ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
06 Nov, 2025 | 06:04 PM காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பகுதியில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சிக்கப்பட்ட காணிக்கு அருகே உள்ள தனியார் காணியில் மர்மமான முறையில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளதையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் இன்று வியாழக்கிழமை (6) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த பகுதியான தாளங்குடா கடற்கரை பகுதியில் கடந்த 2019 ஏப்ரல் 17ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் சஹரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சிக்கப்பட்டது. இவ்வாறு பரீட்சித்த காணிக்கு அருகே உள்ள தனி…
-
- 0 replies
- 78 views
-
-
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணிநீக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்துவந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து பல பாடசாலை மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குறித்த ஆசிரியர், சில மாணவர்களுடன் இணைந்து பல மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் மேற்கொண்ட இச்செயல்களை முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்துள்ளனர்.…
-
-
- 2 replies
- 237 views
-
-
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக மீனவர் பிரச்சினைகள் நிலவி வருவதாகவும், அதற்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய நடைமுறைப்படுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வைக் காண இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ‘இந்து-இலங்கை இருதரப்பு உறவுகள்’ என்ற தலைப்பில் ANI சேவையுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்தக் கருத்தை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய நாடுகளின் கடற் சட்டம் பற்றிய சாசனம் நடைமுறையில் உள்ளது என்றும், அதற்கு உட்பட்டு ச…
-
- 0 replies
- 89 views
-
-
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிபந்தனைகளுடன் சுமந்திரன் விடுக்கும் அழைப்பு! தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அவர்கள் அதற்கு இணங்கி வந்தால் மட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட முடியும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்ற பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியினுடைய மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் காலை பத்து மணியிலிருந்து மாலை வரை நடைபெற்றது. …
-
- 0 replies
- 91 views
-
-
கட்டுக்கோப்பாக வாழ்ந்த சமூகம் அவ்வாறில்லாமல் இருக்கின்றது! - ஆளுநர் நா.வேதநாயகன் adminNovember 6, 2025 கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கின்றது. சமூகத்தின் மீதான அக்கறை என்பதும் குறைந்து செல்கின்றது. ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் – அக்கறையுடன் செயற்படுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். சுவிற்சர்லாந்து உறவுகளும் நித்திலம் கலையகமும் இணைந்து நடத்திய கலைஞர் மதிப்பளிப்பு மற்றும் திரையிசை வெளியீடு என்பன முகமாலை சிவபுர வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை மூத்த சட்டத்தரணி சோமசுந்தரம் தேவராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஈழத் தமிழ் கலைஞர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்ப…
-
- 0 replies
- 92 views
-
-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு-செலவுத் திட்டமாகும். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்ட உரையை ஆற்றுவார். 2026 வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை தொடங்கும். வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு மொத்தம் ஆறு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6:…
-
-
- 1 reply
- 107 views
-
-
Published By: Vishnu 06 Nov, 2025 | 12:54 AM (எம்.ஆர்.எம்.வசீம்) முஸ்லிம் தாதியர்களின் ஹிஜாப் விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டு ஒருசிலர் நாட்டுக்குள் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அரசாங்கம் அதற்கு இடமளிக்கக்கூடாது. அதேநேரம் முஸ்லிம் தாதியர்கள் ஹிஜாப் அணிந்து கடமையில் ஈடுபட முடியும் என்பதை அரசாங்கம் சுற்றுநிருபம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். முஸ்லிம் தாதியர்கள் தலையை மறைத்து அணியும் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு ஐக்கியத்தை அமைத்துக்கொள்வதன் மூலம…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
Published By: Vishnu 06 Nov, 2025 | 12:51 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் ஏற்கவே சுமார் 2000 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் மேலும் 5000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆயத்தமாககிக் கொண்டிருக்கின்றனர். எனவே இவ்வாறு ஆயிரக்கணக்கில் வைத்தியர்கள் மருத்துவ சேவையிலிருந்து நீக்குவதைத் தவிர்ப்பதற்கும், சுகாதாரத்துறையிலுள்ள ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் 2026 வரவு - செலவு திட்டத்தின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் …
-
- 0 replies
- 54 views
- 1 follower
-
-
Nov 5, 2025 - 03:56 PM ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் பகுதிகளில் செயற்படுத்தப்படும் யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டும் நடவடிக்கைக்கு சுற்றாடல் அமைச்சு ஒப்புதல் அளிக்கவில்லை, அது குறித்து அறிவிக்கவும் இல்லை என்று அவ்வமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். "அத தெரண" வினவியபோது அவர் குறிப்பிடுகையில், இந்த "யானை விரட்டும் நடவடிக்கை" குறித்த செய்திகள் வெளியான பின்னரே அமைச்சு அதிகாரிகள் இது குறித்து அறிந்ததாகவும், அதன் பின்னர் அதுபற்றி வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதன்படி, குறித்த நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துமாறு வனவிலங்கு அதிகாரிகளுக்கு சுற்றாமல் அமைச்சு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித-யானை மோதலைத் தீ…
