ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
வடக்கு மாகாணத்தின் நீர் வளத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் 02 நாட்களைக் கொண்ட ஆய்வரங்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் திங்கட்கிழமை (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வடக்கு மாகாணத்தின் எல்லைக்குட்பட்ட 05 மாவட்டங்களிலும் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நன்னீரின் பயன்பாடு அதிகரித்துச் செல்லும் அதேசமயம், நன்னீருக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மேலும், சூழல் விரோதச் செயற்பாடுகளால் இருக்கின்ற நீரிலும் மாசுக்கள் கலந்து வருகின்றன. பூமி வ…
-
- 0 replies
- 465 views
-
-
மற்றொரு தடையைத் தாண்டினார் நவிபிள்ளை - முன்னேறுகிறது ஐ.நா விசாரணைப் பொறிமுறை [ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2014, 01:44 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச விசாரணைக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதில் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெற்றி பெற்றுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. சிறிலங்காவை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்குள் பிரச்சினைகள் அதிகரித்துள்ள நிலையில், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தவாரம், இந்த முயற்சிகளில் மற்றொருபடி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இந்த விசாரணைகள…
-
- 2 replies
- 894 views
-
-
பெயர் பலகைகளில் தமிழ்மொழியும் கட்டாயம்! - அமைச்சர் வாசு கண்டிப்பான உத்தரவு. [Monday, 2014-05-12 09:53:34] வீதிகள் மற்றும் வீதிகளில் வைக்கப்படும் அனைத்து பெயர்ப்பலகைகளிலும், தமிழ்மொழியும் உள்ளடக்கப்பட வேண்டுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உத்தரவு பிறப்பித்துள்ளார். பொரளை, பத்தரமுல்ல ஆகிய பிரதேசங்களில் பாதை திருத்த வேலைகள் தொடர்பிலான பெயர்ப் பலகைகள் ஆங்கிலம், சிங்கள மொழிகளில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.இவ்வாறான பெயர்ப் பலகைகளில் மூன்று மொழிகளிலும் விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார். வீதிகள், பாலங்கள் திருத்தப்படும் போது அது குறித்து அறிவிக்கப்பட வேண்டியது அவசியமானது. எனினும், இந்த அறிவிப்பு அனை…
-
- 0 replies
- 348 views
-
-
பொதுவேட்பாளராக போட்டியிட விக்னேஸ்வரன் மறுப்பு! [sunday, 2014-05-11 19:19:24] ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். தமக்கு அதிகாரப் பசி இல்லை என்றும் அவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம், குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அரசியலில் நுழைய எனக்கு விருப்பமில்லை. போருக்குப் பிந்திய வடக்கிற்கு நல்லதொரு தலைமைத்துவத்தை வழங்கி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று பலரும் என்னைக் கேட்டுக் கொண்டதால் தான், அரசியலில் இறங்கினேன். வடக்கிலுள்ள மக்கள் ஏகோபித்த ஆதரவுடன் என்னை முதலமைச்சராகத் தெரிவு செய்து ஏழு மாதங்களாக அந்தப் பதவியை வகிக்றேன்.ஆனால் துரதிஸ்டவசமாக, ஆக்கபூர்வமான வகையில் என்னால் மக்களுக்கு சேவையாற்ற ம…
-
- 1 reply
- 571 views
-
-
நிமல்கா பெர்ணான்டோ – தமிழரசுக்கட்சியினர் சந்திப்பு! யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் வரை மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ தலமையிலான சிவில் அமைப்புக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்ட இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்சந…
-
- 0 replies
- 327 views
-
-
நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் - இனமான நடிகர் சத்தியராஜ் மே 12, 2014 மே 18 , இன அழிப்பு நாள் இன்று ஐந்தாவது ஆண்டு கடந்தும் தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கவில்லை .அந்த நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் , தமிழினத்தை வென்றெடுப்போம் என உலகம் முழுதும் நடைபெறவிருக்கும் தமிழின அழிப்பு நாள் நிகழ்வில் அனைத்து தமிழ் உறவுகளும் கலந்துகொள்ளுமாறு இனமான நடிகர் சத்தியராஜ் கோரிக்கை விடுத்துள்ளார் . http://www.sankathi24.com/news/41364/64//d,fullart.aspx
-
- 0 replies
- 478 views
-
-
