ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
சிறீலங்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருபக்க உறவுகளின் பிரதிபலனாக முழு திட்டங்களினதும் பரிசீலனைக்கான கூட்டு ஆணைக்குழுக் கூட்டம் புதுடில்லியில் எதிர்வரும் 21 22ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பொருளாதாரம் முதலீட்டு உறவுகள் உள்ளிட்ட விடயங்களில் இந்திய - சிறீலங்கா கூட்டு ஆணைக்குழு முக்கிய கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக இந்த கூட்டு ஆணைக்குழுவின் கூட்டம் கடந்த 2010ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளினதும் அமைச்சர்கள் ஒன்றுகூடி வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்பான பிரச்சிகைள் சிறீலுங்காவில் இந்திய முதலீட்டுடனான செயற்திட்டங்கள் என்பவைபற்றி பேசினர். சிறீலங்கா இந்திய கடற்றொழிலாளர்களின…
-
- 0 replies
- 263 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தை முழுமையாக சிங்கள மயமாக்கும் முயற்சியினை சிறிலங்கா அரசாங்கம் இனஅழிப்பு இராணுவத்தின் ஊடாக மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாக முல்லைத்தீவு நாயாற்றுப் பகுதியில் உள்ள தமிழ் கடற்றொழிலாளர்களை விரட்டியடித்துவிட்டு அங்கு சிங்கள கடற்றொழிலாளர்களை தமது பாதுகாப்புடன் சிறிலங்கா இராணுவம் தங்க வைத்துள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் படைமுகாங்களுக்கு அருகில் கூடாரம் போட்டுத் தங்கியுள்ள சிங்கள கடற்றொழிலாளர்கள் தொழில் செய்யும் கடல் பரப்பில் முல்லைத்தீவைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கடலுக்குள்ளேயே இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடருமானால் முல்லைத்தீவில் உள்ள கரையோரங்கள் முழுமையாக சிங்கள மயமாக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த …
-
- 0 replies
- 242 views
-
-
(ஸரீபா) மட்டக்களப்பு, தொப்பிகல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை வாழைச்சேனை பொலிஸார் இன்று வியாழக்கிழமை மீட்டுள்ளனர். வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் லாள் செனவிரத்னவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரத்னாயக்கா தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் தொப்பிகல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை மீட்டுள்ளனர். ஆர்.பி.ஜி சாஜர் 20, 60 ரக மோட்டார் குண்டு 4, ஆர்.பி.ஜி குண்டு 4, 60 ரக மோட்டார் குண்டு சாஜர் 6 ஆகியவற்றை உறப்பையில் கட்டி புதைக்கப்பட்ட நிலையில் இருந்து மீட்டுள்ளனர். இந்த ஆயுதங்கள் யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதுடன் இது …
-
- 2 replies
- 325 views
-
-
-அழகன் கனகராஜ் நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமே தவிர அரசியலமைப்பு மாற்றப்படாது. அவ்வாறான திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டால் அது 19ஆவது திருத்தமாக அமையும் என்று அரசாங்கம் இன்று அறிவித்தது. ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல, அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதன்போது ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ர…
-
- 2 replies
- 365 views
-
-
பூந்தமல்லி அருகே உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாம்களை மூடக்கோரி நடைபயணம் மேற்கொள்ள இருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை அகதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை மூடக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (17) பூந்தமல்லியில் இருந்து செங்கல்பட்டுக்கு நடைபயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்து இருந்தனர். இதற்கு பொலிஸார் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் குமாரதேவன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, சிறப்பு முகாம்களை மூடக்கோரி கோஷமிட்டனர். தகவல் அறிந்ததும் துணை கமி…
-
- 1 reply
- 299 views
-
-
-அழகன் கனகராஜ் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையத்தின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் தனக்கு தெரியாது. என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். கேள்வி நேரத்தின் போது, தேசிய பாதுகாப்புக்கான ஊடகமத்திய நிலையத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் ஒன்று மேற்;கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையா? என ஊடகவியலாளர் வினவினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, தேசிய பாதுகாப்புக்கான ஊடகமத்திய நிலையத்தின் இணையத்தளம் முடக்…
-
- 2 replies
- 465 views
-
-
