Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Started by akootha,

    மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை பாம்பு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். காத்தான்குடி 6ஆம் குறிச்சி அமானுல்லா வீதி, காத்தான்குடி ஜன்னத் மாவத்தை ஆகிய பகுதிகளிலேயே இப்பாம்பு மழை பெய்துள்ளது. காத்தான்குடி அமானுல்லா வீதியிலுள்ள வீட்டு வளாகமொன்றிலும் ஜன்னத் மாவத்தையிலுள்ள வீட்டு வளாகமொன்றிலுமே இப்பாம்பு மழை பெய்துள்ளது. தான் வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது மழையுடன் சேர்ந்து இரண்டு பாம்புகள் வந்து விழுந்ததாகவும் அதில் ஒரு பாம்பு தனது தோள் மீது விழுந்து ஓடியதாகவும் ஜன்னத் மாவத்தையில் வசிக்கும் பெண்ணொருவர் கூறினார். இப்பாம்புகள் எந்த இனத்தை சேர்ந்த பாம்புகளென்பது பற்றி தங்களுக்கு தெரியாதெனவும் பிரதேசவாசிக…

  2. மீள் எழுச்சி எனும் பெயரில் முருங்கன் பகுதியில் 75 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம்! [Friday, 2013-01-25 17:52:12] நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முருங்கன் பகுதியில் 75 சிங்கள குடும்பங்கள் கடந்தவாரம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.முன்னார் வவுனியா பிரதான வீதியில் குறித்த 75 குடும்பங்களும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படைவசதிகளும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.மீள் எழுச்சித்திட்டக் கிராமம் என்று பெயரில் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன் மக்கள் வங்கியின் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திலும் பெரும்பாலானவை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்க…

  3. தொழிற்சாலைகளின் இரசாயனப் புகையே வர்ண மழைகள் பொழிவதற்கு காரணம் அண்மையில் அடிக்கடி பெய்த சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிற மழை வீழ்ச்சிகளுக்குத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் இராசாயனப் பொருள்களே காரணமாகியுள்ளன என்று புதிய ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயனப் புகைகள் நுண்ணுயிர்களுடன் கலந்து வாயுமண்டலத்தைச் சென்றடைகின்றன. இதனால் இந்த விதமான நிறங்களில் மழை பெய்கிறதேயன்றி அதற்கும் எரிநட்சத்திர மழைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் கோள்கள் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானி அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார். சாதாரணமாகத் தினமும் ஒன்பதுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் எரிநட்சத்திரம் அல்லது விண்கல் மழை வீழ்ச…

  4. தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான யுத்தம் சரியானதே - இராணுவம்:- 24 ஜனவரி 2013 தெற்கைப் போன்றே வடக்கிலும் இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர் –கோதபாய தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான யுத்தம் சரியானதே என இராணுவம் அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் இராணுவம் நடத்திய விசாரணை அறிக்iகையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் இராணுவ உயர் அதிகாரிகளினால் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டது. சர்வதேச சமூகத்தின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் இராணுவத்தினர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மேற்க…

  5. சிறிலங்காவை அநீதியாக நடத்துகிறது அமெரிக்கா – கோத்தா மீண்டும் பாய்ச்சல் [ வெள்ளிக்கிழமை, 25 சனவரி 2013, 03:03 GMT ] [ கார்வண்ணன் ] போருக்குப் பிந்திய சிறிலங்காவுடனான அமெரிக்காவின் அணுகுமுறை தவறானது என்றும், இருநாடுகளுக்கும் இடையில் நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா தொடர்பான கொள்கைகளை அமெரிக்கா மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறிலங்கா இராணுவ அதிகாரிகளை அமெரிக்கா அநீதியான முறையில் நடத்துகிறது. அவர்கள் செய்வது தவறு என்று அவர்களுக்கு நான் கூற விரும்புகிறேன். ஒவ்வொருமுறையும் அவர்கள்…

  6. முஸ்லிம்கள் மத்தியில் மார்க்க ரீதியாக முரண்பாடுகளைக் கொண்ட பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன: ஜனாதிபதி முஸ்லிம்கள் மத்தியில் மார்க்க ரீதியாக முரண்பாடுகளைக் கொண்ட பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. அவற்றுக்கிடையில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களைத் திரட்டி வருகின்றனர். அவற்றைக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் இரகசிய பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் மிகவும் அவதானத்துடன் இருக்கிறார்கள். இந்த நடவடிக்கைகள் தொடருவதற்கு …

