ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143525 topics in this forum
-
தமிழக அரசின் நடவடிக்கைகளை சரித்திரத்தில் பதியப்படும் என்பது உண்மையே: தமிழக முதல்வரக்கு கடிதம் எழுதிய அனந்தி [Tuesday, 2014-02-25 20:05:17] அண்மையில் ரஜீவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டபின் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களது முழுமையான விடுதலை தொடர்பாகதாங்களும் தங்கள் அரசும் மனோதர்மத்தின்படி மனிதநேயத்தின் அடிப்படையிலும் எடுத்த முடிவு உலகம் வாழ்தமிழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழக அரசின் நடவடிக்கைகளை சரித்திரத்தில் பதியப்படும் என்பது உண்மையே. இந்தவகையில் தாங்கள் தமிழ்பேசும் நல்லுலகத்தினரால் என்றென்றும் நன்றியுடன் நினைக்கப்படவேண்;;டியவரே எனத்தெரிவித்…
-
- 0 replies
- 376 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் தொடர்பாக, இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டும் என்றும், அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலும் புதுடெல்லி செல்லும் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திருட்டுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்தும். வரும் 3ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் பரப்புரைக்கு மேலதிகமாக இது இடம்பெறும். தீர்மானம் தொடர்பாக, கூட்டமைப்பின் நாடாளுமன்றமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதித்தோம்…
-
- 1 reply
- 255 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் 2013 ஆம் ஆண்;டு காலபோக நெற்செய்கையானது வறட்சி காரணமாக 26961 ஏக்கர் அழிந்துள்ளது என கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைகள் நிலைய உதவி ஆணையாளர் தயாரூபன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று(20) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கடந்த வருடம் பருவமழை பொய்த்து போனமையால் மழையை நம்பி வருடந்தோளும் மேற்கெர்ளளப்படும் மானாவாரி நெற்செய்கை முற்றாக அழிந்துள்ளது. குளங்களின் கீழ்மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை பெருமளவுக்கு நீர்பாசனம் மேற்கொள்ளப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட…
-
- 5 replies
- 642 views
-
-
தசாப்தங்கள் நீடித்த யுத்தத்தின் கொடூரம் நீங்கி சுதந்திரமான வாழ்வை நோக்கி நகரும் வேளையில் வடக்கு மக்களை மீளவும் துயரத்துக்குள் தள்ள சில பாதாள உலகக் குழுக்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. தெற்கின் பாதாள உலகக் குழுக்களின் வேர்கள் பிடுங்கப்படும் நிலையில் வடக்கில் இவ்வாறு குழுக்கள் முளைப்பது அங்கு குற்றச் செயல்கள் தொடர்பான சூழல் ஒன்றை பரவலாக்கலாம். 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததும் தெற்கிலும் மேற்கிலும் அச்சுறுத்தலாக இருந்த பாதாள உலகக் குழுக்களின் நடமாட்டத்தை அழிக்கும் அல்லது வேர் பிடுங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அந்தப் பகுதிகளில் பகிரங்கமாக இருந்த அவ்வாறான குற்றக் குழுக்களின் நடமாட்டத்தை இன்று காணமுடிவதில்லை. 2009 ஆம் ஆண்டின் பின்னர் பொலிஸார் மேற்கொ…
-
- 5 replies
- 627 views
-
-
நீதித்துறையை முஸ்லிம் மயப்படுத்துகிறார் ஹக்கீம்! – போர்க்கொடி தூக்குகிறது ஹெல உறுமய. [Monday, 2014-02-24 08:16:11] நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இலங்கையின் சட்டத்துறையை முஸ்லிம் மயப்படுத்த முனைவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் கட்சியின் ஊடகச்செயலாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேல்மாகாணசபை தேர்தல் பரப்புரை அறிக்கை ஒன்றில் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது அமைச்சில் அதிகமான முஸ்லிம்களுக்கு பதவிகளை வழங்கியுள்ளார். அத்துடன் சமாதான நீதிவான் பதவிகளும் அதிகளவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மறுமுனையில் சிங்கள மாணவர்களுக்கு சட்டக்கல்லூரி அனுமதியில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் 551 சிங்கள மா…
