Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச சிறுநீரக மோசடிக் கும்பல் கொழும்பில் சிக்கியது! [sunday, 2014-04-20 21:33:52] இலங்கையில் இந்திய இளைஞரொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ள சர்வதேச சிறுநீரக மோசடிக் கும்பல் சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகுவோரை இனங்காணும் பொருட்டு முகநூல் (பேஸ்புக்) மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களைப் பாவித்து வருகின்றமை தெரிய வந்துள்ளதாக டெக்கான் குரோனிகில் நாளிதழ் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறுநீரக மாற்றுச் சிகிச்சையொன்றை அடுத்து கொழும்பில் உயிரிழந்ததாகக் கூறப்படும் இந்திய கிஷான்பாக் வாசியான தினேஷ் மாரூ குறைந்த பட்சம் பேஸ்புக் இணையத்தள நண்பர்கள் அறுவருடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதுடன் கடந்த காலங்களில் சிறுநீரக தானம் பற்றி…

  2. மக்கள் செறிவாக உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச பொதுச்சந்தையின் நிர்மாணப்பணிகள் இன்னும் பூரணப்படுத்தப்படாத நிலையில் மீன்சந்தைக்கான பணிகள் இன்னும் ஒரு மாத காலப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என பிரதேச சபையினர் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்தனர். மக்கள் முறைப்பாட்டினை அடுத்து இது தொடர்பில் பிரதேச சபைக்கு சென்று வினவிய போதே அவர்கள் மேற்படி தெரிவித்ததாக அறியவருகிறது. இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது, கடந்த வாரம் புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் பொதுச்சந்தையின் மீள் கட்டுமானப்பணிகள் இன்னும் பூர்த்தியாகாதது தொடர்பிலான முறைப்பாடுகளை ரவிகரனிடம் முன்வைத்திருந்தனர். மீளக்குடியேறி சில வருடங்கள் உருண்டோடிய நிலையிலும் இன்னமும் கட்டுமானப்பணிகளின் பூரணப்படுத்தப்படாத நிலை தொட…

    • 0 replies
    • 474 views
  3. 11வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்து, அதை வீடியோ படம் எடுத்த ஆசிரியர் கைது! - மட்டக்களப்பில் சம்பவம். [sunday, 2014-04-20 09:58:53] மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாற்றில் தனியார் கல்வி நிலையமொன்றில் 11வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்து அதனை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ படம் எடுத்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து தங்களிடம் ஒப்படைத்தாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரியகல்லாறு 1ஆம் வட்டாரத்தில் ஆங்கில கல்வி நிலையமொன்றிலேயே இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியர் மட்டக்களப்பு பிள்ளையாரடிப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், குறித்த ஆசிரியரின் கையடக்க தொலைபேசியை கைப்பற்றிய…

    • 2 replies
    • 634 views
  4. முஸ்லிம்களுக்கு மாற்றுக் காணி வழங்க இரண்டுவார காலக்கெடு! - இல்லையேல் போராட்டம் என்கிறார் அமைச்சர் ரிஷாத். [sunday, 2014-04-20 09:15:49] மன்னார், முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டுப் பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்ட கடற்படை முகாமினால், சுமார் 700 ஏக்கர் பரப்புடைய தமிழ்- முஸ்லிம் மக்களின் காணிகள் அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடற்படை முகாம் அமைப்பதற்காக பெருமளவு நிலப் பிரதேசம் கையகப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் காணிகளை இழந்துள்ள முஸ்லிம் குடும்பங்களே வில்பத்து சரணாலய பகுதியில் குடியேறி இருப்பதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்திகளை மறுதலித்து பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. முள்ள…

  5. மட்டக்களப்பில் ஜனாதிபதி மஹிந்த! - மண்முனைப் பாலம், பல்கலைக்கழக கட்டடத் தொகுதிகளைத் திறந்து வைத்தார். [sunday, 2014-04-20 09:46:40] மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மண்முனைப் பாலத்தையும், கிழக்குப் பல்கலைக்கழத்தில் பல்வேறு கட்டத்தொகுதிகளையும் திறந்துவைத்தார். ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் மண்முனைப்பாலம் நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மண்முனைப்பாலத்திற்கு செல்லையா இராசதுரை பிரதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நட்டப்பட்டதுடன் கருங்கற்களும் அங்கு…

