ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
சிறுவர் இல்லத்தில் இருப்பதாக எனது மகனின் படத்தைப் பத்திரிகையில் பார்த்தேன்: - கண்ணீர் மல்கிய தாயார் [sunday, 2014-02-16 19:18:02] இறுதி யுத்தத்தின்போது கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம், 18 ஆம் திகதியன்று காணாமல் போன தனது மகன் இரத்மலானை சிறுவர் இல்லத்தில் இருப்பதாக வீரகேசரி பத்திரிகையில் புகைப்படத்துடன் பிரசுரிக்கப்பட்ட பின்னரும் தனது மகனைக் காணவில்லை எனச் சுட்டிக்காட்டிய தாயார் ஒருவர் தனது மகனை மீட்டுத் தாருங்கள் என ஆணைக்குழுவினரிடம் நேற்று கண்ணீர் மல்க கோரினார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இவ…
-
- 3 replies
- 592 views
-
-
இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள ஆபிரிக்க மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகளுக்காக அடுத்த காணொளியை காண்பிக்க உள்ளதாக சனல் 4 தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாடாளுமன்ற கட்டிடத்தின் விக்டர் ஹியூகோ மண்டபத்தில் அண்மையில் திரையிடப்பட்ட “போர் தவிர்ப்பு வலயம்” காணொளி காட்சிப்படுத்தலின் பேதோ கெலும் மக்ரே கருத்துக்களை வெளியிட்டார். ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கையின் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் சம்பந்தமாக விசாரணை நடத்த இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்படும் என நினைக்கின்றேன். இறுதிக்கட்ட போரில் மேற்குலக நாடுகள், அமெரிக்கா, சீனா, ஈரான், இஸ்ரேல், இந்தியா,…
-
- 5 replies
- 553 views
-
-
சமஷ்டி தீர்வு நிலைப்பாட்டில் மாற்றமில்லை! – மாவை சேனாதிராஜா. [sunday, 2014-02-16 18:16:32] இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைமையிலான தீர்வுத்திட்டமொன்றே, முன்வைக்கப்பட வேண்டும், இதுதொடர்பான கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வட மாகாணசபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் 100 வீத அதிகாரப் பகிர்வினை தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு பதிலளித்த மாவை சேனாதிராஜா, காணி, காவல்துறை அதிகாரங்கள் மற்றும் சுயாட்சி அதிகாரங்களை உள்ளடக்கிய தீர்வுத் திட்டமொன்றையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலி…
-
- 0 replies
- 264 views
-
-
ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்! - திமுக மாநாட்டில் தீர்மானம். [sunday, 2014-02-16 18:32:05] இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் இன ஒழிப்பு சம்பந்தமாக ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிப்பதோடு ஐ.நா. மேற்பார்வையில் இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று திருச்சியில் நடந்த திமுக 10வது மாநில மாநாட்டில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டில் இன்று மதியம் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை விபரம் வருமாறு:– 1. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவேண்டும். தென்மாவட்ட மக்களின் வேலை வாய்ப்புக்கும், வாழ்வாதாரத்…
-
- 0 replies
- 337 views
-
-
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால், யானைகளுடன் வந்த பௌத்த பிக்குகள், தேங்காய்களை உடைத்து எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். கோட்டே, கங்காராமய விகாரையின் பௌத்த பிக்குகள் குழுவொன்றும், விகாரைக்கு வரும் பக்தர்களும் இணைந்து நேற்று அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால், காலி வீதியில் பெருமளவு தேங்காய்களை உடைத்ததால், அந்த வீதி ஊடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கங்காராமய விகாரையில் நடைபெற்ற நவம் பெரகரவுக்காக கொண்டு வரப்பட்டிருந்த பெருமளவு யானைகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன. இந்தப் போராட்டத்தை நடத்தியவர்களால் அமெரிக்கத் தூதரகத்திடம் மனு ஒன்ற…
-
- 3 replies
