Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேர்தல் நடைபெற்ற மாகாணங்களில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் தலைமையகம் அறிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் ஊர்வலங்கள் நடத்தப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல் நிறைவுபெற்றதன் பின்னர் இதுவரையான காலப் பகுதியில் வடக்கு மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/33473/64//d,fullart.aspx

  2. யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியமைக்கிறது. ராஜபக்சேவின் கட்சியும், அந்தக் கட்சிக்கு வால் பிடித்துக் கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியும் கேவலமாக தோற்றுள்ளன. டக்ளஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. தமிழர்களின் தாயகமான வடக்கு, வட மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில் இருந்தது. இறுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மாகாணத்தைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 38 தொகுதிகளில் 30 இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து …

  3. வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவரும் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் திரண்ட சுமார் 150 இற்கும் மேற்பட்டோர் அவ்விடத்தில் கூடி நின்றவேளை வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய போது நிலைமைகளை அவதானிப்பதற்காக அவ்விடத்துக்குச் சென்ற 'கபே' தேர்தல் கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த கண்காணிப்பாளர் ஒருவர் மீதும் பிராந்திய ஊடகவியலாளர் மீதும் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் காரணமாக கண்காணிப்பாளரான ரி. ர…

  4. நடைபெற்ற வடக்கு மாகாணத்துக்கான தேர்தலில் எண்பது விழுக்காடு வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 36 இடங்களில் 30 இடங்களை அது வென்றிருக்கிறது.வடக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் முன்னாள் நீதியரசர் திரு.விக்னேஸ்வரன் அவர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் தேர்தல் சர்வதேச நிர்ப்பந்தங்களின் காரணமாகவே நடத்தப்பட்டது. தேர்தலை அறிவித்தாலும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதைத் தடுக்கும் விதமாகப் பல்வேறு இடையூறுகளை இலங்கை அரசு செய்துவந்தது. த.தே.கூ வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என மிரட்டல் விடுத்து …

  5. மத்திய மாகாண சபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது . மத்திய மாகாணத்துக்கான தேர்தலில் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய அனைத்து மாவட்டங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அந்தக் கட்சிக்கு அங்கு மொத்தமாக (34 இடங்களும், போனஸாக 2 இடங்களுமாக) 36 இடங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 16 இடங்களும், ஜனநாயகக் கட்சிக்கு( சரத்பொன்சேகா கட்சி) 2 இடங்களும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பி பிரிவுக்கு 2 இடங்களும், மலையக மக்கள் முன்னணிக்கு 1 இடமும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 1 இடமும் கிடைத்துள்ளன. அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இங்கு ஆளும் கட்சியில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. கண்டி …

  6. சர்வதேசத்திற்கான தமது செய்தியை சொல்லிவிட வேண்டும் என்கிற தமிழ் மக்களின் செய்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரிய வெற்றியாக சிலிர்த்து நிற்கிறது…! http://ow.ly/p5DnY

    • 0 replies
    • 507 views
  7. வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்திலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாவட்டத்தில் அந்தக் கட்சி 37,079 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7,897 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. வடக்கு மாகாணத்தில் மொத்தமாகவுள்ள 36 ஆசனங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி நான்கு ஆசனங்களையும், கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலா ஒவ்வொரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. http://tamilworldtoday.com/home

    • 0 replies
    • 777 views
  8. தொடரும் உலகின் அமைதிகாத்தலால் அநீதியாளர்களால் ஈழத்து தமிழினம் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டும் ஒடுக்கப்பட்டும் உரிமைகள் மறுக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வாழ்கின்ற இழி நிலை போக்கி எம் மக்களை காக்கும் பொறுப்பு உலகத்தமிழினத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொடியோர் முகத் திரைகள் கிழிக்கப்பட்டு எம் மக்கள் மீது கட்டவிழ்த்த அநீதிக்கு தண்டனை பெற்று நீதியை விடுதலை செய்யும் காலம் வரை தமிழினம் உறங்குதல் கூடாது. உலகின் மனசாட்சிகளை எம் இனப்படுகொலைகள் ஆறாத காயங்கள் துடைக்கப்படாத கண்ணீர் இன்னமும் தட்டி எழுப்பாத போதும் தொடர்ச்சியான மக்கள் தன்னெழுச்சி போராட்டங்கள் நீதி கிடைக்கும் வரை தமிழர்களால் நடாத்தப்பட வேண்டிய காலத்தின் தேவை உணர்ந்து வீச்சோடு எம் மக்கள் போராட வேண்டும். இது குறிப்…

  9. யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியை வெடி கொழுத்தி கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்குள் சற்று முன்னர் இராணுவத்தினர் நுழைந்து தாக்குதல் நடத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மவையிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இது தொடர்பில் எதுவும் தெரிவிக்க முடியாத நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். http://www.sankathi24.com/news/33468/64//d,fullart.aspx

  10. வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்திலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாவட்டத்தில் அந்தக் கட்சி 37,079 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7,897 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. வடக்கு மாகாணத்தில் மொத்தமாகவுள்ள 36 ஆசனங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி நான்கு ஆசனங்களையும், கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலா ஒவ்வொரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. http://tamilworldtoday.com/home

