Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - எதிர்க்கட்சி கைச்சாத்து ! By SRI January 7, 2026 கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இன்று (07) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து அவர்கள் இப்பிரேரணையில் கையெழுத்திட்டனர். தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களில் சிறுவர்களின் மனநிலைக்குப் பொருத்தமற்ற விடயங்கள் காணப்படுவதாகவும், பாட விடயங்களில் பல பிழைகள் இருப்பதாகவும், இது குறித்து முறையாக நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காகவும் கல்வி அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர…

  2. இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) இரவு நாட்டை வந்தடைந்த அவர், இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்புப் பிரதி அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பல சிரேஷ்ட இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்புகளின் போது பயிற்சி ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது. மேலும் தனது விஜயத்தின் போது, இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதோடு, புத்தல இராணுவ யுத்தக் …

  3. எம்.பி. அர்ச்சுனாவுக்கு நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவு! யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தொடர்பில் பொது வெளியில் அவதூறு வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளரின் அனுமதியின்றி அவரது அலுவலகத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனக்கு அவதூறு ஏற்படும் வகையில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டமை மற்றும் தனது கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலும் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வைத்திய சாலைப் பணிப்பாளரால் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது வழக்காளி சார்பில் சட்டத்தரணி கல…

  4. நான்கு ஆண்டு சேவைக்கு பின்னர் இலங்கையை விட்டு வெளியற தயாராகும் அமெரிக்க தூதர் ஜூலி சுங்! அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரியாக சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றியதை முடித்துக்கொண்டு, எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி தூதர் ஜூலி சுங் (Julie Chung ) இலங்கையை விட்டு வெளியேறுவார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. தூதர் ஜூலி சுங் 2022 பெப்ரவரியில் கொழும்பில் தனது பதவிக் காலத்தைத் தொடங்கினார். 2023 இல் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு, 2024 இல் அமெரிக்க அமைதிப் படை தன்னார்வலர்களின் மீள் வருகை மற்றும் ஃபுல்பிரைட் திட்டத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவு உள்ளிட்ட பல மைல்கற்களால் இலங்கையில் ஜூலி சுங்கின் பதவிக்காலம் குறிக்கப…

  5. தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு. சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். https://athavannews.com/2026/1458645

  6. குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி Published By: Digital Desk 3 06 Jan, 2026 | 05:35 PM அரச வைத்தியசாலைகளில் தற்போது குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகள் காணப்பட்டாலும், அதிகரித்துவரும் சிகிச்சைக்கான கேள்விகளைப் பூர்த்தி செய்வதற்கு தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லையென அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால், சிறுநீரக நோயாளிகள் எதிர்கொள்கின்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்கான தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்காக தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முறை மூலம் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்களின் அடிப்படையி…

  7. பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு Jan 6, 2026 - 06:51 PM கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஶ்ரீகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாம்பு கடிக்கு இலக்கான இளைஞனை உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை …

  8. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு: ஜனாதிபதி Jan 6, 2026 - 07:42 PM நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட "முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் மூன்றாவது அமர்வு, மூன்று நிகாயாக்களின் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (06) முற்ப…

  9. Published By: Vishnu 06 Jan, 2026 | 04:52 AM (செ. சுபதர்ஷனி) அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்குத் தரமான மற்றும் சுவையான உணவை வழங்கும் சிறப்புத் திட்டம் இன்று திங்கட்கிழமை (6) முதல் மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. முதன்முறையாக, அரச மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளுக்கு உயர்தரமான, ஊட்டச்சத்து மிக்க மற்றும் கவர்ச்சிகரமான முறையில் உணவு வழங்கும் விசேட வேலைத்திட்டம் திங்கட்கிழமை (6) மகரகம அபேக்ஷா வைத்தியசாலையில் ஆரம்பமாகிறது. அரச மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அவர்களுக்கு உணவளிக்கும் முறை ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்…

  10. 06 Jan, 2026 | 02:30 PM வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (06) ஆமையின் இறந்த உடல்கள் கரையொதுங்கிய உள்ளன. கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள் | Virakesari.lk

  11. 06 Jan, 2026 | 03:26 PM வடகீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் பொழியத்துவங்கியுள்ளது. கடந்த வருடம் இறுதி வரையில் பெய்து வந்த மழை வீழ்ச்சி கடந்தவாரம் சற்று ஓய்ந்திருந்த இந்நிலையில் செவ்வாய்கிழமை (06) அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதை அவானிக்க முடிகின்றது. இந்நிலையில் மட்டக்களப்பு நகரில் 39.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் நவகிரிப்பகுதியில் 55 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப்பகுதியில் 36 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் உன்னிச்சைப்பகுதியில் 33 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் உறுகாமம் பகுதியில் 26 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், மைலம்பாவெளி பகுதியில் 31 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் வாகரைபகுதியில் 38 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், கல்…

  12. 06 Jan, 2026 | 06:55 PM (துரைநாயகம் சஞ்சீவன்) இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னாரைச் சேர்ந்த ராஜினி கோரிக்கை விடுக்கின்றார். இது தொடர்பில் நேற்று (5) மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு இந்திய ஊடகங்களிடம் தனது நிலை தொடர்பாக தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தாங்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் போதியளவு அடிப்படை மற்றும் உணவு வசதிகள் இல்லாததால் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை தம்மை அனுப்பி வைக்காததால் மிகுந்த அவதிப்பட்டு வருவதாகவும் இந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதி உதவவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றார். இலங்கையில் நிலவிய பொரு…

  13. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் நாயன்மார்கட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 860 போதை மாத்திரைகள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை மற்றும் யாழ். பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து நேற்று திங்கட்கிழமை (5) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஓட்டமாவடி, சங்கானை, நல்லூர் மற்றும் கொய்யாத்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த 22 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், போதை மாத்திரைகள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மேலதிக சட்ட …

