ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
Published By: DIGITAL DESK 7 28 MAY, 2024 | 05:16 PM தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், இறுதிப்போரில் இலங்கை அரசாங்கம் எமது மக்களை ஆயுத முனையிலும் பட்டினியாலும் இனப்படுகொலை செய்த போது கஞ்சிக்காக வரிசையில் நின்றோம் அதனை எமது தற்கால சமூகத்திற்கு நினைவு படுத்தும் முகமாக சிரட்டையில் கஞ்சி காய்ச்சி தன்னெழுர்ச்சியாக மக்கள் வழங்கியப…
-
- 0 replies
- 127 views
-
-
Published By: VISHNU 28 MAY, 2024 | 07:22 PM கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகத்தில் மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பொதியில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது. இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம், திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எவையும் பின்பற்றாமல் சுகாதார சீர் கேட்டுடன் உணவகம் இயங்கிவருவது அவதானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றையதினம் திங்கட்கிழமை (27) கடை உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான…
-
- 0 replies
- 136 views
-
-
28 MAY, 2024 | 03:22 PM ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் இரண்டு வருடங்களிற்கு ஒத்திவைக்கும் யோசனையை, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார முன்வைத்துள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர், தேவைப்பட்டால் இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தலாம் என தெரிவித்துள்ளார். இது இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொரு தருணம் என தெரிவித்துள்ள அவர், நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது, ஆனால் அதற்கு தீர்வை காண்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவற்றின் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார். சர்வதேசத்தின் நம்பிக்…
-
- 2 replies
- 239 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 28 MAY, 2024 | 02:10 PM யாழ். போதனா வைத்தியசாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த நபரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தவர், வைத்தியசாலை வளாகத்தினுள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்று, தான் ஏற்றி வந்த நபரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அதன்போது, உத்தியோகஸ்தர் ஒருவர், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை, வைத்தியசாலை வளாகத்தினுள் ஏன் அத்துமீறி நுழைந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அதன்போது, இருவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்ட போது, உத்தியோகஸ்தர் மீது வைத்தியசாலைக்குள் இருந்த அச்சியந்திரத…
-
- 6 replies
- 471 views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு! இலங்கையில் 2019ம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்திருந்ததுடன், அவரது மகன் துலோத் அந்தோனி சம்பவத்தில் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavanne…
-
- 0 replies
- 195 views
-
-
நவநாசிச பாணியில் தமிழர் குடித்தொகையை மாற்ற முயற்சி! பேராசிரியர் பத்மநாதன் குற்றச்சாட்டு! (ஆதவன்) நவநாசிச பாணியில் பல அரசதுறைகள், பலம் பொருந்தியவர்கள் 'மற்றும் செல்வாக்கு பொருந்தியவர்களுடன் இணைந்து தமிழர் குடித்தொகையை மாற்றியமைப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது என்று பேராசிரியர் பத்மநாதன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் பத்மநாதனின் 'ஒரு மறைந்துபோன நாகரிகத்தின் தரிசனம் ஆதிகால யாழ்ப்பாணம்' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழ்த் தேசியத்தின் உற்பத்திக்கு அடிநாதமாகக் காணப்படும் மொழிவழக்கும். இடையறாத நிலப்பரப்பும் கிறிஸ்துவுக்கு முதல் நூற்றாண்டிலேயே உருவாகிவிட்டது. இலங்கைத் தமிழ…
-
- 3 replies
- 312 views
-
-
மாவை- சிறீதரன் இடையே கருத்து முரண்பாடுகளாம்! (ஆதவன்) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும், மாவை சேனாதிராஜாவும் வெவ்வேறு சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலையாகியதாக அரசதலைவர் சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கில் சிறீதரன் மற்றும் மாவை சேனாதிராஜா இடையே வெவ்வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. கட்சியின் சார்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் நான் உள்ளிட்ட மூவர் ஒரே நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றோம். ஆனால், மீதமுள்ள 4 பேரும் இரு த…
-
-
- 3 replies
- 305 views
-
-
பலஸ்தீனத்தை தனிநாடாக ஏற்று அங்கீகரிப்பதாக அறிவித்திருக்கின்றது நோர்வே. கூடவே ஸ்பெய்ன் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் கூட்டாகச் சேர்ந்து இந்த அறிவிப்பை விடுத்திருக்கின்றன. மத்திய கிழக்கில் - அதிலும் குறிப்பாக காஸாவில் அமைதி திரும்ப வேண்டுமாயின், இஸ்ரேல் மற்றும் பலஸ் தீனம் என்ற ‘இரு நாட்டுக் கொள்கையே ஒரே தீர்வு' என்பதே இந்த நாடுகளின் கருத்தாக அமைந்துள்ளது. பலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டால் அதன் இராணுவக் கொள்கைகள் தொடர்பில் இந்த நாடுகள் தெளிவாகத் தெரிவிக்கவில்லையாயினும் தனி நாடு என்பதில் ஒன்றித்திருக்கின்றன. நல்லது! பலஸ்தீனத்துக்கு ஐ.நா.வில் முறையான அங்கீகாரம் ஒன்று இப்போதைக்குக் கிடைக்கச் சாத்தியமே யில்லை. ஏனெனில், அமெரிக்காவின் வீட்டோ அதி காரம் பலஸ்தீனர்களின் வேணவாக்க…