-
-
- 1 reply
- 204 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் 950கிலோ போதைப்பொருள் கோம்பயன் மணல் மயானத்தில் எரித்து அழிப்பு! யாழ்ப்பாணத்தில் கடந்த சில காலங்களாக கைப்பற்றப்பட்ட 950கிலோ போதைப்பொருள்கள் நேற்று எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் மற்றும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிமன்ற நீதிவான் உசைன் ஆகியோரின் முன்னிலையில் கோம்பயன் மணல் இந்து மாயானத்தின் மின்தகன மேடையில் போடப்பட்டு குறித்த போதைப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன . பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் எடுத்துவரப்பட்ட குறித்த போதைப்பொருள்கள், நீதிவான், நீதிமன்ற பதிவாளர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் அழிக்கப்பட்டது. 950கிலோ போதைப்பொருள் …
-
- 0 replies
- 152 views
-
-
Published By: Digital Desk 3 05 Nov, 2025 | 04:06 PM யாழ்ப்பாணத்தின் தொன்மையையும் சிறப்பினையும் பாதுகாக்கும் விடயத்தில் பிரதேச செயலகம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றவை அக்கறையின்றி பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் வெள்ளை சுண்ணாம்பு கல்லினால் உருவாக்கப்பட்ட நூற்றாண்டு கால பழமை வாய்ந்த வைரவர் ஆலயம் ஒன்று காணப்படுகின்றது குறித்த ஆலயத்தினை முற்றாக அழித்து, புனரமைப்பு செய்வதற்கு சிலரினால் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, தமிழர் தேசத்தின் சிறப்புக்களையும் தொன்மையும் பேணும் வகையில் வெள்ளை சுண்ணக்கல் கட்டிடக்கலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இன்னுமொரு தரப்ப…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
05 Nov, 2025 | 12:53 PM யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். அதேவேளை 2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு வர்த்தக சங்கத்தினர் உறுதியளித்தனர். வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற…
-
-
- 5 replies
- 346 views
-
-
05 Nov, 2025 | 03:37 PM நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தைகளில் வன்முறை கும்பல்கள் மற்றும் , போதைப்பொருள் வியாபாரிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும் , அது தொடர்பில் பிரதேச சபை மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காது இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. கொக்குவில் சந்தையில் மரக்கறி வாங்க வந்த நபர் ஒருவருடன் வன்முறை கும்பல் ஒன்று , முரண்பட்டு, அவரை மிக மோசமாக தலைக்கவசங்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். குறித்த சம்பவத்தால் , சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுவார்கள், மரக்கறி வாங்க வந்தவர்கள் இன்னல்களை எதிர்கொண்டதுடன் , சந்தையில் அடிக்கடி இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாகவும் , அது தொடர்பில் பொலிஸ…
-
- 0 replies
- 94 views
-
-
05 Nov, 2025 | 04:49 PM நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகளை வீசி செல்பவர்களை கண்டறிய பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், அதனையும் கவனத்தில் எடுக்காது கழிவுகளை பலரும் வீசி செல்கின்றனர். அவ்வாறு கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் , பலர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வருகின்ற போதிலும், தொடர்ந்தும் கழிவுகளை வீசி வருகின்றனர். இந்நிலையில் அவ்வாறு கழிவுகளை வீசுபவர்களை எச்சரிக்கும் வகையில் அவர்கள் கழிவுகளை வீசி செல்பவர்களின் காட்சிகளின் காணொளிகளின் தரத்தை மிக குறைந்து, அவர்களை ஏனையோர் அடையாளம் காணாத வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு கழிவ…
-
- 0 replies
- 118 views
-
-
05 Nov, 2025 | 04:53 PM முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் உள்ளிட்ட பொருட்கள் இன்று புதன்கிழமை (05) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் இன்றையதினம் காலை தேவிபுரம் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொண்டனன். இதன்போது, கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11 இலட்சத்து 69 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பரல்கள் என்பன புதுக்குடியிருப்பு பாெலிஸாரால் கைப்பற்றப்பட்டன. கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர் என்று தெரிவிக்கப்படு…
-
- 0 replies
- 106 views
-
-
05 Nov, 2025 | 04:56 PM மன்னாரில் காற்றாலைக்கு எதிரான எமது போராட்டத்தின் ஊடாக எமது குரலுக்குச் செவிசாய்த்த ஜனாதிபதி அவர்களுக்கு போராட்டக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் எமது மூன்று கோரிக்கைகளையும் அவர் விரைவில் ஏற்றுக் கொள்வார் என நம்பி எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தெரிவித்தார். மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தொடர்ச்சியாக சுழற்சி முறையில் போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று புதன்கிழமை (05) 95 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இதன் போது போராட்ட களத்தில் இன்றைய தினம் மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவ…
-
- 0 replies
- 72 views
-
-
தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள் அகற்றப்படும்! adminNovember 5, 2025 அதற்கு தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் போது அங்குள்ள கடைகள் அகற்றப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார் வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும், யாழ்ப்பாண நகரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவழிப் பாதையூடாக வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாக வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதற்கு வர்த்தகர்களைத் தவிர ஏனையோர் அவ்வாறு ஒருவழிப…