  14. இலங்கையில் ராமர், ஹனுமான் படங்களுடன் வைக்கப்பட்ட பேனர் ஏன் சர்ச்சை ஆனது? பட மூலாதாரம்,SMU படக்குறிப்பு,இலங்கையில் வைக்கப்பட்ட பேனரில் உள்ள புகைப்படம் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் மன்னார் தீவையும், இந்தியாவின் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள மணல் திட்டுக்களை ராமாயணத்துடன் தொடர்பு படுத்துவது குறித்து இலங்கையில் சர்ச்சை எழுந்துள்ளது. இலங்கையின் மன்னார் தீவுக்கும் இந்தியாவின் ராமேஸ்வரம் தீவுக்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் தொடர்ச்சியாக மணல் திட்டுகள் உள்ளன. இதனை இந்துக்கள் ராமர் பாலம் என அழைக்கின்றனர். வேறு சிலர் ஆதாமின் பாலம் எனவும் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், இலங்கையின் சுற்றுலாத் துறை அம…

  15. வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள் 06 Jan, 2026 | 02:30 PM வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (06) ஆமையின் இறந்த உடல்கள் கரையொதுங்கிய உள்ளன. கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235346

  16. ஐ.எம்.எப். வரையறைகளுக்குள் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி Published By: Vishnu 06 Jan, 2026 | 05:05 AM சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் வரையறைகளின்படி, தேசிய உற்பத்தியில் 13 சதவீதம் மாத்திரமே செலவிட முடியும். அதில் குறைந்தபட்சம் 4% மூலதனச் செலவாக ஒதுக்கப்பட வேண்டும். அதன்படி, 'நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிதி வரையறைகளுக்குள், தேசிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு,மக்களின் நலனுக்காக அதிகபட்ச செயல்திறனுடன் அந்த நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவது, அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜ…

  17. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம், பாதையை விடுவிக்குமாறு ஆளுனருக்கு கடிதம்! வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்து தருமாறு வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயனுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரலாற்று தொண்மைமிக்க வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழிபாட்டு செயற்பாடுகளுக்காக ஆலயம் அமைந்துள்ள பகுதியின் ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு விடுவித்து தருமாறு ஆலய அறங்காவலர் சபையினர் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஆலயத்திற…

  18. 10 மில்லியன் ரூபா மோசடி - மட்டக்களப்பை சேர்ந்த இளைஞனும் யுவதியும் கைது By Batticaloa சமூக ஊடகங்களில் ‘டயலொக் மெகா வாசனா’ என்ற போலி அதிஸ்டலாப சீட்டு மூலம் பொதுமக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) வடக்குப் பிரிவின் அதிகாரிகளால் ஆணொருவரும் பெண்ணொருவரும் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 29 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்துன்னளர். சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் https://www.battinews.com/2026/01/10_6.html

  19. மாகாணசபைத் தேர்தல் தொடர்பான நகர்வுகள் : நாடாளுமன்ற சபை அமர்வு இன்று ஆரம்பம் 06 January 2026 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று(06) நடைபெறவுள்ளது. அதன்படி, இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனையடுத்து, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கடற்றொழில் சார்ந்த விடயங்களும், கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப் பாதுகாப்பு குறித்த விடயங்களும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அத்துடன், மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கான குழுவை நியமிப்பதற்கான பிரேரணையும் ச…

  20. “500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை” இலங்கை பொலிஸ் துறையில் ஊழல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்காக எடுத்துவரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நூற்றுக்கணக்கான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் ஜெனரல் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். அதன்படி, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தவறு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிகாரிகளில் பலர் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பஹலகம பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பொலிஸ்மா அதிபர் ஜெனர…

  21. கதிர்காம ஆலயத் தங்கத்தை விற்கத் தீர்மானித்தது ஏன்? Jan 6, 2026 - 10:21 AM கதிர்காம ஆலயத்தின் பொறுப்பிலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதியை விற்பனை செய்யத் தீர்மானித்தமைக்கான காரணம் குறித்து கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க தெளிவுபடுத்தினார். மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். "சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கதிர்காம ஆலயத்திலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதி நீரில் சிக்கியது. அவ்வாறு தங்கம் நீரில் சிக்கும் போது, ஏதேனும் ஒரு காரணத்தினால் அந்த தங்கம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு கூறுவது? அதனால்தான் நான் இந்த முடிவை எடுத்தேன். இவ்வேளையில் அரசாங்கமும் பெ…

  22. சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு! வென்னப்புவ – மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானத்தை அருந்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத மதுபானம் அருந்தி இறந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் உடல்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும், ஆபத்தான நிலையில் இருந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பின்னர் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மரணத்திற்கான சரியான காரணம் மற்றும் சந்தேகிக்கப்படும் சட்டவிரோத மதுபானத்தின் மூலத்தைக் கண்டறிய மாரவில பொலிஸார் சம்பவம் குறித்து ம…

  23. வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை! வெனிசுலாவில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், பலாத்காரத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல், தலையிடாமை, சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வு காணுதல் மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியது. வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.…

  24. நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்! நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். நுண்நிதி கடன்களைப் பெற்ற சுமார் 200 பெண்கள் இப்போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் பெயர் மற்றும் லோகோவை (இலட்சினை) தவறாகப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போலியான…

  25. எரிபொருள் விலைகளில் மாற்றம் Jan 5, 2026 - 09:14 PM பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 335 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும். இதேவேளை 277 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 279 ரூபாவாகும். இதேவேளை, 318 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 323 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணெய் 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.