ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143429 topics in this forum
-
இன்னும் 5 ஆண்டுகளில் தனது முதலாவது விண்வெளி வீரனை இலங்கை அனுப்பும் என்று விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான (செற்றலைட்) �சுப்றீம்செற்-1 யை �இ இலங்கையானது சீனாவுடன் இணைந்து நவம்பர் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.43 மணிக்கு விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவியது. சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோளானது. தனது ஆரம்ப வயதிலேயே இருக்கின்றது. இந்நிலையில் சீனாவுடன் இணைந்து இன்னும் 7 ஆண்டுகளில் முதலாவது விண்வெளி வீரனை இலங்கை அனுப்பிவைக்கும். அத்துடன் இன்னும் இரண்டு செயற்கைகோள்கள் 2015 ஆம் ஆண்டுக்குள் தயாரிக்கப்படும். அதில் ஒன்று அடுத்தவருடம…
-
- 1 reply
- 415 views
-
-
By AM. Rizath 2012-12-22 11:11:22 யாழ். குடாநாட்டில் 15 ஆயிரத்து 100 இராணுவத்தினரே உள்ளனர். இதற்கு மேலதிகமாக ஒரு இராணுவ வீரர் கூட யாழ்ப்பாணத்தில் இல்லை. இலங்கையில் இருப்பது சிங்கள இராணுவம் அல்ல, இலங்கை இராணுவமே என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் பலாலி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "இலங்கையில் இருப்பது இலங்கை இராணுவமே. அதில் சிங்களம், தமிழ் எனப் பிரிவுகள் இல்லை. இலங்கை இராணுவத்தில் 2 இலட்சம் பேர் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் 15 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். நாட்டில் எந்தப் பகுதியிலும் மேலதிகமாக இராணுவத்தினர் நிலைநிறுத்தப்படவில்லை" என அவர் மேல…
-
- 3 replies
- 871 views
-
-
தமிழர் அரசியலும் மனச்சாட்சியும் - இராணுவத்தில் சேர்ந்த தமிழ் பெண்கள் மீதான அவதூறுகளை முன்னிறுத்தி... - யதீந்திரா சமீபத்தில் தமிழ் பெண்கள் 109 பேர் இலங்கை இராணுவத்தின் பெண்கள் படையணியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் 18 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். தமிழர்கள் (ஆண்களாக அல்லது பெண்களாக இருக்கலாம்) இராணுவத்தில் இணைந்து கொள்வதா அல்லது இல்லையா என்பது அவர்களது சொந்தத் தெரிவாகும். அதனை நிராகரிக்கும் உரிமை எவருக்கும் இல்லை. தவிர வற்புறுத்தலின் பேரில் எவரையும் எந்தவொரு ஆயுத படையணிகளிலும் சேர்க்கவும் முடியாது. ஆனால் இவ்வாறு இராணுவத்தில் இணைந்து கொள்வோரது பாதுகாப்பு குறித்து கரிசனை கொள்ளும் உரிமை தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கு உண்டு. அரசாங்கமும் இந…
-
- 1 reply
- 605 views
-
-
தமிழனுக்கு என்ன நேர்ந்தாலும் கண்டுகொள்ளாத ஊடகங்கள்! - சீமான் ஆவேசம் Posted by: Shankar Published: Saturday, December 22, 2012, 12:52 [iST] சென்னை: டெல்லியில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்கு இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் எதிர்த்து குரல் கொடுக்கின்றன. நியாயம்தான். ஆனால் தமிழனுக்கு என்ன நேர்ந்தாலும் எந்த ஊடகமும் குரல் கொடுக்க முன்வருவதில்லை, என்று சீமான் ஆதங்கம் தெரிவித்தார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததை எதிர்த்தும், யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலையும் கண்டித்தும், பல மணி நேர மின்வெட்டைக் கண்டித்தும் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்ப்பில் வெள்ளிக்கிழமை ம…
-
- 1 reply
- 464 views
-
-
'நீங்கள் எங்கள் நாட்டு மக்களின் நண்பன்" ஆப்கான் அமைச்சர் ஜனாதிபதிக்கு பாராட்டு! By General 2012-12-22 13:11:41 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆப்கானிஸ்தான் மக்களின் நண்பர் என இலங்கைக்கு வருகை தந்துள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஸல்மால் ரசூல் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஸல்மால் ரசூல் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக இலங்கைக்கு வருகைத்தரக்கிடைத்தமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக கூறிய ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஸல்மால் ரசூல் - இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ…
-
- 0 replies
