ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
03 JUL, 2024 | 03:43 PM பொதுத்தேர்தல் வாக்களிப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் காணப்படும் நோக்கங்கள் குறித்த புதிய ஆய்வினை மேற்கொண்டுள்ள ஐஎச்பி நிறுவனம் Institute for Health Policy’s மக்கள் மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தேசிய மக்கள் சக்திக்குமான ஆதரவு குறைவடையவில்லை என தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் 34 வீதமான மக்களின் ஆதரவு காணப்படுவதாக ஐஎச்பி அமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு 13 வீதமானவர்களும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆறு வீதம் இலங்கை தமிழரசுக்கட்சி நான்கு வீதமும் ஆதரவு காணப்படுவதாக ஐஎச்பி தெரிவித்துள்ளது. மே மாதம் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகள் மூலம் இது…
-
- 1 reply
- 199 views
- 1 follower
-
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலம் குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரபல வர்த்தகரான சி.டி லெவனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் உயர்நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைகால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு இந்த மனுவில் மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305181
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவரின் அலுவலகத்தில், பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி விவாகரத்துக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது, அவர் ஏற்கனவே விவாகரத்துப் பெற்றுள்ளார் என்று தரவுகள் வெளிக்காட்டியுள்ளன. அந்தப் பெண் அதுவரை விவாகரத்துக்கு விண்ணப்பிக்காத நிலையில், இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். நீதிமன்ற நடவடிக்கை இந்நிலையில், பொலிஸ் விசாரணைகளில், உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவர் கனிஷ்ட சட்டத்தரணிகள் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து, மேற்படி தம்பதியர்கள் விவாகரத்துப் பெற்றுக்கொள்வதாக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. இ…
-
- 3 replies
- 506 views
- 1 follower
-
-
03 JUL, 2024 | 03:10 PM 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 85 வீதமானோர் காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு மாபெரும் பொறுப்பு உள்ளது. எனவே சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சி எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187587
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 03 JUL, 2024 | 01:26 PM நாட்டில் பொருளாதார, அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகிய இருவரும் இந்த வாரம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள். அதன்படி, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்தித்துள்ளனர். இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் ஜூலி சங் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் பொருளாதார, அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை நானும் அமெரிக்க திறை…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 03 JUL, 2024 | 12:09 PM வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார். அவர் தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட சகோதரிக்கு வழங்கியிருந்தார். இந்த நிலையில், காணி உரிமையாளரின் சொந்தச் சகோதரி பிறிதொரு தேவையைக் காரணம்காட்டி ஒன்றுவிட்ட சகோதரியிடமிருந்து உறுதியைப் பெற்றுச்சென்று மோசடியாக உரிமை மாற்றம் செய்துள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசார…
-
- 0 replies
- 564 views
- 1 follower
-
-
Published By: VISHNU 03 JUL, 2024 | 02:45 AM (எம்.மனோசித்ரா) உத்தரவாத மின்சாரக் கொள்வனவு ஒப்பந்தத்தின் கீழ் மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்திக் கொள்வனவுக் கட்டணத்தைத் திருத்தம் செய்தற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழும் குறித்த சட்டத்தில் பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுக்கமைய, 10 மெகாவாற்று அல்லது அதற்குக் குறைவான கொள்ளளவு கொண்ட மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்திக் கருத்திட்டங்களுக்குரிய தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட, உத்தரவாதமளிக்கப்பட்ட சந்தை விலையை விடவும் உயர்ந்த விலைக் கட்டண முறையின் கீழ் உத்தரவாத மின்சாரக் கொள்வனவு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டி…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
இலங்கை மதுவரி திணைக்களம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 105 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபாய் அதிகரிப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/305123
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