-
- 0 replies
- 377 views
-
-
புதிதாகத் தோற்றம் பெற்ற ‘சர்வ ஜன பலய` ‘சர்வ ஜன பலய`என்ற புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட நாடு – மகிழ்ச்சியான தேசம் என்ற தொனிப்பொருளில் ‘சர்வ ஜன பலய´ புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சி ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய புதிய அரசியல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. https://athavannews.com/2024/1384233
-
-
- 4 replies
- 492 views
-
-
விவாதம் தொடர்பாக அனுரவிற்கு மீண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கை! ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்மொழியப்பட்டுள்ள திகதிகளை உடனடியாக பொருளாதார குழுவிற்கு அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தேசிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார குழு விவாதத்திற்கு அழைக்கப்பட்ட போதிலும், தலைமைத்துவ விவாதத்திற்கான பிரேரணையை தமது கட்சி எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இவ்விரு விவாதங்களில் முதலில்…
-
- 0 replies
- 142 views
-
-
Published By: VISHNU 27 MAY, 2024 | 06:31 PM (எம்.மனோசித்ரா) பெருந்தோட்டந் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க முடியாவிட்டால், தோட்டங்களை ஒப்படைத்து செல்லுமாறு அரசாங்கத்தால் ஆணையிட முடியாது. அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கெதிராக தாமும் சட்ட நடவடிக்கை எடுக்க தயார் என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது. அடிப்படை சம்பளத்தில் 200 ரூபா அதிகரிப்புடன், நாட் சம்பளமாக 1380 ரூபாவை மாத்திரமே எம்மால் வழங்க முடியும். இது தொடர்பான முன்மொழிவை நாம் சமர்ப்பித்த போதிலும், அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது. இவ்வாறான முட்டாள் தனமான தீர்மானங்களால் எதிர்காலத்தில் 'சிலோன் டி' என்ற நாம் முற்றாக அழிந்து போக…
-
- 3 replies
- 236 views
- 1 follower
-
-
Published By: VISHNU 27 MAY, 2024 | 10:16 PM இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பானது விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/184648
-
- 1 reply
- 268 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 28 MAY, 2024 | 10:18 AM பிரிட்டனின் உள்துறை அமைச்சினால் இலங்கைக்கு தவறுதலாக நாடு கடத்தப்பட்ட தமிழர் இலங்கையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் தனது மீண்டும் குடும்பத்துடன் இணைவதற்கு உள்துறை அமைச்சின் திணைக்களங்களின் தாமதமே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்;டியுள்ளனர். சுதர்சன் இதயசந்திரன் என்பவர் 2019 டிசம்பர் மாதம் 24ம் திகதிஅவரது திருமணநாள் அன்று பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். போலியான ஆவணங்களை பயன்படுத்தியதையும் டெஸ்கோவில் பணியாற்றியமையையும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவர் நாடு கடத்தப்பட்டார். செவிப்புல திறன் அற்ற தனது மனைவி சுபத்திரா தனது 9 மற்றும் 8 வயது ஆ…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
27 MAY, 2024 | 04:06 PM 'போதையில் இருந்து இளம் சந்ததியை காப்பாற்றுவோம்' என்ற தொனிப்பொருளில் வவுனியா சமயபுரத்தைச் சேர்ந்த இளைஞர் வட மாகாணத்தை சுற்றி நடைபயணம் ஆரம்பித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மரத்திலிருந்து கீழே விழுந்து ஒரு வருடங்களாக படுக்கையில் இருந்த ரோஷன் என்கிற இந்த இளைஞர், தற்போது சற்றே உடல்நிலை தேறிய நிலையில் இந்த நடைபயணத்தில் இறங்கியுள்ளார். அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதன் ஊடாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களில் இருந்து எதிர்கால சந்ததியை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இவர் நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளார். வவுனியா நகரின் மத்தியில் உள்ள மணிக்கூட…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2024 | 03:27 PM மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருகன் கோவில் காட்டுப்பகுதியில் இன்று திங்கட்கிழமை (27) காலை அடையாளம் காணப்பட்ட இடத்தில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை இடம் பெற்றது. எனினும், குறித்த அகழ்வு நடவடிக்கைகளின் போது எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை. பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் நிலையில் கடற்படை அதிகாரி ஒருவர் உள்ளடங்களாக 8 பேர் கடந்த சனிக்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 27 MAY, 2024 | 03:31 PM யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரித்து உள்ளதாகவும், திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் சில மாதங்களில் 32 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. அவை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விசாரணைகளின் போது, திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை உடனேயே உதிரிபாகங்களாக பிரித்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். அதானல் மோட்டார் சைக்கிள்களை மீட்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸா…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
27 MAY, 2024 | 01:54 PM திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமத்தில் அமைந்துள்ள முள்ளிப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் இன்று (27) வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முள்ளிப் பொத்தானை சிங்கள மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதை சுட்டிக்காட்டியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/184597
