Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொதுமக்களின் அமைதியை பேணும் நோக்கில், முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது. அதற்கமைய இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் சகல உறுப்பினர்களும் நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். நேற்று(22) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/306679

  2. கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிணையில் விடுதலை! மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி தெமட்டகொட கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞனை கறுப்பு டிஃபென்டர் காரில் கடத்திச் சென்று சிறையில் அடைத்து தாக்கியமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுக்களில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை தண்…

  3. பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சி முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 23 முதல் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியை முற்றிலும் இலவசமாக பார்வையிடமுடியும். முதல் நாள் நிகழ்வில் யாழ். இந்திய துணைவேந்தர், வடக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதியாக கலந்துகொள்வார்கள். இரண்டாம் நாள் கடற்தொழில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே ஏற்பாட்டாளர்கள் அதனை அறிவித்துள்ளனர். கண்காட்சி தொடர்…

  4. 23 JUL, 2024 | 04:35 PM வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று செவ்வாய்க்கிழமை (23) முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கலைத்தூது மண்டபத்திற்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஆனாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் நாட்களில் சுழற்சி முறையில் முன்னெடுக்கவுள்ளதாக உறவுகள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/189194

  5. Published By: VISHNU 12 JUL, 2024 | 01:56 AM வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைகளுக்கு வியாழக்கிழமை (11) விஜயம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் பர்வையிட்டு கலந்துரையாடியுள்ளார். இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைச்சாலையில் உள்ள 9 தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்தேன். வெலிக்கடையில் தங்கவேலு நிமலன் (47)ஜோ.கொ.வலன்ரினோ (41)மகசீன் சிறையில் ஆனந்தவர்ணன் (அரவிந்தன்) கடந்த மார்ச் 26இல் கைது) மகசீன் சிறையில் 15 - 29 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரன் ஆகியோரைப் பார்வையிட்டேன். அவர்களுடைய விடு…

  6. Published By: RAJEEBAN 23 JUL, 2024 | 02:27 PM அரகலய நாட்களின் போது கோட்டாபய ராஜபக்ச மாலைதீவிற்கு தப்பிச்செல்வதற்கு இலங்கை விமானப்படையின் விமானமும் நிதியும் பயன்படுத்தப்பட்டமை தகவல்அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 2022 ஜூலை13ம் திகதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை விமானப்படை விமானம் மூலமே மாலைதீவிற்கு தப்பிச்சென்றுள்ளார். அரகலய போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களும் பொதுமக்களும் ஜனாதிபதி மாளிகையை 2022 ஜூலை 9ம் திகதி ஆக்கிரமித்ததை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் கோட்டாபய மாலைதீவிற்கு தப்பிச்சென்றார். இலங்கை விமானப்படையின் விமானத்தை பயன்படுத்தியே அவர் மாலைதீவிற்கு சென்றார், திறைசேரி பாதுகாப்…

  7. 23 JUL, 2024 | 01:44 PM ஒரு நாட்டின் குடிமக்களின் மனித வள மூலதன வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய சிறந்த திட்டம் கிராமத்திலும் நகரத்திலும் அமைந்து காணப்படும் பாடசாலைகளை வலுப்படுத்துவதாகும். பிள்ளைகளுக்கு தரமான தரத்திலான சர்வதேச கல்வியை வழங்குவதன் மூலம் ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஸ்மார்ட் குடிமக்களைக் கொண்ட ஒரு நாட்டில், மனித மூலதனத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டு பணியாளர்கள் எமது நாட்டிற்காக பெரும் தியாகங்களைச் செய்து, அந்நியசெலாவணியை ஈட்டித் தருகின்றனர். Health care given எனும் தொழிற்துறையின் கீழ…

