ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
இலங்கையின் 66ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள 513 ஆவது படைப்பிரிவினர் பிரிகேடியர் எஸ்.பெரேரா தலைமையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இரத்த தானம் வழங்கினார்கள். இணுவில், மக்லியோட் வைத்தியசாலையில் இன்று காலையில் இடம்பெற்ற இந்த இரத்தான நிகழ்வில் 513 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கலந்துகொண்டு இரத்தம் வழங்கினார்கள். உடுவில் பிரதேச படைகளினால் வழங்கப்பட்ட இந்த இரத்தான நிகழ்வு ஐந்தாவது தடவையாக இடம் பெற்றுள்ளமை குறிப்பி;டத்தக்கதாகும். இதேவேளை வைத்தியசாலை வளாகத்தை சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்யும் பணியிலும் கேர்ணல் சரத் அமரசிங்கா தலைமையில் ஈடுபட்டார்கள். http://www.virakesari.lk/?q=node/361213
-
- 0 replies
- 275 views
-
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர்களைத் திட்டமிட்டு புறக்கணித்துவருகிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். போட்டிப் பரீட்சைகளில் சித்தி பெற்ற போதிலும் நியமனங்களைப் பெற்றுக்கொள்வதில் தமிழர்கள் திட்டமிட்ட முறையில் புறக்கணிப்படுகின்றனர் என்று அவர் கூறினார். மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான், புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த நாட்டிலே போர் ஆரம்பிக்கப்பட முன்னர் தமிழர்கள் கல்வியில் உயர்தர நிலையில் இருந்துள்ளார்கள். அவர்களது கற்றல் ஆற்றலை அழிக்க வேண்ட…
-
- 0 replies
- 246 views
-
-
ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் கலந்துரையாடியுள்ளன. தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், நேற்று லண்டனில் பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹுகோ ஸ்வைரியை சந்தித்து இது குறித்து உரையாடியுள்ளார். இதனையடுத்து தமது சந்திப்பு தொடர்பில் ஸ்வைரி, தனது ருவிற்றர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். தாமும் பிஸ்வாலும் சிறிலங்காவின் மனித உரிமைகள் விடயம் மற்றும் ஜெனீவாவில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை என்பவை தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஸ்வைரி குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் ஜெனீவாவுக்கு செல்லவுள்ள பிஸ்வால் அங்கு இந்தியா உள்ளிடட நாடுகளின் இராஜதந்திரிகளை சந்த…
-
- 0 replies
- 295 views
-
-
சிறிலங்காவின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் யாழ்.பல்கலைக்கழக ஆண்கள் விடுதியில் அமைந்துள்ள தண்ணீர்த் தாங்கி மீது கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாகவும். இதனை அறித்த இராணுவத்தினர் அப்பகுதி எங்கும் குவிக்கப்பட்டுள்ளதுடன் அக்கொடி தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நேற்றிரவு பெருமளவான இராணுவ மற்றும் பொலிசார் பல்கலைக்கழகம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளில் ஆயுதங்களுடன் நடமாடித் திரிகின்றமையினால், அச்சமடைந்த பல மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரியவருகின்றது. http://www…
-
- 0 replies
- 428 views
-
-
யாழிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜெ.சிசென் ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு உதயன் பத்திரிகைக்கு விஜயம் செய்தனர். உதயனுக்கு வருகை தந்த அவர்கள் நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவன் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் மற்றும் பத்திரிகை ஆசிரியர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கின் ஊடக சுதந்திர தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் எதிர் நோக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் 2013ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஊடக சுதந்திரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது, http://…
-
- 7 replies
- 980 views
-
-
மீள் குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பு, வவுனியா:- வவுனியா மாவட்டத்தில் 10,209 தமிழ் மக்களுக்கு வீடுகள் தேவையென கேரிய போதிலும் 1938 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - வவுனியா வவுனியா மாவட்டத்தில் 10,209 தமிழ் மக்களுக்கு வீடுகள் தேவையென கேரிய போதிலும் 1938 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என வவுனியா மாவட்ட மீள்குடியேறியோருக்கான நலன்போணும் அமைப்பு இன்று (3.2) தெரிவித்துள்ளது. இவ் அமைப்பின் சார்பில் அதனை; செயலாளர் மா. றேணிதாஸ் மற்றும் பொருளாளர் நா. நடராசா ஆகியோர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா மாவட்டத்தில் இந்தியன் வீட்டுத் திட்டங்கள் மூன்று…
-
- 4 replies
- 557 views
-
-
இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் பேச்சுவார்த்தை 04 பெப்ரவரி 2014 இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்கர்வும் பிரித்தானியாவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து இந்த சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயரை சந்தித்துள்ளார். லண்டனில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கபூர்வமானதாக அமைந்தது என ஸ்வார் தெரிவித்துள்hளர். எவ்வாறான தீர்மானம் கொண்டு வருவது நாட…
-
- 1 reply
- 343 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு சொந்தமான சட்டவிரோத ஆயுத கப்பல் ஒன்று செங்கடல் பகுதியில் பயணித்து கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கோத்தாபாயவின் சட்டவிரோத ஆயுதங்களை கொண்டு சென்ற படகொன்று 45 ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் இந்திய கடலோர காவற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், கோத்தபாயவுக்கு சொந்தமான இதேபோன்ற ஆயுதக் கப்பல் செங்கடல் பகுதியில் பயணித்து கொண்டிருக்கின்றது. ஹெவன்ட் காட் (Avant Garde security) பாதுகாப்புச் சேவை நிறுவனத்தின் தலைவரான நிஷங்க சேனாதிபதிக்கு சொந்தமானது என பெயரளைவில் குறிப்பிடப்பட்டாலும் அந்த கப்பலின் உண்மையான உரிமையாளர் கோத்தபாய என கூறப்படுகிறது. செங்கடல் பகுதியில் இருக்கும் டிஜிபூட்…
-
- 2 replies
- 602 views
-
-
பதவியில் இருந்து நீக்கப்பட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் போர் இரகசியங்களை வெளியிட ஐரோப்பாவுக்கு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தினால் அண்மையில் கலைக்கப்பட்ட அரச நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரியாக பணியாற்றி இவர், ஐரோப்பிய நாடொன்றின் தூதரகத்திடம் அதற்கான சந்தர்ப்பத்தை கோரியுள்ளார். போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த தகவல்களை வழங்க தயாராக இருப்பதாகவும் அந்த அதிகாரி உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. போர் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான மிகவும் முக்கியமான தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதனை வெளியிட சந்தர்ப்பம் வழங்குமாறு இந்த அதிகாரி ஐரோப்பிய தூதரகம் ஒன்றிடம் கேட்டுள்ளார். அதிகாரத்தை தவறாக ப…
-
- 5 replies
- 805 views
-
-
ஆண்டாள்குளம் துயிலுமில்லத்துக்கு அருகில் 55 ஏக்கர் காணியை கேட்கிறது இராணுவம்! [Tuesday, 2014-02-04 07:54:06] News Service மாந்தை கிழக்குப்பிரதேச செயலர் பிரிவில் 55 ஏக்கர் அரச காணியைத் தமது தேவைக்கு வழங்குமாறு கேட்டு படையினர் பிரதேச செயலருக்கு விண்ணப்பித்துள்ளனர். மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் ஆண்டான்குளத்தில் விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கப்பட்டிருந்த இடத்தை அபகரித்த பாதுகாப்புப் படையினர் அருகாமையிலுள்ள விளையாட்டுக் கழகத்திற்குச் சொந்தமான காணியையும் சேர்த்து முள்ளுக் கம்பிவேலி அமைத்துள்ளனர்.பாதுகாப்புப் படையினரால் விளையாட்டு மைதானம் அபகரிக்கப்பட்டதையடுத்து கழகத்தின் நலன் கருதி பிரதேச செயலாளரினால் பிறிதொரு காணி விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 305 views
-
-
யாழ். நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முதலாவது வீதிச் சமிக்ஞை விளக்குகள் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒளிர ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியையும் ஆஸ்பத்திரி வீதியினையும் இணைக்கும் சத்திரச்சந்திப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீதிச் சமிக்ஞை விளக்குகள் நேற்று மாலையிலிருந்து ஒளிர ஆரம்பித்துள்ளன. யாழ். நகரில் போக்குவரத்து அதிகமாக காணப்படும் சந்திகளில் ஒன்றான சத்திரச்சந்திப் பகுதியில் கடந்த வருடம் 2013 செப்ரெம்பர் மாதம் குறித்த சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டு சிறிது காலம் இயங்கி வந்தது. பின்னர் குறித்த விளக்குகள் ஒளிராமலே காணப்பட்டது.எனினும் நேற்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை தொடக்கம் மீண்டும் ஒளிர ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. - See mo…
-
- 0 replies
- 513 views
-
-
இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; அதுவரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து ஜெயலலிதா பேசுகையில், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை பற்றி உறுப்பினர்கள் இங்கே பேசினார்கள். எங்களைப் பொறுத்த வரையில், இலங்கை உள்நாட்டுப் போரில் சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும். இனப் படுகொலையை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; அதுவரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழ் ஈழம் குறித்து இலங்கையில் உள்ள…
-
- 0 replies
- 593 views
-
-
ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் இலங்கை மக்களுக்கு எதரானதல்ல என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை நிறைவேற்ற அமெரிக்கா ஆயத்தமாகி வருகின்றது. இந்த தீர்மானமானது இலங்கையின் மக்களுக்கு எதிரானதல்ல என உலகத் தமிழர் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த குற்றச் செயல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை அரசாங்கத்திற்கு எதிரானதே தவிர, நாட்டு மக்களுக்கு எதிரானதல்ல. என இம்முறை …
-
- 0 replies
- 458 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அநேகமான பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் வெளியிட்ட கருத்துக்கள் ஏற்றக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிஸ்வாலின் சகல குற்றச்சாட்டுக்களும் பிழையானவை. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கியமான பரிந்துரைகள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளன. யுத்த கால சேத விபரங்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தகவல் அறிந்துகொ…
-
- 0 replies
- 339 views
-
-
காத்தான்குடி நகரசபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் அலிசப்ரி இனம் தெரியாத நபர் ஒருவரினால் நேற்று முன்தினம் (01-02-13)இரவு 10 மணியளவில் தாக்கப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நகர சபை உறுப்பினர் அலிசப்ரி புதிய காத்தான்குடியில் உள்ள தனது வீட்டுக்கு முன்பாக நின்ற சமயம், இனந்தெரியாத ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து அலிசப்ரியை தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இத்தாக்குதலினால் அலிசப்ரியின் நெத்தியில் பலமான காயம் ஏற்பட்டு இரத்தக் காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தான் தாக்கப்பட்டு இரத்தக் காயங்களுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஒரு மணித்தியாலமான போதும் எனது முறை…
-
- 1 reply
- 338 views
-
-
சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து ஜெயலலிதா பேசுகையில், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை பற்றி உறுப்பினர்கள் இங்கே பேசினார்கள். எங்களைப் பொறுத்த வரையில், இலங்கை உள்நாட்டுப் போரில் சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும். இனப் படுகொலையை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; அதுவரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழ் ஈழம் குறித்து இலங்கையில் உள்ள மற்றும் வெளிநாடுகளில் வாழுகின்ற இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை நாட்டில் நடைபெறும் அனைத்துக் கூட்டங்களையும் இந்தியா புறக்கணிக்க…
-
- 1 reply
- 425 views
-
-
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் நீக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் 16 ஆம் திகதி ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட முடிவிற்கு அமைய அவரை உடன் அமுலுக்கு வரும் வகையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் நிர்வாக செயலாளரினால் கடந்த ஜனவரி 29ஆம் திகதி யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஊடாக கடிதம் மூலம்; கமலேந்திரனிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும்; நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவருமான டானியல் றெக்ஷpசனை கொலை செய்த…
-
- 0 replies
- 378 views
-
-
யாழ் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் நோய்களுக்குச் சிகிச்சை வழங்கும் 31 ஆம் இலக்க விடுதி இன்று காலை 11 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக யாழ் போதனா வைத்தியசாலையில் நரம்பியல் விடுதி இன்மையால் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் இன்று திறந்துவைக்கப்பட்ட விடுதி மூலம் இங்கு சிகிச்சை பெறக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இந் நிகழ்வில் உரையாற்றிய நரம்பியல் ஆலோசகர் வைத்திய கலாநிதி கே.அஜந்தா கடந்த பல ஆண்டுகளாக யாழ் போதனா வைத்திசாலையின் நோயாளர்கள் நரம்பியல் விடுதி இன்மையால் பெரிதும் அவதிப்பட்டனர். போர்க் காலத்தில் நரம்பியல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளர்கள் கொழும்பு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டது. ஆனால் இன…
-
- 0 replies
- 398 views
-
-
யாழ். பல்கலைக்கழக சுற்றாடலில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு முதல் பெருமளவான இராணுவத்தினர் பல்கலைக்கழகம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகளில் ஆயுதங்களுடன் நடமாடித் திரிகின்றமையினால், அச்சமடைந்த பல மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர். இதேவேளை சிறிலங்காவின் 66 ஆவது சுதந்திர தின விழா நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஏதாவது கறுப்பு கொடிக்களை கட்டினரா? என பல்கலைக்கழக மாணவர்கள் சிலரிடம் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=648492620003570576#sthash.USOFYL4L.dpuf