- 281 views
-
-
அன்புத் தம்பி அடிப்பான் ஆசை அண்ணன் தடவுவான்: - பனங்காட்டான் [Friday, 2012-12-21 23:56:18] ஷிரானி பண்டாரநாயக்காவை அரசியலுக்கு வருமாறு முன்னாள் இராணுவத் தலைவர் சரத் பொன்சேகா அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வாரம் இக்கட்டுரையில் குறிப்பிட்டவாறு ஷிரானி�அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவை எதிர்த்துப் போட்டியிடுவாரா? நடக்காது என்று சொல்ல முடியாது! ஜனநாயக நாடொன்றின் ஆட்சியமைப்பு என்பது மூன்று கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டது. சட்டவாக்க அதிகாரம், நீதிமுறை அதிகாரம், நிறைவேற்று அதிகாரம் என்பவை இவை. இவற்றுள் முதலாவது, நாடாளுமன்றத்துடன் சம்பந்தமானது. இரண்டாவது, நீதி பரிபாலனத்துடன் சம்பந்தமானது. மூன்றாவது ஆட்சியின் உயர்பீடமான பிரதமர் அல்லது ஜனாதிபதியுடன் சம்பந்தப்பட்டது. இலங…
-
- 0 replies
- 520 views
-
-
எதிர்வரும் 26 ஆம் நாள் மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவிருக்கும் சிறிலங்கா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கிரிகெட் போட்டியை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் கழகமும் Refugee Action Collective எனும் அமைப்பும் இணைந்து முன்னெடுக்கும் இந்த சிறிலங்கா கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் தமிழ்மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழ் ஏதிலிகள் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. 'பல்லாயிரக்கணக்கில் வேற்றின மக்கள் கூடும் இந்த விளையாட்டு நிகழ்வில் எமது கவனயீர்ப்புப் போராட்டத்தைச் செய்வதன்மூலம் சிறிலங்கா அரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவதே எமது போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும்' என தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சா…
-
- 3 replies
- 483 views
-
-
புலிகளை உருவாக்கியது சிங்களவர்களும், பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளுமே: ஹத்துருசிங்கவுக்கு யாழ். பேராசிரியர் பதிலடி! [saturday, 2012-12-22 09:58:47] தமிழர்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே வளர்த்து விட்டதாக படைத்தரப்பும் அரசும் கூறினாலும், சிங்களவர்களும், பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளும் சேர்ந்தே விடுதலைப் புலிகளை வளர்த்து விட்டனர். இவ்வாறு கணிதவியல் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவுக்கு நேரில் எடுத்துரைத்தார். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைதானதைத் தொடர்ந்து முடங்கியுள்ள கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆராய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், துறைத் தலைவர்கள், கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஆகியோரை யாழ். மாவட்ட க…
-
- 1 reply
- 1.2k views
-
-
இறுதி யுத்தம் தொடர்பாக பி.பி.சீ ஊடகவியலாளர் தெரிவித்த கருத்துக்கள் போலியானவை: இலங்கை இராணுவம் தகவல்கள் பிழையானவை: இராணுவம் [saturday, 2012-12-22 09:10:53] பி.பி.சீ ஊடகவியலாளர் வெளியிட்டுள்ள தகவல்கள் பிழையானவை என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் படையினர் லட்சக் கணக்கான தமிழ் ஆண், பெண்களை கொலை செய்ததாக பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். 2004ம் ஆண்டு பிரான்சிஸ் ஹரிசன் இலங்கையை விட்டு வெளியேறிச் சென்றார். லண்டனில் உள்ள பத்து பேர் வழங்கிய போலித் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சாட்சியாளர்கள் வன்னிப் போ…
-
- 0 replies
- 414 views
-
-
புலிகளின் தலைமையை மீட்க, அமெரிக்கா அனுப்பிய இரகசிய விமானம் - கொழும்பு ஆய்வாளர் தகவல் [ புதன்கிழமை, 19 டிசெம்பர் 2012, 01:37 GMT ] [ கார்வண்ணன் ] போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பான களநிலவரங்களை மதிப்பிடுவதற்கு அமெரிக்கப் படை அதிகாரிகளின் நிபுணர் குழுவொன்று சிறப்பு விமானத்தில் இரகசியமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் இராணுவ ஆய்வாளர் சாமிந்ர பெர்னான்டோ எழுதியுள்ள பத்தியொன்றில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “ஒரு கட்டத்தில், சிறிலங்கா அரசுடன் கலந்தாலோசித்து, விடுதலைப் ப…