- 529 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு உதவத் தமது பணியகம் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, வரும் மார்ச் மாத அமர்வில் சிறிலங்கா குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். இந்த அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, சிறிலங்கா அரசாங்கத்தின் பார்வைக்காக, ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க ஊடாக கடந்த வாரம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக…
-
- 1 reply
- 347 views
-
-
தமிழ் மக்களின் உரிமைக்குரல்களை நசுக்குவதில் சிறிலங்கா இராணுவத்தினர் நேரடியாகவே களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இதனைத்தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு காணப்பட வேண்டுமானால் சர்வதேசம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் நேரடியாக தலையிடும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை யாழ்.முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- அதே போன்று நேற்று இருந்து வலி.வடக்கில் இ…
-
- 1 reply
- 314 views
-
-
சாவகச்சேரியில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் காணாமற்போனவர்களின் உறவுகள் அளித்த கண்ணீர் சாட்சியங்கள்! [sunday, 2014-02-16 08:09:38] அந்த நேரத்தில் நீங்களும் இங்கிருந்தால், காணாமற்போயிருந்திருப்பீர்கள் என்று, நேற்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடந்த காணாமற்போனவர்கள் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த முதியவர் ஒருவர் விரக்தியுடன் தெரிவித்தார். இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமற்போன இரண்டு பிள்ளைகள் தொடர்பாக சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியமளிக்க வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் மனைவி தனது கணவரை, அல்லது தாய் தனது மகன்கள் தொடர்பாக அதிகமாக சாட்சியமளிக்க வந்திரு…
-
- 1 reply
- 586 views
-
-
வடக்கில் பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடுகளை ஏற்க முடியாது! - பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார். [sunday, 2014-02-16 09:00:12] இலங்கையின் சிவில் மற்றும் அரசியல்உரிமைகள் விவகாரம் மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்து கண்காணிக்கப்படும் என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார். பிரச்சினைகளுக்கு நீண்ட கால அடிப்படையில் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளது. வடக்கில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது. அதேவேளை,வடக்கில் பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.…
-
- 0 replies
- 461 views
-
-
அரசுக்கு ஆதரவாக ஜெனிவா செல்கிறது கொல்லப்பட்ட, காணாமல் போனவர்களின் பெற்றோர் ஒன்றியம்! [sunday, 2014-02-16 08:41:21] ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்கள் பெற்றோர் ஒன்றியத்தின் சார்பில் 4 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த பிரதிநிதிகளில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு இனங்களின் பிரதிநிதிகள் அடங்குகின்றனர். சிங்களப் பெற்றோர் உயிரிழந்த இராணுவத்தினரின் சார்பில் கலந்து கொள்ளவுள்ளதுடன் தமிழ் பெற்றோர் புலிகளால் கடத்தப்பட்டவர்களின் சார்பில் கலந்து கொள்கின்றனர்.தமது பிரதிநிதிகள் ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்பது குறித்து அடுத்து வரும் நாட்களில் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படும் என இந்த ஒன்ற…
-
- 0 replies
- 497 views
-
-
இலங்கை தொடர்பான தீர்மானம் அமெரிக்க காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க செனட்டர்களினால் இலங்கை தொடர்பான தீர்மானம் காங்கிரஸ் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தை அந்நாட்டு வெளிவிவகார கமிட்டி ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியம் மிக அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. ரிச்சர்ட் புர் (சுiஉhயசன டீரசச) என்ற செனட்டரினால் இந்த தீமானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் இன்னமும் திரு…