  7. சித்தார்த்த குமாரரின் பிறப்பு முதல் பரிநிர்வாணம் அடைதல் வரையான விசேட சம்பவங்களை உள்ளடக்கிய 'ஸ்ரீ சித்தார்த்த கௌதம' திரைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. திரைப்படத்தின் முதற்காட்சியைப் பார்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டார். அத்துடன், அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்த யாபா அபேவர்தன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு) http://tamil.dailymirror.lk/--main/57712-2013-01-25-08-05-46.html

  8. 'இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தப்பி வந்த மக்கள் இந்திய மருத்துவமனைகளுக்கும், சர்வதேச செஞ்சிலுவை சங்க மருத்துவமனைகளுக்கும் சென்று அவற்றின் மூலமாகவே அரசாங்கம் நடத்திய முகாம்களுக்கு வந்து சேர்ந்தார்கள் என பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார். இவ்வாறு அரசாங்க முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அனைத்து மக்களும் தங்கள் அமைப்புகள் மூலமாகவே போய்ச் சேர்ந்தார்கள் என்பதை இந்தியாவாலும் ஐ.சி.ஆர்.சி.யாலும் உறுதி செய்ய முடியுமா? இதுபற்றி மக்கள் கண்காணிப்பு குழுவின் சார்பாக நான் எழுத்துமூலம் இவர்களிடம் பதில் கோரியுள்ளேன்' என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழுவின் அழைப்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார். பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, காணாமல் போனோர் தொடர்பில…

  9. இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு முதல் இதுவரையில் இராணுவச் சேவையிலிருந்து தப்பிச் சென்றவர்கள் பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். எனவே, இந்தத் தகவல்களை வெளியிட முடியாது.அத்துடன் இவ்வாறு தப்பி ஓடியவர்களை கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்களையும் வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=155181792125…

  10. 'அரசியல் தீர்வானது 15 இலட்சம் மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் உள்வாங்கியதாக இருத்தல் வேண்டும் என்பதுடன் இலங்கையில் இருக்கின்ற இந்திய வம்சாவளியினருக்கு இந்தியா உதவவேண்டும்' என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை தேசிய இனப்பிரச்சினையை பொருத்தவரையில் அனைத்து சிறுபான்மையினரும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா ஒரு முக்கிய பங்கை ஆற்றவேண்டுமென எதிர்ப்பார்க்கின்றனர். என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் 64 ஆவது குடியரசு தினத்தை நாளை கொண்டாடுகின்ற இந்திய மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் …

  11. சென்னையில் நடைபெறும் தேமுதிக பொதுக்குழுவில் சிறீலங்கா படைகளுக்கு இந்தியாவில் பயிற்சி, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விஜயகாந்த் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்கை திரும்ப பெறுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவல்துறையை ஆளும்கட்சி கைப்பாவையாக பயன்படுத்துவதை கைவிட வலியுறுத்தப்பட்டுள்ளது. கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.3,500 ஆக நிர்ணயிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசின் நடவடிக்கை இல்லை எனவும் சிறீலங்கா படைகளுக்கு இந்தியாவில் பயிற்சி தருவதை கண்டித்தும் தீர்மா…

  12. வடக்கில் செயற்பட தொடங்கியுள்ள முன்னாள் போரளிகளை கண்காணிக்கும் முகவர் மையம்! ஜன 25, 2013 புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான விடயங்களை கண்காணிக்கும் இணைப்பு காரியாலயம் யாழில் திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாவட்டத்திற்கான இந்த புதிய அலுவலகம் திறந்து மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வைபவ ரீதியாக திறந்து வைத்தார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தினை அடுத்து கைது செய்யப்பட்ட சரணடைந்த முன்னாள் பேராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.அவ்வாறான இளைஞர் யுவதிகளின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ். மாவட்டத்தில் புனர்வாழ்வு அளிக்கப…