கேள்வி: வடமாகாணசபைத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் முதலமைச்சராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். நீங்கள் எப்போது பதவியேற்கவுள்ளீர்கள்? என்னை வடமாகாண முதலமைச் சராக நியமிப்பதற்கான அங்கீகாரத்தை எமது உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர். அது ஆளுனருக்கு தெரியப்படுத்தப்பட்டு பின்னர் அதனை வர்த்தமானி அறிவித்தல் செய்ய வேண்டியிருக்கும். அதன் பின்னர் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்ததன் பின்னர், என்னுடைய கடமைகளை செய்யலாம் என்று அவர் கூறியதையடுத்து நான் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டியிருக்கும். அத்தருணத்தில் யார் முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்பதை அப்போது தான் தீர்மானிப்பேன். கேள்வி: மாகா…
-
- 23 replies
- 1.9k views
-
-
பலரது தூற்றுதல்களுக்கு மத்தியிலும் நான் அரசில் அமைச்சராக பங்கெடுத்து வருவது எமது மக்களுக்காகவே:- அரசில் இருப்பது குறித்து மறு பரிசீலனை செய்ய தயார்:- டக்ளஸ் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடக்கத் தவறினால் தான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பது குறித்து மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவர் மீண்டுமொருமுறை பகிரங்க அழைப்பு விடுத்து உள்ளார். "எமது மக்களின் அ…
-
- 0 replies
- 631 views
-
-
பலஸ்தீனர்கள் இலங்கையில் போராட்டம் 11 மே 2014 நான்கு பலஸ்தீனியர்கள் இலங்கையில் போராட்டம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடம் கோரி வந்த நான்கு பலஸ்தீனப் பிரஜைகளை மீளவும் சிரியாவிற்கு நாடு கடத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி குறித்த பலஸ்தீனர்களை விமான நிலையத்தில் வைத்து இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர், தங்களை நாடு கடத்த வேண்டாம் என குறித்த பலஸ்தீனப் பிரஜைகள் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசித்ததாக குறித்த பலஸ்தீனர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தப் பலஸ்தீனர்களை மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் இலங்கை அதிகாரிகள் நடத்தி வருவ…
-
- 0 replies
- 702 views
-
-
கிளாஸ்கோ பொதுநலவாய விளையாட்டுப் போட்டி - மகிந்த பங்கேற்கக்கூடிய அபாயம் குறித்து தொழிற்கட்சி விசனம்! இவ்வருட கோடைக்காலத்தில் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆற்றக்கூடிய பங்குகள் குறித்த தனது கடுமையான விசனத்தை பிரித்தானிய தொழிற்கட்சியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினரும் நிழல் வெளிவிவகாரச் செயலாளருமான டக்ளஸ் அலெக்ஸாண்டர் மீண்டும் வெளியிட்டிருக்கிறார். பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியத்துக்கான செயலாளர் வில்லியம் ஹேக் அவர்களுக்கு கடந்த 8ஆம் திகதி அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே இது தொடர்பில் தனது விசனத்தை வெளியிட்டுள்ளார். 'சுமார் 17 போட்டிகளில் ஸ்கொட்லாந்து அணியின் மெய்…
-
- 0 replies
- 491 views
-
-
முல்லைத்தீவு, வள்ளிபுனம், கரித்தாஸ் கியுடெக் வீட்டத்திட்டப் பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன், தானும் தற்கொலை செய்துகொண்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அருமைநாயகம் அருள்ராஜ் (வயது 30) என்பவரும், அவரது மனைவியான அருள்ராஜ் செல்வகுமாரி (வயது 28) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர். இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக படுக்கையிலிருந்த மனைவியை, கணவன் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்து சென்ற கணவன், வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் இருப்பதுடன், இவ்விடயம் தொடர்பாக அவர்…
-
- 1 reply
- 644 views
-
-
முல்லைத்தீவு வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இவ் ஆயுதங்கள் நேற்று (09) இராணுவம் மற்றும் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளன. இவ் ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவை என படையினர் தெரிவித்தனர். 98*19 அளவுடைய ரவைகள் - 120000, எஸ்.ஜி. 12 போரா ரவைகள் - 2750 மற்றும் 357 ரக ரவைகள் - 5600 இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106708/language/ta-IN/article.aspx
-
- 10 replies
- 1.6k views
-
-
2009 ஆண்டு மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் சாரிசாரியாக மக்கள் கொல்லப்பட்ட நினைவு நாள். ஒரு லட்சத்திற்கும் மேலான மக்களை இலங்கை இனப்படுகொல அரசு அழித்துப்போட்டது. மே மாதம் 15 ஆம் திகதி மற்றொரு படுகொலை மக்கள் நேயம் உள்ளவர்களை உலுக்கிப்பார்த்தது. குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந…
-
- 4 replies
- 812 views
-
-