-
- 0 replies
- 278 views
-
-
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், சிறிலங்கா அதிபரின் ஆலோசகரான முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட புதுடெல்லிக்கு சென்றுள்ளார். இந்தியாவின் மூத்த அரச அதிகாரிகள், ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளைச் சந்தித்து, அங்குள்ள நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்கே அவர் குறுகிய காலப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று கொழும்பு திரும்பவுள்ள அவர், தனது புதுடெல்லி நிலைமைகள் பற்றிய மதிப்பீடுகள் குறித்து சிறிலங்கா அதிபருக்கு எடுத்துக் கூறுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங், மற்றும் காங்கிரஸ் அரசியல் தலைவர்களான ராகுல்காந்திக்கு மிகவும் நெருக்க…
-
- 0 replies
- 221 views
-
-
அரசாங்கம் போரினால் ஏற்படுத்தப்பட காயங்களை மறைப்பதற்கான ஒரு கருவியாகத்தான் தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். உண்மையில் அபிவிருத்தி என்பது சமாதானத்திற்கான தீர்வாகவே அல்லது மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது. தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தியின் பின்னால் எங்களுடைய வளங்களையும், மக்களுடைய உழைப்பையும் சுறண்டுகின்ற நடவடிக்கையே என அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.onlineuthayan.com/News_More.php?id=842492651116608253
-
- 0 replies
- 379 views
-
-
சரணடைந்ததவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்பதால் வட்டுவாகலில் இராணுவத்திடம் எனது கணவர் சரணடையும் போது அவருடன் விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களும் சரணடைந்தனர் என அரசியல் துறை பொறுப்பாளர் யோகியின் மனைவி யாழ்ப்பாணத்தில் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளார். காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவினால் மெற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி இன்று மூன்றாவது நாள். இன்றைய பதிவுகள் மாவட்ட செயலகத்தில் காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.அதன்போதே யோகியின் மனைவி மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், கடந்த 17.5.2009 வட்டுவாகலில் நானும் எனது கணவரும் பிள்ளைகளும் …
-
- 0 replies
- 352 views
-
-
இன்று காலை மானிப்பாய் வீதி, ஓட்டுமடம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் அவரது வீட்டின் முன்புறம் நின்ற மாமரத்தில் தூகிட்டு தற்கொலை செய்துள்ளார். இத் தற்கொலைக்கு காதலில் ஏற்பட்ட பிரிவே காரணம் எனத் தெரிய வருகிறது. மானிப்பாய் வீதி, ஓட்டுமடத்தைச், சேர்ந்த அரிச்சந்திரன் விக்னேஸ்வரன் வயது 23 என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக உறவினர் ஒருவர் தெரிவிக்கையில், அயல் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், விக்னேஸ்வரனின் காதல் விவகாரத்திற்கு வீட்டார் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும், இருப்பினும் குறித்த இளைஞன் ஒருவார காலமாக மனம் உடைந்து விரகத்தியான மனோநிலையில் காணப்பட்டத…
-
- 0 replies
- 336 views
-
-
என் கண் முன்னே இராணுவம் கொண்டு போன எனது மகனை நீங்கள் எவ்வாறு காணாமல் போனவர் என்று கூறுவீர்கள் என ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தந்தையார் ஒருவர் சாட்சியப்பதிவுக்காக அழைக்கப்பட்ட வேளை கேள்வி எழுப்பியிருந்தார். யாழ்ப்பாணம் பிரதேச செயக பிரிவின் காணாமல் போனவர் தொடர்பிலான சாட்சியப்பதிவுகள் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. அதன்போதே தந்தையார் ஒருவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், எனது மகனை என் கண்முன்னே தான் பச்சை பிக்கப்பில் நல்லூர் அரசடி இராணுவ முகாமில் வைத்து ஏற்றிச் சென்றனர். இவ்வாறு இருக்க எப்படி என் மகனை நீங்கள் காணாமல் போனவர் என்று கூறுவீர்கள். எனது மகன் சுதன் கட்டாரில் இருந்து விட்டு திருமணம் முடிப்பதற்காக யாழ்…