    • 2 replies
    • 440 views
  6. இலங்கைக்கு அனுப்பப்படும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் தொடர்பில் கால எல்லையேதும் விதிக்கப்பட்டிருப்பதாக தமக்கு தெரியாதென வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள பி.பி.சி ஊடகவியலாளர்களான சார்ல்ஸ் ஹவிலன்டனுக்கு ஒரு வருட விசா நீடிக்க மறுக்கப்பட்டதாக செய்தி வந்ததையடுத்து வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் இவ்வாறு கூறியுள்ளது. வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் விடுத்துள்ள முழு அறிக்கை இலங்கைக்கு தொழில் நிமித்தம் அனுப்பப்படும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் மீது எவ்வாறான கால எல்லையும் இருப்பதாக வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் அறியவில்லை. ஆயினும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் விச…

  7. மட்டக்களப்பு மண்முனைப்பாலம் ஜனாதிபதியால் சனிக்கிழமை திறந்துவிடப்பட்டுள்ளது, மண்முனைப்பாலம் அம்பாறையையும், மட்டக்களப்பையும் இணைக்கும் பாலம் என புது அர்த்தம் கொடுக்கப்பட்டு அப்படியே அழைப்பிதழ் மற்றும் விளம்பரபலகையும் இடப்பட்டது, உண்மையில் மண்முனைப்பாலம் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் பாலமாகும் இவ்வாறு படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் பாலங்களாக ஏற்கனவே பட்டிருப்பு பாலம் வலையிறவுப்பாலம் என்பன இருப்பதுபோல் இந்த இரண்டுபாலங்களுக்கும் நடுப்பகுதியில் இருப்பதுதான் இந்த மண்முனை ப்பாலம.; அத்தனை பாலங்களும் படுவான்கரையையும், எழுவான்கரையையும் இணைக்கின்றனவே தவிர அம்பாரையை இணைக்கவில்லை, படுவான்கரை மக்களின் நீண்ட கோரிக்கையாக மண்முனைப்பாலம் இருந்தது அதன்காரணமாக 197…

    • 0 replies
    • 639 views
  8. சுமுகநிலையை ஏற்படுத்தினால் தான் அரசுடன் பேச முடியும்! - செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு. [sunday, 2014-04-20 09:55:46] அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்கு முன்னர், வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வரும் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் அதிகரித்து காணப்படுகிறது. பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. தொடர்ச்சியாக கைதுகள் இடம்பெறுகின்றன. காணி சுவீகரிப்பு இன்னும் நிறுத்தப்படவில்லை.இவ்வாற…

  9. தமிழ்மக்களுக்கு அதிகாரப்பகிர்வைப் பெற்றுத்தர வேண்டிய கடப்பாடு சர்வதேசத்துக்கு உண்டு! - என்கிறார் இரா.துரைரத்தினம் [sunday, 2014-04-20 09:32:52] தமிழ்மக்களுக்கு நிரந்தர அதிகாரப்பகிர்வைப் இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டிய கடப்பாடு சர்வதேச நாடுகளுக்கு உண்டு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் அதிகாரப்பகிர்வு முயற்சிகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், புலம்பெயர் தமிழர்களும் எடுத்துக் கொண்ட தொடர்முயற்சிகளும், போராட்டங்களும், வெகுஜன பிரசாரங்களும், மக்களின் எழுச்சிகளும் வடக்கு,கிழக்கு மாகாண மக்களின் வாக்குரிமை …

  10. இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 5ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் வரை மாத்திரம் படித்துள்ள இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புக்களின்றி பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக நாட்டின் தொழில் வர்த்தக சந்தைக்கு ஏற்ற வகையில் தற்போதைய உயர் கல்வியை மாற்றியமைக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது.அதேநேரம் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தையும் கடந்து மேல் படிப்பு படித்தவர்கள் மத்தியில் காணப்படுகின்ற தொழில் வாய்ப்பில்லாத பிரச்சினையானது மிகவும் பாரதூரமானது என்றும் அந்த அறிக்…