தென்இந்தியா திரைப்படங்களின் ஆதிக்கமும், சமயவாழ்விலிருந்து இளைஞர் சமூகம் விலகி செல்வதே யாழ்ப்பாணத்தில் வன்முறை கலாசாரம் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாகும் என யாழ். பல்கலைக்கழக தமிழ்துறை ஓய்வு நிலைப்பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா தினக்கதிர் செய்திப்பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். கலாசார விழுமியங்கள், சமய வழிபாடு என்பன வலுவிழந்து வருவதாகவும் இளம்தலைமுறையினர் சமய வாழ்விலிருந்து விலகி செல்வதாகவும் தென்னிந்திய திரைப்படங்கள் நச்சு விதைகளை விதைப்பதாகவும் அவர் தெரிவித்தார். http://www.thinakkathir.com/?p=58275
-
- 0 replies
- 480 views
-
-
-சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா யாழ் மாவட்டப் படைகளின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டத்தின் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் எல்லேப் போட்டிகளை அபிவிருத்தி செய்யும் முகமாக இராணு அணிகளுக்கிடையிலான எல்லே காட்சிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (11) யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது. இதில் இராணுவ ஆண், பெண் எல்லே அணிகள் பங்குபற்றியிருந்ததுடன், யாழ்.மாவட்டத்திலுள்ள கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் எல்லே வீரர், வீராங்கனைகள் இந்தக் காட்சிப் போட்டிகளை பார்த்து, நுணுக்கங்களை அறிந்து கொண்டனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா கலந்துகொண்டார். http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/110092…
-
- 0 replies
- 381 views
-
-
”உங்கள் பிரதம மந்திரியின் மனைவி உங்கள் இந்திய உளவுத்துறையை நம்பவில்லை, ஆகவே இத்தாலிய உளவுத் துறையிடமிருந்து தன் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டார்”. புலன் விசாரித்ததில் இதுதான் புலப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸின் பொது காரியதரிசியாக இருந்த ராஜீவ் காந்தியின் இல்லத்தில் அப்போது ஒரு சாதாரண குடும்பத் தலைவியாகவே சோனியா இருந்தார். ஆனால் இந்திய வெளி உளவுத் துறையான RAWவுக்கும் (Research & Analysis Wing) இத்தாலிய உளவுத் துறைக்குமிடையே இரகசிய சந்திப்புக்கு சட்டவிரோதமாக ஏற்பாடு செய்தார். அந்த சமயம் சோனியா இந்திய பிரஜா உரிமை கோரி விண்ணப்ப மனுவைக் கூட அனுப்பவில்லை. உங்களுக்கு வினோதமாக உள்ளதா? மேலே படியுங்கள். சோனியாவின் சகோதரி அனுஷ்காவின் கணவர் வால்டர் வின்சி (Walter Win…
-
- 13 replies
- 3.2k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலான ஐ.நா.விசாரணை இம்மாத இறுதியில் அல்லது அடுத்தவார முற்பகுதியில் ஆரம்பமாகும் என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தெரிய வந்திருக்கின்றது. இந்த விசாரணையை முன்னெடுப்பதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை மனித உரிமைகள் ஆணையாளர் இம்மாத இறுதியில் நியமிப்பார். மனித உரிமைகள் பேரவையின் அதிகாரி ஒருவர் இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்படுவார் எனவும் தெரியவந்திருக்கின்றது. விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் விசாரணைக் குழுவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இலங்கை அர…
-
- 0 replies
- 670 views
-
-
இலங்கை அரச சேவையில் இந்தியர்களுக்கு தொழில் வாய்ப்பு இலங்கை அரச சேவையில் இந்தியர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இந்தியர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குமாறு அந்நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் எனவும் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இந்தியர்களினால் நிரப்பக்கூடிய போதியளவு வெற்றிடங்கள் இலங்கை அரச சேவையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனவே ஒரு தொகுதி தொழில் வாய்ப்பை இந்தியர்களுக்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்து…
-
- 1 reply
- 761 views
-
-
எதிரணியின் பொது வேட்பாளராக அறுவரது பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சிராணி பண்டாரநாயக்க ஆகிய மூவரில் ஒருவரே பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க எதிர்க்கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன் இதுவரையில் அதற்கு அறுவரது பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாதுளுவாவே சோபித தேரர் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க …
-
- 0 replies
- 610 views
-
-
இராணுவ அதிகாரிகளை இணைத்துக் கொள்ளும் போதே வர்த்தமானி அறிவித்தல் விடப்படும் ஆனால் வடக்கில் இடம்பெறும் ஆட்சேர்ப்பானது இராணுவத்தின் ஒரு பிரிவான தொண்டர் படைக்கான ஆட்கள் சேர்ப்பாகும் இதற்கு வர்த்தமானி அறிவித்தல் இல்லை என்று யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஊடக இணைப்பாளர் மேஜர் மல்லவராச்சி தெரிவித்தார். யாழ். சிவில் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று நிரந்தரப் படை, மற்றொன்று தொண்டர் படையாகும். தற்போது யாழில் இளைஞர் யுவதிகள் இணைத்துக் கொள்ளப்படுவது தொண்டர் படைக்கு கீழுள்ள சிவில் பணிகளுக்காகும். இதில் தற்போது 700 தொடக்கம் 800 வரையா…