-
- 5 replies
- 544 views
-
-
அவுஸ்திரேலியாவில் ஜீலோங் நகரில் 24-02-2014 இன்று தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. விக்ரோறிய மாநிலத்தில் மெல்பேணிலிருந்து நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள ஜீலோங் நகரின் பழமையும் புகழும் வாய்ந்த தொழிற்சங்கக் கட்டடத்திலேயே தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிக் கௌரவிக்கப்பட்டது. விக்ரோறிய மாநிலத்தில் கடந்த மூன்றாண்டுகளில் பல விடங்களில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அவ்வகையில் ஜீலோங் நகரத்தின் தொழிற்சங்கக் கட்டடத்தில் ஏற்கனவே இருதடவைகள் தேசியக் கொடி ஏற்றி பறக்கவிடப்பட்டது. இன்று மூன்றாவது தடவையாக தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தமிழீழத் தேசியக்கொடி பற்றியும் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியும் விளக்கம் கொடுக்கப்பட்ட பின்னர் ஜீலோங் தொழிற்சங்கப்…
-
- 1 reply
- 300 views
-
-
நட்பு நாடுகளுடன் சண்டையை மூட்டிவிட எதிர்க்கட்சிகள் முயற்சி! – ஜனாதிபதி மஹிந்த குற்றச்சாட்டு. [Tuesday, 2014-02-25 10:11:15] நட்பு நாடுகளுடனான எமது உறவுகளை சீர்குலைப்பதற்காக எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய்ப்பிரசாரத்தையும் விமர்சனங்களையும் அந்த நாடுகள் நிராகரிக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார். நுரைச்சோலையில் பாலாவி- கற்பிட்டிக்கான வீதியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு செய்வதற்கும் சொல்வதற்கும் எதுவுமில்லாமல் வங்குரோத்து நிலையிலுள்ளோர் நட்பு நாடுகளுடன் விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பொய்ப்பிரசாரங்களை ஏற்படுத்தி வருகின்றனர். நட்பு நாடுகள் இத்தகைய செயற்பாடுகளை நிராகரிக்க…
-
- 1 reply
- 275 views
-
-
தமிழ் அரசியல் கைதி கோபிதாசின் மர்மமரணம் குறித்து முழுவிசாரணை நடத்தக் கோருகிறது கூட்டமைப்பு! [Tuesday, 2014-02-25 07:20:47] கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் நேற்றுக்காலை உயிரிழந்த தமிழ்க் கைதியின் மரணம் தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. 2007-ம் ஆண்டில், கொழும்பு சென்றிருந்த போது காவல்துறையால் கைது செய்யப்பட்ட பிரிட்டிஷ் பிரஜையான கோபிதாஸ் என்பவர், மர்மமான முறையில் மகசீன் சிறையில் உயிரிழந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 2012-ம் ஆண்டில் நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் கோபிதாஸுக்கு 5…
-
- 0 replies
- 524 views
-
-
மார்ச் இ மாதம் 1 இ2 ஆகிய திகதிகளில் ” இலங்கை மண்ணில் சூப்பர் சிங்கர்” பாடகர்கள் . இலங்கை அரசு 1 ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொன்றுள்ளது. இதை மறைக்க இலங்கை அரசு இசை மற்றும் ஆடல்இ பாடல் நிகழ்ச்சிகளை இந்திய கலைஞர்களை அழைத்து நடத்த எண்ணுகிறது. அதன் சதியை புரிந்துகொண்டு திரையுலகினரும்இ இசையுலகினரும் விழாவை புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தவருடம் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற சூப்பர் சிங்கர் பாடகர்கள் . மார்ச் இமாதம் 1 இ2 ஆகிய திகதிகளில் கொழும்பில் ஒரு இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளது உடனடியாக தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து இசை நிகழ்ச்சியை நடாத்துமா சூப்பர் சிங்கர்?? உலகத் தமிழர்கள் மார்ச் மாதம் வீதியில் நின்று உரிமைக்காக போர…
-
- 0 replies
- 472 views
-
-
இந்திய அமைதி காக்கும் படையினரின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட உள்ளது. இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையினரின் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 1987ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்தனர். இந்தக் காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலானவர்கள் காணாமல் போயுள்ளதாக அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து கண்டறியும் நோக்கில் இந்திய அமைதி காக்கும் படையினரின் நடவடிக்கைகள் தொடர்…