-
- 7 replies
- 2.1k views
-
-
சார்க்’ அமைப்பினால் அதன் 28ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டுநாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வுக்கட்டுரைப்போட்டியில் யாழ். இந்துக்கல்லுரி மாணவர்களாகிய செல்வன் ஸ்ரீஸ்கந்தராஜா சிவஸ்கந்தஸ்ரீ முதலாம் இடத்தையும், செல்வன் ஜீவரட்ணராஜா ஷஜீவன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் இசுறுபாய, பத்திரமுல்லையில் அமைந்துள்ள ஜனகலகேந்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் திரு.நீயூமோல் பெரேரா மற்றும் ‘சார்க்’ நாடுகளின் இலங்கைக்கான தூதவர்களும் கலந்து சிறப்பித்தனர். http://tamil24news.com/news/?p=35502
-
- 1 reply
- 474 views
-
-
யாழ்ப்பாண மருத்துவர் மீது கொடூரத் தாக்குதல் 21 டிசம்பர் 2012 யாழ்ப்பாண போதான வைத்தியசாலயில் கடமையாற்றி வரும் மருத்துவர் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இனந்தெரியாத கும்பலொன்று இந்தத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கந்தர்மடம் வீதி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாள்களினால் மருத்துவர் தாக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு இலக்கான மருத்துவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globalt…
-
- 2 replies
- 556 views
-
-
சங்ககிரி அருகே பூமியில் பிளவு ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் பிளவு ஏற்பட்ட பகுதியை நூற்றுக் கணக்கான மக்கள் பார்த்து செல்கின்றனர். நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களின் எல்லைப் பகுதியான இருகாளூர், அரியாம்பாளையம் பகுதியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான பகுதி உள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை உள்ளது. இப்பகுதியில் பூமியில் நேற்று காலை திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு பென்சில் நுழையும் அளவிற்கு அகலத்துடனும் இரண்டு அடி ஆழத்துடனும் காணப்படும் இந்த பிளவு சுமார் 60 அடி தூரத்திற்கு தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளது. ரயில் பாதையிலிருந்து பத்தடி தூரத்திற்கு இப்பிளவு ஏற்பட்டுள்ளது.அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள் இந்த பிளவினை பார்த்து அதிர்ச்சி…
-
- 1 reply
- 1k views
-
-
கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழில் நடைபெற்ற அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மாலை 4.30 மணியளவில் அருட்தந்தை ஜெபநேசன் அவர்களினால் நீராகாரம் கொடுத்து முடித்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையோடு சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கின்ற எங்கள் இளைஞர்கள் யுவதிகள் இன்றும் அரசியல் கைதிகள் எனும் பெயரில் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளார்கள் அவர்களின் விடுதலை என்பது கேள்விக்குறியான நிலையிலேயே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் அவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் நாம் இன்று ஜனநாயக ரீதியான போர…
-
- 3 replies
- 1.1k views
-
-
சிங்கள பேரினவாதகொடிய அரசால் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்யக்கோரி இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்ததை கண்டித்தும். 2. யாழ் பல்கலைகழக மாணவர்களை கைது செய்ததை கண்டித்தும்,அவர்களை விடுதலை செய்ய வலியுறித்தியும். 3. தமிழர்களுக்கு காவிரியல் தண்ணீர் பெற்றுதர வலியுறித்தியும். 4. தமிழகத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்தும். 21/12/2012 அன்று காலை 10 மணிக்கு, சென்னை,நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=geovdHxen_A[/xml] http://www.eeladhesam.com/index.php?optio…
-
- 0 replies
- 530 views
-
-