-
- 0 replies
- 421 views
-
-
சிறீலங்காவிலிருந்து இந்தியாவிற்கு ஆயுதங்கள் விற்பனையா? மே 11, 2014 சிறிலங்காவிலிருந்து இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்கப்பட்டனவா? இந்திய தேர்தலுக்கு பின்னர் பதிலளிக்கப்படும் என்று தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். சிறிலங்காவிடமிருந்து இந்தியா ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதா என்பதற்கான பதிலை இந்திய பொதுத் தேர்தலுக்கு பின்னர் வெளியிடுவதாக அரசு தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஸ் குணவர்தன நேற்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார். சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ.தே.க. எம்.பி.யான தலதா அத்துகோரளவினால் கேட்கப்பட்ட கேள்வி தொடர்பில் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். போரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளி…
-
- 0 replies
- 375 views
-
-
சண்டித்தனமான வழிமுறைகளால் சடுதியான வீழ்ச்சி காணும் அரசாங்கம்! - விக்டர் ஐவன் கூறுகிறார். [sunday, 2014-05-11 09:44:32] ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் வீழ்ச்சி தொடங்கி விட்டதாக பிரபல அரசியல் விமர்சகர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையொன்றில், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஜனாதிபதியின் மிக நம்பிக்கைக்குரியவர்களாக இருந்த பலரும் இப்போது அவருக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு மாறிவருகின்றனர். இதன் பிரதிபலிப்பு கசினோ தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தெளிவாக புலப்பட்டது. அதுவரை காலமும் மெதுவாக சரிந்து கொண்டிருந்த அரசாங்கத்தின் செல்வாக்கு சடுதியாக சரிந்து, அரசாங்கத்தின் வீழ்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளது. விடுதலைப் ப…
-
- 0 replies
- 446 views
-
-
முதல்வர் விக்னேஸ்வரனுக்கு இந்தியா வருமாறு அழைப்பு! - தேர்தல் முடிவு வெளியானதும் பயண ஏற்பாடு. [sunday, 2014-05-11 09:49:17] வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வனை புதுடெல்லிக்கு வருமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர், சுஜித்ரா துரை சுவாமிநாதன் இந்த அழைப்பினை நேற்று முன்தினம் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் நேரில் கையளித்துள்ளார். இதனை யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தகவலை வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலக அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். முதலமைச்சரை இந்தியாவுக்கு வருமாறும், அங்கு வைத்து வடக்கிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுக…
-
- 0 replies
- 399 views
-
-
வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசன்னம் தொடர்பான செய்திகள் உண்மையானவை அல்ல – TNA தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசன்னம் தொடர்பான செய்திகள் உண்மையானவை அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் இராணுவத்தினரை தொடர்ந்தும் நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறான வதந்திகளை கிளப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள் என சிங்கள மக்களுக்கு தொடர்ச்சியாக சொல்லி பீதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழீழ விடுதலைப்…
-
- 0 replies
- 356 views
-
-
வடக்கு கிழக்கில் அஞ்சலிக்கு மறுப்பு தெற்கில் யுத்தவெற்றிக் (வெறிக்) கொண்டாட்டம்? 10 மே 2014 தெற்கில் மாபெரும் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் தயாராகழ வருகிறது. இதற்காக பாரிய பிரசாரங்களையும் விளம்பரங்களையும் இலங்கை அசு மேற்கொண்டு வரகிறது. இதேவேளை வடக்கு கிழக்கில் போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசு தடைவிதித்து அச்சுறுத்தி வருகின்றது. இறந்த மக்களை நினைவுகூர்ந்தால் அது புலிகளை பெருமைப்படுத்தும் நிகழ்வாக அமையும் என்றும் இலங்கை இராணுவத்தரப்பு கூறியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றியீட்டியமை தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் இந்த முறை மாத்தறையில் நடைபெற விடயம் குறித்து மாத்தறை வலயக் கல்விப் பணிப்பாளர் ரோஹண நாணயக்கார, வலயப்…
-
- 2 replies
- 379 views
-