-
- 0 replies
- 292 views
-
-
தமிழர்களைக் கேவலப்படுத்தும் வகையிலானதும், தவறானதுமான, மொழிபெயர்ப்புகளை பொது இடங்களில் காட்சிப்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சிங்கள மொழியில் சரியாகவும், தமிழ்மொழியில் அதன் மொழிபெயர்ப்பு தவறாக இடம்பெற்றதுமான விடயங்கள் குறித்து 218 முறைப்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக, தேசிய மொழிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சின் பேச்சாளர் மகேந்திர ஹரிச்சந்திர ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளார். இவற்றில், 'கர்ப்பிணித் தாய்மாருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது' என்பதற்குப் பதிலாக, 'கர்ப்பிணித நாய்மாருக்காக ஒதுக்கப்பட்டுன்னநு' என்று, தவறாக பேருந்துகளில் எழுப்பட்டுள்ளதும் அடங்கும். இது தமிழர்களைக் கேவலப்படுத்தும் வகையிலானது என்ற…
-
- 15 replies
- 1.7k views
-
-
ஜெனிவாவில் 2017ம் ஆண்டு வரை காலஅவகாசம் கேட்கப் போகிறார் பீரிஸ் அடுத்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அமர்வுக்கு சிறிலங்கா அரசாங்கம், உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவை அனுப்பி வைக்கவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிறிலங்கா குழுவுக்கு, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமை தாங்கிச் செல்வார் என்றும், அவர், ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகி இரண்டு நாட்கள் கழித்து – மார்ச் 5ம் நாள் பேரவையில் உரையாற்றுவார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். சிறிலங்கா குழுவில் இடம்பெறும் ஏனைய உறுப்பினர்கள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், இந்தக் குழுவில், சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வ…
-
- 1 reply
- 560 views
-
-
உலகப்படத்தில் இலங்கையை அடையாளம் காட்டத் தெரியாத அமெரிக்க செனட்டரே கண்டனப் பிரேரணையை முன்வைத்துள்ளார்! – லலித் வீரதுங்க. [saturday, 2014-02-15 08:56:18] உலக வரைபடத்தில் இலங்கை எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளாத, பொது அறிவு இல்லாத அமெரிக்க காங்கிரஸின் ஓர் உறுப்பினரே இலங்கைக்கு எதிராக கண்டனப் பிரேரணையை முன்மொழிவதற்கு தலைமை தாங்கியிருக்கிறார் என ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் தேசிய நடவடிக்கை திட்டத்திற்கு தலைமை தாங்கும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஊடகங்களின் தலைமை அதிகாரிகளை கொழும்பில் சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இலங்கை எங…
-
- 4 replies
- 732 views
-
-
சல்மான் குர்ஷித்தின் கருத்துகளில் வேறு நிகழ்ச்சி நிரல் தெரிகிறது! - சந்தேகம் கிளம்புகிறது அரசாங்கம். [Friday, 2014-02-14 07:52:35] நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ள போதும் வேறு நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் எமக்கெதிராக தொடர்ந்தும் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு வருவதோடு குற்றச்சாட்டுகளும் அடுக்கப்படுகின்றன. நல்லிணக்கம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் ஏற்கக் கூடியதாக உள்ளபோதும் ஏனைய கருத்துக்கள் வேறு நிகழ்ச்சி நிரலினடிப்படையில் தெரிவித்ததாகவே சந்தேகம் எழுவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவ…
-
- 4 replies
- 480 views
-
-
ஜெனிவா தீர்மானத்தை இலங்கை நிராகரிக்கும்! – நமீபிய அதிபரிடம் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவிப்பு. [saturday, 2014-02-15 08:34:15] ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை, இலங்கை அரசாங்கம் நிராகரிக்கும் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஆதரவு திரட்டுவதற்காக அமைச்சர் டிலான் பெரேரா தற்போது நமிபீயாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் நமீபிய அதிபரை சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். குறுகிய அரசியல் லாபங்களின் அடிப்படையில் நாடுகளுக்கு எதிரான தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொறிமுறைமையை இலங்கை மதிப்பதாகவும் தெர…