03 JUL, 2024 | 10:14 AM யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு பொருட்கள் ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தார். புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திரலிங்கம் அருண் (42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். குறிகட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பொருட்கள் ஏற்றி இறக்கலில் ஈடுபட்ட படகொன்று நான்கு தொழிலாளர்களுடன் நேற்று (02) இரவு 7 மணியளவில் நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் பயணித்த நால்வரும் கடலில் வீழ்ந்தனர். அவர்கள் கரை நோக்கி நீந்தியவேளை, கிராம மக்களின் உதவியுடன் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
இலங்கையைச் சேர்ந்த இரு வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி. இலங்கையின் தருஷி கருணாரத்ன மற்றும் தில்ஹானி லேகம்கே ஆகிய வீரங்கனைகள் இவ்வாண்டு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். அந்தவகையில் இலங்கையின் இளம் வீராங்கனையான தருஷி கருணாரத்ன பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்ட போட்டியை பிரதிநிதித்துவப்படுத்தத் தகுதி பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் தில்ஹானி லேகம்கே பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்துத் தகுதி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1390764
-
- 0 replies
- 166 views
-
-
02 JUL, 2024 | 05:57 PM யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் முதியவர் ஒருவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக முதியவருடன் வசித்து வந்த இளைஞன் தெரிவித்துள்ளார். மரணத்தில் சந்தேகம் காணப்பட்டமையால், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. உடற்கூற்று பரிசோதனையில் முதியவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் முதியவருடன் வசித…
-
- 0 replies
- 318 views
- 1 follower
-
-
யாழில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா யாழ் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மழைநீரை சேகரிக்கும் தாங்கிகளை நிர்மாணிக்க இந்தியா முன்வந்துள்ளது. இதற்கமைய 3000 நீர்த் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை கடந்த 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா (newuthayan.com)
-
- 6 replies
- 538 views
- 2 followers
-
-
02 JUL, 2024 | 04:31 PM யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை மருந்தகத்திற்குள் பூட்டி வைத்த கடை உரிமையாளரை எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள மருந்தகமொன்றில் நேற்று திங்கட்கிழமை (01) சுகாதார அமைச்சகத்தின் உணவு கட்டுப்பாடு நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் மருந்தகத்தின் அனுமதி தொடர்பாக சோதனையிட சென்றனர். சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கும் போது அதிகாரிகளை கடை உரிமையாளர் மருந்தகத்திற்குள் வைத்து பூட்டி அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட…
-
- 0 replies
- 194 views
-
-
02 JUL, 2024 | 06:00 PM பூநகரி காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் பெரும் நிதி மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று செவ்வாய்க்கிழமை (02) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிதி ஒழுக்கம் குறித்து பேசும் ஜனாதிபதி இந்த சபையில் பூநகரி திட்டம் குறித்து பேசினார். 700 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டு, இறுதியில் வேறு நாட்டில் உள்ள சோலார் பேனல் விநியோகஸ்தரிடம் வழங்கி அந்த உரிமப்பத்திரத்தை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். 50…
-
- 0 replies
- 156 views
-
-
02 JUL, 2024 | 01:28 PM யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (01) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குருநகர் 5மாடி குடியிருப்பினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய மீனவர் ஆவார். குறித்த மீனவர் குருநகர் கடற்பரப்பிலிருந்து நேற்று கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் மீனவரின் கழுத்து பகுதியில் முரல் மீன் தாக்கியுள்ளது. முரல்மீனின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ள மீனவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண…
-
-
- 10 replies
- 793 views
- 1 follower
-
-
02 JUL, 2024 | 12:46 PM யாழ்ப்பாண வலயக் கல்விப்பணிப்பாளருக்கு எதிராக இலங்கை சிவசேனை சிவதொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். யாழ்ப்பாண கல்வி வலயத்தில் இருந்து அவரை வெளியேற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) யாழ்ப்பாண வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. பலவேறு வாசகங்கள் எழுதிய பாதாதைகள் ஏந்தியும் கோசமிட்டும் தமது எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். இதில் இலங்கை சிவசேனை சிவதொண்டர் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தம், சிவ தொண்டர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். https://ww…
-
-
- 50 replies