-
- 0 replies
- 325 views
-
-
நாட்டில் உள்ள விவசாயிகள் பொருளாதார நிலையில் உயர்வடைந்தால் தான் நாடு முன்னேற்றம்பெறும் எனவே அந்த முன்னேற்றத்திற்கு நிட்சயமாக நாங்கள் கைகொடுப்போம் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். உள்ளூர் உருளைக்கிழங்கினை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு (சதோச) விற்பனை செய்யும் நிகழ்வு நீர்வேலி கரந்தன் பகுதியில் இன்று காலை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாடுபட்ட விவசாயிகளின் முகத்தில் இன்று சிரிப்பைக் காணக்கூடியதாக உள்ளது. இவர்களின் உயர்வுக்கு நாம் கட்சி பேதமின்றி உழைப்போம். விதை கிழங்குகளை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டிருந்தேன். அதன் போது உருள…
-
- 0 replies
- 357 views
-
-
சனி, பிப்ரவரி 1, 2014 - 05:04 மணி தமிழீழம் | யேசுதாசன், கொழும்பு ஜெனீவாவில் தப்பித்துக்கொள்ள காணொளி தயாரிப்பு!! சூசையின் மனைவி சத்தியதேவியின் காணொளி இங்கே!! ஜெனீவாவில் தப்பித்துக்கொள்ள 20 நிமிடக் காணொளியைத் தயாரிக்கிறது மகிந்த அரசாங்கம்!! சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆதாரக் காணொளிக்குப் பதிலாக 20 நிமிட ஆவணக் காணொளியைச் சிறீலங்கா அரசாங்கம் தயாரித்து வருகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் சிறீலங்கா அரசாங்கம் மீதுள்ள நெருக்கடி நிலைமையில் இருந்து தப்பித்துக்கொள்ளவே இக்காணொளி தயாரிக்கப்படுகின்றது. வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது காணாமல் போன அல்லது கொலை செய்யப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரைக் வைத்தே இக்காணொளி தயாரிக்…
-
- 25 replies
- 2k views
-
-
கண்டி, கன்னொருவ இராணுவ முகாமில் தலைமைத்துவ பயிற்சி பெறும் போது உபாதைக்குள்ளாகி உயிரிழந்த பல்கலைக்கழக மாணவரின் மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவான லஹிரு சந்தருவான் என்ற மாணவர் கடந்த 28அம் திகதி கண்டி, கன்னொருவ இராணுவ முகாமில் தலைமைத்துவ பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போது வயிற்றில் உபாதை ஏற்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, குறித்த மாணவரின் மரணத்திற்கு அரசாங்கமே காரணம் எனவும் தெரிவித்துள்ளார…
-
- 3 replies
- 594 views
-
-
இலங்கை தொடர்பிலான தனது பொறுமையை அமெரிக்கா இழந்து வருவதாக சனிக்கிழமை கொழும்பில் எச்சரித்தார் அந்த நாட்டின் இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான செயலர் நிஷா தேசாய். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடை நிறைவேற்ற முயலும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தரவு சேகரிப்புக்காக இலங்கை வந்தார் நிஷா தேசாய். யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்த அவர் பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்து நிலைமையைக் கேட்டறிந்தார். தனது பயண முடிவில் கொழும்பில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: இலங்கையில் அனைத்துத் தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்களை நடத்தியுள்ளேன். இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பதை சம்பந்தப்பட்ட…
-
- 1 reply
- 452 views
-
-
ஈழத் தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்த ராஜபக்ச மீது சர்வதேச விசாரணைகள் இடம்பெற வலியுறுத்தி எதிர் வரும 20 ஆம் திகதி தமிழக தலைநகரங்களில் ஆர்பாட்டம் இடம்பெறவுள்ளதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். தஞ்சை விளார் சாலை அருகே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழ் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, இலங்கை மற்றும் தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழர்களின் முழு உரிமை பெறுவதற்கு உலக நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் அளிக்கும் தீர்ப்பை ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெனீவாவ…
-
- 1 reply
- 401 views
-
-
கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இடங்களை அடையாளங்கண்டு அவற்றைத் தோண்டுவதோடு கடத்தல், கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை அடையாளங்கண்டு விசாரணைக்கு உட்படுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுத்தல் வேண்டும். இவ்வாறு நல்லாட்சிக்கான மக்கள் கூட்டமைப்பின் தலைமையிலான கூட்டமைப்பு, காணாமற் போனவர்கள் தொடர்பான விபரங்களைப் பதிவு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினரிடம் கோரியுள்ளது. அதனை நிறைவேற்றுவதாக ஆணைக் குழுவின் செயலாளர் கூறியதாக நல்லாட்சிக்கான மக்கள் கூட்டமைப்பின் தலைமையிலான கூட்டமைப்பைச் சேர்ந்த நஜா மொஹமட் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: அந்த ஆணைக்குழுவின் அலு வலகத்தில் நேற்று முன்தினம் பிற்பகல்…
-
- 1 reply
- 259 views
-