-
- 0 replies
- 294 views
-
-
இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை: நவி பிள்ளை அறிக்கை போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்கிறது ஐநா மனித உரிமைக் கவுன்சில் ஆணையர் அறிக்கை இலங்கையில் நடந்து முடிந்த போரின் இறுதிக்கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு பொருத்தமான விசாரணையை நடத்த இலங்கை தவறிவிட்டது என்று ஐநா மனித உரிமைக் கவுன்சில் ஆணையர் நவி பிள்ளையின் அறிக்கை ஒன்று கூறுகிறது. பொதுமக்கள் கொல்லப்பட்டது மற்றும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டது போன்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்படவே\ண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இலங்கை அரசும் அது அமைத்த நல்…
-
- 0 replies
- 457 views
-
-
தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சியினை நாம் தட்டிக்கழிக்கவில்லை. ஆனாலும் அரசாங்கமானது தனது நிகழ்சிநிரலின்படி செயற்படுவதனை அனுமதிக்க முடியாது. உடனடி நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் அதற்கான சிந்தனையுடன் அரசாங்கம் செயற்படுகின்றது. இதற்கு நாம் உடந்தையாக இருக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள நாம் தயாராக உள்ளோம். தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சிக்கு இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் சாதகமான நிலை ஏற்படும். இருந்தபோதிலும் தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் நிகழ்சிநிரலுக்கு நாம…
-
- 0 replies
- 443 views
-
-
ஜேர்மன் தூதுவரிடம் அனந்தி சசிதரன் தெரிவிப்பு- இலங்கை அரசிற்கு சர்வதேசம் வழங்கும் ஒவ்வொரு கால அவகாசமும் புதிய புதிய பிரச்சினைகளை தோற்றுவித்து வருவதாக வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழிற்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜெர்மனிய தூதர் மற்றும் அவரது குழுவினரை சந்தித்து நேற்றிரவு பேசிய வேளையிலேயே அவர் இதனைத் விடுத்துள்ளார். அவருடன் வலி.வடக்கு பிரதேச சபை துணைதவிசாளரும் வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுத்தலைவருமான சண்முகலிங்கம் சஜீவனும் கலந்துகொண்டார். ஏற்கனவே ஒவ்வொரு தடைவையும் ஜ.நாவில் வழங்;கப்பட்ட கால அவகாசங்கள் இலங்கை அரசு இன அழிப்பினை முன்னெடுக்க வழிகோலியிருந்தது. அதே போன்று இம்முறையும் கால அவகாசம் வழங்க்கப்பட்டால் பல புதிய பிரச்சி…
-
- 0 replies
- 269 views
-
-
-சுமித்தி தங்கராசா ஜெனீவா பற்றிய விடயங்கள் கதைப்பதற்கு நான் அரசியல்வாதியில்லை, நிர்வாகி மட்டுமே. அவ்வாறான விடயங்களைப் பார்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று (24) தெரிவித்தார். இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் ஜுர்ஜன் மொர்ஹாட்டிற்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) மாலை வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பினைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து முதலமைச்சர் தெரிவிக்கையில், 'வடக்கு - கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில் முறைப் பய…
-
- 0 replies
- 340 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ததில் ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய தவறிழத்திருக்கின்றது. முன்னாள் சிறிலங்கா கண்காணிப்பு மிஷன் தலைவர் Ulf Henricsson. இப் பெரிய தவறால் தான் ஒரு சமாதானமான தீர்வு காண முடியாமல் போனது . தமிழாக்கம் மிக விரைவில் ... http://www.sankathi24.com/news/38806/64//d,fullart.aspx
-
- 0 replies