  13. த.தே.மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன்வீட்டில் படையினரால் விசாரணை! ஜன 25, 2013 த.தே. மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வீட்டிற்கு சென்ற சிறீலங்காப்படையினர் அவர்குறித்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். யாழ்ப்பாணம் கந்தர் மடத்தில் உள்ள கஜேந்திரன் அவர்களின் வீட்ற்கு படைசீருடையில் சென்ற படையினர் விசாரணைகளை மேற்கொண்டு சென்றுள்ளார்கள். ஜேர்மன்-பேர்லின் நகரில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு கலந்துகொள்வதற்காக த.தே. மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று பயணமாக வுள்ள நிலையில் நேற்று படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள் இதற்காக அவர்கள் நேற்று கொழும்பு சென்றுள்ள நிலையில் அவரது வீட்ற்கு சென்ற…

  14. அம்பாறையில் மீண்டும் பூமியதிர்ச்சி வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2013 10:36 அம்பாறை, வடினாகல பிரதேசத்தில் இன்று மீண்டும் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இதற்கு முன்னரும் இவ்வாறு பூமியதிர்ச்சி ஏற்பட்டபோதிலும் அது இயற்கையாக ஏற்பட்ட பூமியதிர்ச்சி இல்லை என்று புவியியல் ஆராய்ச்சியாளர் தெரிவித்தனர். பூமியதிர்வை கண்டறிவதற்கான சாதனங்களை பொருத்திவிட்டு சென்ற போதிலும் பூமி அதிர்வதற்கான காரணத்தை புவியியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியமுடியவில்லை. அதுமட்டுமன்றி அம்பாறையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். அம்பாறை- கண்டி வீதியில் 69 ஆவது மைல்கல்லுக்கு அருகிலுள்ள தற்காலிக பாலம் உடைந்து வீழ்ந்துள்ளதால் அந…

  15. கொழும்பை அதிர வைக்கும் பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் துஷ்பிரயோம்! January 25, 2013, 6:00 am|views: 153 கொழும்பிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்விகற்கும் இரு மாணவிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பெண்கள் பாடசாலை மாணவ, ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவையாவன, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த பின்னர், குறித்த மாணவிகளை வத்தளை பகுதிக்கு அழைத்துச் சென்று இந்த குற்றச்செயலை புரிந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்…

  16. குருநாகல், குளியாப்பிட்டி நகரில் பதற்றமான சூழ்நிலையொன்று எற்பட்டுள்ளது என அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். பௌத்த பிக்குகள் தலைமையிலான 150 பேர் கொண்ட குழுவினரின் ஆர்ப்பாட்டத்தினாலேயே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். அல்லாஹ்வின் பெயர் ஏந்திய சுலோகங்களை பன்றி உருவத்தில் எழுதி இந்த ஆர்ப்பாட்டத்தில் கொண்டு செல்கின்றமையினாலேயே இந்த பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-4…

  17. -அழகன் கனகராஜ் ஊடகத்துறை அமைச்சின் கேட்டோர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி நேரத்தில் ஊடகவியலாளர்களுக்கும் அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெலவிற்கும் இடையில் சுவாரஷ்யமான சம்பாஷனைகள் இடம்பெற்றன. கேள்வி நேரத்தின் போது, 13 ஆவதுடன் போகும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிடம் அதிகார பகிர்வை அமுல்படுத்துவது தொடர்பில் உறுதியளித்திருக்கின்றார். என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜத்த ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளாரே என்று வினவினர். ஆம், ஆம் 13 ஆவது போகும் என்று அமைச்சர் கெஹலிய பதிலளிக்கையில் இடைமறித்த ஊடகவியலாளர்கள் 13 போனால் (அரசியலமைப்பின் 13 ஆவது தி…

  18. -அழகன் கனகராஜ் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, பொதுநலவாய மாநாடு தொடர்பிலான கரிசனை தொடரிபில் அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாக கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை விவகாரத்தை அடுத்து பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் …

  19. இலங்கைக்கு இந்தியா சகல துறைகளிலும் ஒத்துழைப்பு நல்கும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்திய - இலங்கை கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்தில் கொள்வதற்காக சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57678-2013-01-24-15-22-03.html

  20. நாட்டை அபிவிருத்தியில் இட்டுச்செல்லும் பணியில் அமைச்சர் பஷில் கடவுள் போன்று செயற்பட்டு வருவதாக ஆளும்ம் கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் சபையில் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் அக்கட்சிக்கு அபிவிருத்தி என்றால் என்னவென்ற தெளிவு இல்லை. கட்சிக்குள்ளேயே பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இவ்வாறான கட்சியினர் தான் இன்று அனைத்தும் ராஜபக்ஷ மயம் என்று விமர்சிக்கின்றனர். இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதேபோன்று இந்நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லும் பணியில் அமைச்சர் பஷில் கடவுளைப் போன்று செயற்பட்டு வருக்கின்றார் என்றார். http://www.seithy.com/breifNews.php?newsID=74494&category=TamilNews&l…