-
- 2 replies
- 326 views
-
-
ஆர்.ரஸ்மின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் புத்தபெருமானின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு வெள்ளிக்கிழமை 14ஆம் திகதி முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. முள்ளியவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எம்.சாந்த திலகரட்ண தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி, மாங்குளம், முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களின் உதவிப் பொலிஸ்மா அதிபர் யு.கே.திசானாயக்க, சிரேஷ்ட பொலிஸ் அத்திதயட்சகர் சம்பிக்க ஸ்ரீவர்தன உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகளும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது புத்தபெருமானின் திருவுருவச்சிலையானது ஒட்டுசுட்டான் பௌத்த ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு சுபநேரமான 10.24 இற்கு பிரதிஷ்டை செய்யப்…
-
- 1 reply
- 375 views
-
-
-ரி.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு, பெரிய உப்போடை பிரதேசத்தில் வசிக்கும்; ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தரான சசிகலா ரட்ணகுமார் என்பவர் ஐந்தூரியம் பூச்செடிகளை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றார். 1990ஆம் ஆண்டிலிருந்து இதில் ஆர்வம் காட்டிவரும் இவர், முதலில் ஒரேயொரு ஐந்தூரியம் பூச்செடியை வளர்க்கத் தொடங்கி தற்போது சுமார் கால் ஏக்கரில் 500 இற்கும் அதிகமான 23 வகையான ஐந்தூரிய பூச்செடிகளை வளர்த்துவருகிறார். சிவப்பு, றோஸ், வெள்ளையென பல வர்ணங்களில் துலங்கும் ஐந்தூரியம் பூங்காவிற்குள் நுழைந்தால் குட்டி நந்தவனமாக காட்சி தருகிறது. இதனைத் தனது முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ள இவர், தினமும் 300 முதல் 1,000 ரூபாவரை இதன் மூலம் சம்பாதிப்பதாக அவர் கூறுகிறார். இந்த பூச்செடிகளை த…
-
- 1 reply
- 806 views
-
-
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் பல்வேறு தடைகளை தாண்டி யாழ் நகரில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு யாழ்.முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக இக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது. நூற்றுக் கணக்கான மக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். குடியேற்று குடியேற்று சொந்த நிலத்தில் குடியேற்று, எங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாதே!, எங்கள் இடத்தை எங்களிடம் தா!,காணாமல் போன உறவுகள் எங்கே? எமது வளங்களை பறிக்காதே!,விலை வாசியை ஏற்றாதே!அன்நிய மீனவர்களை வெளியேற்று எங்கள் மீனவரை வாழ விடு, வலி.வடக்கில் மீள்குடியேற்று, எங்கள் சொந்த நிலங்களுக்குச் செல்லவிடு, போன்ற கோசங்கள், மற்றும் பதாதைகளை தாங்கி…
-
- 1 reply
- 411 views
-
-
மனைவி சாட்சியம்- காணாமல் போன நபர் ஒருவரை இராணுவத்தினர் இராணுவ முகாம்களின் வேலைகளுக்காக பயன்படுத்திவந்தமை தொடர்பிலான சாட்சியம் ஒன்று இன்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அளிக்கப்பட்டுள்ளது. வாகனச் சாரதியாகச் செயற்பட்ட சாவக்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த தம்பையா தர்மராஜன் என்பவர் கடந்த 2006-08-08 அன்று சிற்றூர்தி ஒன்றில் பருத்தித்துறை கனகம்புளியடிப் பகுதிக்கு சென்றிருக்கின்றார். இந்நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார். அவர் தனது சாட்சியத்தில், 2006-08-08 அன்று பருத்தித்துறை கனகம்புளியடிக்குச் சென்ற கணவரை மணற்காடு இராணுவ முகாமுக்கு முன்பாக பிற்பகல் 3மணி முதல் மாலை 6 மணிவரையில் தமக்குத் தெரிந்தவர்கள் கண்…
-
- 1 reply
- 500 views
-