    • 0 replies
    • 273 views
  11. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - - ஒரே பார்வையில் - 2136 வாக்குகள் யாழ்ப்பாணம் 7625 கிளிநொச்சி மாவட்டம் - 756 வவுனியா மாவட்டம் 901 முல்லைத்தீவு – 646 மன்னார் மாவட்டம் 1300 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கிளிநொச்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 160 வவுனியா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 323 யாழ்ப்பாணம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1099 முல்லைத்தீவு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 146 வாக்குகள் மன்னார் மாவட்டம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 408 http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96804/language/ta-IN/article.aspx

  12. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அமோக வெற்றி நான்கு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 28,266 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7,209 வாக்குகளையும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 199 வாக்குகளையும் பெற்றுள்ளன. http://tamilworldtoday.com/home

    • 0 replies
    • 586 views
  13. மக்களின் எழுச்சி மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை வடமாகாணத்தில் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதனை அரசு தடுக்க எந்த சூழ்சியையும் செய்யலாம், அத்துடன் மக்களை மிரட்டியதன் காரணமாய் அச்சத்தில் பலர் வாக்களிக்கவில்லை என த.தே.கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். http://irruppu.com/?p=36535#more-36535 வட கிழக்கிணைந்த தாயகமே எங்களது பூர்வீக தாயகம்-எம்.எம்.ரதன்

  14. வடக்கு மாகாணசபை தேர்தல் வாக்களிப்பின் போது யாழ்.மாவட்டத்தில் மட்டும் இராணுவத்தினருடைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 100 ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நீதியானதும் சுதந்திரமானதுமாக தேர்தலைக் கண்காணிக்கும் பவ்ரல் அமைப்பின் முறைப்பாட்டுக் காரியாலையத்திலேயே மேற்படி முறைப்பாடுகள் அனைத்தும் பதிவு செய்யப்படடுள்ளது. சாவகச்சேரி, புத்தூர், வட்டுக்கோட்டை, அராலி, கோண்டாவில், கொக்குவில், இனுவில், தெல்லிப்பளை, வசாவிளான் யாழ்.நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலேயே இராணுவத்தினர் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் நேரடியாக சம்மந்தப்பட்டுள்ளதாகவே உறுதிப்படுத்தப்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்படடுள்ளது என்றும் பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. மேற…

  15. மன்னார் தாழ்வுபாட்டில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து அங்கு இடம் பெற்ற கல்வீச்சுத்தாக்குதலில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். மன்னார் தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலையில் உள்ள 11 ஆவது வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் இடம் பெற்றுள்ளது. அப்பகுதியில் சிலர் கூட்டமாக இருந்ததை அவதானித்த மாற்றுக்கட்சியை சார்ந்தவர்கள் காவல்துறைக்கு தகவல்களை வழங்கியுள்ளனர். அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை துரத்திச் சென்ற சமயம் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்துகொண்டுள்ளனர். துரத்திச்சென்ற காவல்துறையினரும் வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்து அங்குள்ளவர்கள் மீது தடியால் தாக்குதல்களை மேற்கொண்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர…

  16. இன்று Toronto star இன் இணையத்தள செய்தியில் முகப்புச் செய்தியாக இலங்கைத் தமிழர்கள் தேர்தலில் முகம்கொடுத்த வன்முறைகள் பற்றி இவ்வாறு போட்டுள்ளார்கள். சர்வதேச அளவில் வடக்கு தேர்தலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும், அதில் சிங்கள அரசு செய்கின்ற சனநாயக அத்துமீறல்களும் தமிழர்கள் தொடர்பான பார்வையை மாற்றுவதில் பங்களிப்பை செய்யும் என நினைக்கின்றேன். செய்தி. முற்றிலும் ஆங்கிலத்தில் உள்ளது. JAFFNA, SRI LANKA—In the crowded hospital, there are no beds for the beaten. They languish on rugs unrolled across the ward floor, nursing their injuries: a fractured forearm, a gash on the forehead, broken fingers. This is what a “free and fair” election looks like in the Northe…

  17. அல் ஜெசீரா அனைத்துல தொலைக்காட்சிய ஒளிபரப்பினை சிறீலங்காவில் காணமுடியாத படி தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வட மாகாண தேர்தலை மையப்படுத்தி அல் ஜெசீரா தொலைக்காட்சி தொடர் செய்திக்குறிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில் இத்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.உத்தியோகபூர்வ அறிவித்தல் ஏதுமன்றி அல் ஜெசீராவுக்கான இலங்கையின் கேபிள் வழங்கியில் இதன் சேவையினை காணமுடியாது செய்யப்பட்டுள்ளது. ஊடங்கள் மீதான சிறீலங்கா அரசாங்கத்தின் அடங்குமுறையின் ஓர் அங்கமாக அல் ஜெசீரா மீதான இந்த தடையினை காணமுடியும் என்பது இங்கு குறிப்பிடதக்கது. http://www.sankathi24.com/news/33458/64//d,fullart.aspx