- 348 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தில் பெண்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணியில் இணைந்துகொள்வதற்கு ஆர்வமுடையவர்கள் இணைந்து கொள்ளலாம் என்ற துண்டுப்பிரசரங்கள் நேற்று முன்தினம் முதல் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரால் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துண்டுப்பிரசுரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, திருமணமாகாத 18 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 8ஆம் தரம் அல்லது 9ஆம் தரத்தில் சித்தி பெற்றிருப்பதுடன், விளையாட்டுத்துறை, பொறியியல், உள்ளிட்ட வேறு துறைகளில் தேர்ச்சியுள்ளவர் விண்ணப்பிக்க முடியும். மேலும் ஆ…
-
- 1 reply
- 400 views
-
-
முல்லை, வவுனியா, திருமலை அம்பாறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 3 மாதங்களுக்கு இறைச்சி விற்கத் தடை! - கோமாரி நோயை அடுத்து அவசரசட்டம். [Monday, 2014-02-24 08:02:38] அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, அம்பாறை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள கால்நடைகளை கோமாரி நோய் பாதித்திருப்பதால், இம் மாவட்டங்களில் இருந்து மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியைக் கொண்டு வருவதும் அவற்றைக் கடைகளில் வைத்து விற்பனை செய்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நோயினால் பசுமாடுகள், எருமை மாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் மற்றும் பன்றிகள் ஆகிய விலங்கினங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை மறுஅறிவித்தல் வரையில் உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கிழைக்கும் என்ற…
-
- 1 reply
- 347 views
-
-
திரையரங்குகளில் திரையிட இந்தியத் தணிக்கைச் சபை அனுமதி மறுத்ததை அடுத்து, 'போர் தவிர்ப்பு வலயம் :சிறிலங்காவின் கொலைக்களங்கள்' ஆவணப்படம், நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டது. கெலும் மக்ரே தயாரித்த இந்த 94 நிமிட ஆவணப்படத்தை, இந்தியாவில் திரையரங்குகளில் திரையிடுவதற்கு இந்திய தணிக்கைச் சபை அனுமதி மறுத்திருந்தது. சிறிலங்காவுடனான உறவுகளை பாதிக்கும் என்று காரணம் காட்டியே இந்த ஆவணப்படத்துக்கு இந்திய தணிக்கைச்சபையால் அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன், பொதுமக்களுக்கு அசளகரியத்தை ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதை திரையரங்குகளில் காண்பிக்க அனுமதிக்க முடியாது என்றும் இந்திய தணிக்கைச்சபை கூறியிருந்தது. இந்தநிலையில், திரையரங்குகளில் காண்பிக்கத் தடைவிதிக்கப்பட்ட, இந்தியா…
-
- 1 reply
- 434 views
-
-
-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், பாஷையூர் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 72 கிலோ வெடிபொருட்களை விநியோகித்தவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று (24) சரணடைந்துள்ளார். நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பொலிஸில் சரணடைந்துள்ளார் என்று யாழ். குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.எல்.விக்கிரமாரச்சி தெரிவித்தார். பாஷையூர் பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (18) 16 கிலோ சி.டி. ரக வெடிபொருட்களும் 56 கிலோ ரி.என்.ரி ரக வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. இச்சம்பவத்துடன் தொடர்புடையவரான பாஷையூரைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த புதன்கிழமை (19) ஓமந்தைப் பகுதியில் வைத்து ஓமந்தைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிர…
-
- 0 replies
- 272 views
-
-
மார்ச்சுக்குப் பின்னர் வடமாகாணத்தை அரசாங்கம் பழிவாங்கும்! – எதையும் எதிர்கொள்ளத் தயார் என்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன். [Monday, 2014-02-24 18:34:47] மார்ச்சின் பின்னர் அரசாங்கம் வட மாகாணத்தை பழிவாங்கும். தனித்தேனும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம். எல்லா சவால்களுக்கும் முகம் கொடுக்க நாம் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்தின் பின்னர் வடமாகாணத்திற்கும் மத்திய அரசுக்குமான உறவில் விரிசல் ஏற்படும் என்ற அரசாங்கத்தின் கருத்து தொடர்பாக, கருத்து வெளியிட்டுள்ள அவர், இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தடைசெய்யக் கோரும் அதிகாரம் எவரு…