- 3.8k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 02 JUL, 2024 | 12:05 PM யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர் கணவனின் கண்முன்னே தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இதன்போது, கூழாவடி மேற்கு ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 3 பெண் பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவர் சுவிஸில் வசித்து வருகின்றார். அவருடன் கடந்த 24ஆம் திகதி வீடியோ அழைப்பில் கதைத்துக்கொண்டு இருந்தவேளை இருவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பெண் கணவனின் கண்முன்னே தற்கொலை செய்துள்ளார். இதன்போது கணவன் அயல் வீட்டவருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதைய…
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தனது மகன் தம்ம சிறிசேன போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/305051
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
02 JUL, 2024 | 03:38 PM (எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே வர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கான விடுமுறை முன்மொழியப்பட்டது . தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஜூலை 2 ஆம் திகதியிலிருந்து 3 மா…
-
- 1 reply
- 450 views
- 1 follower
-
-
யாழில் இல்லமொன்றில் மாணவிகள் குளிக்கும் காட்சிகள் பதிவானதா? - அதிகாரிகள் விசாரணை Published By: DIGITAL DESK 3 02 JUL, 2024 | 11:26 AM யாழ்ப்பாணத்தில் மாணவிகள் தங்கி இருந்த இல்லமொன்றில் மாணவிகள் குளிக்கும் காட்சிகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள பெண் பிள்ளைகள் தங்கி இருக்கும் இடம் ஒன்றின் வெளிப்புறப் பாதுகாப்புக்காக சிசிடிவி கமரா பொருத்தப்பட்டிருந்தது. குறித்த கமராக்களில் பெண் மாணவிகள் குளிக்கும் பகுதியின் சில பகுதிகள் பதிவாகியுள்ளமை தொடர்பிலும் வேறு சில குறைபாடுக…
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதில் 10.6 பில்லியன் டொலர் இருதரப்புக் கடன்களும், 11.7 பில்லியன் டொலர் பலதரப்புக் கடன்களும், 12.5 பில்லியன் டொலர் இறையாண்மைப் பத்திரங்களும் அடங்கும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி நாட்டின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கடனை மீளச் செலுத்துவது தொடர்பாக உடன்பாடுகள் எட்டப்பட்டதாகவும், அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உடன்படிக்கைகள் மற்றும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். https://thinakkural.l…
-
- 1 reply
- 393 views
- 1 follower
-
-
மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான முறைமையை அறிமுகப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட மருந்தின் அளவு வடிவம் மற்றும் வலிமை தொடர்பாக வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்வதே இந்த விலை நிர்ணய முறையின் நோக்கமாகும் என்று வர்த்தமானி அறிவிப்பு கூறுகிறது. இரு வழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த விலை நிர்ணயம் தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டில் பயன்படுத்தப்படும் விலை, தகவல்கள் மற்றும் ஆதாரங்களையே பயன்படுத்த வேண்டும் என வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அமைச்சர் பிறப்பித்த உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305009
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு பாடசாலைகளுக்கு முன்பாக இன்று(02) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடியாகப் பதில் வழங்க வேண்டும் எனக் கோரி, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை நேரத்தின் பின்னர் குறித்த போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/304990
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
முல்லைத்தீவில் கொக்கோ பயிர்ச்செய்கை வெற்றி! முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கோ பயிர் செய்கை வெற்றியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் கொக்கோ பயிர் செய்கையானது இடை , ஈர வலயங்களில் அதிகளவாக பயிரிடப்பட்டு வருகின்றது. இருப்பினும் உலர் வலயத்திலும் இப்பயிர் செய்கையினை மேற்கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் கொக்கொ செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் ஒரு முயற்சியாக டாக் சொக்லேட் செய்யும் பரிட்சாத்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும், இதன்மூலம் கொக்கோவில் இருந்து பல்வேறு வகையான பெறுமதி சேர் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரி…
-
- 0 replies
- 367 views
-
-
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 03ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வை நடத்தாதிருக்கவும் ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை நாளை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நாளை (02) விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த குறித்த தீர்மானம் பற்றிய விவாதத்தை நடத்தாதிருக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்…
-
- 10 replies
- 739 views
- 1 follower
-