக்கு வழிவகுக்கும் என்றும் மோடி ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி, இன்று செவ்வாய்க்கிழமை காலை முறைப்பட…
-
- 0 replies
- 525 views
-
-
தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிருமாறு மகிந்தவுக்கு மோடி அறிவுரை கூற வேண்டும்! - என்கிறார் 'ஹிந்து' ராம். [Tuesday, 2014-05-27 09:25:55] இலங்கையில், தமிழ் மக்களுக்கு, உரிய அதிகாரப்பகிர்வை அளிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையும் அறிவுரையும் வழங்க வேண்டும் என்று 'தி ஹிந்து' பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தெற்காசிய நாடுகளின் தலைவர்கள், பதவியேற்பு விழாவில் பங்குபெற்றது ஒரு சிறப்பான அம்சம் எனவும், அது வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்பு என்றும், அதை அடித்தளமாகக் கொண்டு முன்னேற்றங்களை காண வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். மோடியின் பதவ…
-
- 4 replies
- 826 views
-
-
யாழ்.குடாநாட்டில் 145000 மின்சாரப் பாவனையாளர்கள் காணப்படுகின்றனர்.அதில் 133000 பாவனையாளர்கள் பிரதான மின்வலயத்திற்குள் உள்ளடங்குகின்றனர். மேலும் கிராமிய மின்திட்டத்திற்கு என 65 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் வடமாகாணத்தில் 99 வீதமான குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=404773051427653307#sthash.3sd0mskO.dpuf
-
- 0 replies
- 266 views
-
-
பொதுக்கிணற்றில் குடிதண்ணீர் எடுப்பதற்குப் படையினர் தடை விதித்ததைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் இயக்கச்சிப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இயக்கச்சிச் சந்தியிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு ஆகிய உப்பளங்களின் பணியாளர்களின் பயன்பாட்டுக்கென உப்பளங்கள் அமைக்கப்பட்ட காலத்தில் மூன்று கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டது. அந்தக் காலம் தொடக்கம் இயக்கச்சிப் பகுதி மக்கள் மூன்று கிணறுகளிலும் குடிதண்ணீர் எடுத்துவந்தனர். ஆனையிறவு படைமுகாமுக்கும் இந்தக் கிணற்றிலிருந்துதான் குடிதண்ணீர் பெறப்பட்டு வருகிறது இயக்கச்சிப் பகுதியில் மக்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் இயக்கச்சிச் சந்தையில் வ…
-
- 2 replies
- 487 views
-
-
மாணிக்கப்போடி சசிகுமார்,எஸ்.சரவணன் கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் இன்று செவ்வாய்க் கிழமை முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு ஆரம்பித்த வேளையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தண்டாயுதபாணி தலைமையில் அஞ்சலி நிகழ்வை நிகழ்த்தியுள்ளனர். இதன் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அனைவரும் கறுப்புத் துண்டுகள் தோளிலில் சால்வையாக போட்டிருந்தனர். tamilmirror
-
- 1 reply
- 478 views
-
-
ஊழல் மோசடிமிக்க காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவை தாக்கிய அரசியல் சூறாவளி இலங்கையை தாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியை விடவும் அமைச்சரான விமல் வீரவன்ஸவிற்கே அதிகம் பயந்து நடுங்குகிறார். முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்காத ராஜபக் ஷ அமைச்சர் விமலுடன் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்குகின்றமையிலிருந்தே அவருடைய பயம் வெளி உலகுக்கு காட்டப்படுகிறது எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. ஐ.தே.கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை தெ…
-
- 1 reply
- 508 views
-
-
-நா.நவரத்தினராசா, எம்.றொசாந்த் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிப்பெற்று, ஆசிரியர் உதவி ஆசிரியராக நியமனம் பெற்ற 50 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் வடமாகாண கல்வி அமைச்சரின் உறுதிமொழியின் பின்னர் கைவிடப்பட்டது. தமக்கு வழங்கப்பட்டுள்ள வன்னிப் பகுதிக்கான இடமாற்றத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தும்படி கோரிக்கை விடுத்து ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா வேதனம் பெறும் தாங்கள் வன்னிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டால், வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்ய முடியாத இக்கட்டான நிலைக்குச் தள்ளப்படுவோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினார்கள். யாழ்;.…
-
- 0 replies
- 381 views
-
-
கிழக்கு மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் உறுப்பினர் துரையப்பா நவரெட்ணராஜா தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை கிழக்கு மாகாண பேரவைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். இவரது இராஜினாமாவையடுத்து கிழக்கு மாகாண சபையில் வெற்றிடமொன்று தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.சரீப் தேர்தல் ஆணையாளருக்கும் தெரிவித்துள்ளார். கடந்த கிழக்கு மாகாண சபையில் இவர் விவசாய கால் நடை அபிவிருத்தி அமைச்சராக செயல் பட்டு வந்துள்ளதுடன் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம் பெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்;டமைப்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தர். ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்புக்கு கிடைத்த போனஸ் ஆசன …
-
- 0 replies