  8. இந்நாட்டு சனத்தொகையில் 20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை என தெரியவந்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, இது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் உள்ள 16.1% வீதமான மக்களுக்கான குடிநீரின் பிரதான ஆதாரம் பாதுகாப்பற்ற கிணறுதான் என்பதும் தெரியவந்துள்ளது. இலங்கை மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொடர்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, உள்நாட்டு சனத்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வளாகங்களில் பாதுகாப்பான குடிநீர் சேவையைப் பெற முடியும் என தெரியவந்துள்ளது. நகர்ப்புற மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களும், கிராமப்புற …

  9. வட்டியில்லாக் கடன்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை! விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறிப்பாக, தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் ஊடாக வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கு இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவை பங்களிப்பை வழங்குகின்றன. மேலும் எதிர்காலத்தில் மக்கள் வங்கியுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 650 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டாம் கட்டமாக 10 மில்லியன் ரூபா …

  10. 2015ஆம் ஆண்டு தெமட்டகொடை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சேவையாற்றிய இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்ப்பு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமால் ரணராஜாவினால் அறிவிக்கப்பட்டது. https://thinakkural.lk/article/304713 ஹிருணிகாவின் ரசிகர் எப்படி இதை தாங்கிக்கொள்ளப் போகிறார்!!

  11. யுக்திய : 24 மணித்தியாலங்களில் 732 சந்தேக நபர்கள் கைது ! நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ், 732 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 719 ஆண்களும் 13 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 17 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 127 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் அனைவரும், போதைப்பொருள் குற்றம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து, 178 கிராம் 303 மில்லிகிராம் ஹெரோயின், 327 கிராம் 281 மில்லிகிராம் ஐஸ், 1,907 கிராம் 588 மில்லி…

  12. 164 இலங்கையர்களுக்கு எதிராகச் சிவப்பு பிடிவிறாந்து! நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட பின்னர், தப்பிச்சென்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸாரிடம் இவ்வாறு சிவப்பு பிடிவிறாந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவிதுள்ளனர். பாதாள உலகக் குழுவின் செயற்பாடுகள், போதைப் பொருள் வர்த்தகம், போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இவ்வாறு சிவப்பு பிடிவிறாந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்…

  13. Published By: DIGITAL DESK 7 23 JUL, 2024 | 09:28 AM (துரைநாயகம் சஞ்சீவன்) வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான திருகோணமலை – உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையின் அளவை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 600 மீற்றர் வரையான நடைபாதையின் அகலத்தை 6அடி 3அங்குலம் வரை அதிகரிப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றன. இதற்காக 1கோடியே 50 இலட்சம் ரூபா மாகாணசபையின் நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. குறித்த, வீதியானது சிங்கள மகாவித்தியாலயம் தொடக்கம் துறைமுக பொலிஸ் நிலையம் வரையான 1078 மீற்றர் தூரம் நீளமான நடைபாதை…

  14. Published By: VISHNU 19 JUL, 2024 | 07:58 PM யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிச் சென்ற பஸ் திருகோணமலையின் மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கங்கை பாலத்துக்கு அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர். குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். https://www…

  15. ஒரு மில்லியன் ரூபாவாக உயரும் அபராதத் தொகை: சட்டத்தில் திருத்தம் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றினால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச அபராதத் தொகையை அதிகரிக்கும் சட்ட மூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அபராதத் தொகையை அதிகரிக்கும் நோக்கில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeydasa Rajapaksha) தாக்கல் செய்த சட்ட மூலம், வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டம் இதுவரையில் 1500 ரூபாவாக காணப்பட்ட அபராதத் தொகை ஒரு மில்லியன் ரூபாவாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவிய…

  16. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பம்! இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் மாகாண கல்வி மற்றும் பிராந்திய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள், பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் பதினைந்து நாட்களில் வகுப்பறைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாகவும், சகல வெளி நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக் கொள்வதாகவும் இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பராக்கிரம விக்கிரமசிங்க தெரிவித்தார். இதேவேளை அரசி…