-
- 0 replies
- 389 views
-
-
இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி மனுஸ் தீவு புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் கடமையில்:- மனித உரிமை அமைப்புக்களும், புகலிடக் கோரிக்கையாளர் நலன் விரும்பிகளும் கடும் எதிர்ப்பு- இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் மனுஸ் தீவு புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை அமைப்புக்களும், புகலிடக் கோரிக்கையாளர் நலன் விரும்பிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியான தினேஷ் பெரேரா என்பவரே இவ்வாறு கடமையாற்றி வருகின்றார். மனுஸ் தீவுகளில் அமைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர் தடுப்பு முகாமில் முன்னாள் இராணுவ அதிகாரி தினேஷ் பெரேரா செ…
-
- 0 replies
- 367 views
-
-
ஜெயலலிதாவையும் விக்னேஸ்வரனையும் தண்டிக்க வேண்டும்! - கோரிக்கை விடுக்கிறது தேசப்பற்று தேசிய இயக்கம். [Monday, 2014-02-24 18:25:21] இந்தியாவில் ஜெயலலிதாவைப் போலவே இலங்கையில் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார் அரசாங்கத்தை எதிர்த்து செயற்படுவதே இருவரினதும் கொள்கையென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.மேலும் குற்றவாளிகளை நியாயப்படுத்துவதில் விக்னேஸ்வரனும் ஜெயலலிதாவும் சரிநிகரானவர்கள். இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவிக்கையில்- வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கொள்கைகள் அனைத்துமே இந்தியா தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயற்பாட…
-
- 0 replies
- 315 views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் தூக்குத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. மேலும் கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் அவர்கள் 3 பேர் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட மேலும் 4 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். ஆனால், மத்திய அரசின் எதிர் நடவடிக்கை காரணமாக, அவர்களுடைய விடுதலை தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் விடுதலை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் டைரக்டர் பாரதிராஜா தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்…
-
- 2 replies
- 421 views
-
-
போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அதிகாரி ஒருவரை நியமிக்கிறார் நவநீதம்பிள்ளை! [Monday, 2014-02-24 18:16:51] இலங்கையின் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போர் குற்றங்களை கண்டறிந்து சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்காக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிகாரி ஒருவரை நியமிக்க உள்ளதாக தெரியவருகிறது. இந்த விசாரணை அதிகாரியை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்பட உள்ள அறிக்கை நவநீதம்பிள்ளை இலங்கைக்கு அனுப்பியிருந்தார்.அதற்கு இலங்கை அரசாங்கம் பதிலையும் அனுப்பியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்கள் தொடர்பில் சுதந்…
-
- 0 replies
- 275 views
-
-
யாழ்தேவி புகையிர சேவை எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் பளைவரை செல்லவுள்ளது : குளோபல்தமிழ்ச்செய்தியாளா் கிளிநொச்சி கிளிநொச்சி வரை தற்போது இடபெற்று வருகின்ற யாழ்தேவி புகையிர சேவை எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் பளைவரை தனது சேவையினை தொடரவுள்ளது அந்த வகையில் நே்றைய தினம் (23) கடுகதி புகையிர சேவை பரீட்சார்த்த சேவையினை பளை புகையிரநிலையம் வரை மேற்கொண்டள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103467/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 346 views
-