- 546 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் இந்திய மீன்பிடி நாட்டுப்படகுகளின் வருகை இலங்கை கடற்பரப்பில் அதிகரித்துள்ள அதேவேளை, மன்னார் மாவட்ட மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளையும் அப்படகுகள் சேதப்படுத்தியுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய மீனவர்களின் நாட்டுப்படகுகள், தற்போது இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக தலைமன்னார், பேசாலை, வங்காலைப்பாடு, சிறுத்தோப்பு, காட்டாஸ்பத்திரி, சருசல் ஆகிய கிராமங்களுக்குட்பட்ட கடற்பரப்புக்களில் பல நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்களின் படகுகள், இரவு நேரங்களில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இதன்போது, குறித்த கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் போட்டுள்ள பல இலட்சம் ரூபாய் பெறுமதிய…
-
- 0 replies
- 425 views
-
-
தமிழர் பிரச்சினை, மீனவர் விவகாரம் குறித்து மோடி – மஹிந்த பேச்சு செவ்வாய்க்கிழமை, 27 மே 2014 11:44 0 COMMENTS இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை மற்றும் இரு நாட்டு மீனவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து, இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துரையாடினர். இன்று காலை இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விரு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பினை அடுத்து, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களையும் ஜனாதிபதி மஹி…
-
- 0 replies
- 328 views
-
-
TAMIL NADU - ONE NATION - PLANNING MEETING I would like to hold an online forum, two weeks from now, to discuss the recent events and to formulate a real concrete plan to create Tamil Nadu, as a new and independent Nation. If you are interested in attending, please let me know and provide your email address, so my assistant can invite you. https://www.facebook.com/va.shiva.ayyadurai?fref=nf
-
- 0 replies
- 397 views
-
-
சுவிட்சர்லாந்திலிருந்து அரசியல் அடைக்கலம் நிராகரிக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்ட இருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சுவிட்சர்லாந்தின் குடியகல்வு அலுவலகம் கடுமையான கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட இருவரும் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையிலேயே குடியகல்வு அலுவலகம் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை சுவிடசர்லாந்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில், 2011 இல் எடுக்கப்பட்ட இந்த 'தவறான தீர்மானம்' தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இருவரதும் அரசியல் தஞ்சக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள…
-
- 0 replies
- 474 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்றிரவு (26) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக மிகவும் நம்பரமான தகவல்கள் குளோபல்தமிழ்ச்செய்திகளிற்கு தெரிவிக்கின்றன. முன்னதாக மூவரே கைதுசெய்யப்பட்டிருந்ததாக மலேசிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்திருந்தன. எனினும், மொத்தமாக 9 பேர் கைதுசெய்யப்பட்டிருந்ததாகவும், இவர்கள் அனைவரும் தற்போது இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் மலேசிய மனித உரிமை அமைப்பொன்றின் பேச்சாளர் ஒருவர் குளோபல்தமிழ்ச்செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மலேசிய அதிகாரிகள், மூவரின் பெயர் விபரங்களை மட்டுமே வெளியிட்டிருந்ததாகவும், ஏனைவர்கள் 6 பேர் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில…
-
- 0 replies
- 593 views
-
-
பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2015 ஆண்டு ஜனவரி மாதம் பாப்பரசர் இலங்கை வரவுள்ளார். அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://virakesari.lk/articles/2014/05/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
-
- 0 replies
- 340 views
-
-
யாழ்.குடாநாட்டின் கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்குகள் பிடிப்பதற்கு தடை உத்தரவு, இந்தாண்டு தொடக்கத்திலிருந்து அமுலில் இருப்பதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையின் உதவிப்பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (26) இடம்பெற்றது. இதன்போது, வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு ஆகிய பகுதிகளில் கடலட்டை மற்றும் சங்குகள் பிடிக்கப்படுவதாக மற்றும் அனுமதிக்கப்படாத மீன்பிடி முறைகளும் பயன்படுத்தப்…
-
- 0 replies
- 292 views
-
-
வடமாகாண சபையினை அரசாங்கம் (ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) கைப்பற்றியிருந்தால் வலி.வடக்கில் மீள்குடியேற்றம் இடம்பெற்றிருக்கும் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (26) இடம்பெற்றது. இதன்போதே டக்ளஸ் மேற்குறித்த கருத்தினைத் தெரிவித்தார். இதன்போது குறுக்கிட்ட வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், 'நீங்கள் கூறுவதினைப் பார்த்தால் வடமாகாண சபை கிடைக்க…
-
- 0 replies
- 472 views
-
-
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ.| படம்: மீட்டா அஹல்வத். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ. இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் மதிமுக பொதுச்செயலர் வைகோ கருப்புக்கொடி போராட்டம் நடத்தினார். தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக வைகோவையும், மதிமுக தொண்டர்களையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். முன்னதாக போராட்டத்தின் போது பேசிய வைகோ: "மோடி பதவியேற்பு விழாவில், ராஜபக்சே கலந்து கொள்வதால் அந்த நிகழ்ச்சியின் புனிதத் தன்மை கெட்டுவிடும்" என்றார். மேலும், ராஜபக்சேவை மட்டுமே எதிர்ப்பதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்கவில்லை என்றும் கூறினார். நரேந்திர மோடிக்கு நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் க…