  18. -எஸ்.கே.பிரசாத் யாழ். வரணி பகுதியில் மூன்று முறைகள் துப்பாக்கிச்சத்தம் கேட்டமையினால் அந்த பிரதேகத்தில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களின் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படடுள்ளது. கொடிகாமம் மகாவித்தியாலயத்திற்கு முன்னாள் நின்ற சாவச்சேரி பிரதேச சபைத் உப தவிசாளர் யோகராஜா அவர்கள் இனந்தெரியாத நபர்களினால் பிடித்து அங்கிருந்த கட்டிடம் ஒன்றினுள் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இதையறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இனந்தெரியாத நபர்களை கலைக்க முற்பட்ட போது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆ…

  19. வடக்கு தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் யாழ். மத்திய கல்லூரியில் ஆரம்பம் [saturday, 2013-09-21 19:33:46] கடந்த 25 வருடங்களுக்கு பின்னர் இன்று (21) நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் யாழில் 60 வீதமான வாக்குகள் பதியப்பட்டுள்ளன. கடந்த தேர்தல்களை விட இம்முறை அதிகளவான வாக்குகள் பதியப்பட்டுள்ளன. வாக்குப் பதிவுகள் மாலை 4 மணியுடன் முடிவடைந்ததை அடுத்து தற்போது வாக்கெண்ணும் பணிகளுக்காக யாழ். மத்திய கல்லூரிக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டுள்ளன. இம்முறை யாழில் 526 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் இருந்து பஸ்கள் மூலம் வாக்கு பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன. அதேவேளை, நெடுந்தீவில் இருந்து வழமையாக ஹெலி மூ…

  20. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரின் வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவிலுள்ள எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். எனினும், இந்த வீடு தானாக தீப்பற்றிக் கொண்டதாகவும், இதுவொரு விபத்து எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த வீடு எரியுண்ட காட்சிகள் வெளிநாட்டு கண்காணிப்பாளர் ஒருவரின் கமராவில் பதிவாகியதாகவும் எமது செய்தியாளர் மேலும் கூறினார். எனினும், வேட்பாளரின் வீடு திட்டமிட்டு கொளுத்தப்பட்டதா? அல்லது விபத்தா? என்பது குறித்து உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது. http://tamilworldtoday.com/home

  21. வாக்குப்பெட்டிகளுடன் சென்ற வாகனங்களை மோதி சென்ற வாகனத்தை கைப்பற்றியுள்ள பொலிஸார் அந்த வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர். வாக்களிப்பு நிறைவடைந்து வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச்சென்றுக்கொண்டிருந்த போதே கடுவலை மேயர் பி.எச். புத்ததாஸவின் வாகனம் அந்த வாகனங்களுடன் மோதியுள்ளது. சிலாபம் வட்டக்கள்ளி என்ற இடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுடனும் அவரது வாகனம் மோதியுள்ளது. இதனால் மூவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தையடுத்து வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10…

  22. வாக்காளர் அட்டைகளை கிழித்துவீசிய வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்த சம்பவமொன்று புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தளம், ஆனமடுவ பால்கம மற்றும் கவவேலந்த ஆகிய இரண்டு கிராமங்களைச்சேர்ந்தவர்களே தங்களுடைய வாக்காளர் அட்டைகளை கிழித்தெறிந்து வாக்களிப்பை புறக்கணித்தனர். இந்த இரு கிராமங்களையும் சேர்ந்தவர்களுக்கு பாலகம சனசமூக நிலையத்திலேயே கடந்த பலவருடங்களாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இம்முறை அந்த வாக்குச்சாவடி கிராமங்களிலிருந்து இரண்டு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள ஆனமடுவ சனசமூக நிலையத்தில் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அந்த கிராமங்களின் மக்கள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளனர். அந்த கிராமங்களைச்சேர்ந்த சுமார் 600 வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை இன்று…

  23. வட, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு மொத்தமாக 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று மூன்று மாகாணங்களிலும் உள்ள 10 மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது. 10 மாவட்டங்களிலும் அமைக்கபட்டுள்ள 3ஆயிரத்து 712 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் மூன்று மாகாண சபைகளுக்கும் 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 43 இலட்சத்து 58 ஆயிரத்து 261 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 3ஆயிரத்து 785 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். குறிப்பாக வட மாகாணசபைக்கு 36 உறுப்பினர்களை தெரிவு…

  24. இலங்கையில் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் நடந்துமுடிந்துள்ள மாகாணசபைத் தேர்தல்கள் நீதியாகவும் நியாயமாகவும் நடக்கவில்லை என்று கஃபே என்ற சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கீர்த்தி தென்னக்கோன் குறிப்பாக, 5 மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் இராணுவத்தினரும் இனந்தெரியாத குழுவினரும் மக்களை அச்சுறுத்தியுள்ளதுடன் தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுள்ளதாக கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பகுதியில் இரண்டு வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்ட இவ்வாறான 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கஃபே அமைப்பின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.