போகம்பரை சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து Published on December 21, 2012-9:22 am · போகம்பரை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை போதைப்பொருள் கடத்தல் கொலை போன்ற பாரிய குற்றங்களை புரிந்த சிங்கள கைதிகளுடன் ஒன்றாக அடைத்து வைத்திருப்பதால் தமிழ் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாiலை அமைச்சருக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அறிவித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விரைவில் விடுதலையாகலாம் என்ற எதிர்பார்ப்பில் அரசாங்கம் சுமத்திய குற்றச்சாட்டுகளை வலிந்து ஏற்றுக்கொண்டு குற்றங்களுக்கான தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்களுடன் சிங்களவர்களும் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதா…
-
- 0 replies
- 466 views
-
-
உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கு நாடாளுமன்றம் கட்டுப்படாது: அரசு வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012 01:35 0 COMMENTS (அழகன் கனகராஜ்) நாடாளுமன்ற தெரிவுக்குழு அரசியலமைப்பிற்கு உட்பட்டுள்ளதா? என்பது தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கு அரசாங்கம் உடன்படாமல் விடலாம், என்பதுடன் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கு நாடாளுமன்றம் கட்டுப்படாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்…
-
- 2 replies
- 424 views
-
-
யாழில்.பந்தல் சேதம்,கழிவு ஊற்றி நாசம், உண்ணாவிரதமும் ஆரம்பம் வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012 08:29 (சுமித்தி) கைதுகளுக்கும் காரணமின்றிய தடுத்து வைத்தலுக்கும் எதிராக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடையிலேயே உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது. உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அந்த இடத்தில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையை இனந்தெரியாதோர் நேற்றிரவு சேதப்படுத்தியதுடன் பந்தலின் மேல் போடப்பட்டிருந்த தகரங்களை கழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்துள்ளனர். அத்துடன் அந்த இடத்தில் கழிவு தண…
-
- 6 replies
- 1.1k views
-
-
இறந்துபோன உறவுகளை நினைவுகூருவது ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உள்ள கடமை. அதனை யாரும் மறக்கவும், மறுக்கவும் முடியாது என யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அதிரடியாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபையின் ஒளி விழா நிகழ்வு மாநகர சபையில் இன்று மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்ற போது தலைமை உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்;. இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த முப்பது வருடகாலமாக நாட்டில் இடம்பெற்று வந்த யுத்தம் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஐனாதிபதியின் துணிச்சலாலேயே இன்று வடக்கு கிழக்கில் ஐனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளது. அந்த ஐனநாயகத்தைக் குழப்புகின்ற வகையில் சில தீயசக…
-
- 7 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் மேற்கொள்ளப்படும் cash/voucher (C/V) திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என உலக உணவு நிகழ்ச்சித் திட்ட அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. "யாழ்ப்பாணத்தில் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 15,000 ற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் பயன்பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டால் அடுத்த இரு ஆண்டுகளில் 45,000 பேர் இதில் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது" என உலக உணவு திட்டத்தின் சிறிலங்காவுக்கான பதில் பிரதிநிதி மட்ஸ் பொல்வல் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகள் ஒரு மாதத்திற்கு 11 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சான்றுச் சிட்டை பெற்றுக் கொள்வர். இது ஆறு மாதகாலத்திற்கு பயன்படுத்தக் …
-
- 0 replies
- 353 views
-
-