  11. அரசாங்கம் வடக்கு மாகாண சபைக்கு போதிய உதவிகளை செய்யவில்லை என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அத்துடன் அரசாங்கம் வடமாகாண முதலமைச்சருடன் கலந்தாலோசித்து எந்த விடயத்தையும் செய்யவில்லை என்றும் தேசிய மொழிகள் மற்றும் இன நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வீரகேசரிக்குத் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையை சீராக நடத்த அரசாங்கம் உதவிகளை வழங்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்துகின்றதே இது குறித்து உங்கள் கருத்து என்ன எனக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சமாஜவாத மக்கள் முன்னணி என்ற ரீதியில் தாம் வேண்டுகோள் ஒன்றை ஏற்கனவே முன்வைத்துள்ளோம். இந்த நாட்டின் இன ஐக்கியத்தை ஏற்படுத்த தாம் உருவாக்கிய உண்மைகளைக் கண்டறியும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்த …

    • 0 replies
    • 283 views
  12. பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 21 பிரதிநிதிகள், நாளை (21) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்த உயர்மட்ட இராணுவக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் நோயேல் இஸ்ராயேல் கோபார் தலைமை தாங்கவுள்ளார். ஒருவார காலம் தங்கியிருக்கும் இவர்கள் இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம், தேசிய மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள் பற்றி ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வரும் இந்த பாகிஸ்தான் பிரதிநிதிகள், பாதுகாப்புச் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், முப்படை தளபதிகள் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளையும் சந்திக்க உள்ளதுடன் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளனர். http://tamil.daily…

  13. வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் தலைவராக கடந்த 17 வருடங்களாக வகித்துவந்த பதவியை வியாழக்கிழமை (17) இராஜினாமாச் செய்துள்ளார். வடமாகாண சபையின் செயற்பாடுகள், சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் மேற்படி பதவியை இராஜினாமாச் செய்வதாக சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இந்த நிலையமானது நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட மற்றும் வசதி குறைந்த சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து உதவிகளை பெற்று பல திட்டங்களை செயல்படுத்தி வந்தது. இது இவ்வாறிருக்க, யாழ். …

  14. தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களையும், அனைத்துலக காவல்துறையால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களையும் கைது செய்ய உதவும் படி அனைத்துலக சமூகத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுக்கவுள்ளது. அடுத்தவாரம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் நடத்தவுள்ள சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வரும் வியாழக்கிழமை காலை வெளிநாட்டு இராஜதந்திரிகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் சந்தித்துப் பேசவுள்ளார். இதன்போது, சிறிலங்கா அரசாங்கத்தினால், வெளியிடப்பட்டுள்ள, 16 அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்கள் மீதான தடை அறிவிப்புக் குறித்து அவர் விளக்கமள…

  15. சிறிலங்காவுடனான வர்த்தகத் தொடர்புகளை பிரித்தானியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரும் புதியதொரு போராட்டத்துக்கு அங்குள்ள புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புகள் தயாராகி வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையைக் காரணம் காட்டி, சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வாங்கக் கூடாது என்பது தொடர்பாக, ஏற்கனவே பிரித்தானியாவின் உயர்மட்ட அரசியல்வாதிகளுடன் இந்த அமைப்புகள் பேச்சுக்களையும் நடத்தியுள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்ததாக, பிரித்தானியாவே சிறிலங்காவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாக விளங்குகிறது. தேயிலை, ஆடைகள், மீன், மிதிவண்டி, இறப்பர், மாணிக்கம் மற்றும் நகைகள், தும்பு உற்பத்திகள், மட்பாண்டப் பொருட்கள், பழ…

  16. தமிழர்களுக்குச் சுயாட்சி அளவுக்கான அதிகாரத்தைக் கொடுக்கக்கூடியதான அமைப்பு ஒன்றை உருவாக்குங்கள் என்று இலங்கை அரசிடமும் ஏனைய அரசியல் கட்சிகளிடமும் தேசிய சமாதானப் பேரவை விடுத்துள்ள கோரிக்கையை வரவேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தக் கோரிக்கையை இலங்கை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களுக்கு சுயாட்சியை வழங்குவதன் மூலமே நாட்டில் நிரந்தர சமாதானத்தை அமைதியை ஏற்படுத்த முடியும். தமிழர் பிரச்சினை இன்று சர்வதேச மயப்படுத்தப்பட் டுள்ள நிலையில் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள் ளார். தமிழர்களுக்க…