By V.Priyatharshan ரயில்வே ஊழியர்கள் சம்பளப் பிரச்சினை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 56 மணிநேர வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இதேவேளை, புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு, சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிடில் தாம் 22ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவிடம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் தெரிவிக்கையில், மேற்படி வேலை நிறுத்தப்போராட்டம் எதிர்வரும் 22ஆம் திகதி நள்ளிரவு ஆரம்பமாகி 24 ஆம் திகதி காலை வரை தொடரும் என அவர் தெரிவித்தார். இதேவேளை, ரயில்வே ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை நீண்ட காலத்திற்கு அதிகரிக்கப்படாமல் உள்ளமை க…
-
- 0 replies
- 186 views
-
-
மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்குக் கடத்திவரப்பட்ட சிகரட் மற்றும் அதிவேக மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை கைப்பற்றியுள்ளனர். இவற்றின் பெறுமதி 13 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. (படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்) http://www.virakesari.lk/article/local.php?vid=2593
-
- 0 replies
- 201 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கு முன்னுரிமை - புதிய பிரதம நீதியரசர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் முன்னுரிமையளித்து செயற்படப்போவதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் நேற்று உறுதியாகத் தெரிவித்தார். புதிய பிரதம நீதியரசராகப் பதவியேற்ற கையோடு "உதயனி'டம் கருத்து வெளியிட்ட மொஹான் பீரிஸ், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பாராமுகமாக இருந்துவிட முடியாதென்றும் குறிப்பிட்டார். "நாடு சமாதானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகாண வேண்டும். அதில் தமிழ் அரசியல் கைதிகளின் விடயமும் முக்கியமானது. அவர்களின் வழக்குகள் துரித விசாரணைக்கு உட்படுத்தப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து நான் முன்னுரிமையளித்து செயற்படத் தீர்மானித்துள்ளேன்'' என்றா…
-
- 2 replies
- 523 views
-
-
சந்தேக நபரை 48 மணிநேரம் தடுவைக்கும் வகையில் புதிய சட்டம் வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013 10:40 0 COMMENTS சந்தேக நபர் ஒருவரை நீதிமன்றத்தின் உத்தரவின்றி பொலிஸார் 48 மணிநேரம் தடுத்துவைக்கும் வகையிலான புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) இரண்டாம் மதிப்பீடே நாடாளுமன்றத்திற்கு 22 ஆம் திகதி கொண்டு வரப்படவிருக்கின்றது. இந்த சட்டமூலம் 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57071--48-.html
-
- 2 replies
- 282 views
-
-
வட-கிழக்கில் மாணவர்களின் இடைவிலகல் அதிகரிப்பு: புள்ளிவிபரத்தகவல் ஞாயிற்றுக்கிழமை, 06 ஜனவரி 2013 22:31 வடக்கில் யுத்தத்தின் பின்னர் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியிருப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்திருக்கின்றது. இதில் அதிகூடிய எண்ணிக்கையாக 38 ஆயிரத்து 321 மாணவர்கள் வடமாகாணப் பாடசாலைகளில் இருந்து இடையில் விலகியிருப்பதாகவும், கிழக்கு மாகாணத்தில், 24 ஆயிரத்து 614 மாணவர்கள் இடையில் விலகியிருப்பதாகவும் கல்வி அமைச்சு கூறியிருக்கின்றது. இது தொடர்பில் பிபிசி செய்திச்சேவை …
-
- 1 reply
- 2.1k views
-
-
தலைமை நீதியரசர் பதவிநீக்க விவகாரத்தினால், சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் உதவிகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று வொசிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட், சிறிலங்காவுக்கான உதவிகளில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து தற்போது உடனடியாக கூறமுடியாது என்று தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் புதிய தலைமைநீதியரசர் பதவியேற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் உதவிகளில் அது தாக்கத்தை எற்படுத்துமா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த விக்ரோரியா நுலன்ட்,சிறிலங்காவுக்கு கடந்த ஆண்டில், இருதரப்பு உதவித்திட்டத்தின் சமாதானம், மனிதஉரிமைகள், பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற…
-
- 0 replies
- 257 views
-
-
இலங்கையின் கல்வி, தொழிநுட்ப, கட்டுமான துறைகளின் அபிவிருத்திக்கு உதவி செய்ய சிங்கப்பூர் முன்வந்துள்ளது. இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து சிங்கப்பூரின் டெமாசெக் அறக்கட்டளை மற்றும் குடியரசு பாலிடெக்னி நிறுவனம் இத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளது. இலங்கையில் தேசிய முன்னுரிமை என கருதப்படும் மூன்று துறைகளில் அபிவிருத்தியை ஏற்படுத்தவென பயிற்சித் திட்டங்களை குறித்த நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது. 60 தொழில் பயிற்சியாளர்களுக்கு இரண்டு வருட பயிற்சி நெறியை சிங்கப்பூர் நிறுவனம் வழங்கவுள்ளது. அதன்பின்னர் 120 பேருக்கு மேலும் பயிற்சி அளிக்கவுள்ளது. இத்திட்டத்திற்கென டெமாசெக் அறக்கட்டளை 433,000 சிங்கப்பூர் டொலர்களை செலவிட தீர்மானித்துள்ளது. http://www.eeladh…