-
- 13 replies
- 980 views
-
-
'3 விடுதலைப்புலிகளை மலேசியா நாடுகடத்தும்' விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் சந்தேக நபர்களை மலேசியா இலங்கைக்கு நாடுகடத்தவுள்ளதாக அந்த நாட்டின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள தமது தொடர்புகள் மூலம் இவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்ததாக, தனது பெயரை வெளியிடாத அந்த அதிகாரி பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார். பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அந்த அமைப்புக்கு நிதி சேகரிப்பது மற்றும் அதற்கான பரப்புரைகளை செய்வது ஆகிய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மலேசியாவில் உரிய விசா மற…
-
- 3 replies
- 762 views
-
-
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (26) இடம்பெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு - எம்.றொசாந்த்) tamilmirror
-
- 1 reply
- 340 views
-
-
இந்தியப் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, நாளை சார்க் நாடுகளின் எட்டுத் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்புக்கான கால அட்டவணையை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. இதன்படி, முதலாவதாக ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீட் கர்சாயை, காலை 9.30 மணியளவில் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார். அதையடுத்து, மாலைதீவு அதிபர் அப்துல் கயூமை காலை 10.05 மணிக்கு அவர் சந்திப்பார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு நாளை, காலை 10.30 மணியளவில் இடம்பெறும். அதையடுத்து. பூட்டான் பிரதமர், மொறிசியஸ் பிரதமர், நேபாள பிரதமர் ஆகியோரையும் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் நர…
-
- 0 replies
- 867 views
-
-
மோடி படை பெரியது. அதன் ஆர்.எஸ்.எஸ். தளபதிகளில் முக்கியமானவர் சேஷாத்ரி சாரி. இவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ‘ஆர்கனைசர்’-ன் முன்னாள் ஆசிரியர். பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் மும்பைவாழ் தமிழர். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து… பா.ஜ.க-வின் வெற்றியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்கைப் பற்றிச் சொல்லுங்களேன்? ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையும் அமைப்புரீதியிலான பலமும்தான் இதில் முக்கியப் பங்குவகித்தன. கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும்படி சொல்வதில்லை. அதேபோல், பொதுநல அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., நாட்டின் நலன் காக்கும் கட்சிக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்டுக்கொண்டதை விட அதிகமாக எதுவும் செ…
-
- 8 replies
- 1.6k views
-
-
யாழ்.குடாநாட்டில் தொடரும் நில ஆக்கிரமிப்பு பற்றி தனக்கு ஏதும் தெரியாதென அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் சாதிக்க தனக்கு அறிக்கை சமர்ப்பிக்க கோரியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தின் போதே அரசாங்க அதிபர் தெரியாதென தெரிவிக்க அமைச்சரோ இப்போது தான் கேள்விப்பட்ட விடயம் போல அறிக்கை கோரியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9.3௦0 மணியளவில் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருந்தது. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா இணைத்தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போது யாழ் மாவட்டத்தின் செயற்பாடுகள் பற்றி காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. வலி.வட…
-
- 0 replies
- 532 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கமைவாக மனித உரிமைகள் ஆணையகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகவும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் தொடர்பாகவும் முழுமையான விபரங்களை சேகரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். சுன்னாகம் பிரதேச சபை மண்டபத்தில் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; இந்த ஆண்டுக்கான…
-
- 0 replies
- 490 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் 2014ஆம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணப்புக்குழுக் கூட்டம் கொக்கட்டிச்சோலையிலுள்ள கருணா அம்மான் பிரதேச கலாசார நிலையத்தில் இன்று காலை கடும் வாதப் பிரதிவாதங்களுடன் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சருக்கு இணைத்தலைவர் பதவியில்லை. அவரை எவ்வாறு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் தமக்கருகில் அமர வைத்தார் என்ற கேள்வி எழுப்பப்பட்டதையடுத்து பெரும் குழப்பம் ஒன்று ஏற்பட்டது. அத்துடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தை மாவட்ட செயலகத்தில் நடத்தாது கொக்கட்டிச்சோலையில் நடத்துவது தொடர்பிலும் ஒழுங்குப்பிரச்சினை ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால் அக்கூட்டத்தை மாவட்ட செயலகத்தில்தான் நடத்த வேண்டுமென்பது சட்டம…
-
- 0 replies
- 394 views
-