  17. சீகிரியாவில் 20 ற்கும் மேற்பட்ட மழைக்குருவி கூடுகளை உடைத்தார் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவித்தனர். ஒரு கிலோகிராம் மழைக்குருவி கூடு மூன்று இலட்சம் ரூபாவிற்கு விற்கப்படுவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேகநபரை தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/107338-2014-04-19-06-02-55.html

    • 2 replies
    • 2.6k views
  18. கிளிநொச்சி போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரம். பல்வேறு சவால்களைத் தாண்டி இப்போது வளர்ச்சி பெற்றுவருகிறது. கிளிநொச்சி நகரத்தில் பேரூந்து நிலையம் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலமையே தொடர்கிறது. பொருத்தமான இடமின்மையாலும் போதிய இடமின்மையாலும் ஒரு பேரூந்து நிலையம் இல்லை என்பதுவே கிளிநொச்சியின் பெரும் பிரச்சினையாக உள்ளது. கிளிநொச்சி டிப்போ வீதியில் உள்ள வீதியின் அருகான பகுதியே தற்போது பேரூந்துநிலையம் இயங்குகிறது. வீதியின் இரண்டு மருங்கிலுமே தனியார் பேரூந்துகள் தரித்து நிற்கின்றன. குறிப்பாக மழை காலங்களில் மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்திக்கின்றனர். நிழற்கூடாரங்கள் எதுவுமற்ற அந்த வீதியில் மரங்களின் கீழாக நின்று மழையில் நனைந்தவாறே பேரூந்தில் ஏறுகின்றனர். தற்போதுள்ள ப…

    • 0 replies
    • 387 views
  19. ஜெனிவா தீர்மானத்தில் இருந்து இந்தியா ஒதுங்கியது ஏன்? [Friday, 2014-03-28 08:04:19] இலங்கைக்கு எதிராக ஜஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்குபற்றாமல் தவிர்த்தது ஏன் என்று, இந்தியப் பிரதிநிதி திலிப் சின்ஹா தனது உரையில் விபரித்துக் கூறியிருந்தார். அதன் முழு விபரம் வருமாறு “இலங்கையின் மூன்று தசாப்த கால பிணக்கு 2009 இல் முடிவுற்ற பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றது. பிணக்கின் முடிவு, தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க நிலையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான தனித்துவமான வாய்ப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளது என்பதே எப்போதும் இந்தியாவின் கருத்தாக இரு…

  20. யாழில் 03 இளைஞர்கள் மீது தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014 10:09 - நா.நவரத்தினராசா யாழ். மல்லாகத்திலுள்ள விசாலாட்சிமன்ற முன்றலில் நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் மூவரை முகத்தை துணிகளினால் மறைத்துக்கொண்டு வந்த கும்பலொன்று தாக்கியதால் படுகாயமடைந்த அம்மூவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை (19) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஊரெழு பொக்கனையைச் சேர்ந்த இந்திரகுமார் கஜீபன் (வயது 19), சின்னராசா கௌதமன் (வயது 21), ஜெயசீலன் மயூரன் (வயது 21) ஆகிய மூவருமே படுகாயமடைந்தனர். தெல்லிப்பழை பொலிஸாரும் தெல்லிப்பழை பிரதேச செயலகமும் இணைந்து சித்திரைப் புத்தாண்டு இசை நிகழ்ச்சியை மல்லாகம் மகா வித்தியாலய மைதானத…