-
- 0 replies
- 382 views
-
-
ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது! ஜனாதிபதி அவர்களே புதிய பிரதம நீதியரசரை நியமித்துள்ளார். ஜனாதிபதியின் நடவடிக்கைக் கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவோ சவால்விடவோ முடியாது என இலங்கை சுதந்திர சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டி. பி. மெண்டிஸ் கூறினார். பிரதம நீதியரசரின் நியமனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், பிரதம நீதியரசர், உச்சநீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆகியோரை ஜனாதிபதியே நியமிக்கிறார். ஆனால் தான் நினைத்தவாறு ஜனாதிபதியினால் இவர்களை அகற்ற முடியாது. அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரப்படியே …
-
- 0 replies
- 353 views
-
-
இலங்கை அளித்த பதில் திருப்தியாக இல்லை - அமெரிக்கா ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை மூலம் நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று இலங்கை அளிக்கும் விளக்கம் தமக்கு திருப்தியளிக்கவில்லை என ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்க செயலக ஊடகப் பேச்சாளர் விக்டோரியா நூலன் இவ்வாறு குறிப்பிட்டார். குற்றப்பிரேரணை விடயத்தால் இலங்கைக்கான வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புக்கள் பாதிக்கப்படும் என ஏற்கனவே 14ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நூலன் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில் 2012ல் அமெரிக்கா இலங்கைக்கு 27 மில்லியன் டொலர்களை உதவியளித்ததாகவும் அதில் 13.3 மி…
-
- 0 replies
- 382 views
-
-
உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் ஈழசொந்தங்களை விடுதலை செய்யக , முகாம்களை இழுத்து மூடுக: - மே-17 இயக்கம் ஆர்ப்பாட்டம் [saturday, 2013-01-12 11:34:33] செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் இருபது நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் ஈழசொந்தங்களை விடுதலை செய்யக்கோரியும். செங்கல்பட்டு மற்றும் பூந்த்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரும் ஆர்ப்பாட்டமானது மே-17 இயக்கத்தால் நேற்று 11.01.2013 அன்று செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒருங்கிணைக்கபட்டது. இந்த ஆர்பாட்டத்தில் மே-17 இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்காந்தி ,திராவிடர் விடுதலை கழகத்தின் காஞ்சி மாவட்ட தலைவர் தோழர் டேவிட் பெரியார்,திராவிடர் விடுதலை கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தோ…
-
- 1 reply
- 426 views
-
-
மங்கள சமரவீர பிரித்தானிய தமிழர் பேரவையுடன் பேச்சுவார்த்தை! [Thursday, 2013-01-17 11:00:28] ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, பிரித்தானிய தமிழர் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. மங்கள சமரவீரவை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட ரீதியான சந்திப்பே நடைபெற்றதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். எமது சமூகத்திற்கு வெளியேயான சமூகத்தினருடன் உறவுகளைப் பேணாமல் எமது அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த சந்திப்பு உத்தியோகப் பற்றற்…
-
- 1 reply
- 541 views
-
-
அமைச்சர் மேர்வினை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013 10:59 0 COMMENTS மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு மஹர நீதிமன்றத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித்த மடவல படுகொலைச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள். மஹர நீதிமன்றத்தில் இன்றுக்காலை ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போதே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்' 'பிரதான சந்தேக நபர் சுதந்திரமாக இருக்கின்றார்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். இந்த படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்த…
-
- 0 replies
- 408 views
-
-
யாழ். தேவி புகையிரதச் சேவை செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தை சென்றடையும்: மகாலிங்கம் By General 2013-01-17 10:08:51 யாழ். தேவி புகையிரதச் சேவையானது இவ்வருடம் செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணம் வரை சென்றடையும் என இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதை அமைக்கும் பணிகளை இந்தியாவின் “இர்க்கோன்” என்ற நிறுவனமே தற்போது மேற்கொண்டு வருகின்றது. எனவே இவ்வருடம் யாழ்.தேவியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியும் என்றார். யாழ்ப்பாணத்திலுள்ள துணைத்தூதரகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=2585