பிரபாகரன் வருவார் என்ற கனவில் மாணவர்களை வழிநடத்தினார்கள் பிரிகேடியர்கள் சொலமன் - தர்ஸானந்- இயக்கினார்கள் - நெடியவன் - ருத்ரகுமாரன் - விநாயகம் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தை திறப்பதாயின் அது மூடியே இருக்கட்டும் என யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை வடக்கின் யாழ் பலாலி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனை அறுதியிட்டு கூறியுள்ளார மஹிந்த ஹத்துருசிங்க. பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரியரத்னத்துடன் கூட்டத்தில் சமூகமளித்திருந்த ஒரு சில பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் மற்றும் 4 மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர் பிரபாகரன் வருவார் மீண்டும் ஈழவிடுதலைப் ப…
-
- 1 reply
- 1k views
-
-
(எஸ்.ரூபன், சுமித்தி) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிராக அவ்வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். குறித்த வைத்தியசாலையில் பணியாற்றும் காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் எஸ்.திருமாறன், நேற்று இரவு இனந்தெரியாத ஆயுததாரிகளினால் தாக்குதலுக்கு உள்ளானார். இதனைக் கண்டித்து யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர். எஸ்.பவானந்தராஜா, வைத்திய சங்கத் தலைவர் எஸ்.நிமலன் உட்பட அனைத்து வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவு வைத்தியர்கள் மட்டும் இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை. இப்பணிப் புறக்கணிப்பு நாளை நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கு உத்தேசிக்கபட்டுள்ளதாகவ…
-
- 0 replies
- 645 views
-
-
லண்டனில் பல தமிழர்கள் கொல்லப்பட்ட மக்களுக்காக போராடி வருகின்றனர். இதேவேளை லண்டனில் போராடினால் எமக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது ? வெள்ளைக்காரனிடம் எமது போராட்டத்தை கொண்டு சேன்று சேர்க்க முடியாது என்று எல்லாம் பேசிவரும் சிலரும் இங்கு தான் இருக்கிறார்கள். லண்டனில் நாம் போராட்டம் நடத்தினால் வெள்ளைக்காரர் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுபவர்களும் லண்டனில் தான் இருக்கிறார்கள். ஆனால் லண்டன் மிச்சம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம், இவ்வாறு பேசித் திரியும் நபர்கள் சிலருக்கு விழுந்த சாட்டையடியாக உள்ளது. ஒரு 14 வடதுச் தமிழ்ச் சிறுவனின், மனத் துணிச்சல் இது ! எவ்வாறு இளைய தலைமுறையினர் தமது தேசத்தின் மேல் பற்றுதலாக உள்ளார்கள் என்பதும் இதில் இருந்து தெரிகிறது. கூடுதலாக சஸ்பென்ஸ் போட…
-
- 0 replies
- 489 views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசின் அச்சுறுத்தல்களை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ்பாணத்தில் இடம்பெறும் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில்லண்டனில் அடையாள உண்ணாநிலைப் போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஓருங்குசெய்துள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை No. 10 Downing Street, Westminster, London பிரித்தானியப் பிரதமர்வாசல்தளத்தின் முன் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. தாயக கவனயீர்ப்பு போராட்த்திற்கு புலம்பெயர் தமிழர்களின் தோழமையுணர்வினைத் தாயக மக்களுக்கு தெரிவிக்கவும் , போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லவும், இக்கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டத்தில் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளு…
-
- 0 replies
- 317 views
-
-
தடுப்பிலுள்ள மாணவர்கள் தொடர்பில் - பல்கலை நிர்வாகத்தினர் இராணுத்தினர் பலாலியில் சந்திப்பு! [Friday, 2012-12-21 09:52:44] யாழ். பல்கலைக்கழக நிரவாகத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று(21.12.2012)காலை 10 மணியளவில் பலாலி படை தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம், தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள், பீடாதிபதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் விடுதலையினை வலியுறுத்துவதற்காகவேதாம் இச்சந்திப்பு என ஏற்பாடு செய்துள்ளதாக பல்கலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் இந்தச்சந்திப்பில் தாம் கலந்துகொள்வது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லையென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர…
-
- 1 reply
- 349 views
-