-
- 0 replies
- 445 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2024 | 01:02 PM யாழில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, பெற்றோர் ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஆசிரியரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதி…
-
- 2 replies
- 499 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 27 MAY, 2024 | 01:37 PM வவுனியா மாவட்டத்தில் இதுவரை 123 தொழுநோயாளர்களும், இதில் செட்டிகுளம் பிரதேசத்தில் 69 தொழு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் வைத்திய அதிகாரி சுஜானி தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (27) இடம்பெற்ற வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, தொழுநோய் தொற்றும் முறை மற்றும் அதன் அறிகுறிகள், அதற்கான மருத்துவ உதவிகள் போன்ற விடயங்களையும் தெரிவித்திருந்தார். மேலும், இக்கருத்தரங்கில் பொது அமைப்புக்களின் பிரதிந…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2024 | 12:02 PM கடந்த சில நாட்களாக ரம்சா சதுப்பு நிலமான ஆனைவிழுந்தான் சரணாலயத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் மற்றும் மீன்கள் உயிரிழந்துள்ளன. சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமான ஆனைவிழுந்தான் சரணாலயத்தில் இக்காலப்பகுதியில் இடம்பெயர்ந்து வரும் பறவைகள் சுதந்திரமாக வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யும். இந்நிலையில், அப்பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றிலிருந்து கொட்டப்படும் இரசாயனக் கழிவுகளால் பறவைகள் மற்றும் மீன்கள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த மீன்கள் மற்றும் பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக பேராதனை சிறப்பு கால்நடை மருத்துவப் பிரிவுக்கு அனுப்…
-
- 0 replies
- 500 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 27 MAY, 2024 | 11:36 AM சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்க கோரியும் வீதி மறிக்கப்பட்டதை கண்டித்தும் முல்லைத்தீவில் தியோநகர் மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவிலிருந்து தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு கரையோர கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிரதான வீதியினையும், கடற்கரையினையும் இணைக்கும் இணைப்பு வீதியானது சில தரப்பினரால் மறித்து வேலி இடப்பட்டுள்ளது. குறித்த வீதியூடாக மீனவர்கள் மீன்பிடிக்கு செல்ல முற்பட்ட போது வீதியானது வேலி அடைக்கப்பட்டு கற்கள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளது. அதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் தியோநகர் மக்கள் ஒன்று …
-
- 1 reply
- 476 views
- 1 follower
-
-
27 MAY, 2024 | 10:05 AM இலங்கையின் மூலோபாய வளங்கள் சொத்துக்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருவதற்கான மற்றுமொரு உதாரணங்களாக இலங்கையின் காரீய சுரங்கங்களில் முதலீடு செய்வதற்கு இந்தியா, சீனா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன. ஏற்கனவே இந்த தொழில்துறையில் கனடா, அவுஸ்திரேலியா நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்தியுள்ள நிலையிலேயே இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை வெளியிட்டுள்ளன. இலங்கையில் உயர்தர காரீயம் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரஞ்சித் பிரேமசிறி இந்தியா சீனா உட்பட பல வெளிநாடுகள் இந்த து…
-
- 0 replies
- 456 views
- 1 follower
-
-
Published By: VISHNU 27 MAY, 2024 | 02:20 AM பொலன்னறுவை வெள்ளப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவின் ஹந்தபன்வில்லு ஏரியில் உயிரிழந்த ஏழு காட்டு யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர் சுற்றித் திரிந்த காட்டு யானைகள் ஓடை கால்வாயை கடக்கும் போது சேற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த யானைகளில் 8 முதல் 10 வயதுக்குட்பட்ட ஐந்து குட்டி யானைகளும், 30 முதல் 35 வயதுடைய இரண்டு காட்டு யானைகளும் என நம்பப்படுகிறது. https://www.virakesari.lk/article/184564
-
- 1 reply
- 328 views
- 1 follower
-
-
Published By: VISHNU 26 MAY, 2024 | 07:18 PM இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) அவரது உத்தியோகபூர்வ வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராஜகிரிய பகுதியிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்தோடு, ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் தனது 53 வயதில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சடலம் மீதான நீதவான் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இராஜகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 3 replies
- 728 views
- 1 follower
-
-
26 MAY, 2024 | 03:13 PM வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டு, வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் தெரிவித்தார். இன்று (26) மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், மேல் மாகாணத்தை போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கம் என்றும் அதற்காக கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk…
-
- 6 replies
- 438 views
- 1 follower
-