-
- 0 replies
- 363 views
-
-
நீதித்துறை தொடர்பான தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்காக இருக்கின்ற ஒரேயொரு வழி இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதேயாகும். அதற்காக உங்கள் தலைமையை வழங்குகள். என்று சட்டத்தரணிகளிடம் எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சித்தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்தை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து வந்த உள்நாட்டு பத்திரிக்கைகளும் நீதித்துறை விவகாரத்திற்கு பொறுப்பு கூறவேண்டும். நீதித்துறை நெருக்கடிபற்றி ஒரு பத்திரிகையேனும் ஆசிரியர் தலையங்கத்தை …
-
- 4 replies
- 902 views
-
-
இலங்கையில் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்டமை கவலையளிப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் அமைப்பு கரிசனை காட்டியுள்ளதாகவும் அதன் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இலங்கை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலான நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை பொதுநலவாய அமைப்பு வலியுறுத்தி வந்தது. அதுமட்டுமன்றி குற்றப்பிரேரணை விவகாரம் அரசியலமைப்பையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. பிரதம நீதியரசருக்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு முன்னர் நீதித்துறை மற்றும் சட்டவாக்கம் ஆகியவற்றுக்கு இடையிலான பிரதிபலிப்புக்களை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இலங்கை அரச…
-
- 4 replies
- 659 views
-
-
மேர்வினுக்கு ஆலோசனை வழங்க குழு! — பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தனக்கு அரசியல் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக ஆலோசனை வழங்கும் பொருட்டு ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளதாக அவ் அமைச்சு தெரிவித்துள்ளது.மேற்படி குழுவின் தலைவராக பாலி பல்கலைக்கழகத்தின் மொழிகள் பிரிவின் தலைவரான பேராசிரியர் உதுராவல தம்மரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரைத்தவிர மேலும் பல பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களனி பிரதேசத்தில் மேர்வின் சில்வாவின் காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி, மற்றும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ச்சி செய்து அறிக்கை வழங்குவதே இக்குழுவின் பிரதான நோக்கமென…
-
- 0 replies
- 359 views
-
-
கிளிநொச்சி, உருத்திரபுரம் – கூழாவடி பகுதியில் அமைந்திருக்கும் மதுபானச்சாலையை அகற்றக் கோரி இன்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. உருத்திரபுரம் கூடாவடிப் பகுதியில் உள்ள விளையாட்டு கழக உறுப்பினர்களும் அயற் பிரதேச மக்களும் இணைந்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விளையாட்டுக் கழகத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் மதுபானச்சாலையை அகற்றுமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை தாம் நடத்துவதாக விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக கரைச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, "1972 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 40 வருடங்களாக குறிப்பிட்ட இடத்தில் தமது கிளை நிலையம் இயங்கி வருவத…
-
- 1 reply
- 274 views
-
-
எதிர்வரும் 26ஆம், 27ஆம் திகதிகளில் நடைபெறுவதாக உத்தேசிக்கப்பட்ட டெலோ கட்சியினரின் மாநாடு பிற்போடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இம்மாத இறுதியில் வெளிநாட்டு விஜயமொன்றை கட்சி முக்கியஸ்தர்கள் மேற்கொள்ளவிருப்பதால் உத்தேசிக்கப்பட்ட மாநாடு எதிர்வரும் பெப்ரவரி இறுதிக்குள் நடைபெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/57053-2013-01-16-16-55-29.html
-
- 0 replies
- 263 views
-
-
'சியாத் இயக்கம்' என்ற பெயரில் ஊடகவியலாளர்கள் 3 பேருக்கு கொலை மிரட்டல் ஜன 15, 2013 ம்னார் நீதிமன்றம் மீது கடந்த வருடம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது சம்பவ இடத்தில் நின்று செய்திகளை சேகரித்த மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவருக்கு எதிராக 'சியாத் இயக்கம்'' என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கொலை மிரட்டல் தொடர்பான கடிதம் இன்று செவ்வாய்க்கிழமை (15-01-2013) குறித்த 3 ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மிரட்டல் கடிதமானது மன்னார் மாவட்டத்தின் தொலைக்காட்சி செய்தியாளர்களான ஏ.ரீ.மார்க், என்.ஜே.பெலிஸ்டஸ் பச்சக் மற்றும் பத்திரிக்கை செய்தியாளரான எஸ்.ஆர்.லெம்பேட் ஆகியோருக்கே குறித்த …
-
- 7 replies
- 1k views
-