  21. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, காணாமல் போய் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் நாடாளுமன்றத்திற்கு முன்னாள் இன்று வியாழக்கிழமை சத்தியாக்கிரக போராட்டமொன்று நடத்தப்பட்டது. பீரகீத் எக்னெலிகொடவின் மனைவி மற்றும் மகன் தலைமையிலேயே இந்த போரட்டம் இடம்பெற்றது. மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசாராக நியமிக்கப்பட்ட பின்னர் எக்னெலிகொடவை காணும் இறுதி நம்பிக்கையை தாம் இழந்துவிட்டதாக அவர்கள் இதன்போது தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/--main/57674-2013-01-24-14-13-36.html

    • 0 replies
    • 476 views
  22. பொதுநலவாய மாநாடு கொழும்பில் நடைபெறாது போனால் நாமும் சில முடிவுகளை எடுப்போம்! - பசில் ராஜபக்ச எச்சரிக்கை!! பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு, திட்டமிட்டபடி இலங்கையில் நடைபெறாவிட்டால் தமது அரசு 'சில முடிவுகளை' எடுக்கும் என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து, பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகிக்கொள்ளும் முடிவை சிறிலங்கா எடுக்கவுள்ளதையே அமைச்சரின் கருத்து வெளிப்படுத்துவதாக கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் இதர சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இம்முறை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டைத் திட்டமிட்டபடி கொழும்பில் நடத்தாமல் வேறு நாடொன்றுக்குக் கொண்டுசெல்வது குறித்து பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலகம் ஆலோசனைகளை உள…

  23. மஹிந்த அரசுக்கு 2015இல் முற்றுப்புள்ளி வைக்க ஒபாமா நிர்வாகம் சதி! - அமைச்சர் விமல் வீரவன்ச கூக்குரல்!! 'ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்து, 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை போட்டியிட முடியாதவாறு தடுத்து நிறுத்தி, இந்த அரசை இல்லாமல் செய்வதற்கே ஒபாமாவின் பிரதிநிதிகள் திட்டம் தீட்டி வருகின்றனர்.' இவ்வாறு தெரிவித்தார் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ. அமைச்சர் விமல் வீரவன்ஸ நேற்றுப் புதன்கிழமை கல்கிஸையில் வீடமைப்புத் திட்டமொன்றைத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு: பராக் ஒபாமாவின் 3 ப…

    • 3 replies
    • 661 views
  24. முஸ்லிம்கள் பொதுபல சேனாவுடன் பேசவேண்டும்' - இலங்கை ஜனாதிபதி கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 ஜனவரி, 2013 - 18:28 ஜிஎம்டி இலங்கையில் சில பௌத்த கடும்போக்கு அமைப்புக்களால், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் இலங்கை ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளதாக அவரைச் சந்தித்த முஸ்லிம் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். ''பொதுபல சேனா'' என்னும் அமைப்பினால் இவ்வாறாக இஸ்லாமிய மார்க்கத்துக்கும், முஸ்லிம்களின் வணிகங்கள் உட்பட நலன்களுக்கும் எதிராக தவறான பிரச்சாரங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் இலங்கை ஜனாதிபதியிடம் புகார் செய்துள்ளனர். அவை குறித்த தனது கருத்தை தெரிவித்த ஜனாத…

  25. பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடக்குமா?: போர்க்கொடி தூக்கியுள்ளது கனடா இலங்கையில் பொது நலவாய மாநாடு நடைபெறாத பட்சத்தில் அதனை நடத்தத் தயாராக இருப்பதாக ஏற்கனவே மொரிஷியஸ் பொதுநலவாய தலைமைச் செயலகத்துக்கு அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் கனேடிய அரசால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொது நலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை கொழும்பில் நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்காக பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழு (Commonwealth minis terial action group) அவசர கூட்டமொன்றை நடத்த முடிவுசெய்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு இந்தவருடம் நவம்பர் 15 முதல் 17ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறுமென முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், கனட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.