  17. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை 100 வீதம் வழங்குவதாக சீன அரசாங்கம் அமைச்சுக்கு உறுதிப்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்களை பிரதேச களஞ்சியங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும். பிரதான மற்றும் தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய உணவு…

  18. மண்ணித்தலை,புராதன இந்து ஆலயங்கள் அடுத்த மாதம் சீரமைப்பு! தொன்மை வாய்ந்த மண்ணித்தலை சிவன் ஆலயம் மற்றும் கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயம் என்பவற்றின் சீரமைப்புப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொல்லியல் திணைக்களத்தால் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சோழர் காலத்துக்குரியது என நம்பப்படும் மண்ணித்தலை சிவன் கோவில் மற்றும் கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயம் என்பன தொன்மை வாய்ந்த தலங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அடையாளப்படுத்தபட்டிருந்த நிலையில், அவற்றின் புனரமைப்புக்காக 8 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதையடுத்தே அடுத்தமாதம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. (ப) #Eelam #srilanka #jaffna…

  19. 22 JUL, 2024 | 05:18 PM (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு தயார் என்று ஜனாதிபதி குறிப்பிடலாம் ஆனால் அதற்கு அவரது தனிப்பட்ட நிதி பயன்படுத்தப்படமாட்டாது. நாட்டு மக்களின் வரிப்பணமே பயன்படுத்தப்படும். மக்களின் வரிப்பணத்தை வீண்விரயம் செய்ய மக்கள் பிரதிநிதிகள் தயாராக உள்ளார்களா என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார். கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிறைவுப் பெறும் வரை அரசி…

  20. Published By: DIGITAL DESK 3 22 JUL, 2024 | 11:34 AM ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையசேவையை ஆரம்பிப்பதற்காக அடுத்த மாதம் இலான் மஸ்க் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதியை வழங்கியுள்ளது. இந்நிலையில், தற்போதுள்ள தொலைத்தொடர்பு பரிவர்த்தனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, எதிர்காலத்தில் சேவை அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் செயல்முறையை துரிதப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக மதுஷங்க திஸாநாயக்க ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளதாவது,…

  21. ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடலாம் – சன்ன ஜயசுமன! ”22 ஆம் அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும்” என முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நொச்சியாகம பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” 22 ஆம் திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால். அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு வெளியிடப்படும். உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்கள…

  22. அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய உத்தரவு. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. களனிவெலி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று காலை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்தரப்பினர் முன்நிலையாகாத நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. குறிப்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் சம்வத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக சபர்களை கைதுசெ…

  23. 22 JUL, 2024 | 01:17 PM இலங்கை முழுவதிலும் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் முறைமையை மேம்படுத்துவதற்காக யுனிசெப் நிறுவனம் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுகாதார அமைச்சிற்கு ஒன்பது குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகளை கையளித்தது. இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான செயல்படும் பிரதிநிதி பேகோனா அரேலானோ ஆகியோரின் பங்கேற்புடன் சுகாதார அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரனவிடம் அந்த ட்ரக் வண்டிகள் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றிய வைத்தியர் ரமேஷ் பதிரன, இலங்கையின் சுகாதார முறைமையின் மிகவும் முக்கிய தூண்களில் ஒன்றான நிர்ப்பீடனமாக்…

  24. Published By: DIGITAL DESK 7 22 JUL, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்களிடம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகையான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறியவர்களை நம்பி பணத்தினை கொடுத்து ஏமாந்த மூவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர் மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை 10 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும், காத்தான்குடி பகுதியை சேர்ந்தவரும் தற்போது களுத்துறை பகுதியில் வசித்து வரும் பெண்ணொருவரை 25 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டி…

  25. 17 JUL, 2024 | 05:40 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று புதன்கிழமை (17) வடமாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். வடக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பிலும், மேம்படுத்தப்பட வேண்டிய சுகாதார விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. குறித்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன். சிவஞானம் ஸ்ரீதரன், அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.