  21. கே.பி மீதான குற்றச்சாட்டுகளை மாற்றியது இன்டர்போல்! [sunday, 2014-04-20 10:13:23] கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் மீது இன்டர்போல் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ள சிவப்பு அறிக்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த வருட இறுதியில் குமரன் பத்மநாதன் மீது இன்டர்போல் சுமத்தியிருந்த குற்றச்சாட்டில், பத்மநாதன், பயங்கரவாத குற்றங்கள் மற்றும் ஆயுதப் பாவனை தொடர்பாக இந்தியாவினால் தேடப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள இன்டர்போல் அறிக்கையில் குமரன் பத்மநாதன் மீது குற்றவியல், சதித்திட்டம் மற்றும் இந்திய பயங்கரவாத ஆயுத சட்டத்தை மீறல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. http://seithy.info/breifNews.php?newsID=107768&category=TamilNews&…

  22. இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக மட்டக்களப்பில் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகத் திருவிளக்கு அன்னை பூபதியின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் உலகெங்கும் அனுஸ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் அன்னை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்தவர் தான் அன்னம்மா என்கிற அன்னை பூபதி. இவர் இந்திய அமைதிப் படையினர் தமிழீழ விடுதலை புலிகளுடன் போரிடுவதைக் கைவிட்டு உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழீழ விடுதலை புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். என்கிற இரு கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை 19 மார்ச் 1988 இல் ஆரம்பித்தார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமிருக்கிறேன். எனக்கு…

  23. கடந்த வருடம் இலங்கை விமான சேவைக்கு 2860 கோடி ரூபா நஷ்டம்:- 18 ஏப்ரல் 2014 இலங்கை விமான சேவை கடந்த 2013ம் வருடம் 2860 கோடி ரூபா நஷ்டம் அடைதுள்ளதாக கடந்த வருட மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012ல் இலங்கை விமான சேவைக்கு 2700 கோடி ரூபா நஷ்டம் ஏற்ற்பட்டுள்ளதுடன் அது இவ்வருடம் 2860 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளது 2013ல் இலங்கை விமான சேவைக்கு 10950 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதுடன், அதன் செலவுகள் 13810 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம், ஐரோபிய நாடுகளின் பொரளாதார நிலைமை, மற்றைய விமான சேவை நிறுவனங்களுடனான போட்டி இந்த நஷ்டத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Arti…

    • 2 replies
    • 499 views
  24. வவுனியாவில் தேவிகனுக்கு வீடு கட்ட உதவியவரின் கடைக்குச் சீல்! - உரிமையாளர் தப்பியோடியதால், ஊழியர் கைது! [saturday, 2014-04-19 18:47:09] வவுனியா பஸ் நிலையப் பகுதியில் இயங்கிய வர்த்தக நிலையம் ஒன்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கடந்த புதன்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு வேலை செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. நெடுங்கேணியில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் தேவிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக வவுனியா பஸ் நிலைய மேல்மாடியில் உள்ள டாட்டா ஸ்போட்ஸ் என்ற விளையாட்டு உபகரண விற்பனை நிலையம் கடந்த புதன் ழமை முதல் சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடை முன்பகுதியில் பொலிசாரும் புலனாய்வுப் பிரிவினரும் நிறுத்தப்பட்டு…

    • 1 reply
    • 689 views
  25. அதிகாரிகளின் கவனக்குறைவினால் பெரும் பாதிப்பு:- தொண்டமனாறு கடல் நீரேரிப்பகுதியில் ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்களினால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மோசமாக மாசடைந்துள்ளது. குறித்த கடல் நீரேரிப்பகுதியில் அமைந்துள்ள துருசினை நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் இழுத்து மூடியதையடுத்தே அண்மைய வரட்சியினால் மீன்கள் ஆயிரக்கணக்கினில் இறந்திருக்கலாமென நம்பப்படுகின்றது. இப்பகுதியில் தண்ணீர் வேகமாக வற்றிவருவதால் நீரில் உப்பின் செறிவு அதிகரித்துள்ளதாகவும் அதனால் சுவாசிப்பதற்கான ஒட்சிசனின்றி மீன்கள் உயரிழந் திருக்கலாமென நம்பப்படுகின்றது. எனினும் அதிகாரிகளது பொறுப்பற்ற தன்மையாலேயே மீன்கள் மற்றும் நீர்பாம்புகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக மீனவ அமைப்புக்கள் கண…

    • 4 replies
    • 887 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.