-
- 0 replies
- 123 views
-
-
வெவ்வேறு வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு! வெல்லம்பிட்டி, கட்டுவன, வெரலபத்த மற்றும் தங்காலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (04) நடந்த தனித்தனி வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வெல்லம்பிட்டி:தொட்டலங்கை-அம்பத்லை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின் புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிட்டம்பஹுவவைச் சேர்ந்த 22 வயதான மோட்டார் சைக்கிளின் சாரதியே உயிரிழந்தவர் ஆவார். கட்டுவன: வலஸ்முல்ல-மிதெனியா வீதியில் பயணிகள் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 24 வயதான மோட்டார் சைக்கிளினின் சாரதியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார், பேருந்து சாரதி …
-
- 0 replies
- 94 views
-
-
புதிய மாற்றத்தை நோக்கி செல்கையில் மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது ஒன்றும் ஆச்சரியமல்ல; அரசாங்கம் என்ற அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் - பிரதமர் 04 Nov, 2025 | 04:05 PM (இராஜதுரை ஹஷான்) புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது. பலசுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். அரசாங்கம் என்ற அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். புதிய மாற்றத்தை நோக்கி செல்கையில் மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது ஒன்றும் ஆச்சரியமல்ல என்று கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் குளியாப்பிட்டிய கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையா…
-
- 0 replies
- 78 views
- 1 follower
-
-
அரசாங்கத்தின் அனுசரணையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன - நாமல் ராஜபக்ஷ 04 Nov, 2025 | 08:26 PM (இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் அனுசரணையுடன் தான் பாதாளக்குழுக்கள் செயற்படுகின்றன. இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுபவர்கள் அனைவரும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பு என்று குறிப்பிடுவது அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நு…
-
- 2 replies
- 229 views
- 2 followers
-
-
சிறுவர்களை புலிகள் மண்ணில் புதைத்திருக்க மாட்டார்கள் -சன்னி ஞானந்த தேரர் யாழில் தெரிவிப்பு! November 4, 2025 0 செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்கள், குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ள நிலையில், புலிகள் அவற்றை புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்க பார்ப்பதாக சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சன்னி ஞாஞானந்த தேரர் தெரிவித்தார். யாழ். நகர பகுதியில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு வழங்கிய ஆணைகளை மறந்து செயல்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக் கூறி…
-
- 0 replies
- 155 views
-
-
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது adminNovember 4, 2025 பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவில் வித்துவான் கைது செய்யப்பட்டுள்ளார். குப்பிளான் பகுதியை சேர்ந்த தவில் வித்துவானை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் , படுகொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தவில் வித்தவானுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழக்கம் ஏ…
-
-
- 12 replies
- 955 views
-
-
04 Nov, 2025 | 04:54 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அவரது சட்டத்துறை சார் சேவைகள் மீது என்றும் எமக்கு மதிப்பும் கௌரவமும் காணப்படுகிறது. திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தனக்கான சேவை நீடிப்பு குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 4 சந்தர்ப்பங்களில் கடிதம் அனுப்பியதாகவும், அவற்றில் ஒன்றுக்கேனும் பதில் கிடைக்கவில்லை என்றும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கவலை வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் …
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
சண்டியர்களை நொண்டியர்களாக்குவோம்; வடக்கு மண்ணிலிருந்து போதைப்பொருள் மாபியாக்கள் உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம் - அமைச்சர் சந்திரசேகர் 04 Nov, 2025 | 08:19 PM போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்து போதைப்பொருள் மாபியாக்கள் உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகம் இணைந்து நடத்திய நடமாடும் சேவை சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்றது. இந்நிகழ்வில்,…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
04 Nov, 2025 | 08:25 PM கொழும்பில் பனை அபிவிருத்தி மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் "கற்பகம்" கொழும்பு மாவட்ட விற்பனை நிலையம், செவ்வாய்க்கிழமை (04) கொழும்பு 06, வெள்ளவத்தை, பொஸ்வெல் பிளேஸில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பினால் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. இந்த விற்பனை நிலையம், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் செயல்படும் பனை அபிவிருத்தி மற்றும் உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமானது. வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பனை உற்பத்தியாளர்களின் பல்வேறு உணவு வகைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வில், பனை அபிவிருத்தி மற்றும் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ர.…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-